முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

‘பிரபாகரன் நலமாக உள்ளார்… வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்பார்கள்!’

Wednesday, December 23, 2009 at 11:06 am | 2,948 views

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! – பழ நெடுமாறன் உறுதி

ன்னிப் போரில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப்பட்டதாகக் கூறி, சில படங்கள் இணையத்தில் பிரசுரமாகியிருந்தன.

அவை சகோதரி துவாரகாவின் படம் அல்ல, இசைப்பிரியா என்ற பெண் போராளியின் படம் என்று சீமான் உறுதிப்படுத்தியிருந்ததை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

சீமான் சொன்னதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன், சமீபத்திய தனது ஜூவி பேட்டியில்.

இதைவிட முக்கியம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் ஆணித்தரமாக கூறியுள்ள சில விஷயங்கள்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பழ நெடுமாறன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி:

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன!

‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’

‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’

‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’

‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’

‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’

‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’

‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’

‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.

தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத் திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’

‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’

‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.

ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’

‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”

‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.

‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’

‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’

‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார்.

உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.

தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது.

இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.

சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது!

ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.

அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம்.

கொல்லப்பட்ட பெண்போராளி இசைப்பிரியா...

‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு.

நன்றி: ஜூனியர் விகடன்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

37 Responses to “‘பிரபாகரன் நலமாக உள்ளார்… வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்பார்கள்!’”
  1. saravanan says:

    பயபுள்ள குடுத்த காசுக்கு மேலேய ரொம்ப பேசுது… உனக்கு வேற வேலையே இல்லையா..

  2. புள்ளி ராஜா says:

    சரவணன் **** சுகமா ?
    புள்ளி ராஜா

  3. sathesh pandian says:

    ///பயபுள்ள குடுத்த காசுக்கு மேலேய ரொம்ப பேசுது… உனக்கு வேற வேலையே இல்லையா..///

    நீங்க எவ்ளோ காசு வாங்குனிங்க சரவணன்? உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி பேசும் அருகதை உங்களுக்கு எப்படி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

  4. ilan says:

    *** சரவணா *********************************** …

  5. Doctor says:

    Mr.Saravanan,

    Mind ur words,dont hurt our tamil ilam peoples..If u not like our ilam war,
    Plz shut up ur mouth,but dont hurt us..

    Here so many tamil films ,cricket matches going on,go and see and enjoy..

    But dont hurt us…

    Ur belongs to mr.karunadnithi category,go and see namitha dance and enjoy..

    Otherwise dont make any comments like this…

  6. palPalani says:

    நண்பர் saravanan அவர்களே, நீங்க எவ்வளவு கொடுத்தீங்க? தெரிஞ்சா அவர நேருல பொய் திட்டிட்டு வரலாம்.

    நெடுமாறன முன்ன பின்ன தெரியுமா உங்களுக்கு?

    ரொம்ப காசு கொடுங்க, நா வேணும்னா கம்மியா பேசுறேன்.

  7. raja says:

    பழ நெடுமாறன் ஒரு பொய்யன் இன்றந்த பிரபாகரனை உயிர் கொடுத்துக்கொண்டு இருக்க காரணம் மேலை நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களிடம் பணம் கரப்பதர்க்காகதான். நெடுமாறன் மண்டை போடும் வரை இந்த புராணத்தை ஊதிகொண்டுதான் இருப்பார் பிறகு எப்படி தன்னையும் குடும்பத்தையும் காப்பற்றிகொள்ள முடியும் >?????

  8. Jana says:

    நன்றி ஐயா அவர்களே. உங்கள் பதில் எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றது. நிச்சயமாக தலைவர் வரவேண்டிய நேரத்தில் வருவார் என்பது நிச்சயம். துவாரகாவின் கதை புஸ்வானமாகிப் போனபின் தற்போழுது புலிகளின் கப்பல் என்று கதை கட்டிவிட்டிருக்கின்றது. கொலைவெறி பேரின அரசு.

