Envazhi

இந்திரனே சந்திரனே என்பார்.. அதே வேகத்தில் தூக்கிப்போடுவார்..! – ‘தெளிந்த’ கருணாநிதி
‘எச்சமிடும் பறவைகளும் விரட்ட முடியாமல் தவிக்கும் கோபுரக் கலசமும்…’  – முதல்வர் கருணாநிதியின் உள்குத்து இது!

சென்னை : ‘இந்திரனே, சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து, தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் கீழே தூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பர். இதை மனதில் கொண்டு, அவர்கள் காதருகே பேசும்போதெல்லாம், நீங்கள் செவிடர்களாகவும், மற்றவர்களைப் பற்றி கோள்மூட்டும் போதெல்லாம், ஊமைகளாகிவிடும் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்’ என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

உங்கள் கலைத்துறை வளர்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது?

எனது 13வது வயதில், 80 பக்க நோட் புத்தகம் ஒன்றில், “செல்வச்சந்திரா’ என்ற கதையை எழுதி, அதை பலரிடமும் படிக்கக் கொடுத்து, அவர்களது பாராட்டைப் பெற்றேன்.

எனது 18 வயதில், அண்ணாதுரையை, திருவாரூரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைச் சந்திப்பதற்கு முன், நான் எழுதிய, ‘இளமைப்பலி’ என்ற கட்டுரை, ‘திராவிட நாடு’ இதழில் வெளியாகி இருந்தது. என்னை அண்ணாதுரை சந்தித்த போது, ‘கட்டுரை நன்றாக இருந்தது. நீ படிப்பைக் கெடுத்துக் கொண்டு, இப்படி தொடர்ந்து எழுத வேண்டாம். முதலில் நன்றாகப் படி’ என்று சொன்னார். அவர் சொன்னதில், அது ஒன்றைத்தான் நான் கேட்கவில்லை.

‘குண்டலகேசி – மந்திரிகுமாரி’ என்ற தலைப்பில் நான் எழுதிய நாடகம், தேவி நாடக சபை சார்பில், கும்பகோணத்தில் அரங்கேறியது. நாடகத்தைப் பார்த்த மாடர்ன் தியேட்டர் அதிபர் சுந்தரத்திற்கு, அது பிடித்துப் போனதால், “மந்திரிகுமாரி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு, ‘மணமகள்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி படிப்படியாக, பல நெருக்கடிகளுக்கு இடையே எனது கலைத் துறை வளர்ச்சி நிகழ்ந்தது. இதுவரை 75-க்கு மேற்பட்ட படங்கள் வெற்றிக்கொடி பிடித்தாலும், நான் திரையுலகில் அல்லது கலையுலகில் உச்சகட்டத்தை அடைந்து விட்டதாகக் கருதவில்லை.

அப்படிக் கருதாததால்தான், எவ்வித ஆணவமும், அகம்பாவமும், என்னை அணுகாமல் அடக்க ஒடுக்கமாக, இத்துறையில் இதுவரை நடமாடிக் கொண்டிருக்கிறேன்; இன்னமும் எழுதுகிறேன். அந்த எழுத்து மூலம், வரும் ஊதியத்தை நலிந்தோர்க்கும், நல்ல காரியங்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறேன். கலைத்துறை வளர்ச்சியின் போது, நான் கற்றுக் கொண்ட அடக்க ஒடுக்கம் என் உணர்வோடு கலந்து விட்டதால், என்னை ஆட்கொண்ட கலைத்துறையும், நான் ஒன்றிக் கலந்து விட்ட அரசியல் துறையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு, என் வளர்ச்சிக்கு வலிமை வழங்கியுள்ளன.

உசுப்பேத்துவார்கள்… உறவாடிக் கெடுப்பார்கள்!

கலைத்துறை வாழ்வுக்கும், அரசியல் வாழ்வுக்கும் இடையே நீங்கள் கண்ட அல்லது காணுகின்ற வேறுபாடுகள் என்ன? அதிலே வெற்றி காண்பதற்கு உங்கள் அறிவுரை என்ன?

என்னைப் பொறுத்தவரை, இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க, ஒற்றுமை, வேற்றுமைகளை விளக்க விரும்பவில்லை.

ஆனால், எந்த ஒரு துறையானாலும், அந்த துறையில் ஒருவர் முன்னுக்கு வந்துவிட்டால், அவரைச் சுற்றி நான்கைந்து பேர் கூடுவர். அவர்கள் நல்லவர்களாகவும் இருப்பர்; நம்மை உசுப்பிவிட்டு உறவாடிக் கெடுப்பவர்களாகவும் இருப்பர். அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்திரனே, சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து, உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் உங்களை கீழே தூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பர்.

