பிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்!
Thursday, January 7, 2010 at 2:35 pm | 1,464 views
பிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்!
நாம் ஏற்கெனவே சொன்னது போல, ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு விரைவில் திருமணம் நடப்பது உறுதியாகிவிட்டது.
வருகிற பிப்ரவரி 14-ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் பெயர் அஸ்வின் குமார். சென்னையில் பெரிய கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது தந்தை ராம்குமார் ரஜினியின் குடும்பத்துக்கு நெருக்கமானவராம்.
இது பெற்றோர்கள் சம்மதித்து நடத்தும் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மணமகன் அஸ்வின், அமெரிக்காவில் எம்.எஸ் படித்தவர். தற்போது சென்னையில் பெரிய அளவில் கட்டுமான தொழிலை நடத்தி வருகிறார்.
சௌந்தர்யாவுடன் நீண்டகாலமாகப் பழகி வரும் நெருங்கிய நண்பராக இருந்தார் அஸ்வின்.
சமீபத்தில் நிறுவன ரீதியாக சௌந்தர்யா சில சவால்களைச் சந்தித்தபோது, அவரை அழைத்த ரஜினி, ‘சோதனை வந்தா உடனே சந்தோஷமான விஷயத்துக்கு மாற முயற்சிக்கணும். தொடர்ந்து அந்த கஷ்டத்துலயே இருக்கக் கூடாது. எனவே திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் நிம்மதியாக இருந்துவிட்டு பின் விருப்பபம் போல பிடித்த வேலையைச் செய்’ என்று கூறினாராம்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை நன்குணர்ந்த சௌந்தர்யா, அஸ்வினை தந்தை முன்பு கொண்டு போய் நிறுத்தினாராம். முதல் பார்வையிலேயே மாப்பிள்ளையை ஓகே பண்ணிவிட்ட ரஜினி, அடுத்து விறுவிறுவென வேலைகளில் இறங்கினார். பையனின் பெற்றோரிடமும் பேசி, எல்லோருக்கும் நிறைவாய் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளாராம்.
வருகிற பிப்ரவரியில் கோலாகலமாக நடக்கிறது ‘ரஜினி வீட்டு இளவரசி’யின் நிச்சயதார்த்தம்.
சௌந்தர்யாவுக்கு மறக்கமுடியாத காதலர் தினப் பரிசு இதைவிட வேறென்ன இருந்துவிட முடியும்!
-என்வழி














வாழ்த்துக்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த்
இந்த பொண்ணாவது அப்பா பெயரை காப்பாத்தி நதுல சந்தோசம்
வாழ்த்துக்கள் .. தலைவர் பொறுப்போ பொறுப்பு தான்
வாழ்த்துக்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த்
சௌந்தர்யாவுக்கு மறக்கமுடியாத காதலர் தினப் பரிசு இதைவிட வேறென்ன இருந்துவிட முடியும்
வாழ்த்துக்கள் சௌந்தர்யா.
நீண்ட நாட்கள் தெரிந்த நண்பர்களாக இருந்து , திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தால், அது காதல் திருமணமாகத்தான் அர்த்தம் கொள்ள வேண்டுமா ? .
அப்பா யாராவது தெரிந்த பையன் இருக்கானான்னு கேட்டுரிக்கலாம். பொண்ணு தனக்கு தெரிந்த பையன காட்டி இருக்கலாம். அதனாலேயே, இவங்க ரெண்டு பேரும் காதலர்கள் ன்னு முடிவு செய்யக்கூடதல்லவா ?
பெரியவங்க சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமணம் நல்ல விதமாக நடைபெற ஆண்டவனை வேண்டுகிறேன். மணமக்கள் நூறாண்டு காலம் எல்லாம் வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
Congrats to our Princess. May god bless her for a very Happy and peaceful wedding life.
மிகவும் சந்தோசமான செய்தி இது. எங்கள் இளவரசிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியமும்,நீண்ட ஆயுளும் பெற்று வாழ இருவருக்கும் இரைவனின் அருள் கிடைக்கட்டும்
சௌந்தர்யா அஸ்வின் இருவருக்கும் வாழ்த்துக்கள்
ஹலோ அழகன். ராஜ்குமார் – “இந்த பொண்ணாவது அப்பா பெயரை காப்பாத்தி நதுல சந்தோசம். ”
இதற்கு என்ன அர்த்தம்.
தலைவரின் மூத்த பொண்ணுக்கு என்ன குறைச்சல் அவர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்.
நான் khalifa அவர்களின் கருத்தோடு ஒத்துபோகிறேன்.