உன்னைப்போல் ஒருவன் – விமர்சனம்
Friday, September 18, 2009 at 11:06 pm | 693 views
உன்னைப்போல் ஒருவன் – விமர்சனம்
நடிப்பு: கமல்ஹாஸன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராம், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜா
ஒளிப்பதிவு: மனோஜ் சோனி
இசை : ஸ்ருதிஹாஸன்
எடிட்டிங்: ராமேஷ்வர் பகவத்
கலை: தோட்டா தரணி
இயக்கம்: சக்ரி டோலட்டி
தயாரிப்பு: கமல்ஹாஸன், சந்திரஹாஸன், ரோனி ஸ்க்ரூவாலா
மக்கள் தொடர்பு: நிகில்
தீவிரவாதத்தின் விளைவுகள் உடனடியாக மக்களைத் தாக்குகின்றன… ஆனால் அந்தத் தீவிரவாதத்தைத் தந்தவர்களுக்கோ தண்டனைகள் தாமதமாக, வலிக்காமல் வழங்கப்படுகின்றன… தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே…” என்ற ஒரு தனிமனிதனின் கோபம்தான் ‘உன்னைப்போல் ஒருவன்’.
வாங்கிய காய்கறியும் கறிவேப்பிலையும் வாடுவதற்குள் நடந்து முடிந்து விடுகிற சில நிகழ்வுகளை ஒரு விஷூவல் லைவ் கமெண்ட்ரி மாதிரி எடுத்திருக்கிறார்கள்.
நாட்டின் எத்தனையோ மத்யமர்களில் ஒருவரான கமல்ஹாஸன் இரவு பகலாக தனக்குத் தெரிந்த நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்கிறார். ஒரு நாள் காலை அவற்றைக் கருப்புப் பைகளில் வைத்து காவல் நிலையம், ரயில், ஷாப்பிங் மால் என நகரின் முக்கியப் பகுதிகளிலெல்லாம் வைக்கிறார்.
பின்னர் கூலாக கடைவீதிக்குப் போய் மனைவி போட்டுக் கொடுத்த லிஸ்ட்படி காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பாதி கட்டி முடித்த ஒரு கட்டடத்தின் உச்சிக்குப் போகிறார். ஒரு பலகையை விரித்துப் போட்டு, கையோடு கொண்டுவந்திருக்கும் அத்தனை கம்ப்யூட்டர் சாதனங்களையும் பரப்பி, அசெம்பிள் செய்து, சற்றே நிதானமாகி மாநகர காவல்துறை கமிஷனர் மாரார் எனும் மோகன்லாலுக்கு ஒரு போன் செய்கிறார். தான் குண்டு வைத்திருக்கும் விவரங்களை தெளிவாக சொல்லிவிட்டு, டக்கென்று போனை வைத்துவிடுகிறார்.
அடுத்த நொடி கமிஷனர் அலுவலகம் அலர்ட்டாக, அது முதல்வர் அலுவலகம் வரை எதிரொலிக்கிறது. உள்துறைச் செயலாளர் லட்சுமி வருகிறார்.
மீண்டும் கமலிடமிருந்து போன்…
இம்முறை தனது செயலின் நோக்கத்தைச் சொல்கிறார். வைத்திருக்கும் குண்டுகள் வெடிக்காமல் இருக்க மும்பை, கோவை, அசாம் என பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் குடித்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான நான்கு படுபயங்கர தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார்.
வேறு வழியில்லை… நிலைமையின் தீவிரம் புரிந்து தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்கிறார் கமிஷனர். அதேநேரம் கமல்ஹாஸனின் இந்த செயலுக்கான பின்னணி, அவர் இருக்கும் இடத்தையும் காண முயற்சிக்கிறார் கமிஷனர்.
