செல்வராகவன் கோபம் நியாயமா?
Friday, January 22, 2010 at 12:04 am | 7,511 views
செல்வராகவன் கோபம் நியாயமா?
பொதுவாகவே எல்லா கலைஞர்களுக்குமே காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு மனோபாவம்தான்.
ரொம்ப ரொம்ப அரிதாக சில விதிவிலக்குகள் உண்டு.
ஒரு முறை ரஜினி இப்படிச் சொல்லியிருந்தார்:
‘பொதுவாக நமது படைப்பைப் பத்தி நாமே ரொம்ப பேசிக்கிட்டிருக்கக்கூடாது. பேசலாம்… படம் வெளியாகும் வரை. வெளி வந்தபிறகு மக்கள் பேசணும். பேச வைக்கிற மாதிரி இருக்கணும் அந்தப் படம்!’
நல்லதோ கெட்டதோ… செல்வராகவனின் இந்தப் படம் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பலர் தங்களுக்கு வசதியான, பிடித்தமான உவமானங்களோடு இந்தப் படத்தைப் பார்த்துக் கருத்துக் கூறி வருவதையும் பார்க்க முடிகிறது. விமர்சனங்களை முன் வைப்போரை செல்வராகன் சார்பில் நின்று ஏசுவதையும் கவனிக்காமலில்லை!
ஆனால் இந்தப் படம் குறித்து விளக்கம் சொல்ல செல்வராகவன் ஒரு பிரஸ் மீட் வைத்திருந்தார் சில தினங்களுக்கு முன்.
அதில் தனது படத்தின் கதை இதுதான் என்று ஒரு பிரஸ் ரிலீஸ் கொடுத்ததோடு, தனது படத்தை விமர்சிப்போர், தமிழ் கலைஞனின் முயற்சிகளை ஆதரிக்க மனமில்லாதோர் எனும் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார்.
இந்தப் படத்தை அவர் சுயமாக சிந்தித்து, எந்த அந்நியப் பட வாசனையும், நிழலும் படாத அளவுக்கு தந்திருப்பதாகக் கூறினார்.
இதையும் மீறி இந்தப் படத்தில் ஆங்கிலப் பட சாயல் இருப்பதை நிரூபித்தால், அந்தப் படங்களின் விசிடியோ டிவிடியோ கொடுத்தால் கூட, சினிமாவை விட்டே போய்விடுவேன் என்று வேறு சபதம் போட்டார்.
ஒரு தமிழன் எடுத்த படத்தை, தமிழர்களே ஆதரிக்காவிட்டால் எப்படி புது முயற்சிகள் வரும் என்றவர், அவதார் படத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருப்பதாக வேறு வம்பு நெருப்பை வீசினார். மொழியே தெரியாமல் போய் உட்கார்ந்தாலும் கண்கள் பனிக்க, நெகிழ்வும் பிரமிப்பும் மேலோங்க இன்றும் மக்களைப் பரவசப்படுத்துகிற படம் அவதார்.
ஆனால், தான் எடுத்த படம், அதன் கதை இதுதான் என்று புரிய வைக்க ஒரு பிரஸ் மீட் வைத்து, விளக்க அறிக்கை தரும் நிலையில் உள்ள ஒரு படைப்பை எப்படிக் கொண்டாட வேண்டும் என எதிர்பார்க்கிறார் செல்வா?
இவர் தமிழரா, தெலுங்கரா என்று பார்த்தா இதற்கு முந்தைய இவரது படங்களுக்கு ஆதரவு தந்தார்கள்?
செல்வராகவன் நல்ல படைப்பாளியா இல்லையா… என்பதை காலமும் அவரது வரவிருக்கிற படைப்புகளுமே தீர்மானிக்க முடியும்.
எனவே அதுவல்ல பிரச்சினை…
படைப்பு குறித்த விமர்சனங்களை எதிர்நோக்குவதில் அவருக்கு ஏன் இத்தனை ஆவேசம்?
தமிழன் எடுத்த படத்தை தமிழர்கள் விமர்சனம் செய்யக் கூடாதா? தமிழன் எடுத்த படத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டுமா?
ஒரு திரைப் படைப்பாளிக்கு மிக முக்கியமானது திட்டமிடல்… முதலில் இந்தப் படத்துக்காக குறைந்தபட்சம் ஒழுங்கான திட்டமிடலையாவது செய்தாரா செல்வராகவன்? அது ரசிகனுக்கு தேவையில்லாத சமாச்சாரம் என்று கூட சிலர் வரிந்து கட்ட முயற்சிக்கலாம்… இந்தப் பிரச்சினையை ஏன் இங்கே கொண்டு வருகிறோம் என்றால், செல்வராகவனின் ஒரிஜினல் திட்டம் இந்தப் படம் அல்ல. 6 கோடி ரூபாயில் தன் பாணியில் அவர் எடுக்கத் துவங்கிய படத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மாற்றி, ரூ 32 கோடிக்கு அவர் இழுத்துக் கொண்டு போனார் என்பதுதானே உண்மை!
செல்வராகவன் என்ற படைப்பாளியை நாம் இப்போதும் மதிக்கிறோம்… காரணம் இந்தப் படத்துக்காக அவர் தேர்ந்தெடுத்த களம். ஆனால் அந்தக் களத்தில், விளைந்த நல்ல நெல்மணிகளூடே எட்டிக் காய்களையும் சேர்த்தே அவர் கொட்டிவிட்டதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார். தெரிந்தே பொய்யைச் சொன்னால் என்னவென்பது?
இந்தப் படம் சரித்திரமல்ல… வெறும் கற்பனை என்கிறார்.
கற்பனைக் கதைக்கு ஏன் சோழர்-பாண்டியர் வரலாறும் அவர்தம் பெயர்களும்?
கூடவே, சோழர்கள் இப்படித்தான் பேசினார்கள் என்று ஆய்வு செய்து கண்டுபிடித்து அதை படத்தில் இடம்பெறச் செய்தேன் என்று வேறு பிரஸ் மீட்டில் கூறுகிறார். கற்பனைக்கு ஏன் இந்த authenticity?
