முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

பொறுப்பான தலைவராக நடந்துகொள்ளுங்கள்! – அன்புமணி ராமதாசுக்கு பிரபு பதில்!

Thursday, February 4, 2010 at 12:13 am | 1,587 views

பொறுப்பான தலைவராக நடந்துகொள்ளுங்கள்! – அன்புமணி ராமதாசுக்கு பிரபு பதில்!

சென்னை: ‘ஒரு இயக்கத்திற்கு பொறுப்பான தலைவராக இருப்பதால், எந்தத் திரைப்படத்திற்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என அசல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ராமதாசுக்கு பதில் அளித்துள்ளார் அசல் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான பிரபு.

அஜீத் நடித்துள்ள அசல் படம் வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது.

இந்தப் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் அஜீத் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

இதனைக் கண்டித்தும், புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை படத்திலிருந்து விலக்கக் கோரியும் முன்னாள் மத்திய அமைச்சரும் பசுமைத் தாயக தலைவருமான அன்புமணி ராமதாஸ் நடிகர் அஜீத் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு இப்போது பதில் அளித்துள்ளார் தயாரிப்பாளர் பிரபு.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“அசல்’ படத்தில் இடம்பெறும் புகை பிடிப்பது போன்ற காட்சி தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் எங்கள் பார்வைக்கு வந்தது.

எங்கள் தந்தை சிவாஜி கணேசன் பெயரை தாங்கியுள்ள நிறுவனம் 50 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டது. எங்கள் தயாரிப்பான அசல் திரைப்படம் தணிக்கைக் குழுவினரால் உன்னிப்பாக பார்க்கப்பட்டு, திரையிட தகுதியானது என சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் தணிக்கைக்கு போவதற்கு முன்பே அதன் டிரைலரிலும், திரைப்படத்திலும் புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்ற அறிவிப்பை துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.

படத்தின் நாயகன் அஜீத்குமார் புகைப்பிடிப்பதனால் வரும் தீங்கை இந்த படத்தின் துவக்கத்திலேயே செய்தியாக அறிவித்திருக்கிறார்.

தணிக்கைக் குழு என்னவெல்லாம் செய்ய சொன்னதோ அவை அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம்.

எங்கள் தந்தையின் வழியில் எப்போதுமே இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறோம்.

தமிழ் திரைப்படத் துறையின் நெருக்கடியை நன்கு உணர்ந்த தாங்கள் ஒரு இயக்கத்திற்கு பொறுப்பான தலைவராக இருப்பதால், எந்தத் திரைப்படத்திற்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர் சரண், நாயகன் அஜீத் சார்பில் இந்த பதிலை எழுதியிருக்கிறேன்,” என்று பிரபு கூறியுள்ளார்.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

8 Responses to “பொறுப்பான தலைவராக நடந்துகொள்ளுங்கள்! – அன்புமணி ராமதாசுக்கு பிரபு பதில்!”
  1. Venky says:

    Correct reply…
    good…

  2. thinnu says:

    well said, fitting reply, even after this if he creat a attraction by using this trick will have have to ponish, already he rub many guys, let his correct his party works to fallow, then he can come to public, is he educated guy!!!

  3. endhiraa says:

    சரியான பதில் ! பாராட்டுக்கள் பிரபு அவர்களே !!

  4. r.v.saravanan says:

    நச்சென்ற பதில் சூப்பர் பிரபு

  5. ஆப்பக்காரன் says:

    //புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்ற அறிவிப்பை துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்//

    அதெல்லாம் சரி. சிகெரட் பாக்கெட்ல, விளம்பரத்துல கூடத்தான் அதை போடறாங்க. ஆனா அதை படிச்சிட்டு எத்தனை பேர் சிகரட் பிடிக்காம இருக்காங்க. அறிவிப்பு பண்றதோட நிக்காம, இந்த படத்துல, சுருட்டு பிடிக்கறதாலே, அஜித்துக்கு உடல் பாதிக்குது, அஜித் வாய் நாறுதுன்னு கதாநாயகி முத்தம் கொடுக்க மறுக்கறாங்க அப்படீன்னு எல்லாம் சீன் வச்சிருந்தா நல்லா இருந்து இருக்கும். (வாழ்வே மாயம் படத்துல கமலுக்கு சிகரட்டால கான்சர்னு காமிச்ச மாதிரி).