கமல்ஹாஸனின் நிபந்தனைப்படி தீவிரவாதிகள் நால்வரும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவனை மட்டும் உடன் செல்லும் அதிரடிப்படை அதிகாரி திடீரென பிடித்துக் கொள்ள, மற்ற மூவரும் தப்பித்து அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஜீப்பில் ஏறுகிறார்கள். அடுத்த நொடியில் ஜீப் வெடித்துச் சிதற, அதிர்ச்சியில் உறைந்து போகிறது காவல்துறை.
அந்த நான்காவது நபரையும் கொல்ல வேண்டும் என கமலிடமிருந்து அடுத்த போன் வருகிறது. தொடரும் விவாதங்கள், மிரட்டல்களுக்குப் பிறகு அந்த நான்காவது தீவிரவாதியும் கொல்லப்படுகிறான்.
என்ன நடந்தது… ஏன் விடுவிக்கப்படும் தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு கமல் தரும் விளக்கங்கள் மீதி.
எந்தக் குண்டும் வெடிக்காமலேயே, எந்தக் கட்டடமும் சிதறாமலேயே அந்த எபெக்ட் படம் முழுக்க இருக்குமாறு பார்த்துக் கொண்ட இயக்குநர் சக்ரியைப் பாராட்ட வேண்டும்.
பொதுவாக இந்த மாதிரி படங்களில் முதல்வர் போன்ற பாத்திரங்கள் வரும்போது யாராவது டம்மி பீஸை காட்டி கடுப்பேற்றுவார்கள். ஆனால் கமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிஜ முதல்வரையே நடிக்க வைத்திருக்கிறார், குரல் மூலம்! படத்தில் காட்டப்படுவதும்கூட நிஜ முதல்வரின் வீடுதான்.
இதுபோன்ற நெருக்கடிக்கு மாநகரம் உள்ளாகும்போது, உயர்மட்ட அதிகாரிகள் படும் பாடு, நிலைமையைச் சமாளிக்க ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவுகள், அதனால் சக அதிகாரிகளுடன் ஏற்படும் உரசல், தனது கீழ்நிலை அதிகாரிகளுடன் ஒரு கமிஷனர் கொண்டிருக்கும் நட்பு ரீதியிலான-அதேநேரம் கடமை மாறாத உறவு… இவற்றையெல்லாம் மிக மிக அருகிருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.
படத்தின் பெரும் பலம் வசனங்கள் (இரா முருகன்).
முதல்வருக்கும் கமிஷனருக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்…
“நிலைமை எப்படியிருக்கு மாரார்?”
(ஆங்கிலத்தில்)”எல்லாம் கடவுளின் கையிலிருக்கிறது சார்!”
“அய்யய்யோ… அது சிக்கலான கையாச்சே”
தீவிரவாதம், அவர்களை ஒழிப்பதில் மென்மையான அணுகுமுறை காட்டும் அரசுகள் பற்றி கமல் பேசும் வசனங்களில் தனிமனிதனின் கோபத்துக்குள்ள வீரியம் தெறிக்கிறது.
ஆனால், “மும்பையில் குண்டுவெடித்தால் நாம் டிவியில் செய்தி பார்த்துவிட்டு, வேறு சானலுக்கு மாறுகிறோம். அதிலும் தமிழ்ச் சேனல்களில் அதைக் காட்டுவதுகூட இல்லை. காரணம் வேறு எங்கோ நடக்கிற உணர்வில் நாம் இருப்பதுதான். நாம பேசறது வேற மொழிதானே… எவனுக்கோ நடக்குது நமக்கென்ன என்ன அலட்சியம்…” என்று கமல் கூறும்போது அதை ஏனோ மனம் ஒப்பவில்லை.