இன்னொன்று, இந்த மாதிரி கதைக்கு எதற்காக சோழ, பாண்டிய உவமானம்… பாண்டியன் என்ன சிங்களத்தானா? இருவரும் தமிழர்கள்தானே… இன்று ஒரே எல்லைக்குள் இருக்கும் தமிழ் ரசிகனுக்கு எந்தத் தமிழனை வில்லனாகக் காட்டுகிறார்?
சரித்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதே பெரிய விஷயம்தான். ஆனால் அதைச் சரியாகச் சொல்ல நல்ல திட்டமிடலும், ஆய்வுகளும் முக்கியம். இழுத்து இழுத்து தமிழ் பேசினால் அது ராஜேந்திர சோழன் காலத்துத் தமிழ் என்பது கோமாளித்தனம். சாதாரண தமிழைத்தான் சுத்தமான உச்சரிப்போடு சோழர்களும், பாண்டியர்களும் பேசினர் என்பது வரலாறு.
ஆயிரத்தில் ஒருவனில் பிரதிபலிக்கிற ஆங்கில, இத்தாலிய படங்கள் (டைம்லைன், கிளாடியேட்டர், அபோகலிப்டோ, காங்கோ, கேனிபல் ஹாலோகோஸ்ட்….) என்னென்னவென்று எல்லோரும் ஆராய்ந்து தனித் தனி கட்டுரைகளே எழுதிக் கொண்டிருகிறார்கள். அட, அப்படியே பாதிப்பு இருந்தாலும் தப்பில்லையே… அது தரமாக, சுவாரஸ்யமாக, தெளிவாக இருக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்கள் பார்வையாளர்கள்?
காட்ஃபாதரின் பாதிப்பு இருந்ததால் கமலின் நாயகனைத் தள்ளியா வைத்துவிட்டார்கள்… தைரியமாக ஆஸ்கருக்கே அனுப்பவில்லையா?
கர்ணன் கதையை மட்டும் மையப்படுத்தி வந்த ரஜினியின் தளபதியை நல்ல படமில்லை என்றா சொல்லிவிட்டார்கள்?
முகத்துக்கு நேரே உண்மையை தூக்கிப் பிடித்து கேள்வி கேட்கிற விமர்சகனை ஏதோ எதிரியாகப் பாவித்து, ‘நான் காப்பியடிச்சதா நிரூபிச்சா சினிமாவை விட்டே போய்விடுகிறேன்’ என்று வீராவேசமாக சூளுறைப்பது அவரது படைப்பில் நேர்மையில்லை என்பதைத்தானே காட்டுகிறது?
இந்தப் படத்தைப் பாராட்டும் பலரும், இது ஈழத்தில் தமிழர் படைக்கும் சிங்களத்தானுக்கும் நடந்த பேரவலத்தின் பதிவு என்றே பார்க்கிறார்கள். துக்கப்பட்ட மனது தேடும் ஆறுதல் அது. ஆனால் செல்வா என்ன சொல்கிறார்?
“இல்லை… இதற்கும் ஈழப் போருக்கும் சம்பந்தமில்லை… அதெல்லாம் நடக்கும் முன்பே நான் இதையெல்லாம் எடுத்துவிட்டேன்” என்கிறார்.
அடப்பாவிகளா… தமிழன் தமிழன் என்று சொல்கிறீர்கள்… ஆனால் தைரியமாக.. ‘ஆமாய்யா.. நான் எடுத்தது ஈழப்போரின் ஒரு பதிவுதான்… எம் இனம் அநியாயமாக மாண்டதைத்தான் சொன்னேன்… என்ன இப்போ?’ என்று திருப்பிக் கேட்கக் கூட திராணியில்லையா?
அட.. இத்தனை காலம் இந்தப் படத்தை இழுத்தவர், இரண்டாம் பகுதி முழுக்க ஈழப் போர்க்களத்தை உருவகப்படுத்தி தெளிவாகச் சொல்லவாவது முயற்சித்திருக்கலாமே…
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயம் தருவேன் என்கிறார் செல்வா… கண்டிப்பாக தரவேண்டும். ஆனால், மிகச் சரியாக திட்டமிட்டு, தெளிவான களத்தை முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள். அதிகபட்ச நேர்மையோடு, சொல்ல நினைத்ததை முழுமையாகச் சொல்லுங்கள். உங்களது படைப்பின் அடையாளமாகவே மாறி வரும் வக்கிர காட்சிகளைத் தவிருங்கள்.. சின்னப் பிள்ளைகளோடும் உங்கள் படத்தை பார்க்க விரும்புகிறோம்…
தமிழனின் சிறப்பை, அவலத்தை எந்த அடையாள மறைத்தலோ, மறுப்போ, டிஸ்க்ளைமரோ கூட இல்லாமல் படமாக்குங்கள் செல்வா.. தமிழினமே தலைமேல் வைத்துக் கூத்தாடும் உங்கள் படைப்பையும் உங்களையும்!
நல்ல படைப்பாளியை இனம், மொழி தாண்டி தலையில் வைத்துக் கொண்டாடத்தான் தமிழனுக்கு தெரியும்… விரட்ட அல்ல!
-வினோ
குறிப்பு: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கான விமர்சனம் அல்ல இது!












///தம்பி கரி ஸாரி கிரி-///
///என்னமோ நீங்கதான் ஒட்டு மொத்த சினிமா ரசனையையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி கமெண்டா கிறுக்கித் தள்ளாதீங்க//
வினோ இதற்க்கான பதில் இப்படித்தான் இருக்கும். கமெண்ட் எழுதியவர்களை கிண்டல் செய்தால் பதிலடி இன்னும் மோசமாக வரும். ரஜினி ரசிகர்களை த*தலை என்று சொல்லும் உனக்கு இங்கே என்ன வேலை. இது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் விவாதம் செய்யும் இடம். எங்களுக்குள் எந்த மோதலும் வந்ததில்லை.வெளியே இருந்து வருபவர்களால்தான் பிரச்சனையே. இங்கு எதை குடுத்தாலும் திருப்பி கிடைக்கும். அன்பும் சரி..அடியும் சரி…
புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் , ஆனா சண்டை இருக்க கூடாது .
//கமலக்கண்ணன் says:
January 22, 2010 at 11:11 pm
இந்த கமெண்டை எழுதிய அறிவுக்கொழுந்துக்கு-//
//உங்களுக்குப் பிடித்துவிட்டது என்பதாலேயே இது நல்ல படம் என்று அர்த்தமா?//
காமாலை கண்ணன் முதலில் நான் எழுதியதை ஒழுங்கா படிக்கவும் ..இப்படி நான் எங்கேயும் கூறவில்லை.
கலாச்சார பாதுகாவலர் முதல்ல நீ நாகரீகமா விவாதிக்க கத்துக்கோ அப்புறம் மற்றவர்களை வக்கிரம் பிடித்தவன் என்று சொல்லலாம்.
//ஏன்டா இந்த சினிமாக்கார நாய்ங்க பின்னால சீரழிஞிசி சாவறீங்க//
நீ இங்கே என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா!
===============================================
//வன்னியன் says:
தம்பி கரி ஸாரி கிரி-//
//எனது கருத்தை நான் கடைசி வரி வரை நியாயமாக, நாகரீகமாக, உண்மையாக, உண்மையைச் சொன்னேன். //
No comments
நான் நினைத்தேன் ….நீங்கள் பதிவா எழுதுறிங்க ….
என்னை பொறுத்த வரையில் this is a not a issue at all. ,just a simple observation.
ஒரு குப்பையை பார்த்து அது ஒரு குப்பை மேடு தான் என்று சொல்வதில் சிலருக்கு என் இவளவு கஷ்டமும் ,தயக்கமும் ……
இந்த படத்துக்கு எடுத்துக்கொண்ட கால இடைவெளி கூடினபடியாலோ என்னவோ…..
முதலில் அவர் என்ன எடுக்க நினைத்தாரோ அதிலிருந்து சற்று நகர்ந்து வேறொரு திசையில் பயணிக்கிறார்….
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் செல்வா ,ஷங்கர் ரேஞ்சுக்கு இறங்கி இருப்பது தான்.
ஷங்கர் பொருட்செலவில் பிரமாண்டம் காட்டுவார்.
{{உதாரணம் :ஒரு கோடியில் ஒரே ஒரு ஜட்டி காய்கிறது .அதே கோடியில் 100-150 ஜட்டிகள் கலர்-கலராக டிசைன் டிசைன் ஆக தலை கீழாக தொங்க போட்டால் அவருக்கு அது தான் பிரமாண்டம் .}
அனால் செல்வாவோ இதில் திரைகதை பிரமாண்டம் ,கற்பனயில் பிரமாண்டம் ,இசையில் பிரமாண்டம் பட்ஜெட்டில் பிரமாண்டம்,கவர்ச்சியில் பிரமாண்டம்,தூய தமிழில் பிரமாண்டம் ,ஆங்கிலத்தில் சண்டை போட்டு தூசனம் பேசுவதிலும் பிரமாண்டம்… என்று தமிழ் மக்களுக்கு ஒரு பிரமாண்ட திரை விருந்தை தருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்… அனால் என்ன பயன் ? எத்துணையோ பேருடைய உழைப்பும்,பொருட்செலவும்,காலமும்…. பிரமாண்டம் என்ற வார்த்தை மாயைக்குள் சிக்குன்று ,…தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இருக்க வேண்டிய படைப்பு, பாதி செய்து முடித்த மன்பானயாக காட்சியளிக்கிறது.
ஒரு unique creationகாக உழைக்காமல் நான எவ்வளவு பெரிய டைரக்டர் என்று காட்டுவதற்காகவே சம்மந்தமே இல்லாமல் பல காட்சிகள் கோர்த்து,அந்த ஒவ்வொரு காட்சிளையும் பிரமாண்டம் காட்டுவதற்காக என்னென்னமோ செய்கிறார். என்னை பொறுத்தவரையில் படத்தின் இரண்டாவது பாதி “குட்டி குட்டி பிரமாண்ட குறும்படங்களின் தொகுப்பே” அன்றி ஒரு பிரமாண்ட திரைப்படம் என்று சொல்ல முடியாது.
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கவேண்டியவன் ,,,பத்தோடு பதினொன்றாக வீதியில் நிற்கிறான் .
Dear Mr Admin
I’m one of your long time reader and a non – Rajini fan from Chennai.
The debate is now going to an awkward point and there is no meaning in both Mr Giri and Mr Manoharan’s loud write up. The way Mr Manoharan writing his argument is abusive and arrogant.. Is this the way of facing critics?
What they want to prove? May be Selvaragavan’s effort is good, but the result is very bad and it becomes an suicidal weapon to its producer (for the viewer also).
First ask this guy Selva to give a good movie (perfect) like his earlier one Kathal Kondein (Also critically aclaimed). I’m not telling this on my own taste and preferences. Kathal Kondein is the real good movie and also a blockbuster. Public also hailed Selva for his good effort to show the darkness of poor in this film.
Buit in AO, he wasted 3 good and golden years and 30 plus crores for a vein project. As a result, it completely rejected by the mass. This is the most important thing.
As a film buff, I had visited many theaters in the City and suburb for the past couple of days. In Jyothi, located in mount road kathipara, the attendence is hardly 100 plus – remember the total capacity of the theater is 1300!
Just forget the film critics… According to ordinary film viewers, AO is not a worthy film to watch. If it really good, the BO figures will establish the fate of AO. Dot try to give false information to the readers.
