முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

விஎம்சி ஹனீபா மரணம்.. இன்னும் ஒரு நல்ல கலைஞனை இழந்தோம்!

Wednesday, February 3, 2010 at 12:45 pm | 1,365 views

விஎம்சி ஹனீபா மரணம்.. இன்னும் ஒரு நல்ல கலைஞனை இழந்தோம்!

தொடர்ந்து மலையாளத்தின் மிகச் சிறந்த கலைஞர்களை காலம் பலி கொண்டு வருவது மனதுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.

முரளி, ராஜன் பி தேவ் வரிசையில் மிகச் சிறந்த குணச்சித்திர கலைஞராகத் திகழ்ந்த விஎம்சி ஹனிபா நேற்று மரணமடைந்தது மிகுந்த வேதனையைத் தந்தது.

நல்ல இயக்குநர், மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் போன்றவற்றைத் தாண்டி, நல்ல நகைச்சுவைக் கலைஞராகவும் திகழ்ந்தவர் ஹனிபா.

தனது உடலின் அனைத்து உபாதைகளையும் மறைத்துக் கொண்டு ரசிகர்களைச் சிரிக்க வைத்த கலைஞர் அவர்.

கமல்ஹாஸனின் மகாநதி, ரஜினியின் சிவாஜி.. இரண்டிலுமே அவர் வில்லத்தனம் காட்டியிருப்பார். ஆனால் இரண்டும் வெவ்வேறு பரிமாணம். ஒன்றில் நயவஞ்சகத்தின் மொத்த உருவமாகவும், சிவாஜியில், “பாஸ்.. டேமேஜெல்லாம் ஆகியிருக்கு.. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க பாஸ்” என்று சிரிப்பு வில்லனாகவும் ரசிகர்களின் மனங்களை அள்ளியிருப்பார்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஹனீபா, தனது உடல் நலனில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. காரணம் அவரது முடிவு அவருக்கு தெரிந்தே இருந்தது. கல்லீரலில் புற்று நோய் என்பதால், இருக்கிற காலம் வரை நல்ல முறையில் வாழ்ந்துவிட விரும்பிய கலைஞர் அவர்.

ஹனிபாவுக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் என நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவரின் இறுதி மூச்சு, மாலை 3 மணியளவில் நின்றது.

1951ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தவர் ஹனீபா. அவரது இயற்பெயர் சலீம் அகமது கெளஸ். பி.எஸ்.சி தாவரவியல் படித்தவர். கொச்சியில் உள்ள கலாபவன் என்ற பிரபல நாடகக் கலைக் கூடத்தில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு நாடகத்தில் அவருக்கு வைக்கப்பட்ட ஹனீபா என்ற கேரக்டர் பிரபலமானது. இதையடுத்து கொச்சின் என்ற பெயரையும், ஹனீபாவையும் சேர்த்து கொச்சின் ஹனீபா என்று அழைக்கப்பட்டார்.

1979ம் ஆண்டு அஷ்டவக்ரன் என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் இறங்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வாத்சல்யம் படத்தை இயக்கினார். தமிழில் பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள் என சில படங்களை இயக்கினார்.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

4 Responses to “விஎம்சி ஹனீபா மரணம்.. இன்னும் ஒரு நல்ல கலைஞனை இழந்தோம்!”
  1. Rajesh J says:

    Very sad to hear this news. Two days ago, we were just discussing about him and the dialoge in sivaji…..”boss kathi kuthellam vaangirukean, konjam parthu pottu kudunga”. great timing. May his soul rest on Peace. Condolence to his families,friends and fellow stars.

  2. MSK says:

    நல்ல கலைஞனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

  3. Jey says:

    டோஎஸ் ஹி அக்ட இன் ரோபோ அச வெள்?

  4. r.v.saravanan says:

    விஎம்சி ஹனிபா அவரது மலையாளம் கலந்த பேச்சு ரசிக்க தக்க ஒன்று

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)