முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

அமிதாப்பை கலங்க வைத்த இளையராஜா!

Thursday, November 5, 2009 at 2:04 pm | 4,002 views

இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற இசைக் கலைஞர் இளையராஜா! – அமிதாப்

தி றமைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் அமிதாப், தனது அடுத்த படமான பா மூலம்.

இதில் அவரது தோற்றத்தை முதல் முறை பார்த்து கண்டு பிடிப்பவர்களுக்கு தாராளமாக பொற்கிழி பரிசாகத் தரலாம்.

மொட்டைத் தலை… சற்றே விகாரமான, மன வளர்ச்சி குன்றிய மாணவனின் உடல் … ‘பா’ (Paa) படத்தில் இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் மிரண்டு போவார்கள்…!

paa-balki-pos21

அமிதாப்பின் சொந்தப்பட நிறுவனமான ஏபி கார்ப்பரேஷன்  15 கோடியில் தயாரித்துள்ள இந்தப் படத்தை சீனி கும் படத்தைத் தந்த தமிழ் இயக்குநர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக இதில் தோன்றுகிறார் அமிதாப். இதற்காக அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போட லண்டனிலிருந்து நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டாராம்.

அபிஷேக் பச்சனின் மகனாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம் அமிதாப். டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது பா.

படத்தில் தனது அனுபவம் குறித்து அமிதாப் இப்படிக் கூறுகிறார் தனது ப்ளாகில்…

“இந்த படத்துக்காக மேக்கப் போட்டது போல வாழ்க்கையில் நான் எப்போதும் போட்டதில்லை. 5 மணிநேரம் மேக்கப் போட… இரண்டு மணிநேரமாகும் அதைக் கலைக்க. மீதி 6 மணிநேரம் நடிக்க. இப்படித்தான் என சமீபத்திய நாட்கள் கழிந்தன. சூர்யோதயக் காட்சியை படமாக்க வேண்டும் என்றால் முந்தைய நாள் இரவே தயாராகிவிட வேண்டும்.  இந்தப் படத்துக்காக தினமும் தலை, முகம், கைகளில் இருந்த முடிகளை மழித்துக் கொண்டேன். கைகளில் உள்ள நரம்புகள் பளிச்சென்று தெரிவதற்காக சுத்தமாக மழித்துக் கொள்வேன். அதன் மேலேயே ஆல்கஹால் ஸ்பிரே அடிப்பார்கள். அப்படி ஒரு எரிச்சலாக இருக்கும் உடல் முழுக்க. ஆனால் அந்த வேடத்தை நான் நேசித்தான். அதனால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். ..” என்கிறார்.

இளையராஜா ஒரு மேதை…

படத்தின் மிக முக்கிய அம்சம் இசை. சீனிகும் படத்துக்கு இசைத்த நமது இசைஞானிதான் இந்தப் படத்திலும் இசை ராஜாங்கம் நடத்தியுள்ளார் .

குறிப்பாக பின்னணி இசை இந்தப் படத்தின் உணர்வை புதிய மொழியாகவே பேசியிருப்பதாகச் சொல்கிறார் பால்கி.

பாடல்கள் தவிர, குறிப்பிட்ட காட்சிகளுக்கு மட்டும் தீம் மியூசிக்கை தனியாக இசைத்துக் கொடுத்துள்ளார் இசைஞானி. அதில் ஒன்றுதான் இங்கே ட்ரைலரில் நீங்கள் பார்ப்பது / கேட்பது.

இந்த இசைக்கான பாடலை ஏற்கெனவே தமிழில்  தந்துவிட்டார் இளையராஜா. பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில்   ‘காட்டு வழி கால்நடையா போற தம்பி…’ என்ற  பாடல் இங்கு சிலிர்க்க வைக்கும் தீம் மியூசிக்காக மாறியுள்ளது.

ராஜாவின் இசையில் அமிதாப் ஒரு பாடலும் பாடியுள்ளார் இதில்.

படத்தின் பின்னணி இசையுடன் சில காட்சிகளைப் பார்த்த அமிதாப், சொன்ன வார்த்தைகள்…

“இந்த நூற்றாண்டின் மகத்தான இசைக் கலைஞர் இவர்.  இத்தனை காலமும் பாலிவுட் இவரை ஏன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!”

‘பா’ ட்ரைலர்:

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

5 Responses to “அமிதாப்பை கலங்க வைத்த இளையராஜா!”
  1. eppoodi says:

    வைரமுத்து சிவாஜியில் எழுதிய பாடல் வரிகளைப்போல் ராஜாவின் இசை ஓராயிரம் ஆண்டுகள் சேமித்தஇசை, நூறாண்டுகள் தாண்டியும் வாழும். ராஜாவை யாருடனும் ஒப்பீடு செய்பவர்கள் அவரது இசையை முழுமையாக அறியாதவர்களே. பாவம் அவர்களை விட்டுவிடுவோம்

  2. s.jayaprakaash says:

    இசை ஞானி இளையராஜா எத்தனையோ இதய்ங்களைதன்னுடைய இசையால் தாலாட்டி சுகமான உறங்க வைக்கின்றவர் . நல்ல வாழ்த்துக்கள்

  3. karhik says:

    இவ்வளோ நாள் ரஜினி ஏன் அமிதாப் பச்சனை இவ்வளோ புகல்ரனுனு நெனச்சேன்… இப்போ தான் அதுக்கு அர்த்தம் தெரயுது…

    amitabh is amitabh..

  4. suram says:

    ராஜா திரும்பவும் இசைராசதன் என்று காட்டி உள்ளார்

  5. pravin says:

    ராஜா தி கிரேட் , அவரை பாலிவுட் பயன்படுத்த தவறியது அவர்களுக்கு இழப்பு , இன்னும் தமிழர்களை இந்தியனை பார்க்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)