My humble request is dont allow this kind of comments in your site. I think you are trying to keep a balanced position between die hard Rajini fans and general fans. If you want to keep this neutrality, ask these type of fans to avoid abusive comments and providing wrong info’s on wrong films…
Ramana
Mr.Ramana thanx for your comment that I m arrogant. But was not arrogant till i was target personaally. Read my comments before my name was used and after my name was used, I cant remain a spectator once i was personally targeted. FYI in our home town Tirupur AO has been released in 9 theatres. That itself is a never before one. Inspite of that in weekdays i went to AO ant the theatre is Housefull. Its no need for me to give false info. Becoz Envazhi site is dear to us. We never give false info. Just go thru this week’s Box office report in Sify and Behindwoods, it will tell the truth. Then u have mentioned that this movie is rejected by mass. Do you think you are the representative of the mass ? its the joke of 2010.
tamil makkal kutram solluvathil theramai pataithavar
Just I want to add a point.
There is no need that a good movie should be a box office block buster.
I too like AO.
Superb point Mr.Noushadh. In 1987 Manithan and Nayagan got released for Deepavali and Manithan ran for 175 days and Nayagan ran 151 Days. But Nayagan has been selected in Top 100 movies of the 20th Century by Times magazine. Manithan is a perfect entertainer. Nayagan is a Class act. We cant compare both. Ur point is very good.
ஹ்ம்ம்,,,நடக்கட்டும்…
இதக்கே இப்படியா ??? இன்னும் எந்திரன் வந்தவுடன் இந்த பகுதி களை கட்டும் /
/*
செல்வராகவன் கோபம் நியாயமா?
*/
நியாயம்தான்… அப்போதுதான் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை பயமில்லாமல் தர முடியும், இது எல்லா படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.
–
பொன்னாடை போர்த்தி வாழ்வதும்,
பென்னாடை கழட்டி கட்டுவதும் ஒன்றுதான்…
(சும்மா கோர்வையா வந்துச்சு எழுதிட்டேன், யாரும் எதையும் பொருத்தி பார்க்கவேண்டாம்,
“//இந்த படத்துக்கு எடுத்துக்கொண்ட கால இடைவெளி கூடினபடியாலோ என்னவோ…..
முதலில் அவர் என்ன எடுக்க நினைத்தாரோ அதிலிருந்து சற்று நகர்ந்து வேறொரு திசையில் பயணிக்கிறார்…”
“செல்வாவோ இதில் திரைகதை பிரமாண்டம் ,கற்பனயில் பிரமாண்டம் ,இசையில் பிரமாண்டம் பட்ஜெட்டில் பிரமாண்டம்,கவர்ச்சியில் பிரமாண்டம்,தூய தமிழில் பிரமாண்டம் ,ஆங்கிலத்தில் சண்டை போட்டு தூசனம் பேசுவதிலும் பிரமாண்டம்… என்று தமிழ் மக்களுக்கு ஒரு பிரமாண்ட திரை விருந்தை தருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்… அனால் என்ன பயன் ? எத்துணையோ பேருடைய உழைப்பும்,பொருட்செலவும்,காலமும்…. பிரமாண்டம் என்ற வார்த்தை மாயைக்குள் சிக்குன்று ,…தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இருக்க வேண்டிய படைப்பு, பாதி செய்து முடித்த மன்பானயாக காட்சியளிக்கிறது.
ஒரு unique creationகாக உழைக்காமல் நான எவ்வளவு பெரிய டைரக்டர் என்று காட்டுவதற்காகவே சம்மந்தமே இல்லாமல் பல காட்சிகள் கோர்த்து,அந்த ஒவ்வொரு காட்சிளையும் பிரமாண்டம் காட்டுவதற்காக என்னென்னமோ செய்கிறார். என்னை பொறுத்தவரையில் படத்தின் இரண்டாவது பாதி “குட்டி குட்டி பிரமாண்ட குறும்படங்களின் தொகுப்பே” அன்றி ஒரு பிரமாண்ட திரைப்படம் என்று சொல்ல முடியாது.
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கவேண்டியவன் ,,,பத்தோடு பதினொன்றாக வீதியில் நிற்கிறான் //.”
உண்மை ….
///From Mr.Ramana :AO is not a worthy film to watch. If it really good, the BO figures will establish the fate of AO. Dot try to give false information to the readers///
To the Intelligence beareu Cheif Ramana : Click the following to see this week’s Box Office report and post ur reply. Dont go hiding.
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies/tamil-cinema-topten-movie-aayirathil-oruvan.html
சன் டிவி ப்ரோக்ராம் பாத்து தான் இந்த படம் பாக்க தியேட்டர் போனேன்.
ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு தான் வந்தது.. நம்ம ஆளுங்க, குறைஞ்ச செலவுல, ஒரு ஹாலிவுட் படத்திற்கு நிகராக தமிழ் படத்தை கொடுத்திருக்காங்க.
கடைசி காட்சிகள் சமிபத்திய பேரழிவுகளை நினைவு படுத்தினாலும் அது நமது மனதில் உள்ள நினைவுகள் தான்.
சோழர்களும் பாண்டியர்களும் போரிட்டு கொண்டது சரித்திர உண்மை. அவர்களுக்குள் சில நேரங்கள் சமாதானமும் சில நேரங்களில் யுத்தங்களும் நடந்தது உண்மை. அதன் தொடர்சியாக இந்த கதையை ஏன் எடுத்து கொள்ளகூடாது ?. ஒருவேளை அப்படி ஒரு தீவு இருந்து சோழர்கள் பழங்குடிகளாக வாழ்ந்து வந்தால். இந்த கதை ஒரு நிஜமக இருக்க வாயப்பு உள்ளது.
அமெரிக்க சில வருடங்களுக்கு முன்பு ஒரு தீவை கண்டு பிடித்தது, அங்குள்ள பழங்குடி மக்கள் எந்த வித நவீன கால மாற்றங்களும் இல்லாமல் இருப்பதாய் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தெரிவித்தது. அந்த மக்களின் gene களுக்கு உலக ரீதியாக உரிமை கோரியுள்ளது.
இந்த படத்தை பார்த்தவுடன் அந்த பழங்குடி மக்கள் பற்றிய செய்திதான் கண் முன்னே வந்தது.
செல்வராகவன் நல்ல முயற்சி.. இன்னும் வித்தியாசமான படங்களை தாருங்கள்.