இதை மனதில்கொண்டு, அவர்கள் காதருகே பேசும்போதெல்லாம், நீங்கள் செவிடர்களாகி விட வேண்டும்; மற்றவர்களைப் பற்றி அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம், நீங்கள் ஊமைகளாகிவிட வேண்டும்.

இப்படி ஒரு விரதத்தைக் கடைபிடிப்பார்களானால், கலை உலகிலும், அரசியல் வட்டாரத்திலும், பொதுவாழ்வில் உயர்ந்தோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும்.

இல்லையேல், எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல், தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும், கோபுரக் கலசத்தின் நிலைதான் ஏற்படும்…”

இவ்வாறு அந்த அறிக்கையில் எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சரத் பொன்சேகா கைது.. போலீசாரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்!
சரத் பொன்சேகா கைது.. போலீசாரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்!

கொழும்பு: இலங்கையின் ராணுவத்துக்கெதிராக செயல்பட்டமை, மகிந்த ராஜபக்சேவைக் கொல்ல முயற்சி, ராணுவப் புரட்சி முயற்சி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.

கைது செய்யப்பட்ட அவரை ராணுவ போலீசார் தரதரவென இழுத்துச் சென்றதாகவும், பின்னர் ரகசியமான ராணுவ விசாரணை முகாமில் வைத்து விசாரித்து வருவதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்துக்கு வெற்றியைத் தேடித் தந்ததாக கூறப்படுபவர் சரத் பொன்சேகா.

ஆனால் இந்த வெற்றி தங்களால்தான் கிடைத்தது என்று கூறிவருகின்றனர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள்.

இந்த கருத்து மோதலின் விளைவாக ராணுவத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டார் சரத் பொன்சேகா. பின்னர் இலங்கை ராணுவத்திலிருந்து தனது பொறுப்புகளை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட அதிபர் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்து மகிந்த ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டார் பொன்சேகா. தேர்தலில் இவரே வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து அவர் ராணுவப் புரட்சியில் ஈடுபடக் கூடும் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கையோடு பொன்சேகா மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் கைதாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அன்றே பொன்சேகா கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது அலுவலகம் சோதனைக்குள்ளானது.

ஆனாலும் அவரைக் கைது செய்ய தமது அரசு முயற்சிக்கவில்லை என மகிந்த ராஜபக்சேவும் அவரது சகோதரர்களும் தொடர்ந்து கூறிவந்தனர்.

இந்த நிலையில், தமது உயிருக்கு இலங்கையில் ஆபத்து இருப்பதாகவும், நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடொன்றில் தஞ்சமடைய முயற்சிப்பதாகவும் பொன்சேகா கூறினார்.

அப்போதும், அவரைக் கைது செய்யப்போவதில்லை என்றே ராஜபக்சே பிரதர்ஸ் தெரிவித்து வந்தனர்.

நேற்றே பொன்சேகா கைதாவார் என்று கூறப்பட்டது. ஆனால் கைதாகவில்லை. இதனால், திங்களன்று காலை பத்திரிகையாளர்களிடம், “இலங்கை அரசு என்னைக் கைது செய்து பார்க்கட்டும்… அவர்கள் செய்த போர்க்குற்றங்களுக்கு ஆதாரமான அனைத்தையும் உலகின் முன் வைக்கத் தயாராக இருக்கிறேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். இதுவரை என்னைக் கைது செய்யவில்லை. அப்படியானால் அரசு சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றுதானே அர்த்தம்…” என்றார்.

உடனே, பொன்சேகாவை கைது செய்ய மாட்டோம் என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே மீண்டும் தெரிவித்தார்.

இப்படிச் சொன்ன சில மணி நேரங்களில் இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டார் பொன்சேகா. ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து  திங்களன்று இரவு 9.30 மணிக்கு இந்தக் கைது நடந்தது.

தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்…

இந்தக் கைதின் போது பொன்சேகா பலவந்தப்படுத்தப்பட்டதாகவும், கைதுக்கு ஒத்துழைப்பு மறுத்தார் என்று கூறி தரதரவென அவரது அலுவலகத்திலிருந்து ராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்தாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.

அவரது மக்கள் தொடர்பு அலுவலர் சேனக டி சில்வாவையும் கைது செய்துள்ளனர். இருவரும் ரகசிய ராணுவ முகாமில் வைத்து ராணுவ போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையின் முக்கியப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான காரணம்…

இந்தக் கைதுக்கு உண்மையான காரணம், ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச சமூகம் முன் வீடியோ ஆதாரங்களுடன் சாட்சி சொல்ல பொன்சேகா தயாராக இருந்ததுதான் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவுக்காக தமிழர்களால் நடத்தப்படும் சர்வதேச திரைவிழா!
நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் முதல் திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழா கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துவங்கியது. நாளை வரை நடக்கிறது. உலகிலேயே முதல் முறையாக தமிழர்களால், தமிழ்ப் படங்களுக்கென்று நடத்தப்படும் திரைப்பட விழா இதுவே. கவிஞர் வசீகரன் சிவலிங்கத்தின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நடத்தும் இந்த திரைப்பட விழாவில் சுப்பிரமணியபுரம், நாடோடிகள், பூ, பேராண்மை, நந்தலாலா, யோகி உள்ளிட்ட 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சுப்பிரமணியபுரம் படத்தின் ஹீரோவும் இயக்குநருமான சசிகுமார், நாடோடிகள் இயக்குநர் சமுத்திரக்கனி, பேராண்மை இயக்குநர் எஸ் பி ஜனநாதன் மற்றும் நந்தலாலா இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நார்வே சென்றுள்ளனர்.

அவர்களை வசீகரன் நேரில் சென்று வரவேற்று விழா அரங்குக்கு அழைத்துச் சென்றார்.

ஏராளமான தமிழ் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

இந்த விழா பற்றி இயக்குநர் சசிகுமார் கூறுகையில், “எனக்கு புதிய படத்தின் ஷூட்டிங் இருந்ததால் இந்த விழாவுக்கு போக முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தமிழர்களுக்காக தமிழர்களால் நடத்தப்படும் முழு தமிழ் திரைப்பட விழா இது என்பதைக் கேட்டதும், நான் வந்துவிட்டேன். இதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சுப்பிரமணியபுரம் மற்ற படவிழாக்களில் பங்கேற்றதற்கும், இங்கே பங்கேற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்குதான் முழுமையான நிறைவு கிடைத்துள்ளது” என்றார்.

இயக்குநர் சமுத்திரக் கனி கூறுகையில், “நார்வேயை நான் வரைபடத்தில் பார்த்தோடு சரி. இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். நமது சொந்தங்களைப் பார்க்க வந்திருக்கும் மகிழ்ச்சி எனக்கு. இந்த நாட்டில் வசிக்கும் நம்ம சொந்தங்களைப் பார்த்து, அவர்கள் மத்தியில் எங்கள் படைப்புகளைப் பற்றி விவாதிக்க இத்தனைப் பெரிய வாய்ப்பை வழங்கிய என் நண்பன் வசீகரனுக்கு நன்றிகள்” என்றார்.

நார்வேயில் சசிகுமார், சமுத்திரக்கனி…  வீடியோ

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/DYnx04oEpXg&hl=en_US&fs=1&color1=0x006699&color2=0x54abd6" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/DYnx04oEpXg&hl=en_US&fs=1&color1=0x006699&color2=0x54abd6" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

ரஜினி, அஜீத் ஆவேசப்பட்டது ஏன்?
ரஜினி, அஜீத் ஆவேசப்பட்டது ஏன்?

திட்டமிட்டது ஒன்றாகவும் நடந்தது ஒன்றாகவுமாக மாறியிருக்கிறது முதல்வருக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சி.

முதல்வரை ஒரு அரசராக அமர வைத்து, அவரது தர்பாரில் துதி பாடிகளாக நடிகர் – நடிகைகள் நின்று, நடித்து, நடனமாடி, பாட்டுப்பாடி மகிழ்வித்து புதிய கோரிக்கைகளையும் சலுகைகளையும் முன்வைத்து கேட்டுப் பெறலாம் என்ற ஆசையோடு இருந்தவர்களுக்கு நேற்றைய நிகழ்வுகள் பெரும் எரிச்சலாக மாறியுள்ளன.

இந்த நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் அஜீத்தாக இருந்தாலும், அதனைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டவர்கள் விழாக் குழுவினரும் இன்றைய ஆட்சியாளர்களும்தான் என்கிறார்கள் திரையுலகினர்.

பொதுவாக தனிப்பட்ட விழாக்களாக இருந்தால் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர் நடிகைகளுக்கு பணம் தரப்படுவதுண்டு. ஆனால் முக்கிய விருந்தினர்களாக வரும் ரