முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே கண்முன் தோன்றுவார்! – ச. தமிழ்மாறன்

Wednesday, January 20, 2010 at 3:12 pm | 6,769 views

பிரபாகரனே ஆதாரமாக கண்முன் தோன்றுவார்! – ச. தமிழ்மாறன்

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், பாதுகாப்பாக இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை காட்டுவது பொருத்தமற்றது. அனைத்துக்கும் மேல் பிரபாகரனே ஆதாரமாகக் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச தமிழ்மாறன் அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமாக பாதுகாப்பாக உள்ளார் என்று விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.lttepress.com செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டான தை 1-ம் தேதி தமிழருக்கு சொல்லப்பட்ட நற்செய்தி அது. அதனை முதன் முதலில் வெளியிட்ட இணையதளம் ‘என்வழி.காம்’தான் என்பதை நினைவு கூர்கிறோம்.

இந்த இணையம் குறித்தும், அந்த செய்தி பற்றியும் நார்வேயிலிருந்து நமக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார். வேறு சில நம்பிக்கையான வட்டாரங்களில் விசாரித்த பிறகே அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இந்த இணையதளத்தின் ஐபி முகவரி போலி என்று சிலர் கருத்து கூறியிருந்தனர். ஆனால் இப்போது அனைவரது சந்தேகத்துக்கும் விடையாக, புலிகளின் செய்தித் தொடர்பாளரே பேட்டி அளித்துள்ளார்.

பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகள் தப்பிச் சென்றது, மீண்டும் வெளிப்படும் தருணம் குறித்தெல்லாம் தமிழ்மாறன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூனியர் விகடனில் வந்த அந்தப் பேட்டி மற்றும் அதற்கு அவர்கள் தந்துள்ள முன்னுரைக் குறிப்பு:

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் ‘lttepress.com’என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர்,

”அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்புகருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

”இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார்.

45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும். இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும்.

மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது…” எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள்.

அவர்களின் துணையுடனேயே நாம் ‘ச.தமிழ்மாற’னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே…?”

”தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!”

”கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?”

”இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோபாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம்.

இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.”

”அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?”

”சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.”

”வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?”

”தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!”

”அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை… அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?”

”மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ… அப்படியேதான் தோன்றுவார்!”

”ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?”

”ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.”

”புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?”

”குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!”

”புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?”

”தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!”

”பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?”

”தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.”

“புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?”

“இது மக்கள் விடுதலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்களின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!

“கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே… அது உண்மையா?”

“சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.”

“இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?”

“தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.”

“போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?”

“மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.”

“தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?”

“உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!”

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

15 Responses to “சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே கண்முன் தோன்றுவார்! – ச. தமிழ்மாறன்”
  1. C.Senthil says:

    வினோ,

    இந்த முகவரி அமெரிக்காவில் இருந்து……. வெளிஇட பட்டது, புலிகளின் நெட்வொர்க் அமெரிக்காவில் செயல்பட சான்ஸ் இல்லை என்பதே என் கருத்து..

    Domain: lttepress.com visit site
    World Rank: #5,218,131
    Estimate Value: $147 USD
    Estimate Income Per Day: $0 USD
    Estimate Visits Per Day 67
    Hosting Country: United States
    Website IP: 188.121.46.128
    Alexa Rank: 5,222,302 visit alexa
    Google Pagerank: – Put this button on your website! *NEW*
    Google Index: 0 links show google links
    Yahoo Index: 5 links show yahoo links
    History: visit WayBackMachine

    என்னுடுடைய ஐயம்…. தலைவர் உயிரோடு இருந்தால் உங்களை போல் சந்தோஷ படும் நபர்களில் நானும் ஒருவன்… மறந்து விடாதீர்கள்….

  2. mulimaran says:

    இருந்து என்ன ………………………………..

  3. bala says:

    சர்வர் அமெரிக்காவில் இருந்தால், ஆட்களும் அமெரிக்காவில்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை செந்தில். முறையான பணம் கட்டினால் தொடர்ந்து இணைப்பு வழங்கப்படும்.

  4. Kiri says:

    ஸ்ரீ லங்கா வில இருந்தும் அமெரிக்காவுல Server வாங்கலாம் mr. senthil..
    we laso know ping,tracert,whois,…etc……

  5. Manoharan says:

    All this will be clarified once Prabhakaran comes out. We pray that this should happen in near future.

  6. Magesh says:

    One more update from my side this site is created on DEC -09 and valid up to DEC -11
    and the server is also from US. But its not a matter whereever we can buy the server.
    For Senthil, now lots and lots of servers (different countries) are available in website itself.

