முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

எம்ஜிஆர் போஸ்டரை அகற்றச் சொன்ன ரஜினி!

Friday, November 6, 2009 at 1:37 am | 6,039 views

ப்ளாஷ்பேக்: எம்ஜிஆர் போஸ்டரை அகற்றச் சொன்ன ரஜினி!

பொதுவாக இன்றைக்கும் சரி, அன்றைக்கும் சரி… பெரும்பாலான நடிகர்கள் எம்ஜிஆர் அல்லது ரஜினியின் பட போஸ்டர்கள் அல்லது வீடியோ காட்சிகள் தங்கள் படங்களில் இடம்பெறும்படி பார்த்துக் கொள்வார்கள்.

MGR Rajini

மக்கள் மனங்களை வென்ற இந்த மகத்தான கலைஞர்களுக்கு தாங்களும் ரசிகர்கள்தான் என்று காட்டிக் கொள்வதன் மூலம் மக்களிடம் எளிதாகச் சென்றடையும் உத்தி இது. மேலும் படத்தில் காட்டப்படும் பெரிய நடிகர்களின் ரசிகர்களும் ஒரு சாஃப்ட் கார்னரோடு இந்தப் படத்துக்கும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற எண்ணத்தின் விளைவு இது.

அஜீத், விஜய், சூர்யா என எல்லோருமே எம்ஜிஆர் / ரஜினி முகத்தை தங்கள் படங்களில் காட்டாமல் இருந்ததில்லை.

ஆனால் ரஜினியோ தனது படம் ஒன்றில் எம்ஜிஆர் போஸ்டர் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகற்றச் சொல்லிவிட்டாராம். அந்த போஸ்டர் அகற்றப்பட்ட பிறகே குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் இப்படிக் கூறியுள்ளார், தான் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில்:

“ரஜினியுடன் படம் செய்வது ஒவ்வொரு முறை புதிய அனுபவமாகவே அமையும் எங்களுக்கு.

சகலகலா வல்லவன் படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் சுவரில் ஒட்டப்பட்ட எம்ஜிஆர் படப் போஸ்டர் வரும். அந்தக் குறிப்பிட்ட காட்சியின்போது தியேட்டர்களில் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும்.

அந்த அதிகப்படியான வரவேற்பைப் பார்த்துவிட்டு, ரஜினியை வைத்து நாங்கள் எடுத்த பாயும் புலி படத்திலும் எம்ஜிஆர் போஸ்டர் வரும்படி காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், இந்தப் போஸ்டரை எடுத்துவிடுங்கள் என ரஜினி சொல்லிவிட்டார். அதை ஏன் வைத்தோம் என்று நாங்கள் விளக்கியபோது, அவரது கண்டிப்பு அதிகமானது.

“பாருங்க சரவணன்… என்னைப் பார்க்க விரும்புபவர்கள் என் படத்துக்கு வர வேண்டும். எம்ஜிஆர் என்ற பெரிய மனிதரின் புகழைப் பயன்படுத்தி எனக்குப் பாராட்டு கிடைக்கும்படி செய்வது நியாயமில்லை…” என்று கூறிவிட்டார். அந்த போஸ்டர் எடுக்கப்பட்ட பிறகே காட்சி படமானது…” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தனைக்கும் அன்றைக்கு முதல்வராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான்!

குறிப்பு:  ‘சிவாஜி’ படத்தில் எம்ஜிஆர் – சிவாஜி வேடங்களில் சில நிமிடங்கள் தோன்றுவார் ரஜினி.

எம்ஜிஆர், சிவாஜி போன்ற சாதனையாளர்கள் மீதான தனது மரியாதையைக் காட்டும் விதத்தில்  அந்த வேடங்களை சிறப்பாக செய்திருப்பார்!

-என்வழி

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

7 Responses to “எம்ஜிஆர் போஸ்டரை அகற்றச் சொன்ன ரஜினி!”
  1. Saamaanyan says:

    பாண்டியனா? கொக்கா?
    இப்புடி தன உழைப்பை நம்பி வந்த இவரை பாத்து கண்ணு போட்டவங்க எத்தனை எத்தனை பேர் ?
    சிலர் நான் தான் சின்ன எம்.ஜி.ஆர; கருப்பு எம்.ஜி.ஆரன்னு சுய பட்டமெல்லாம் வேற? இதுல அடுத்த சூப்பர் ஸ்டார் வேறயாம்!!

  2. mukesh says:

    //குறிப்பு: ‘சிவாஜி’ படத்தில் எம்ஜிஆர் – சிவாஜி வேடங்களில் சில நிமிடங்கள் தோன்றுவார் ரஜினி.//

    பொதுவாக தன்னை சிவாஜி என்றோ எம்ஜிஆர் என்றோ மற்ற நடிகர்கள் சொல்லிக்கொண்டால் எம்ஜிஆர் – சிவாஜி ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் அல்லது எரிச்சல் அடைவார்கள்.

    ஆனால் ரஜினி சிவாஜியும் நானே எம்ஜிஆர்ம நானே என்ற போது கிளாப்ஸ் பறந்தது மட்டுமல்ல, அந்தந்த ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்ததை நானே பார்த்திருக்கிறேன்.

  3. r.v.saravanan says:

    yerkenavey nan ஏவிஎம் சரவணன் எழுதியுள்ள புத்தகத்தில்:

    idhai padithirukiren
    irundalum இந்த padivil padikkum bothu suvarasyamai irukiradhu
    thanks

  4. Raviprakash says:

    தலைப்பு எதிர்மறையாகச் சிந்திக்கத் தூண்டினாலும், ரஜினியைப் பற்றிய ஒரு நல்ல சுவாரசியமான, அவர் மீதுள்ள மதிப்பு அதிகரிக்கும்படியான செய்தியை வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி!

  5. ROBERT C says:

    இதை போல் தினமும் ஒரு சுவையான செய்தி வந்தால் நன்றாக இருக்கும்

  6. sps says:

    ரஜினி ரஜினி தான், நல்ல மனிதர்.

  7. udhaya says:

    சூப்பர் …… நல்ல கருத்து….ரஜினி ரஜினி தான்!

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)