சூப்பர் ஸ்டார் விஸிட்… அதிர்ந்தது கேரளா!
Tuesday, January 12, 2010 at 6:40 pm | 2,574 views
‘சந்திரனுக்கே போனாலும் எந்திரனுக்கு மட்டும் குறையாது கூட்டம்!’
சூப்பர் ஸ்டாரின் இப்போதைய கேம்ப் கேரளாவில்…
காரணம்?
எல்லாம் எந்திரன் படப்பிடிப்புதான். படத்தில் ரஜினி எந்திரனாக வருகிற காட்சிகளை Motion capturing முறையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகில் படமாக்குகிறார்கள்.
சென்னையில் உள்ள டைடல் பார்க்குக்கு இணையான ஐடி பார்க் ஒன்று இங்கு உள்ளது. கழகூட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஐடி பார்க்குக்கு கின்ஃப்ரா பிலிம் அண்டு வீடியோ பார்க் (KINFRA – Kerala Industrial Infrastructure Development Corporation) என்று பெயர். அனிமேஷனுக்கு மிகப் பிரபலமான ஸ்டுடியோ இந்தியாவிலேயே இதுதானாம். சமீபத்தில்தான் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த ஸ்டுடியோவில் கிட்டத்தட்ட ஏழு கேமராக்கள் வரை பயன்படுத்தி ரஜினியின் முகத் தோற்றம், உடல் அசைவுகள், நடை, ஸ்டைல் என எல்லாவற்றையும் தனித்தனியாகப் படமாக்கி, பின்னர் அதை ரோபோவுக்கு மேட்ச் செய்வார்கள். நிஜமான எந்திர மனிதனை, ரஜினியின் உருவில் – ஸ்டைலில் நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட படத்தின் விசேஷ அம்சமே இதுதான்.
முதலில் மும்பையில் ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்படவிருந்த டெக்னிக்கல் சமாச்சாரம் இது. இப்போது கேரளாவில் படமாகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தப் படம் படமாக்கப்பட்டு விட்டது. தென்னிந்தியாவில் கேரளா மட்டும்தான் பாக்கியிருந்தது. இப்போது அந்தக் குறையும் தீர்ந்தது!
ரஜினி… ரஜினி… ரஜினி… பார்க்க முண்டியடித்த கூட்டம்!
ரஜினி கேரளா வருகிறார் என்ற தகவல் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், நேற்று காலை அவர் மீனம்பாக்கத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்தைத் தவற விட்டார் என்ற தகவல் பரவியதுமே, அவர் வருவதை யூகித்து விட்டார்கள் மக்கள்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெரும் கூட்டமே கூடிவிட்டதாம் ரஜினியைப் பார்க்க. ரசிகர்கள், பொதுமக்கள் என்ற பேதமில்லாமல் ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கினர். கேமராவுடன் வந்திருந்த சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளார் ரஜினி. 
அங்கிருந்து கின்ஃப்ரா சென்ற ரஜினியைப் பார்க்க சில நிமிடங்களில் கூடிய கூட்டம் 5000-ஐத் தாண்டிவிட்டது.
(கவனிக்க… கேரளாவின் முன்னணி நடிகர்கள் யார் வந்தாலும் இப்படி கூட்டம் திரள்வதில்லை. ஒருமுறை கொச்சி மரைன் டிரைவில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு மோகன் லால் வந்திருந்தார். அவரை சர்வசாதரணமாகக் கடந்து சென்றனர் அந்தப் பகுதியிலிருந்தவர்கள்! )
எப்படியாவது ரஜினியைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் கின்ஃப்ரா கேட்டில் நின்றபடி அவர்கள் விசிடித்து குரல் எழுப்ப, உள்ளேயிருந்த ரஜினி, வெளியில் வந்து சிரித்தபடி கையாட்டினார்.. தனது வழக்கமான ஸ்டைலில். மகிழ்ச்சியில் அதிர்ந்தது கழகூட்டம் பகுதி!
‘சந்திரனுக்கே போனாலும் எந்திரனுக்கு மட்டும் குறையாது கூட்டம்!’ என்பார் அடிக்கடி நண்பர் ஒருவர். அதில் சற்று மிகை இருந்தாலும், ரஜினி மீது மக்களுக்கு இருக்கும் அபிமானத்தைக் குறிக்க சரியான புதுமொழிதான்!
-என்வழி












“சந்திரனுக்கே போனாலும் எந்திரனுக்கு மட்டும் குறையாது கூட்டம்!’”
oh ya, any part of the country could be standstill, only Our superstar arrival.
Supersoul being always be well received by unexpected guests any part of the world.
Long live Thalivar.
Dev
‘சந்திரனுக்கே போனாலும் எந்திரனுக்கு மட்டும் குறையாது கூட்டம்!’
சூப்பர் பஞ்ச்!!!
rajniku matum than buildup kodupengala?
unga web site ela theeeya vaaika
உங்களுக்கே இது டூ மச்சா தெரியல.
வேல வெட்டி இருந்தா போய் பாருங்க.
***, kamal nu poiyaana peru koduthu comment pottu irukura dubukku, mothala un vaayila thaan** vaikanum theeeya.
******* komali…ithu bulidppu illa **..
தலைவன் MASS..!
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14927159
அட சேட்டைகாரன் கூட ஒரு மாசம் கேரளாவுல ஷூட்டிங் முடிஞ்சு, இப்ப கொஞ்ச நாள் முன்னாடி தான் திரும்பி வந்தாரு, அவர திரும்பி தமிழ்நாட்டுக்கு போறாருன்னு தெரிஞ்ச உடனே ஏர்போர்டுக்கு ஐம்பதாயிரம் பேர் வந்து அப்பாடா போயிட்டாருன்னு கைதட்டி சந்தோசப் பட்டாங்களாம்
ஜனவரி 8 ஆம் தேதி சிவாஜி இந்தி ரிலீஸ் ஆகிவிட்டதா?
ஏதாவது விபரம் உண்டா?
தெரிவிக்கவும்
ithuvellam oru kooddama,just 5000
ஜனவரி 15 ஆம் தேதி சிவாஜி Hindi ver. ரிலீஸ். almost 50 multiflex in mumbai
“சந்திரனுக்கே போனாலும் எந்திரனுக்கு மட்டும் குறையாது கூட்டம்!’”
சந்திரனுக்கே போனாலும் எந்திரனுக்கு மட்டும் குறையாது கூட்டம்
நல்ல வரிகள்……
என்வழி நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
thalaivar da, இந்தியால எல்லாரும் ivara parthu copy adikaranga na athu than da thalaivar rajini, he has broken all the extreme of style and mannerisms, now nethu vantha chutty pasanga kooda copy adikaranga…. thalaivar rendu varshthuku oru padam kodukum pothey ippadi irrukuthey avaru mattum varshathuku moonru padam kodutharana matha எல்லாரும் pichikitu poga vendiyathan….
என் தலைவர்,என் ரஜினி, நம் விசிறி ஹ ஹ ஹ …’ஹி இஸ் கிரேட் ‘