    ஜனா

  9. pataas says:

    *** சரவணா யார் டா நீ துரோகி .உனக்கு thaan daa velai illa .vettipayaley .una ellam evan டா கமெண்ட் அடிக்க sonnadhu..உன்ன மாதரி payalaalathaan டா தமிழனுக்கு இந்த nilamai தூ

  10. Muthu says:

    ஏய், என்ன சொல்ல வருகிறாய். தமிழ் இன உணர்விற்கு எதிரான கருத்துகள் வந்தால் வெட்ட படுவாய்…

  11. Prasanth says:

    vettru miraddalகளை விடுத்தது தமிழ் இனம் பாடுபட நீ என்ன செய்யப் போகிறாய் தமிழ் இளைgaனே! கட்டி எழுப்ப வேண்டிய நம் சமஊகத்தி மேல் கண் வைப்போம் நாம் நிமிர நம் உழைப்பை கையில் எடுப்போம் குடியில் சோம்பலில் சீரழிந்து கொண்டிடுக்கும் நம் மக்களை மீட்டடுப்போம்

  12. கண்ணையா says:

    திரு சரவணன் அவர்களே. உண்மை என்னவென்று தெரியாமலே, திரு நெடுமாறனை பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்வது சரியல்ல. அதுவும் பலரும் பார்க்கும் ஒரு பொது தளத்தில், இலங்கையில் நம் சொந்தங்கள் அல்லல்படும் இன்றைய சூழ்நிலையில், உங்களின் இந்த கருத்து நாகரீகமற்றது. அதிலும் திரு நெடுமாறன் போன்ற ஒரு மூத்த தலைவரை ஒருமையில், நக்கலடித்து கருத்து தெரிவிப்பது பண்பே கிடையாது.

    உலகம் முழுதும் பார்க்கப்படும் ஒரு வலை தளத்தில், உங்கள் பதிவை போன்ற ஒன்று நம் தமிழர்களின் ‘கருத்து ஒற்றுமை’ பற்றி ஒரு கேவலமான தோற்றத்தை உருவாக்காதா?

    நண்பர்களே இந்த செய்தி patriyum, திரு சரவணன் அவர்களின் கருத்து பற்றியும் மட்டும் நமது பின்னூட்டங்களை பதிவு செய்வோமே. தனி மனித தாக்குதல்களை தவிர்க்கலாமே.

  13. sasikumar says:

    raja says:
    December 23, 2009 at 5:53 pm
    பழ நெடுமாறன் ஒரு பொய்யன் இன்றந்த பிரபாகரனை உயிர் கொடுத்துக்கொண்டு இருக்க காரணம் மேலை நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களிடம் பணம் கரப்பதர்க்காகதான். நெடுமாறன் மண்டை போடும் வரை இந்த புராணத்தை ஊதிகொண்டுதான் இருப்பார் பிறகு எப்படி தன்னையும் குடும்பத்தையும் காப்பற்றிகொள்ள முடியும் >?????

    ராஜா ப்ளீஸ் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவரை கொச்சை படுத்தாதீர்கள் . எளிமை வாழ்கின்ற தலைவர் அவர்.

    நல்ல மனிதர் .

  14. eelam tamil says:

    http://www.dailymotion.com/video/xb5373_mooduthirai_fun

    Better have fun and understand the truth atleast through this.. specially for saravanan

  15. தமிழன் says:

    //எளிமை வாழ்கின்ற தலைவர் அவர்//
    அவரின் பிள்ளைகள் ஆஸ்த்ரேலியாவில் படிப்பதாகக் கேள்வி!!!
    பணபலம் படைத்த எளிமையான ஆளா அவர்.

  16. kodimuthu says:

    raja matrum சரவணன் நீங்கள் தமிழராக இருந்துகொண்டு ஒரு தமிழின தலைவரை கொச்சை படுத்துவது இன்னும் எட்டப்பன் இருக்கிறான் என்றே தோன்றுகிறது. தான் முதலமைச்சர், மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய மந்திரி,மகள் ம.ப, பேரன் மத்திய மந்திரி, EVAR உமக்கு தலைவர் எந்த பதவியும் இல்லாமல் தமிழருக்காக உழைக்கும் சீமானையும் திரு நெடுமாறன் அவர்களையும் நீங்கள் கிண்டல் SEIVATHU எனக்கு கடும் கோபத்தை உண்டு பண்ணுகிறது உனது அக்கா தங்கையை கற்பழித்தவனை நீ கடவுள் என்று அழைப்பது போல் உள்ளது நீ உனது எண்ணத்தை இல்லையேல் மாற்றிக்கொள் இல்லையேல் இது போல் எதையும் எழுதி தமிழர்கள் மனதை புண் படுத்தாதே.