    Details of the LTTEPRESS website as follows:
    Domain Name: LTTEPRESS.COM
    Created on: 23-Dec-09
    Expires on: 23-Dec-11
    Last Updated on: 23-Dec-09

    Administrative Contact:
    Private, Registration
    Domains by Proxy, Inc.
    DomainsByProxy.com
    15111 N. Hayden Rd., Ste 160, PMB 353
    Scottsdale, Arizona 85260
    United States
    (480) 624-2599 Fax — (480) 624-2598

    Technical Contact:
    Private, Registration
    Domains by Proxy, Inc.
    DomainsByProxy.com
    15111 N. Hayden Rd., Ste 160, PMB 353
    Scottsdale, Arizona 85260
    United States
    (480) 624-2599 Fax — (480) 624-2598

    Vino,
    If you want to confirm please give the following details to know about your website.
    Check Whether the details provide by this site are correct or not.
    “http://whois.domaintools.com/envazhi.com”

  7. Madhu,Doha,Qatar says:

    It is Good to see when our Leader comes back. But will it be possible to Fight the Srilanka back and Regain our lost areas and confidence of our Tamil Peoples

  8. pataas says:

    காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
    ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
    செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
    சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

    சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
    நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
    தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
    வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

    யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
    காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
    எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
    தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

    தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
    வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
    அரியை விரட்டி அடித்த புலியே!
    எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

    எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
    உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
    விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
    அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

    ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
    தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
    புகழைப் புகலப் பொருவில் தமிழை
    அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

    அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
    துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
    இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
    மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)

    மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
    காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
    திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
    கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)

    களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
    உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
    தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
    உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)

    உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
    மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
    வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
    பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)

    குறிப்பு:

    தாவில்லா – குற்றமில்லாத

    முருகடியான் – எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

    அரி – சிங்கம்

    உழுவக்கொடி – புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்
    பொருவில் – உவமையில்லாத

    மாணார் – பகைவர்; பேணார் –பகைவர்

    உமையாள் – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)

    புணரிசார் – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.

  9. G.UDAYAKUMAR says:

    ILLKKU NOKKIYA UNATHU PAYANAM VIRAIVAI VIRAIVAI VELLUM KILLKKU NEETHAAN THAMILARKKU ENPATHAI ULAGAM VIRAINTHU SOLLUM! PULIKKODI PARANTHIDUM THAMIZH EEZHATHIL! UNAKKU INAYENA YEVARULLAR ULAGATHIL? VAZHGA! VAZHGA! THAMIzHAR THALAIVAR PIRABAKARAN!

  10. kasi says:

    If Thalaivar Maveeran Live in any where, The World Tamil People Happy, except TAMIL THROKIKAL every one knows Tamil Throkikal

  11. kasi says:

    மாவீரன் என் தலைவன் பிரபாகரன் கடவளின் அவதாரம், அநீதியை அழிக்கவந்த கிருஷ்ணன், என் தலைவனுக்கு சாவு இல்லை.

    தர்மம் ஆழிந்து, அநீதி எங்கு தலை துக்குகிரதுஒ அங்கு கடவுள் அவதரிப்பார்— கீதசாரம் & பைபிள்

    அந்த கடவுள்தான் என் தலைவன் பிரபாகரன்

    தமிழ் ஈழம் அமையும், தமிழ் வாழும்,

    தமிழன் வீழ மாட்டன்,

  12. paranthaman says:

    அருமையான கவிதை

  13. sakthi says:

    நிச்சயமாக தேசிய தலைவர் , தமிழர்களின் உண்மையான தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள் இலங்கையின் சிங்கள வெறியர்களை பந்தாடுவது உறுதி,,,,,, அதற்கான வழிகள் வகுக்கப்பட்டு வருகின்றன….மாவீரன் மறுபடியும் போராட்டத்தை துவக்குவார்……………ராஜபக்சேவிற்கு அழிவு நிச்சயம்…………..பட்… பிரபாகரன் மாளவில்லை அது மட்டும் உண்மை

  14. Muruganandam says:

    என் அன்பு தோழர்களே!
    எம் தலைவர் உயிருடன் இருகின்றாரா இல்லையா என்பதை விட நீங்கள் அவர் உயிருடன் இருக்கவேண்டும் என்று உள்ளம்பூர்வமாக நினைகிறீர்களே அந்த அன்பும் பாசமும்தான் எம் தலைவரை நிச்சயம் வாழவைக்கும் என்று நினைக்கும்போது என் கண்களில் நீர் வழிகின்றது.
    நன்றி,

  15. raja says:

    மாவீரன் பண்பாளன் தமிழன் புகழை தரணியில் பறக்க விட்ட தலைவா உனக்கு மரணம் கிடையாது .

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)