இதற்குக் காரணம் இந்திய அரசும் அரசியல்வாதிகளும்தானே… தமிழ்நாட்டுக்காரன் இந்த நிமிடம் வரை வேறு நாட்டு பிரஜை மாதிரிதானே நடத்தப்படுகிறான்… அவனது குரலுக்கு ஏது மரியாதை… அவனது விருப்பத்தை எவன் கேட்கிறான். டெல்லியில் முடிவெடுத்துத் திணிப்பதுதானே காலம் காலமாய் நடக்கிறது. எனவே கமலின் இந்த வாதத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் உதைபடும் இந்தியனுக்காகவோ, மும்பையில் செத்துப்போன இந்தியனுக்காகவோ தமிழன் அலட்டிக்கொள்ளாமலே இருந்துவிட்டதன் காரணம் இதுதான்!
தமிழனுக்கு வந்த துன்பங்களுக்காக கவலைப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர்? மும்பை குண்டுவெடிப்பை மையப்படுத்தித்தான் அவர்களால் படங்கள் செய்ய முடிந்தது. கோவை குண்டுவெடிப்பெல்லாம் அவர்களால் கண்டுகொள்ளப்படவே இல்லையே.
ஆகவே இந்த ஒரு கருத்தை அவர் சொல்லாமலேகூட விட்டிருக்கலாம். மனிதத்துக்கு எதிரான தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் ஒருமைப்பாடு பற்றிய ட்யூஷன் எதற்கு? நதியின் ஓட்டம் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதுதான் இயல்பானது!
தனது மூன்று மனைவிகளில் ஒருவர் இறந்துவிட்டதாக ஒரு முஸ்லிம் தீவிரவாதி கூற, அதற்கு அந்த இந்து தீவிரவாதி அடிக்கும் காமெண்ட் மகா தவறு!
அதேநேரம் தீவிரவாதத்துக்கு மத முகமூடி மாட்டிப் பார்ப்பதில் அர்த்தமில்லை என்கிற வாதம் ஏற்கக் கூடியதே. தீவிரவாதமென்றாலே முஸ்லிம்கள்தான் என்றுதான் இங்கும் நிலை நிறுத்துகிறார்கள். இந்துக்களின் தீவிரவாதமும் சிறுபான்மையினரை குஜராத்தில் காவு கொண்டதை கதைக்குள் பதிவு செய்ய முயற்சித்திருப்பது ஒரு சமநிலைத் தன்மையை பேணும் முயற்சி. ஆனால் எடுபடவில்லை.
ஹீரோ லால்!
படத்தின் மிகச் சிறந்த அம்சம் பாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கலைஞர்கள்… ஒவ்வொருமே ஒப்பற்ற மணிகளாய் ஜொலிக்கிறார்கள்.
படத்தில் தன்னை பின்னுக்கு நகர்த்திக் கொண்டு மோகன்லாலையே பிரதானப்படுத்தியிருக்கிறார் கமல், அந்தப் பாத்திரத்தின் தன்மை அப்படி என்பதால்.
படம் பார்ப்பவர்களின் மனதை அப்படியே முழுமையாய் ஆக்கிரமிக்கிறார் மோகன்லால். நிச்சயம் இதைவிட பெட்டராக யாராலும் நடித்திருக்க முடியாது. அவரது மலையாளத் தமிழ் உச்சரிப்பு பாத்திரத்தின் நம்பகத் தன்மையை இன்னும் அதிகப்படுத்துகிறது. தீவிரவாதிகளை அழைத்துவர அனுப்பப்படும் தனது நம்பகமான இரு உயரதிகாரிகளுடனும் அவர் உரையாடும் காட்சி, குருஷேத்ரா மோகன்லாலை நினைவூட்டுகிறது.
உள்துறை அதிகாரியாக வரும் லட்சுமி யாதார்த்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். அவருக்கும் மோகன்லாலுக்கும் இடையே நிகழும் அந்த பனிப்போர்… எப்படியும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் பந்தாடப்படுவோம் என்ற நிச்சயமற்ற தன்மையை மோகன்லால் காட்டும் விதம்… ஹாட்ஸ் ஆஃப் மோகன்லால்!