SS நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. அமேசான் காடுகளில் கேனிபல்ஸ் எனும் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் இன்னும் வாழ்ந்து வருவதாக அமெரிக்க ஆய்வுகள் கூறுகின்றன. நாகரிக மனிதர்களின் வாசனையே அவர்களுக்கு தெரியாது என்கிறார்கள்.
Sify Box Office Report :
The big surprise is that Aayirathil Oruvan, in spite of predominantly negative reviews, is doing well in its second week and is holding on to the number one position.
The film had taken a dip after a great opening, but has now picked up after the controversial scenes were removed and its length reduced.
At number two is Kutty, which is just ok. And in third position is Avatar, which has made a strong comeback due to its excellent collections in theatres screening the 3D version.
At number four is Vijay’s Vettaikaran and at fifth place is 3 Idiots, which has become the highest grossing Hindi film in Chennai.
BO verdict : Hit
Behindwoods Box Office Report :
Selvaraghavan’s action-adventure is a treasure hunt in the first half and dark and cannibalistic movie in the second. Reema’s buxomness that edges on the kinky side and Karthi’s wit are the few pluses of the movie.
Trade Talk:
The movie is still riding high at the BO, mostly on the initial expectations and hence trade is on the affirmative.
Public Talk:
Either extremely positive or extremely negative reviews are meted out at the movie perplexing the movie-going public.
No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 208
Average Theatre Occupancy over this weekend: 87%
Collection over this weekend in Chennai: Rs. 55,53,837
Total collections in Chennai: Rs.1.94 Crore
Verdict: Good Opening
நண்பர் மனோகரன் மற்றும் ஸ்ரீனிவாஸ் கருத்துக்கள் தான் என் கருத்தும்.
படம் 3வருசம் எடுத்தாங்க, 32கோடி செலவழிச்சாங்கன்னு கமெண்ட் நமக்கு தேவையில்லாத வேலை. நாம் கொடுக்குற காசுக்கு படம் எப்படி யிருக்கு அத மட்டும் சொன்னால் போதும். நம்மகிட்ட கம்ப்யூட்டர் இருக்கு மௌஸ் இருக்குன்னு என்ன வேணாலும் எழுதலாம்னு நினைச்சுக்குறாங்க. படம் நல்லாதான் போயிகிட்டு இருக்கு, ஆனா என்ன குறைகளை மட்டும் சொன்னால் தான் நல்ல விமர்சனம் பண்றொம்னு நினைக்கிறாங்க போலிருக்கு. படம் புரியவில்லை என்பவர்கள் மறுபடியும் போய் பாருங்கள் நன்றாக புரியும். அப்படியும் புரியவில்லை என்றால் வேட்டைக்காரன் என்கிற சரித்திர முக்கியத்துவம் படத்திற்கு பிறகு வருகின்ற சுறாவை போய் பார்க்கலாம்.
எனக்கு முன் சொன்ன நண்பர் சொன்ன மாதிரி சிவாஜி டயலாக் தான் ஞாபகம் வருது. ஒரு படத்தை கவுக்குறதுக்கு மட்டும் வந்துடுவாங்க.
செல்வா பேட்டியை சரியாக படித்தால் இந்த குழப்பமான கட்டுரை வந்திருக்காது. அவர் படத்தை பத்தி விளக்க வரவில்லை. சில காண்ட்ரஸ்டான விசயங்களை தெளிவுபடுத்த வந்தார். இந்த கட்டுரை முழுக்க முழுக்க செல்வாவை சாடும் நோக்கிலே எழுதப்பட்டுள்ளது போல் தோணுகிறது.
///செல்வா பேட்டியை சரியாக படித்தால் இந்த குழப்பமான கட்டுரை வந்திருக்காது. அவர் படத்தை பத்தி விளக்க வரவில்லை. சில காண்ட்ரஸ்டான விசயங்களை தெளிவுபடுத்த வந்தார். இந்த கட்டுரை முழுக்க முழுக்க செல்வாவை சாடும் நோக்கிலே எழுதப்பட்டுள்ளது போல் தோணுகிறது.///
நீங்கள் சொன்னதுதான் உண்மை. நேற்று ஜெயா டி.வியில் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் சுஹாசினி மிக நன்றாக விமர்சனம் செய்தார். நம்மூரில் மட்டும்தான் பேனா எடுத்தவனெல்லாம் க்ரிட்டிக்ஸ் என்கிறான், மௌஸ் பிடித்தவனெல்லாம் விமர்சனம் எழுதுகிறான். பார்வையாளனுக்கும் விமர்சகருக்கும் உள்ள வித்யாசமே இங்கு யாருக்கும் தெரிவதில்லை. இங்கு தனிப்பட்ட ரசனையும், காழ்ப்புணர்ச்சியும்தான் விமர்சனம் என்கிற பெயரில் வருகிறதே தவிர தரமான விமர்சனம் என்பது இங்கே இல்லை.சொல்லப்போனால் விமர்சனம் என்கிற பெயரில் இங்கு எழுதப்படுவதெல்லாம் வெறும் பிதற்றல்கள். ஒரு படத்தை உன்னிப்பாக கவனித்து அதை மட்டும் விமர்சனம் செய்வதுதான் உண்மையான விமர்சகன் செய்யும் வேலை. படத்தை 3 வருடம் எடுத்தால் என்ன 32 கோடி செலவழித்தால் என்ன என்பதெல்லாம் இவர்களுக்கு வேண்டாதவேலை. நேற்று இவர்களுக்கெல்லாம் சுஹாசினி சரியான பதிலடி குடுத்தார். சில பேர் ஆசைபட்டதைப் போல் படம் தோல்வியடையவில்லை. நேற்று கூட நான் கோவையில் 5வது முறையாக இப்படத்தை பார்த்தேன் படம் ஹவுஸ்புல்லாக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே மல்டிப்ளெக்ஸ்சில் கோவா சின்ன தியேட்டரில் ரிலீஸ், ஆனால் உள்ளதிலேயே பெரிய தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ஓடாது என்று சொன்னவனெல்லாம் இப்போது எங்கே ஓடினான் என்று தெரியவில்லை
no use of talking about this movie has been declared as “HIT” still running sucessfully 3rd week.
செல்வராகவன் mudalil tamilanaa alledu thelunganaa pls tell me padivu anser
Selvaragavan padathai parpavarkal innum sari va avarai yarum purinthu kolla villai…! 3 mani neyran padathai namma parthu udaney padan sariilla nu sollurathu question paperey mulusa padikamey pathil ennakku theriyala enru sollray mathiri…please avoid this kind of speach…! selvaragavan great director…!
*************************************கருத்து சுதந்திரம் உள்ள ஒரு மதிப்பான வலைதளம் என்பதால்தான் இதில் ரெகுலர் விசிட்டராக இருக்கிறேன்.இங்கேயும் அது இல்லையென்றால் கமெண்ட் எழுதி எந்த பிரயோஜனமும் இல்லை.
______________________
Mr Manoharan…
கமெண்ட் கணக்குக்காக தளம் நடத்தும் ஆள் அல்ல நான்.
என்னுடைய பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையை மீறினால்தான் உங்களிடமிருந்து நடுநிலையாளன் என்ற சான்றிதழ் கிடைக்கும் என்றால் எனக்கு அது தேவையேயில்லை. ஒரு சமூக நல நோக்கில் நடத்தப்படும் தளம் இது. யாருடைய தனிப்பட்ட ரசனையும் இதில் முக்கியமில்லை. இதற்கு நானும் கூட விதிவிலக்கில்லை.
ஒரு படத்துக்கு எழுதப்படும் விமர்சனம் பொதுவாகவே எழுதப்படுகிறது. அதில் என்ன காழ்ப்புணர்ச்சியைக் கண்டுவிட்டீர்கள்.. செய்தியை, கட்டுரையைப் படிக்கும்போது அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாத, உங்கள் விருப்பத்தை மட்டும் சுயமாக மோகித்துக் கொள்ளும் உங்களுக்கு, தனிப்பட்ட லாபங்களுக்காக அல்லாமல், ரசிகனின் பணத்தில் குளிர்காயாமல் ஒரு செய்தித் தளம் நடத்தும் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த எந்தத் தகுதியுமில்லை.
ஒரு செய்தியைப் படிக்கும்போது அந்தச் செய்தியுடன் தொடர்புடைய நபரை நினைத்துக் கொண்டு உங்கள் கருத்தை எழுதுங்கள். செய்தியைச் சொன்னவரையும் சேர்த்து விமர்சித்துக் கொண்டிருப்பதா கருத்து சுதந்திரம்…
என்ன நடுநிலை தவறிப் போனதைப் பார்த்தீர்கள்… உங்களுக்கு சாதகமான கருத்து என்றவுடன் கண்ட கண்ட தளத்திலிருந்தும் கருத்தை எடுத்துப் போட்டீர்கள், லிங்க கொடுத்தீர்கள் இங்கு. இதெல்லாம் உங்களுக்கே சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா…
வக்கிரங்களை வித்தியாசமென்று ரசிப்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம். அதற்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று உங்களைப் போன்ற சிலர் வாதாட விழைகிறீர்கள்…ஆனால் கலை என்ற போர்வையில் இந்த கருமங்கள் தலை தூக்கக் கூடாது என்று நாம் நினைக்கிறோம். இதுதான் நமக்குள் உள்ள வித்தியாசம்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
-Editor
Envazhi
///ஒரு செய்தியைப் படிக்கும்போது அந்தச் செய்தியுடன் தொடர்புடைய நபரை நினைத்துக் கொண்டு உங்கள் கருத்தை எழுதுங்கள். செய்தியைச் சொன்னவரையும் சேர்த்து விமர்சித்துக் கொண்டிருப்பதா கருத்து சுதந்திரம்…///
சில நேரங்களில் பொதுவான ஒரு ஆதங்கத்தை சொல்லும்போது,தவிர்க்கமுடியாமல் தனிப்பட்ட விமர்சனமும் வந்துவிடுகிறது என்று நீங்கள் சொல்லவருகிறீர்கள். அதேதான் எனக்கும். பொதுவாக இங்கு நல்ல விமர்சனங்கள் வருவதில்லை என்ற அனது ஆதங்கத்தை வெளிபடுத்தும்போது அந்த பொதுவில் நீங்களூம் ஒருவர் என்று அர்த்தம் வந்துவிடுகிறது. இதை நான் தவிர்த்திருக்கலாம்,ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சுகாசினியின் விமர்சனம் நன்றாக இருந்ததையும் நான் சுட்டிக்காட்டினேன். இருந்தாலும் இனிமேல் என் கருத்தை சொல்லும்போது விமர்சனம் எழுதியவரையும் கருத்தில் கொள்கிறேன்.
///வக்கிரங்களை வித்தியாசமென்று ரசிப்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம். அதற்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று உங்களைப் போன்ற சிலர் வாதாட விழைகிறீர்கள்…ஆனால் கலை என்ற போர்வையில் இந்த கருமங்கள் தலை தூக்கக் கூடாது என்று நாம் நினைக்கிறோம். இதுதான் நமக்குள் உள்ள வித்தியாசம்///
கோவா படத்தை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் ஒரு கருத்து.நாம் அசிங்கம் என்று ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் பிற்ப்பாடு வழக்கமாகியுள்ளது. முன்பு கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுவதுதான் வழக்கம்,பண்பாடு. அப்படி செய்யாதவர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக ஒரு பிரிவினரால் கருதப்பட்டனர். பின் உடன்கட்டை வேண்டாம்,எந்த நகைகளும் போடாமல்,வெள்ளை புடவை கட்டிக்கொண்டு எந்த சுபகாரியங்களுக்கும் போகாமல் இருக்க வேண்டும் என்றார்கள். அதன் பின் புடவை மட்டும் கலரில் இருக்கலாம் என்றார்கள்.ஆனால் இப்போது கணவனை இழந்த பெண்கள் எப்போதும் போலத்தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஒழுக்கக்கேடாகக் கருதப்பட்டது இன்று வழக்கமாகியுள்ளது. நாமும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதே போல் ஒரு காலத்தில் பலதார மணம் ஒரு விஷயமே இல்லை. இப்போது அது ஒழுக்கக் கேடான விஷயம். மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள். அதை நாமும் மிக முக்கிய புராணமாக படித்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இதே பாஞ்சாலி கதையை இன்று சினிமாவாக எடுக்க முடியுமா ? யாராவது ஏற்றுக்கொள்வார்களா ? ஏன்? ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். ஆகவே இந்த உலகில் ஒழுக்கம், ஒழுக்கமில்லை என்று அனைவராலும் ஒத்துக்கொள்ளப்படும் விஷயங்கள் என்று எதுவும் இல்லை. காலமாற்றத்தில் இன்று ஒழுக்கமாய் தெரிவது நாளை ஒழுக்கமின்மையாகத் தெரியும். இன்று ஒழுக்கமில்லாதது நாளை ஒழுக்கமாகத் தெரியும். மாற்றமில்லாதது மாற்றம் ஒன்றுதான். அதற்க்காக நான் Gay வை ஆதரிக்கவில்லை. ஆனால் நாம் ( என்னையும் சேர்த்துத்தான் ) கூப்பாடு போடுவதால் எந்த மாற்றமும் நடக்காமலிருக்கப் போவதில்லை. மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்,நம்மை கேட்காமலேயே. நமக்கு உடன்பாடு இல்லாவிட்டால் அதை பொருட்படுத்தாமல் இருப்பதே உத்தமம்.அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றால் எடுத்துவிட்டுப் போகட்டும். நாம் படத்தை விமர்சிப்போம். அதை எடுத்தவர்களை அல்ல. ஏன் “Dostana ” வந்தபோது எந்த சத்ததையும் காணோமே. மறுபடியும் சொல்கிறேன் நான் Gay உறவுக்கு ஆதரவாளன் இல்லை. ஆனால் நம்மை கேட்டு எதுவும் நடக்கப் போவதில்லை.
//உங்கள் ஆதரவுக்கு நன்றி.//
1000% Thanks for this word.
உங்கள் கருத்துக்கள் நூறு சதவீதம் சரியே. எட்டாம் நூற்றாண்டிலேயே கல்லணை, பல நுணுக்கமான கோவில்கள் எல்லாம் கட்டி நாகரிகமாக வாழ்ந்த சோழத்தமிழர்கள், அந்தப் படத்தில் பதினான்காம் நூற்றாண்டில்தான் அந்தத் தீவுக்குத் தப்பியோடியதாகக் காட்டப்படுகிறது, மிகவும் பின் தங்கிய காட்டு மிராண்டிகளாக. இதனை எப்படி தமிழர்கள், உலகத்தரத்திற்கு ஒரு படம் என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை, உலகத்தரத்தில் நம்மைக் கேவலப்படுத்தினால் அதையும் பாராட்டும் அளவிற்கு மூடர்களாகி விட்டோமோ நாம். உண்மையில் இது தமிழினத் துரோகத் திரைப்படமே என நான் நினைக்கிறேன். தமிழர்கள் இப்படி காட்டுமிராண்டிகளாகத்தான் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகும் வாழ்ந்திருக்கிறார்கள், என்ற தவறாக அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலேயே படத்தை எடுத்திருக்கிறார் செல்வா. உண்மையில் எனக்கு அவரது படைப்புகள் மிகவும் பிடிக்கும், ஆனால் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, அவர் நல்ல இயக்குநராகவே இருந்தாலும், நல்ல படைப்பாளியின் பட்டியலில் இருந்து அவர் வெளியேறிவிட்டதாகவே நினைக்கிறேன்,
மேலும் அந்தப்படத்தில், சோழர்கள் பற்றிய ஆராய்சிக்காக அந்தத் தீவுக்குச் செல்லும் வழியில் இருக்கும் அந்நிய நாட்டு காட்டு மிராண்டிகளின் மொழியைக் கூடத் தெரிந்து கொள்ளும், பாண்டிய மன்னனின் ஓலைச்சுவடியையும் படிக்கும் திறன் படைத்த ஆண்ட்ரியாவிற்கு, சோழ மன்னனிடம் தமிழ்பேசத் தெரியவில்லையாம். என்னக் கொடுமை சார் இது?
இது போன்ற படங்களை அவர்கள் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாம் ஆதரிக்கக் கூடாது.
இந்த வெப் லிங்கை பாருங்கள்.. நவீன உலகின் வாசனையே தெரியாத பழங்குடி மக்களின் இருப்பை பற்றிய சான்றுடன் கூடிய செய்தி..
http://www.dailymail.co.uk/sciencetech/article-1022822/Incredible-pictures-Earths-uncontacted-tribes-firing-bows-arrows.html
Mr.SS, I saw the pictures. நான் இத்தளத்தில் முன்பே சொன்னதுபோல் வெளியுலக தொடர்பே இல்லாமல் இன்னும் அமேசான் காடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் இங்கு பலரும் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்ற முட்டாள்தனத்துடந்தான் இருக்கிறார்கள். நமக்கு தெரியாத விஷயங்கள் நிச்சயம் 99.9% இவ்வுலகில் இருக்கும். செல்வராகவன் முழுக்க முழுக்க கற்ப்பனையில் உருவாக்கியுள்ள இப்படத்தின் காட்சிகளில் எத்தனையோ உண்மைகள் ஒழிந்திருக்கலாம். யார் கண்டது ? அவரது கற்பனையை பொறுத்தவரை நாடுவிட்டு போன ஒரு கூட்டம் வெளியுலக தொடர்பின்றி சோற்றுக்கும் வழியின்றி நூற்றுக்கணக்கான வருடம் உயிரோடு இருந்தால் எப்படியிருக்கும் என்பதை அவரது கற்பனையில் எடுத்துள்ளார். இது அவரது கற்பனையே தவிர உண்மையில்லை என்பதை அவரே டைட்டிலில் போடுகிறார். ஒரு வசதிக்காக சோழ பாண்டிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டதே தவிர இது உண்மையான சோழ வரலாறு கிடையாது என்பதும் உண்மை. அப்படியிருக்க இதை புரிந்து கொள்ளாமல் எதையோ எழுதினால் போதும் என்று சில அடிமுட்டாள்தனமான கமெண்ட்டுகளை சிலர் எழுதுகிறார்கள். செல்வராகவன் இப்போது பாலகுமாரனின் உடையார் நாவலை படமாக எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார். உடையாரில் இதற்க்கு முன்பு நமக்கு தெரியாத ஏராளமான உண்மைகள் ஒளிந்துள்ளன். அதனால் இந்த தடவை செல்வராகவனுக்கு ஒரு சிறந்த நாவலின் துணை இருக்கிறது. புரியாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் முட்டாள்களுக்கு அதையே சான்றாக தரலாம்.
நான் கண்டிப்பாக மனோகர் அவர்களின் பேச்சை ஆதரிக்குரேன். நான் ஆயிரத்தில் ஒரவன் படத்தை இதுவரை 3 முறை பார்த்துவிட்டேன். எனக்கு ஒரு இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவு எனது சிறுவயதில் இருந்தே உள்ளது. பாமிலி சப்போர்ட் இல்லாததால் நான் வேறு வேலை பார்க்கிறேன். ஒரு நல்ல கற்பனை வளம் கொண்டவனே ஒரு நல்ல இயக்குனர் aaga முடியும். நான் எத்தனையோ முறை ஏக பட்ட கத்ஹை கலை யோசித்து இருக்குறேன் அனால் இப்படி ஒரு தரமான கதை மற்றும் களம் இவைகளை யோசித்து இல்லை. நான் உங்களை போல் ஒரு தீவிர ரஜினி ரசிகன் தான். தலைவர் இன் paadhai வேறு, அவரது படங்கள் பெரும்பாலும் என்டேர்டைன்மென்ட் ஓடு தான் இருக்கும், அதில் சில படங்கள் கற்பனைகளின் உச்சகட்டமாக இருந்து இருக்கிறது.
இந்த படத்தை பார்த்து எனக்கு மூன்று நாள் தூக்கம் வர வில்லை, எப்படி இதை அவர் சிந்தித்து இருப்பார், அப்படியே இருந்தாலும் அதை எப்படி execute செய்தார். படம் பார்த்த முதல் தடவை எனக்கு புரியவில்லை, சில தினங்கள் கழித்து மறுமுறை பார்த்தேன் அப்போது முழுவதும் புரிந்தது. உண்மையாக சொல்கிறேன் எனக்கு 22 வயதாகிறது இந்த மாதிரி ஒரு தமிழ் படம் நான் பார்த்ததில்லை. எத்தனையோ படங்கள் இந்த படத்துடன் ரிலீஸ் ஆனது, அனால் என்னை பொறுத்தவரை இந்த படத்தை தமிழ் மக்கள் முழு மனதுடன் அதுத கட்ட சிந்தனை உடன் பார்த்திருக்க வேண்டும். selva படம் என்றல் அதில் நல்ல பாடல்கள் இருக்கும் சில முத்த கட்சிகள் இருக்கும், மசாலா தனம் கலந்த நல்ல படம் ஆகா இருக்கும் என்று எண்ணி திரைஅரங்குkku சென்று பின்பு ஏமாற்றம் தாங்களாகவே அடைந்தார்கள். செல்வா வின் குற்றம் இதில் என்ன இருக்கு. நம் மக்கள் எப்பொழுதும் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தந்தார்கள் என்ற எண்ணத்தில் தன் இப்படி ஒரு படம் தந்தார். kamal ஹசன் அவர்கள் இப்படி ஒரு படம் தான் எடுக்கமுடியாமல் விட்டுவிட்டார் அதை செல்வா கன கட்சிதமாக செய்தார். சூப்பர் ஸ்டார் சும்மா வ சொன்னார் இது ஹாலிவுட் படங்களை மிஞ்சி இருக்கு என்று.
இங்கு இந்த பதிவை பார்த்து மனம் கேளாமல் என்னை தன் யாரோ குறை கூறுகிறார்கள் என்று எண்ணத்துடன் எனது கமெண்ட் ஐ இங்கே போடுகிறேன். படத்தில் என்னை கேட்டல் ஒரே ஒரு மினுஸ் தான், அது இசை, அவரது ரெகுலர் மற்றும் நண்பர் யுவன் ஷங்கர் ராஜா வை விட்டு வேறொருவரின் இசை….??? இந்த மாதிரியான கதை கலத்திற்கு போருத்ஹமான இசை அமைப்பாளர் அவர். மற்ற படி படத்தில் குற்றம் சொல்ல ஒரு சின்ன கட்சி கூட இல்லை.. இனி நான் இந்த தளத்தை ரெகுலர் ஆகா விசிட் செய்வேன்.. யாரேனும் புண் படு திருந்தால் மன்னிக்கவும்….
எல்லாம் சரி,
இன்டியான ஜோன்ஸ் இலிருந்து சுட்ட திம மறந்த்திங்க,
ஆப்புறம், க்லடியாட்டேர் இலிருந்து சுட்ட சின மறந்த்திங்க,
ஆப்புறம், மம்மி இலிருந்து சுட்ட சின மறந்த்திங்க,
ஆப்புறம், ௧௫ வயசு பசங்க நினைகிறமாதிரி வைத்த செக்ஸ் சின மறந்த்திங்க,
இது எல்லாம் இல்லாம படம் எடுத்து இருந்தா, வரவேர்க்கலம் ஆனா
எல்லாமே copy
ஆப்புறம், கோப்பி இக்கு ஆதாரம்ம வைத்த இறண்டு பொண்ணும்கள் ஒ****
ஒ***அம்மா, பேசுற வார்த்தைய கட் பண்ணி இருக்கலாம்
திருடன் துப்ப விட்ட்டு போவான்
சரியா?
பிச்சு பின்னிருக்கீங்க வினோ. அத்தனையும் உண்மை. அப்படியே இதையும் படித்து விடுங்கள்!
http://ilavarasanr.blogspot.com/2010/02/blog-post_07.html