அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
Monday, January 11, 2010 at 3:59 pm | 384 views
வாழ்க்கை முறை மாற்றங்களும் நோய்களும் – அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
சென்னை: அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல்
கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி (மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்- எம்எம்சி) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த போட்டியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் எந்த பட்டம் பயிலும் மாணவர்களும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக அரங்கேற்றலாம்.
வாழ்க்கை முறை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் குறித்து கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். குறிப்பாக (கேஸ்ட்ரோ இன்டஸ்டைனல்) வயிறு மற்றும் குடல் தொடர்பான கோளாறுகளை சுட்டிக்காட்டுவதாக இந்தக் கட்டுரைகள் அமையவேண்டும்.
பாக்கெட் உணவுகள், சிகரெட், மது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அழுத்தம் திருத்தமாக விவரிப்பதாகவும், வெறும் பாதிப்பை மட்டும் சொல்லாமல், அதற்கான தீர்வைச் சொல்லும் விதமாகவும் கருத்துகளையும் முன்வைக்கவேண்டும்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
ஜனவரி 15ம் தேதிக்குள் கட்டுரைகள், ghgastro@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, அதை எழுதியவருக்கு குடியரசு தினத்தன்று விருதும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இதுதொடர்பான விவரங்களை பெற, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ்.எம்.சந்திரமோகனை அணுகலாம் அல்லது +91 94449 01234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.