  17. RAJINI.bala says:

    பழ நெடுமாறன் ஐயா அவர்கள் ஒரு நல்ல மனிதர்..

    saravanan மற்றும் raja போல பல குள்ள நரிகள் இந்த தமிழ்நாட்டில் உண்டு …
    முதலில் இவர்களை அகற்ற வேண்டும்..

  18. kumar says:

    நெடுமாறன் ஐயா அவர்கள் காசு பெற்றுக்கொண்டுதான் நல்லது செய்தாலும் நாங்கள் பாராட்டுவூம்… சில துரோகிகள் இலவசமாகவே துரோகம் செய்தாலும் எங்களுக்கு தேவை இல்லை….

  19. karthik says:

    saravana, raja please shutup… dont comment on serious issues with an empty mind…

    else u will face serious consequences…

    what u know about nedumaran?

    shits like u dont have any rights to comment on u…

    if u both are Malayalis.. dont visit this website again…

  20. thambi says:

    ராஜா, சரவணன் இரு ****களையும் கல்லால் அடிக்காத குறையாய் திட்டி தீர்த்திருக்கும் அணைத்து தமிழ் வீர நெஞ்சகளுக்கும் என் பணிவான நன்றி…

  21. Gowtham says:

    saravanan and Raja, they are not ******************..their comment showed it correctly..

  22. selva says:

    சரவணா நீ ஒரு தமலன் இல்லை ****** உன்னக்கு என்ன்ன தறியும் *****

  23. maragatham says:

    *****************************.

  24. veerarajan says:

    தமிழனுக்காக குரல் கொடுத்து கொண்டிருப்பவரை இழிவாக பேசும் இப்படிப்பட்ட நபர்களால்தான் ,உலக நாடுகளின் நடுவில் தமிழனுக்கு என்று ஒரு அடையாளமில்லை ,தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை .
    வாழ்க தமிழ்
    வெல்க தமிழன்

  25. vadivelu123 says:

    தமிழர்களே சரவணன் மாதிரி அரைகுறைகளை நாம் அடையாளம் காண வேண்டும் .சரவணன் தெரிந்து பேசுகிறாரா இல்லை தெரியாமல் பேசுகிறாரா ?
    முட்டாள் சரவணன் .
    தமிழனின் விதி இதுமாதிரியான மனிதர்களை விட்டுவைத்திருப்பது .

  26. canadian tamil says:

    போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் போராட்டத்தின் இலச்சியம் மாறாது” இந்த கூற்றில் நிறைய விடயங்கள் அடங்கியுள்ளன. இப்போராட்டம் எப்படி நடக்கப்போகிறது என்றால்.. போராட்டத்தின் இலச்சியம் என்பது புலம்பெயர் நாடுகளில் புலிகளால் மூளைச்சலவை செய்யபட்டவர்களின் ‘தலைகள்” தான். அந்த தலைகளுக்குள் உள்ளீடு செய்யபபட்ட நிகழ்சி நிரல்;களின் அடிப்படை இலக்கணம் கிட்டதட்ட அப்படியேதான் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தின் வழிமூலம் புதிய இலக்கியங்களை படைக்கப் போகிறார்கள்,

    சாதாரணமாக இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால.;. புலியாதரவாளர்களை கொண்டு தலைவர் மரணமடைய முன்பாக ‘சாவிலும் எழுவோம்”, ‘அலைகடல் என எழுவோம்” குதித்து சாவோம், பொங்கி எழுவோம் என்பது போன்ற பெயர்களில் போராட்டம் நடத்தினார்;கள்.

