தேசிய விருது பெற்ற பாலாவை வாழ்த்திய ரஜினி
Saturday, January 23, 2010 at 9:11 pm | 1,827 views
தேசிய விருது பெற்ற பாலாவை வாழ்த்திய ரஜினி
தேசிய விருது பெற்ற பாலாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
நான் கடவுள் படம் வெளியானதும், தானே விரும்பி அந்தப் படத்தைப் பார்த்தார் ரஜினி. அத்துடன் நில்லாமல் இயக்குநர் பாலாவையும், படத்தின் ஹீரோ ஆகியோரை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். இந்தப் படம் தேசிய விருதுகள் மட்டுமல்ல சர்வதேச அளவில் விருதுகளைக் குவிக்கும் என்று வாழ்த்தினார்.
இந்தப் படம் என் தலையை நிமிர வைத்துவிட்டது. நெகிழ வைத்த அற்புதமான படைப்பு என்று வாழ்த்துக் கடிதமும் கொடுத்தார் ரஜினி.
இப்போது இந்தப் படத்துக்காக பாலாவுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது. இதே படத்துக்கு சிறந்த ஒப்பனையாளருக்கான விருது மூர்த்திக்கு கிடைத்துள்ளது.
பாலாவுக்கு தேசிய விருது கிடைத்த செய்தி வெளியில் பரவியதுமே பாலாவைத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, ஒரு மலர்க் கொத்தையும் அனுப்பி வைத்தார்.
இயக்குநர் மணிரத்னம் உள்பட தமிழ் திரையுலகமே திரண்டு வந்து பாலாவை வாழ்த்திய வண்ணமுள்ளது.
இந்த நிலையில், விருது பற்றி இவ்வாறு கூறினார் பாலா:
‘என்னை வளர்த்து ஆளாக்கிய பாலுமகேந்திரா மற்றும் எனக்குத் தாயாக இருந்து பார்த்துக் கொண்ட அகிலா பாலு மகேந்திராவுமே இந்த விருது கிடைக்க காரணம். எனவே எனக்குக் கிடைத்துள்ள இந்த முதல் தேசிய விருதை அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.
நான் கடவுள் படத்துக்காக இசைஞானி இளையராஜா, ஆர்யா, பூஜா ஆகியோருக்கும் நிச்சயம் விருதுகள் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர்களுக்குக் கிடைக்காதது எனக்கு ஏமாற்றமாகத்தான் உள்ளது.
விருதுகளைக் குறி வைத்து நான் படங்களை இயக்குவதில்லை. விருதுகள் கிடைத்தால் சந்தோஷப்படுவேன். கிடைக்காவிட்டால் வருத்தப்பட மாட்டேன்..’, என்றார் பாலா.












தலைவர் ரசனையும் பெரும்பாலான மக்களின் ரசனையும் ஒன்றாகவே உள்ளது..வாழ்க தலைவர்…
அன்புடன்
சௌந்தர்
வேட்டைகாறன ரெண்டு தடவை பார்த்தேனே அதுக்கு எதாவது அவார்டு கிடுகுமா? குறைஞ்ச பட்சம் ரஜினியாவது போன் பண்ணுவாரா?
///வேட்டைகாறன ரெண்டு தடவை பார்த்தேனே அதுக்கு எதாவது அவார்டு கிடுகுமா? குறைஞ்ச பட்சம் ரஜினியாவது போன் பண்ணுவாரா?
Dheivamey…….Dont worry u will get Oscar for watching Vettaikaaran 2 times.
palPalani says:
வேட்டைகாறன ரெண்டு தடவை பார்த்தேனே அதுக்கு எதாவது அவார்டு கிடுகுமா? குறைஞ்ச பட்சம் ரஜினியாவது போன் பண்ணுவாரா?
Manoharan says:
///வேட்டைகாறன ரெண்டு தடவை பார்த்தேனே அதுக்கு எதாவது அவார்டு கிடுகுமா? குறைஞ்ச பட்சம் ரஜினியாவது போன் பண்ணுவாரா?
Dheivamey…….Dont worry u will get Oscar for watching Vettaikaaran 2 times.
ha…..ha……
பூஜாவுக்கு விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்
//வேட்டைகாறன ரெண்டு தடவை பார்த்தேனே அதுக்கு எதாவது அவார்டு கிடுகுமா//
ஹா..ஹா..உங்களுக்கு ஆஸ்கார் குடுக்க வேண்டியதுதான்.
//குறைஞ்ச பட்சம் ரஜினியாவது போன் பண்ணுவாரா?//
ஏங்க ரஜினி போன் பண்றது உங்களுக்கென்ன குறைஞ்ச பட்ச விஷயமா?.. (அவர ஒரு தடவையாவது பார்க்க மாட்டோமான்னு எத்தன பேரு காத்துட்டு இருக்காங்கா..)