இந்த முறை கமல் ரிங் மாஸ்டர் மாதிரி அமைதியாக உட்கார்ந்தபடி, ஆனால் தனக்கு-படத்துக்கு தேவையான அனைத்தையும் அதற்குத் தகுந்த கலைஞர்களிடமிருந்து சரியான விகிதத்தில் வாங்கியிருக்கிறார்.
தன் கண்முன் ஒரு சகோதரிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அவர் விவரிக்கும் போது, நம்மையுமறியாமல் கண்ணீர்.
எல்லாம் முடிந்ததும் மின்னல் வேகத்தில் அந்த சாதனங்களை மறைத்து கொளுத்திவிட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி காய்கறி பைகளோடு வெளியேறும் விதமும், கமிஷனரை எதிர்கொள்ளும்போது, குறுக்கிடும் போன்காலுக்கு அவர் பதில் சொல்லும் விதமும் டிபிகல் கமல் ஸ்டைல்!
அவர் யார் எனத் தெரிந்தும் கமிஷனர் விட்டுவிடப் போகிறார் என்பதை முன்கூட்டியே யூகித்துவிட முடிகிறது.
கணேஷ் வெங்கட்ராம், இந்தப் படத்தின் அட்டகாசமான, யாருமே எதிர்பாராத ஒரு பாத்திரம். அச்சு அசலான அதிரடிப் படை வீரரை கண்முன் நிறுத்துகிறார் மனிதர்.
பரத் ரெட்டி, ஸ்ரீமன், சிவாஜி, சந்தானபாரதி, அனுஜா, பூனம்.. அட கடைசியாக வரும் அந்த ஐஐடி ட்ராப் அவுட் என அனைவரது நடிப்புமே, ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாமல் அத்தனை கச்சிதம்!
ஒளிப்பதிவு, எடிட்டிங் என எதிலுமே முதல் தரத்தைத் தந்திருக்கிறார்கள். ஸ்ருதி பல இடங்களில் தனது இசையை மவுனிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனம். மற்றபடி ஒரு இசையமைப்பாளராக இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.
‘இலக்கியம், ஜனரஞ்சகம், நவீனத்துவம் என எந்த வடிவிலிருந்தாலும் மக்களுக்காக செய்யப்படும் நல்ல கலைகள் என்றுமே தோற்பதில்லை’ என்பது நவீன இலக்கியத்தின் முன்னோடி மக்சீம் கார்க்கியின் வாக்கு. அதை உன்னைப்போல் ஒருவனும் நிரூபிக்கும்!
-எஸ்எஸ்












இந்த கதை ஏர்கனவெ தெரிந்தது தான் என்றாலும் இந்த விமர்சனம் படத்தை பார்க தூன்டுகிறது… இந்த பதிவின் மூலம் ணீங்கள் சொல்லும் கருத்தை நானும் ஒத்து கொள்கிரேன், அதாவது //தமிழ்நாட்டுக்காரன் இந்த நிமிடம் வரை வேறு நாட்டு பிரஜை மாதிரிதானே நடத்தப்படுகிறான்… அவனது குரலுக்கு ஏது மரியாதை//.. நான் இதை மருபடியும் சொல்ல தேவை இல்லை..
னான் அயல் நாட்டில் இருபதால் எனக்கு இந்தியவின் பல மொலி நன்பர்கள் உன்டு, அவர்களொடு சிலொன் பிரச்சினை பட்ரி பேசினாலெ என்னை தீவிரவதி மதிரியும், தேச துரொஹி மாதிரி பார்பர்… னீங்கல் எல்லம் இப்டி தான்டா என்கிர மாதிரி…அப்படியும் பேசி னிரைய கெட்ட பேர்(??).
Vino u havent seend the original “a wednesday” movie
you praised too much for this movie……wasted n worst remake i ever seen……kuselan is 1000times better than dis version.
if u ask me nasurddin shah acted well than this over hyped legend hero……even mohanlal role anupam kher rocked indeed…that bugger talking half malayalam in half d movie
we shouldnt praise them just coz they are nammed after good acting n legend..lets come out of that thinking habit.
