முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

படம் வெற்றி…. தயாரிப்பாளர் ‘அவுட்’!

Saturday, January 23, 2010 at 1:25 am | 1,589 views

வாரிசு விவகாரம்… ரஜினி சார் என்னைப் பாராட்டினார்! – தனுஷ்

ஜினி வாரிசு’ பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் அளித்து வரும் பதிலால் உங்கள் மாமனார் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறதே…?

“யாரோ உங்களுக்கு தப்பா சொல்லியிருக்காங்க பாஸ்… நான் கஸ்தூரிராஜாவோட வாரிசுதான்னு பதில் சொன்னது ரஜினி சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. என்னை கூப்பிட்டு இதுக்காக பாராட்டினார்…!”

குட்டி பிரஸ் மீட்டில் நிருபர் ஒருவரின் கேள்வியும் தனுஷ் தந்த பதிலும்.

படம் வெற்றி…. தயாரிப்பாளர் ‘அவுட்’!

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து சுகங்களோடு நாகர்கோயில் கவுரமாக இருந்தவர் ராமச்சந்திரன்.

சினிமா தயாரிப்பாளராகும் ஆசையில் வின்னர் படம் எடுத்தார். பிரசாந்துக்கு 50 லட்சம். அந்தப் படத்தில் நடிக்கும் போதே வாய்தா போன கண்டிஷனுக்கு வந்துவிட்ட கிரணுக்கு கூட 10 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் படம் இழுத்துக் கொண்டு நின்றது.. காரணம் அந்தப் பட ஹீரோ பிரசாந்த். ஒரு சில்லறை விஷயத்துக்காக படத்தை அம்போவென விட்டுவிட்டு, கடைசி நேரத்தில் மீண்டும் நடித்துக் கொடுத்தார்.

ஆனால் தயாரிப்பாளர் அதற்குள் தொழிலை விட்டே துரத்தப்பட்டிருந்தார். வின்னர் படம் பெற்ற வெற்றி, சம்பாதித்த லாபம் ஊருக்கே தெரியும். ஆனால் என்ன புண்ணியம் நயா பைசா தேறவில்லை தயாரிப்பாளருக்கு மட்டும். பரதேசி மாதி ஊர் ஊராக பிச்சையெடுக்காத குறைதான்.

கடைசியில் ஒரு ஹோட்டலில் கிளீனர் வேலை செய்கிறார் மனிதர். சரியா திட்டமிட்டு, கருத்தா படத்தை முடிச்சு தயாரிப்பாளரையும் காப்பாத்துங்கப்பா!

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

5 Responses to “படம் வெற்றி…. தயாரிப்பாளர் ‘அவுட்’!”
  1. karthik says:

    படம் வெற்றி…. தயாரிப்பாளர் ‘அவுட்’!

    என்ன கொடுமை சார் இது .ரஜினி மாதிரி எல்லா நடிகர்களும் இருப்பார்களா ?
    மற்ற நடிகர்கள் ரஜினியை பார்த்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது .

  2. விநோ-

    மனசாட்சியோட சொல்லுங்க, நியாயமா இந்தத் தலைப்பு ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளருக்குதானே பொருந்தும்!

  3. எனக்கு உண்மையிலேயே புரியவில்லை, அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்கிறதென்று.

    பாவம் செல்வராகவன், அவருக்குக் கூட இத்தனை விதமான அர்த்தங்கள் தோன்றியிருக்காது படத்தை எடுத்தபோது.

    கோடையில் விவசாயிக்கு பிரயோசனமே இல்லாமல் வானில் மிதக்கும் மலட்டு மேகங்களைப் பார்த்து விதவிதமாக கவிதை எழுதித் தள்ளும் வீணாய்ப்போன கவிஞர்களைப் போலத்தான், இங்கே ஆஓ-வை ஓஹா ஓஹோ எனப் புகழும் நண்பர்களைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது.

    அப்புறம்-

    மனோகரன் என்ற பெயரில் கமெண்ட் மழை பொழிபவருக்கு-

    என்னமோ நீங்கதான் ஒட்டு மொத்த சினிமா ரசனையையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி கமெண்டா கிறுக்கித் தள்ளாதீங்க. எவனெவனோ எழுதியதையெல்லாம் இங்கே வந்து ஏன் கொட்டுகிறீர்கள். அதான், இந்தக் கட்டுரையில் தெளிவா சொல்லியிருக்காரே அதை எழுதினவர்… ஆஒ என்பது அர்த்தமற்ற குப்பை. அதை எடுத்த செல்வராகவன் இப்படி தம் கட்டிப் பேச வேண்டிய அவசியமில்லை. இதுதான் இந்தக் கட்டுரை சொல்ல வரும் சேதி. போங்க போய் வேலையைப் பாருங்க.

    இல்லன்னா காத்துவாங்கற ஆஓ தியேட்டர்களில் கூட்டம் சேர்க்க முயற்சி பண்ணுங்க.

    தம்பி கரி ஸாரி கிரி-

    உனக்குப் பிடிச்சா போதுமா, அது நல்ல படம் ஆகிடுமா. நீ ஜூப்பருன்னு தூக்கி வெச்சிக்கிட்டு ஆடற இந்தப் படத்தைப் பார்க்க எத்தனைப் பேர் க்யூவுல நிக்கிறாங்கன்னு உள்ளூர்ல யாரையாவது விசாரிச்சுப் பாருப்பா. உனக்குப் பிடிச்ச மாதிரியே விமர்சனம் எழுத முடியாதில்லையா? பொதுவான பார்வையில, பெரும்பாலோருக்குப் பிடிக்காத படம் இந்த ஆஒ.

    யாருக்கும் பயன்படாத ஒரு வெத்துப் படம் இது. இந்தப் படத்தை எடுத்தவர் சொல்றார்- நீங்க நினைக்கிற அர்த்தத்தில் இந்தப் படத்தை எடுக்கலைன்னு.

    அப்புறம் திரும்ப திரும்ப இதை ஈழப்போர்னு பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

    தமிழர் கலாச்சாரத்தை இந்தப் படம் எங்கே பிரதிபலிக்கிறது. இதை எடுத்தவரும் சரி, இந்தப் படமும் சரி தமிழர்களுக்கு சம்பந்தமில்லாதது.

    இந்தப் படத்தை எடுத்த ஒரே பாவத்துக்காக விரைவில் டேபிள் துடைக்கப் போகவிருப்பவர் தமிழரான ரவீந்திரன் என்பதைத் தவிர வேறு ஒரு பலனும் இல்லை.

  4. கிரி says:

    //வன்னியன் says:
    தம்பி கரி ஸாரி கிரி-//

    :-) அண்ணா வன்னியன் நான் உங்க பேரை மாற்றி கூறினா ரொம்ப அசிங்கமா இருக்கும் வேண்டாம்

    //எனது கருத்தை நான் கடைசி வரி வரை நியாயமாக, நாகரீகமாக, உண்மையாக, உண்மையைச் சொன்னேன். //

    No comments :-)

  5. Srinivas says:

    //மனசாட்சியோட சொல்லுங்க, நியாயமா இந்தத் தலைப்பு ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளருக்குதானே பொருந்தும்!
    //

    தலைப்பு பொருந்து கிறது என்றால் தாங்கள் படம் வெற்றி என்பதை ஒத்துக்கொண்டு விட்டீர்கள் போல :)

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)