முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

பொன்சேகா தோல்வி… மீண்டும் அதிபராகும் ராஜபக்சே!

Wednesday, January 27, 2010 at 10:58 am | 1,009 views

மீண்டும் அதிபராகும் ராஜபக்சே!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாகத் துவங்கிவிட்டன. தமிழர்கள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் இந்தத் தேர்தலில் நடக்கவில்லை.

மிகப் பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இப்போதைய அதிபர் ராஜபக்சேவே முன்னிலை வகித்து வருகிறார்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பொன்சேகாவை விட 9 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் ராஜபக்சே.

ராஜபக்சே வெல்வது உறுதியாகிவிட்டதால் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் சிங்களர்களும் ராஜபக்சே கட்சியினரும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சரத் பொன்சேகாவுக்கு பெரும்பாலான தமிழர் கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கின. தேர்தல் கணிப்புகளும் பொன்சேகாவே வெல்வார் என்று தெரிவித்தன. இதனால் மகிந்த ராஜபக்சே பெரும் குழப்பத்தில் இருந்தார். ஒருவேளை தோற்றுப் போனால், நாட்டை விட்டே வெளியேறும் முடிவிலும் அவர் இருந்ததாக சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜபக்சே பெரும் வெற்றியைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

இதுவரை வெளியான முடிவுப்படி (பிற்பகல் 12.00 மணி நிலவரம்),

மகிந்த ராஜபக்சே: 49,88,522

சரத் பொன்சேகா: 33,81,124

வாக்கு வித்தியாசம்: 16,07,398

இந்த நிலைக்கு காரணம் ராஜபக்சே கட்சியினர் பெரும் தேர்தல் முறைகேடுகளில் இறங்கியதுதான் என்று பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். டக்ளஸ் தேவானந்தா கட்சியினர் ராஜபக்சேவுக்காக தமிழர் பகுதிகளில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

என்னை கொல்ல சதி – பொன்சேகா

இந்த நிலையில் பொன்சேகா தங்கியுள்ள ஹோட்டலை ராணுவத்தினர் பெருமளவில் முற்றுகையிட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொன்சேகா கூறுகையில், “ராஜபக்சே தேர்தலில் பெரும் தில்லு முல்லு செய்துள்ளார். அதை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டேன். ஆனால் அதற்குள் என்னைக் கொன்றுவிட திட்டமிட்டு ராணுவ முற்றுகையை ஏற்படுத்தியுள்ளார் ராஜபக்சே. நான் எந்த நேரத்திலும் கொல்லப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஹோட்டல் சிப்பந்திகளைக் கூட ராணுவம் வெளியேற்றி வருகிறது” என்றார்.

இலங்கை மறுப்பு

பொன்சேகா குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இலங்கை அரசு, அவரது பாதுகாப்புக்காகவே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

4 Responses to “பொன்சேகா தோல்வி… மீண்டும் அதிபராகும் ராஜபக்சே!”
  1. sudhan says:

    migavum varutthamaaga irukirathu. viraivil thalaivar prabhakaran vara vendum

  2. palPalani says:

    இந்தியா மீண்டும் வெற்றி!

  3. sakthivel says:

    இரத்த வெறியன் வெற்றியின் “சிதம்பர” ரகசியம் காங்கிரஸ்சுக்கு தெரியும்.

  4. Muthu says:

    நீதி, நியாயம் செத்து விட்டது….

    துரோகி ராஜபக்சேயின் தோல்வி, தலைவர் பிரபாகரன் கையினால் தான்…

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)