ஓ… தமிழன் கொல்லப்படும் போதே தமிழ் நாட்டுல யாருக்கும் பெருசா தெரியிரது இல்ல… அவன் தான் உண்டு தன் வேலையுண்டு எண்டுதான் இருப்பான்..
எல்லாம் சரி ஆனால் இந்தா மலையாளியை நடிக்க வெயித்தது தப்பு மல்லுஎல்லாரும் பெரிய திருட்டுபயளுக தமிழனை நல்லா முட்டாளா ஆகிட்டு நம்ம காசு பணேம் எல்லாம் சுரண்டுரானுக நமக்குதான் அறிவே கேடயதே
An excellent review.
//ஆனால், “மும்பையில் குண்டுவெடித்தால் நாம் டிவியில் செய்தி பார்த்துவிட்டு, வேறு சானலுக்கு மாறுகிறோம். அதிலும் தமிழ்ச் சேனல்களில் அதைக் காட்டுவதுகூட இல்லை. காரணம் வேறு எங்கோ நடக்கிற உணர்வில் நாம் இருப்பதுதான். நாம பேசறது வேற மொழிதானே… எவனுக்கோ நடக்குது நமக்கென்ன என்ன அலட்சியம்…” என்று கமல் கூறும்போது அதை ஏனோ மனம் ஒப்பவில்லை.//
Fully agree. As a tamilian I too I have the same sentiments. But on the other hand, a film is a common media for all and the opinions expressed or message told should not be justified from only one point of view is my opinion. I also feel that as a Tamilian Kamal also must have been anger with the biassed treatment Centre accords to Tamils, but Kamal as an artiste could have had restrictions in expressing himself so. But this point being highlighted here in the review is most welcome, so that our grievances and message as Tamils will reach all.
//படத்தில் தன்னை பின்னுக்கு நகர்த்திக் கொண்டு மோகன்லாலையே பிரதானப்படுத்தியிருக்கிறார் கமல், அந்தப் பாத்திரத்தின் தன்மை அப்படி என்பதால்.
படம் பார்ப்பவர்களின் மனதை அப்படியே முழுமையாய் ஆக்கிரமிக்கிறார் மோகன்லால். நிச்சயம் இதைவிட பெட்டராக யாராலும் நடித்திருக்க முடியாது. அவரது மலையாளத் தமிழ் உச்சரிப்பு பாத்திரத்தின் நம்பகத் தன்மையை இன்னும் அதிகப்படுத்துகிறது. தீவிரவாதிகளை அழைத்துவர அனுப்பப்படும் தனது நம்பகமான இரு உயரதிகாரிகளுடனும் அவர் உரையாடும் காட்சி, குருஷேத்ரா மோகன்லாலை நினைவூட்டுகிறது.//
Excellent lines again. That’s a great attitude of the critic in emphasizing the fact that Story and characters matters most for a film than individuals (even if it is a great star like Kamal). Fully agree. I strongly beleive that a film as a whole should win masses and should not have the attention only on individuals (again even if it is Kamal). It’s a true victory for the team. Hats-off to Mohan Lal. This reminds me of Satyaraj creating waves on par with Kamal during Kaaki Sattai with one dialgoue “Thagadu Thagadu”.
Srini
I welcome your opinion too on the film. It’s your liberty to critisize a movie, based on your liking and preferences. But I would appreciate if you could have done that with more detail, so that we can have a healthy discussion.
Unnai Pol Oruvan is a must-watch
September 18, 2009 15:34 IST
http://www.rediff.com
Unnai Pol Oruvan isn’t for mainstream buffs with four songs and a fight — it aims to be cerebral, and plays more towards subtlety and the serious issues that threaten to swallow us, forcing us to look at them instead of just walking away.
