முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

எரிப்பதற்கு பெயர் எதிர்ப்பல்ல.. வன்முறை!

Saturday, February 6, 2010 at 3:29 am | 1,375 views

எரிப்பதற்கு பெயர் எதிர்ப்பல்ல.. வன்முறை!

டிகர் ஜெயராம் தமிழ்ப் பெண் ஒருவரைப் பற்றி தொலைக்காட்சியில் அடித்த மிக மட்டமான கமெண்ட் ஒன்று நேற்று முழுக்க புயலைக் கிளப்பியது.

தன் வீட்டில் வேலைக்காரியாகப் பணியாற்றும் ஒரு பெண்ணை அவர் கறுத்துத் தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்.. என்று கிண்டலடித்தது உள்ளபடியே ஆத்திரத்தைக் கிளப்பியது.

இந்த விஷயத்தைக் கையிலெடுத்த மகளிர் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அமைப்போ, கோர்ட்டுக்குப் போனது. எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கும் ஏற்றுக் கொண்டார் நீதிபதி.

இன்னும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் சோனல்தானே, யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அலட்சியமா, அல்லது தமிழ்ப் பெண்கள்தானே… கொன்றால்கூட கேட்க நாதியில்லை.. ஒரு கமெண்டால் என்ன ஆகிவிடப் போகிறதென்று நினைத்துவிட்டாரோ என்னமோ!

ஆனால் இத்தனை தீவிரமான எதிர்ப்பை அவர் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த சில மணிநேரங்களில் மீண்டும் போட்டி கொடுத்தார், “தெரியாமல் சொல்லிவிட்டேன். நானும் தமிழன்தான். கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்… தமிழ்த் தாய்மார்கள் எல்லாம் என்னை மன்னித்து மீண்டும் தங்கள் இதயத்தில் இடமளிக்க வேண்டும்” என்று.

தங்கர் பச்சான் சொன்னதுபோல, ஜெயராம் அடிக்கடி இந்த தமிழன், மலையாளி வேஷங்களை மாறி மாறிப் போடுகிறார். முன்பெல்லாம் வாய்ப்புகளுக்காகப் போட்டவர், இப்போது பிரச்சினையிலிருந்து தப்பிக்கப் போட்டிருக்கிறார். இந்த மன்னிப்பை தமிழ்ப் பெண்கள் ஏற்பார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

இதற்கிடையே ஜெயராமுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தேவையற்ற வன்முறை ஒன்றை அரங்கேற்றியுள்ளனர், தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் சிலர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயராமின் வீட்டைக் கொளுத்தியுள்ளனர். காரை அடித்து நொறுக்கியுள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளனர் போலீசார்.

இந்த வன்முறை தேவையற்ற ஒன்று. காரணம் ஜெயராமுக்கு தமிழகத்தின் தயவும், தமிழ் சினிமாக்காரர்களின் தயவும் பெருமளவு தேவைப்படுகிறது.

எனவே அவரது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வைக்க எத்தனையோ முறையான வழிகள், சட்ட ரீதியான எதிர்ப்பு முறைகள் இருக்கும்போது, இப்படி வன்முறையைக் கையிலெடுக்க வேண்டிய அவசியம் என்ன?

எதிர்ப்பு காட்டுவதை எரித்துத் காட்டுவது என்று புரிந்து கொண்டு வன்முறை ஆட்டம் போடுவதால் என்ன வந்துவிடும்… மேலும் குரோதமே விளையும். வெளியில் மன்னிப்புக் கோரினாலும் உள்ளுக்குள் நஞ்சு மட்டும்தான் மிஞ்சும்.

ஜெயராம் பேசியது அபாண்டம், அநியாயம், ஆபாசம். அதற்கு தெரிவிக்கப்பட்ட நியாயமான எதிர்ப்புகளைப் பார்த்தே அவர் திக்கித் திணற ஆரம்பித்துவிட்ட நிலையில், வீட்டை எரிப்பதும், காரை நொறுக்குவதும் தேவையற்ற ஒன்று.

நாம் தமிழர் இயக்கத்தவர்கள் இதிலெல்லாம் தங்கள் சக்தியை வீணாக்காமல் இருப்பதே நல்லது. வீரியமாகப் போராட வேண்டிய களமும் காரணங்களும் நிறைய உள்ளன!

தண்டனை திருந்துவதற்குத்தானே…

-என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

16 Responses to “எரிப்பதற்கு பெயர் எதிர்ப்பல்ல.. வன்முறை!”
  1. palPalani says:

    சரியாக சொண்ணீர்கள்.

  2. r.v.saravanan says:

    எதிர்ப்பு காட்டுவதை எரித்துத் காட்டுவது என்று புரிந்து கொண்டு வன்முறை ஆட்டம் தவறு

    ஒரு தவறுக்கு மறு தவறு தீர்வல்ல …

  3. Manoharan says:

    ///மேலும் குரோதமே விளையும். வெளியில் மன்னிப்புக் கோரினாலும் உள்ளுக்குள் நஞ்சு மட்டும்தான் மிஞ்சும்///

    நாம் தமிழர் இயக்கம் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது.

  4. murug says:

    அப்புறம் எப்படி காட்டுவது இலங்கை பிரச்சனையில் வெட்டியாக, மென்மையாக போராடியே எல்லோரையும் கொண்ணோமே அப்படியா போராட சொல்கிறிர்கள். போங்கடா நீங்களும் உங்கள் அகிம்சையும். இலங்கை படுகொலைக்கு அப்புறமும் உங்களுக்கு அகிம்சைன்னு ஒன்னு irukkaa

  5. venkattan says:

    முருக நீங்கள் சொன்னது நெத்தியடி
    நன்றி

  6. முருக:
    //போங்கடா நீங்களும் உங்கள் அகிம்சையும். இலங்கை படுகொலைக்கு அப்புறமும் உங்களுக்கு அகிம்சைன்னு ஒன்னு இருக்கா//

    -ஏம்பா உங்களுக்கு இந்த வெறி… இது தமிழ்நாடு. வன்னிப் பகுதி அல்ல.

  7. தமிழினத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் பார்த்துக்கொண்டு என்னூறு ஆண்டுகளா தமிழ்நாட்டில் தமிழன் சும்மாதான் இருந்தான். தமிழினத்திற்கு எதிரானவர்களை திருத்துவதற்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை என்று உணர்ந்த பிறகு இப்பதான் திருப்பி அடிக்க ஆரம்பித்துள்ளான். இது தொடராமல் இருக்க வேண்டியது தமிழினத்தின் எதிரிகளின் கையில்தான் உள்ளது

  8. KUMAR says:

    அடிப்பதற்கும் ஆள் வேண்டும் ….. அது தவறு என்று கூறுவதற்கும் ஆள் வேண்டும்…… அப்போது தான், தமிழர்களைப் பற்றி தரக்குறைவாக பேச யாருக்கும் தைரியம் வராது…..

  9. venkat says:

    ஜெயராம்மே மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட பெறகு மனிபதே சரி. இது எல்லோருக்கும் சமம்.

  10. tamilan says:

    தமிழன் தூங்கியது போதும் .அகிம்சைக்கும் அடிதான் பதில் இனி.

  11. Vishwa says:

    குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆடுவது போளுள்ளது (பத்திரிக்கையாளர்கள்) உங்கள் வேலை. !!!!

  12. KUMAR says:

    இது தொடர்பான வெப்துனியாவின் கட்டுரை….

    ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும்

    please read………

    http://tamil.webdunia.com/entertainment/film/article/1002/06/1100206071_1.htm
    http://tamil.webdunia.com/entertainment/film/article/1002/06/1100206071_2.htm

  13. Sankar says:

    வீட்டை எரித்தது மிக சரியான நடவடிக்கையே
    இதில் வன்முறை துளியும் இல்லை . பதிலுக்கு ஜெயராம்யே
    எரித்திருதால் அதுதான் வன்முறை அதைத்தான் நாம்(tamilar) ஏற்க
    முடியாது.

  14. shiva says:

    என்வழி ,,,,,,,,,,,,,,,இந்தியாவில் இது எல்லாம் சகஜம் அப்பு சரியா இவ்வளவு நாளமும்பைக்காரன் கிட்டயும் கருனடககரன் கிட்டயும் அடி வாங்கிக்கிட்டு தானே இருந்தோம் அப்பு,,,,,,,,,,,,,,,

  15. saanthakumar says:

    அவள் தமிழச்சி என்பது இரண்டாம் பட்சம் அனால் ஒரு பெண்ணினத்தை அல்லவே கேவலப் படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும்,

  16. MANNAN says:

    யோவ் அறிவு இருக்காய்யா உனக்கு? மலையாளி கூட பழகியிருக்கியா நீ? மலையாள சினிமா பார்ப்பதுண்டா நீ? மோகன்லால் படங்களை போயி பாரு.
    பாண்டி பாண்டின்னு சொல்லுவானுக கிண்டலாக….மம்முட்டியும் விதி விலக்கல்ல. மலையாளிகள் தமிழன் மீதுள்ள தாழ்வு மனப்பான்மையால், அடுத்தடுத்து வரும் அவர்கள் தலைமுறை குழைந்தைகளுக்கு தமிழன் என்றால் தாழ்ல்வானவன்னு சொல்லி குடுக்குறாங்க ஆனா நாம கண்டுக்குறதே இல்லை! அதன் வெளிப்பாடுதான் ஜெயராமின் இந்த பேச்சு! ஆக தமிழ் உணர்வாளர்கள் செய்தது சரியே. ஒரு மலையாளி நண்பனிடம் கேட்டேன், ஜெயராம் மலையாளியா தமிழான்னு, அவன் சொல்றான் சத்தியமா மலையாளின்னு, ஆக இங்கே வந்தா கும்பகோணம், அல்லது கன்யாகுமரி தமிழன்னு சொல்ல வேண்டியது, அங்கே போனா மலையாளின்னு சொல்ல வேண்டியது, ஆக இவிங்க வியாபாரம் பண்ண தமிழ்நாட்டு பாண்டி வேணும் அல்லாம கிண்டலும். இனி ஒரு பய கிண்டல் பண்ணட்டும் பாப்போம்? எனக்கு நிறயா மலையாளி நண்பர்கள் உண்டு அவர்களிடம் காணப்பட்ட இன வெறியின் ஆர்வத்தனம் உணர்ந்ததால்தான் இதை எழுதுகிறேன்.
    மனோ,
    பஹ்ரைன்.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)