முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

முதல்வன் படத்தை ரஜினிக்கு அடுத்து விஜய்யை வைத்து எடுக்கத் திட்டமிட்டேன்!- ஷங்கர்

Monday, February 1, 2010 at 2:56 am | 3,259 views

எந்திரனுக்காக மீண்டும் மும்பை செல்லும் ரஜினி – ஷங்கர்!

முதல்வன் படத்தை எடுக்க என்னைத்தான் முதலில் அணுகினார் இயக்குநர் ஷங்கர் என இரண்டு மூன்று விழாக்களில் விஜய் பேசியிருந்ததைக் கவனித்திருப்பீர்கள்.

ஆனால் உண்மையில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க மறுத்த நிலையில், அடுத்ததாகத்தான் விஜய்யை அணுகினேன் என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இதுகுறித்து தனது வலைப்பூவில் இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளதாவது:

ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ பற்றி நான் எழுதியிருந்ததற்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. ரஜினி சாரைப் பற்றி நிறைய விசாரிப்புகள் ரசிகர்களிடமிருந்து. நிறைய வாழ்த்துகளும்கூட. அவரைப் பற்றிச் சொல்ல ஏராளமாயிருக்கிறது. ஏஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் பற்றியும் நிறைய விசாரிப்புகள். நிச்சயம் ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் சொல்லப் போகிறேன்.

விஜய் மற்றும் அஜீத்துடன் இணைந்து எப்போது படம் பண்ணுவேன் என அவர்களின் ரசிகர்கள் நிறையப் பேர் கேட்டிருந்தார்கள்.

ஏற்கெனவே முதல்வன் படத்தை விஜய்யுடன் இணைந்து (ரஜினி சாருக்கு அடுத்து) பண்ணுவதாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக அது நடக்காமல் போனது. ‘நாயக்’ படத்துக்குப் பிறகு அஜீத்தை வைத்துப் படம் பண்ண ஐடியா இருந்தது. ஆனால் அதற்கான சந்திப்பு நிகழும் முன்பே அந்த எண்ணம் கலைந்து போனது.

எனது அடுத்த படம் எந்த மொழி, அதன் ஸ்கிரிப்ட் என்னவென்றுகூடத் தெரியாது. ஒருவேளை அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் விஜய்க்கோ அஜீத்துக்கோ பொருந்தினால் நிச்சயம் அவர்களுடன் படம் செய்வேன்…” என்று குறிப்பிட்டுள்ள ஷங்கர், எந்திரன் படத்தின் அடுத்த ஷெட்யூலுக்காக தான் மும்பை புறப்படுவதாகவும் எழுதியுள்ளார்.

“அடுத்து இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்காக நான் மும்பை செல்கிறேன். ரஜினி சார், ஐஸ்வர்யா ராய் மற்றும் டெங்ஸோங்பா பங்கேற்கும் சில காட்சிகள் படமாக உள்ளன… விரைவில் சந்திப்பேன்” என கூறியுள்ளார் ஷங்கர்.

-என்வழி

Courtesy: www.directorshankaronline.com

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

3 Responses to “முதல்வன் படத்தை ரஜினிக்கு அடுத்து விஜய்யை வைத்து எடுக்கத் திட்டமிட்டேன்!- ஷங்கர்”
  1. pream says:

    ROTFL!! chinnapasangala…

  2. murug says:

    நல்ல வேலை தப்பித்தை எல்லை நீ அன்றைக்கே காலி மவனே

  3. murukhs says:

    Respected Sir/Madam,
    Greetings from Sakthi Innovators!
    “Sakthi Innovators” is an innovative firm which is started by a group of engineering professionals from India. Our prime focus is on software development, web development, media solutions, event management, and publication.
    We, at, Sakthi Innovators are committed to conduct various service oriented activities for the student community. Our recent program “Tech Promo” was a great success and we got a great response from students across Tamilnadu.
    We have planned to conduct “Conference on FOSS” (Free Open Source Software) program to let the student community know the recent trends and job opportunities in FOSS. Software professionals and Technical people from various MNCs’ will be addressing the students at this program.
    Therefore, we request that you encourage your students to take part in this valuable program. For more information, please visit http://www.sakthiinnovators.com/conference.php

    Regards,
    Sakthi Innovators Team

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)