————————
UPO Review – Sudish Kamath Rating 4/5
Unnaipol Oruvan: Need of the hour
http://www.tamilfms.com/2009/09/unnai-pol-oruvan-movie-review.html
An original film, even with its flaws, is beyond compare with any remake or interpretation of it simply because if it did not exist in the first place, the remakes would’ve never happened.
Verdict: Unnai Pol Oruvan is a treat for the tamil audience!
Rating: 4 stars
—————–
Unnai Pol Oruvan: A stylish-stirring movie.
http://chennaionline.com
Kamal Haasan’s ‘Unnai Pol Oruvan’, a remake of Bollywood hit ‘A Wednesday’, is undoubtedly one of the most awaited movie of this season and proves to be a true reflection of a common man’s anger against Terrorism.
If you want a simple movie yet get wired then watch Unnai Pol Oruvan.
————————–
Friends. let’s welcome this new trend in Tamil Cinema with a thunderous applaud. Let’s forget who is in the lead. It’s a good sign of a Tamil Cinema towards new heights and trends.
Well said about Indians attitude towards Tamil. Once we is to feel attached to India. But after what Indians did to our Tamil brothers In Sri Lanka I hate to call myself Indian. India………go to hell.
நல்ல விமர்சனம். ஆனால் முழுக்கதையையும் எழுத வேண்டுமா?
Envazhi,
agree with the review 200% It cant be more interesting than this. Hereafter you dont write anything abt kamal and let this SS only write them. His pitch is perfect than yours
“மும்பையில் குண்டுவெடித்தால் நாம் டிவியில் செய்தி பார்த்துவிட்டு, வேறு சானலுக்கு மாறுகிறோம். அதிலும் தமிழ்ச் சேனல்களில் அதைக் காட்டுவதுகூட இல்லை. காரணம் வேறு எங்கோ நடக்கிற உணர்வில் நாம் இருப்பதுதான். நாம பேசறது வேற மொழிதானே… எவனுக்கோ நடக்குது நமக்கென்ன என்ன அலட்சியம்…” என்று கமல் கூறும்போது அதை ஏனோ மனம் ஒப்பவில்லை”
எப்படியய்யா ஒப்பும் இங்கேயே சில அரைவேக்காடுகள் மலையாளிகள் எனவும்,
கனடிகர்கள் எனவும்,குஜராத்தி என எனது ஒட்டுமொத்த இந்தியாவையே கூறுபோடுவதை நாம் பார்க்கமுடிகிறது.
உலக நாயகனே ஒரு சிறிய வேன்டுகோள் ஏன் நீங்கள் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை
குறித்து படம் எடுத்தீர்கள்……!முதலில் நீர்ர்ர் எடுத்திருக்க வேண்டியது இந்திய மாநிலங்களுக் கிடையேயான தீவிரவாதத்தையும் கோஷ்டி பூசலையும் பற்றியதுதான்…….
இந்த வேறுபாட்டு சாக்கடை இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருபதால் தானே ஈழத்து பேரவலத்திற்கு மராட்டியர்களும்,கனடிகர்களும்,மலையாளிகளும் மற்றவர்களும் மூடிக்கொண்டிருந்தார்கள்..சரி இதை விடுங்கள் இது நாடுகடந்த பிரச்சனையாதலால் சாமானியர்கள் ஒன்றும் செய்யமுடியவில்லை..அரசும் ஒன்றும் புடுங்கவில்லை(தமிழக அரசு செய்தது என்ன?),தமிழகத்தில் சில போராட்டங்களை காண முடிந்தது ஆதுவும் உணர்ச்சிபூர்வமனதா?அதுதான் இல்லை அவை அனைத்தும் அரசியல் மற்றும் சுய ஆதாயங்களுக்காகவேயன்றி எவனடா ஆத்மார்த்தமாக போரடினார்கள்????இதில் தமிழன்,தெலுங்கன்,மலையாளி என்ற சாக்கடை வேறுபாட்டு பிதற்றல்கள் வேறு……
சில மாதங்களுக்கு முன்னால் சீக்கியர்களுக்கிடையே போராட்டம் ஏற்பட்ட பொழுது பிற மாநிலத்தார் என்ன வரிந்துகட்டி நின்றார்களா?இல்லையே…ஏன்? ஏனென்றால் அது பிற மாநிலம்.இதை சொல்ல காரண்ம் கீழ்காணும் வரிகளே…
“மும்பையில் குண்டுவெடித்தால் நாம் டிவியில் செய்தி பார்த்துவிட்டு, வேறு சானலுக்கு மாறுகிறோம்.”
இப்பொழுது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சுயநலமே மேலோங்கி இருக்கும் வாழ்க்கையில் இதை(பொது நலத்தை) எதிர்பார்ப்பது கடினம் தான்….!
இதில் கீழ்கண்ட ஒருவரது விமர்சனம் வேறு……
“எல்லாம் சரி ஆனால் இந்தா மலையாளியை டிக்க வெயித்தது தப்பு மல்லுஎல்லாரும் பெரிய திருட்டுபயளுக தமிழனை நல்லா முட்டாளா ஆகிட்டு நம்ம காசு பணேம் எல்லாம் சுரண்டுரானுக நமக்குதான் அறிவே கேடயதே”
என்ன கொடுமை கடவுளே இது….அவன் என்ன திருடினான…!!!
இதை தான் மேலே நான் கூறியுள்ளேன் நண்பர்களே.
இறுதியாக ஒன்று தெரிகின்றது…ஒரு உயிரை உயிராக எண்ணணுவதில்லை அந்த உயிர் தமிழனா,மலையாளியா,தெலுங்கனா மற்றும் பலவா எனவே பார்க்கிறார்கள்…
இந்தியாவிற்க்குள்ளேயே இத்தனை பிரிவினைகள் என்றால் பாக்கிஸ்தானியர்களும்,சீனர்களும் வரிந்துகட்டுவதில் தவறே இல்லையடா மூடர்க(நானும் தான்).
நன்றி!
Well said Indian,tamilan’s egoist mentality will never change. Malayalies or other state people work hard to achive something. Tamilan’s half life time is given for PANJANGAM and another half is given to VETTI PECCHI,sshameless creatures,I am ashamed to be a tamilian
Did you see ‘A Wednesday’? If so, see that and review your review.
__________
இந்த விமர்சனம் உன்னைப்போல் ஒருவனுக்காகத்தான். எ வெட்னஸ்டேக்கு எழுதப்பட்டதல்ல!
Well Said INDIAN.Coimbatore,
Human mentality is, If a person is supportive for other person, both will have mutual understanding and helpful each other.
North Indians never supportive to south Indians and that’s the the raction of Tamil people feeling over mumbai attack..It’s Indian government responsibility to build the mutual understanding…
But Indian government reaction in Eelam tamil people issue will never give positive openion about North Indians and the Indian Government…
Hi Vino,
A Wednesday is a far better movie than this remake. Everything was perfect in that movie. I felt that this movie s a spoiler of the original. Background score by Sruthi further degrade the movie in most of the scenes instead of elevating the scenes. Only console in this one is the acting of Mohanlal and Kamal. In that too nasurudeen shah and anupam kher beat both of them by a large margin.
Rajan.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. படம் விறு விறு
படம் உண்மையிலேயே சூப்பர். ஆனால் // ரிங் மாஸ்டர் கமல்…
இந்த முறை கமல் ரிங் மாஸ்டர் மாதிரி அமைதியாக உட்கார்ந்தபடி, ஆனால் தனக்கு-படத்துக்கு தேவையான அனைத்தையும் அதற்குத் தகுந்த கலைஞர்களிடமிருந்து சரியான விகிதத்தில் வாங்கியிருக்கிறார்.//
கமலை ரிங் மாஸ்டர் என்று சொல்வதைத்தான் எற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இந்த படத்தை பொறுத்த வரை கமல் நன்றாக நடித்திருக்கிறார் அவ்வளவுதான். இதில் வரும் கருத்துக்கள் அனைத்துமே ஹிந்தி படத்தில் வருபவைதான். கமலின் கருத்தல்ல.
// அதற்குத் தகுந்த கலைஞர்களிடமிருந்து சரியான விகிதத்தில் வாங்கியிருக்கிறார்.// இதை செய்தது இயக்குனர் தான். நானும் இந்த படத்தை பற்றிய விமர்சனங்களை பல இடத்தில் படித்து விட்டேன். ஒருவருமே படத்தில் இயக்குனரின் பங்கை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. என்னமோ கமலே படத்தை இயக்கியதை போன்றதொரு தொனியில்தான் எல்லா விமர்சனங்களும் இருக்கின்றன. கமல் இந்த கதையை எழுதவும் இல்லை இயக்கவும் இல்லை. நன்றாக நடிக்க மட்டும் தான் செய்திருக்கிறார். ஏன் இந்த படத்தை பொறுத்த வரை படத்தின் ஹீரோ என்று பார்த்தால் கூட அது மோகன்லால் தான்.
///மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு///
அப்படியா மீரா. ஆனால் உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உங்களின் மாற்றான் தோட்டத்து மல்லிகையான சிவாஜி உலகெங்கும் பட்டய கிளப்பியபொழுது அந்த மனத்தை நீங்கள் உணரவில்லையா அல்லது உங்கள் மூக்கு அப்பொழுது பழுதடைந்துவிட்டதா.
//saravanan says:
// ஒருவருமே படத்தில் இயக்குனரின் பங்கை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. //
கமல் படத்தில் இயக்குனரின் பங்கு மறைக்கப்படுவது ஒன்றும் புதிது இல்லை. ஏன் தசாவதாரத்தில் கூட அதேதான் நடந்தது. இன்னமும் குருதிப்புனல், குணா, அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம்,…… போன்ற படங்களை கமல் தன் சொந்த கதையை போலவே தான் பேசியும் வருகிறார்.
எ வெட்னஸ்டே படத்தை நான் பார்க்கவில்லை.அதனால் அதை பற்றி பீற்றிக்கொள்ளப்போவதில்லை. ஆனால் உன்னைப்போல் ஒருவன் நல்ல சினிமா என்பதில் சந்தேகமே இல்லை.மோகன்லால் மிக மிக யதார்த்தமாய் நடித்திருக்கிறார். கமலின் நடிப்பும் இயல்பு.ஒருநாளில் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒன்றேமுக்கால் மணி நேரம் நம்மை கட்டிப்போடுகிறது திரைக்கதை. சலங்கை ஒலியில் போட்டோ எடுக்கத் தெரியாமல் கமலை கண்டபடி எடுக்கும் பொடியந்தான் இப்படத்தின் டைரக்டர். பாராட்டியே ஆகவேண்டும். மோகன்லாலின் கீழ் அதிகாரிகளாய் வரும் இருவரும் சூப்பர். மொத்தத்தில் இந்தப்படத்தில் குறை கண்டுபிடிக்க ஒன்றுமேயில்லை. தசாவதாரத்தை விட இது மிகவும் நல்ல படம். Hats off to Mohanlal,Kamal,Ganesh & co for giving a good perfomance in a Good movie.
The story and the MESSAGE told in this movie is applaudable.Excellent message. A big thanks for Kamal for remaking this movie in Tamil. A Class Hero like Kamal is needed for this story and message to reach all people. Its very doubtful that this message would have reached vast audience if there is any other actor acted instead of Kamal. Instead of wasting time in the films like Dasavatharam, kamal can do this type of movies which is very very very commendable. Congrats Kamal.
நம்ம குருவிக்கு வைத்த சூட்டைப் பற்றி சொல்லவே இல்லை