    இப்போ ‘உயர்த்தெழுவோம்” என்ற புது பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆக போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற ‘தலைகள்” ஒன்றுதான் ஆனால் அவர்களை கொண்டு செய்யப்படும் போராட்டங்களின் வடிவங்கள் அல்லது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

  27. Muthu says:

    தமிழ் இனத்திற்கும், தமிழ் ஈழத்திற்கும் எதிராக எழுதியவருக்கு, உடனே என்று இல்லாவிட்டாலும், சரியான சாட்டையடி கொடுத்த அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் நன்றி…

  28. Kari kaalan says:

    இருப்பாய் தமிழா நெருப்பாய்

  29. pataas says:

    டே சரவணா அரவேக்காடு மூடிகிட்டு போடா துரோகி பயலே .தமிழ் வீர நெஞ்சங்களே இந்த அரலூசு பயலுக ராஜா,சரவணன் பேசுறத நாம பொறுத்து கொள்ள கூடாது .அவனுக வைய கிழிக்கணும்

  30. Sathish says:

    Dear Friends,
    No tension for mr.Saravanan comment. Be cool and think and realize about the real problems and our past mistakes. Whether our ambition is right or not, if right why we are not able to get the world media and world nation’s support, what we want to do in future to get the same. Whether we want to take back our weapons in Lanka to get ealem or otherwise think about a new way for our freedom.
    Give a respect to other comment and realize the truth, if it’s right please accept that otherwise our generations also write the same comments in future.
    If we are not realize a real problem just we can speak and wrote anything in web pages but nothing we can get and nothing we can implement.

    Ok good bye all best for your ealem (we can get, if you thing your problem and learn the study from our past history)

  31. Tamilan says:

    canadian tamil

    உன்னுடைய எண்ணம் என்னவென்று எல்லோருக்கும் நன்கு புரிகிறது. அடிப்படை இலக்கணம் மாறினால் பின்பு போராட்டமே தேவை இல்லையே!!! அடிப்படை இலக்கணத்தை மாற்றி சிங்களனிடம் பிச்சைஎடுக்கும் புதிய இலக்கணம் கேட்கிறாயா?

    இங்கே நம் சகோதரி நிர்வானமக்கபட்டு கொல்லப்பட்டு இருக்கும் செய்திகேட்டு பதறாமல், புலிகளை குறை சொல்லும் உன்னை எந்த இனத்தில் சேர்ப்பது. பன்னி இனத்தில்?

  32. kumaresan says:

    சரவணன் மற்றும் ராஜா இருவரும் இங்கே இருப்பதை விட இலங்கை சென்று சிங்களர்களின் செருப்பை துடைக்க ஆரம்பிக்கலாம் .

  33. Gopi says:

    நண்பரே சரவணன்

    ஈழ மக்கள் மாண்டு விழுந்த பொழுது, மகனுக்காக மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்று கால் தொழுதாவர மத்தியில் நீ வாழ்வது பெருமை தான்

  34. baskar says:

    saravanan/raja comments.enna manadhai punpaduthiyadhu.

  35. baskar says:

    saravanan/raja comments.enn manadhai punpaduthiyadhu.

  36. Archana says:

    Mr. Saravanan, Mr. Raja neenga rendu perum thamilan thana? ungala mathiri sila perala than thamilanukku indha nilamai. ungalukku enna theriyum thamil ealam patri?Muthalla prachanai ya therinchitu comment pass pannunga.

  37. Kasi says:

    சரவணா and ராஜா நீங்க தமிழனடா, தவறான வழியில் *******நீங்க.

    என் தலைவன் மாவீரன் பிரபாகரன் மீண்டும வருவார், இந்த தமிழனை காக்க கடவளின் அவ்தராமட ********.

    வாழ்க தமிழ் வெல்க தமிழ் ஈளம் .

    திரு கோபி அவர்கலே நீங்கள் சொன்ன கருத்து
    ” ஈழ மக்கள் மாண்டு விழுந்த பொழுது, மகனுக்காக மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்று கால் தொழுதாவர மத்தியில் நீ வாழ்வது பெருமை தான்”

    மிக்க சரி நன்றி

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)