பழஸிராஜா… ‘பழசா ராஜா’?!
Tuesday, November 24, 2009 at 12:03 am | 1,323 views
பழஸிராஜா… ‘பழசா ராஜா’?!
நல்ல படம் என்ற பெயரைச் சம்பாதித்தாலும் பழஸிராஜாவின் வசூல் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை (மலையாளத்தில் அள்ளிவிட்டது!).
பூக்கடைக்கே விளம்பரம் தேவைப்படும் இந்தக் காலத்தில், பழஸிராஜா போன்ற கொஞ்சம் ‘வறட்சியான’ படத்துக்கு எந்த அளவு மெனக்கெட்டிருக்க வேண்டும் பப்ளிசிட்டியில்?
ஆனால் இந்தப் படம் வந்ததே பலருக்குத் தெரியவில்லை.. ஆடியோ விழாவில் மட்டும் இளையராஜா புண்ணியத்தில் கொஞ்சம் பரபரப்பேற்பட்டது. வெளியூர்களில் போஸ்டரைப் பார்ப்பவர்கள், ‘ஏதோ மம்முட்டியோட பழைய படம் போல’ என்று கூறிவிட்டுப் போகிறார்களாம். தியேட்டர்காரர்கள் பெட்டியை திருப்பி அனுப்பத் தயாராகி வருகின்றனர்.
பப்ளிசிட்டி பத்தாது சேட்டா!
சென்னையில் 57 புதிய திரையரங்குகள்!
எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 11 திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் துவங்கவிருப்பது தெரிந்த செய்தி. அதே வளாகத்தில் ஆட்லேப்ஸ்காரர்கள் 10 திரையரங்குகளைத் துவங்கவிருக்கிறார்களாம்.
இவை தவிர வட பழனி ஏரியாவில் 14 திரையரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு நடிகர் விஜய்க்கு சொந்தம். மேலும் 22 திரையரங்குகள் திறப்பு விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
நகருக்குள் இந்த மாதிரி மல்டிபிளெக்ஸுகளுக்கு கிடைத்த வெற்றியைப் பார்த்து இப்போது புறநகர்ப் பகுதிகளிலும் இதே மாதிரி மல்டிப்ளெக்ஸ்கள் தயாராகி வருகின்றன.
கோவா ஆடியோ ரிலீஸ் !
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல் படமான கோவா ஆடியோ வெளியீடு விரைவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.
சத்யம் வளாகம் அல்லது சென்னை டிரேடு சென்டரில் விழா நடக்கக் கூடும்.
பாடல்களை வெளியிடுபவர்… ‘தலைவர்’தான்!
கமல் தொடங்கி வைத்த கௌதமியின் மெகா சீரியல்!
அபிராமி என்ற பெயரில் புதிய மெகா சீரியல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது (எத்தனை வருடங்களுக்கோ!). தயாரிப்பாளர் – அபிராமி ராமநாதன். சீரியலுக்குப் பெயர் ‘அபிராமி’.
இந்த சீரியலின் நாயகி கௌதமி… திங்கள்கிழமை இந்த சீரியலைத் துவக்கி வைத்தவர், கமல் ஹாஸன்!












பப்ளிசிட்டி பத்தாது சேட்டா!
// இவற்றில் நான்கு நடிகர் விஜய்க்கு சொந்தம்.//
ஐயையோ! அப்புறம் இனி எல்லா படமும் 300 நாட்களுக்கு மேல தானா!
//நகருக்குள் இந்த மாதிரி மல்டிபிளெக்ஸுகளுக்கு கிடைத்த வெற்றியைப் பார்த்து இப்போது புறநகர்ப் பகுதிகளிலும் இதே மாதிரி மல்டிப்ளெக்ஸ்கள் தயாராகி வருகின்றன//
திரை அரங்கை சிறப்பாக வைத்து இருந்தால் மக்கள் படம் பார்க்க திரை அரங்கிற்கு வருவார்கள் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்
வினோ உங்களோட இந்த பாப்கார்ன் நல்லா இருக்கு படிக்க! வாழ்த்துக்கள்
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல் படமான கோவா ஆடியோ வெளியீடு விரைவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.
valthukkal miss.soundarya
பாடல்களை வெளியிடுபவர்… ‘தலைவர்’தான்!
தலைவர் pole audio super hit aga valthukkal
பூக்கடைக்கே விளம்பரம் தேவைப்படும் இந்தக் காலத்தில், பழஸிராஜா போன்ற கொஞ்சம் ‘வறட்சியான’ படத்துக்கு எந்த அளவு மெனக்கெட்டிருக்க வேண்டும் பப்ளிசிட்டியில்?
SUN TV KKU KODUTHIRUKKALAM
///இவை தவிர வட பழனி ஏரியாவில் 14 திரையரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு நடிகர் விஜய்க்கு சொந்தம்///
இனிமேல் அனைத்து விஜய் படங்களும் பொன்விழா கொண்டாடும்.
பழசிராஜா படம் எப்படி ?
//வட பழனி ஏரியாவில் 14 திரையரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு நடிகர் விஜய்க்கு சொந்தம்.//
அப்டின்னா ‘வில்லு’ வை ரீ ரிலீஸ் செய்து , புதிய சாதனை என்று விரைவில் போஸ்டரையும் , பின்பு வெள்ளி விழா நிகழ்ச்சியையும் காணலாம் …