    ஆனா அஜித் வாயில சுருட்ட வச்சிக்கிட்டு ஏதோ அசால்ட் ஆறுமுகம் மாதிரியில்ல போஸ் குடுக்கறாரு.

    பிரபுவால இதை தவிர வேற பதில் தர முடியாது. சினிமால ஸ்டைலா சிகரட் பிடிக்கறது எப்படீன்னு மொதல்ல காமிச்சுதே சிவாஜி தானே. ஆனா ஒரு படத்துல கூட தான் சிகரட் பிடிக்கற மாதிரியோ, தண்ணி அடிக்கிற மாதிரியோ காட்சிகள் வைக்காம (விதி விலக்காக ‘ஓளி விளக்கு’ அதுவும் தன்னை அறியாமல் செய்வது போல்) கடைசி வரை வெற்றிகரமான நடிகராகவே விளங்கினார் M.G.R என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  6. palanivel says:

    ஆப்பகாரன் போன்றவர்களின் அலடல்கள்ளுக்கு அஜித் படத்தில் சரியான பதில் சொல்லுவார்.

  7. palanivel says:

    சினிமாவை பார்த்து தான் மக்கள் ‘தம்’ அடிக்க கத்துக்கிறார்கள் என்பதே “டுப்புக்கு” தனமான கருத்து.

    அப்படிப்பார்த்தா, தலைவரின் ரசிகர்கள் அனைவரும் தம், தண்ணி அடித்து இருக்க வேண்டுமே?… ஆனால் 50% மேலான ரசிகர்களுக்கு அந்த பழக்கம் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

    முதல்ல, சிகரேட் விற்கரத தடைப்பண்ணுங்க…………. முடியாவிட்டாலும், பொது இடத்தில் புகை பிடிப்பதையாவது முழுமையாக தடைப்பண்ணுங்க………. அத பண்ண வழியில்ல சினிமா தடை செய்ய வந்துட்டாங்க………

    சினிமாவை பார்த்து தான் மக்கள் தம் அடிக்க கத்துக்கொள்கிறார்கள் என்பவர்களிடம் என்னுடைய சில சந்தேகங்கள் :
    @) இன்னும் கொஞ்சம் நாள் கழித்து திரு. கமலை பார்த்து தான் மக்களுக்கு முத்தம் என்பதையே தெரிந்துக்கொள்கிறார்கள் என்பீர்களா?
    @) நம்ம கேப்டன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் வெறும் ஊசியை வைத்து கொலை செய்யறத காட்டியபோது எப்படி அத விட்டுட்டீங்க?
    @) சத்யராஜை பார்த்து தான் கே…….., கு…………….. என்று பேசுகிறார்களா?

    ஒன்றை மறந்துட்டோம்ல,

    திரையில் அவர் செய்யாத தப்புக்களே இல்லை என்னும் அளவு கொடுர நடிப்பிற்கு சொந்தக்காரரான அமரர் எம்.என்.நம்பியார் அவர்கள் நிஜவாழ்வில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக வாழ்ந்தார் என்பதை ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆக சினிமாவை மட்டும் குறை சொல்லாதீங்க திரு, அன்புமணி

  8. palPalani says:

    /*
    தணிக்கைக் குழு என்னவெல்லாம் செய்ய சொன்னதோ அவை அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம்.
    */
    என்ன சொல்லிருக்கும்? CM -ஐ பாருங்கன்னு சொல்லிருப்பாக? இதை செய்றது ரொம்ப கஷ்டமா என்ன உங்களுக்கு?

    இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த காட்சிகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட்டு விட்டு, படத்தில் ஒரு சிறு காட்சியில் சிகரெட்டால் நாயகன் கஷ்டபடுவதை போல் காட்டினால்போதும், வேறு எந்த போர்டு கீர்டு எல்லாம் தேவையில்லை.

    மற்ற படி அன்புவுக்கு இப்போது வேற மாட்டார் இல்ல, இருந்தாலும் ஆளும்கட்சியை எதிர்க்காத அரசியல் இது மட்டும்தான்.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)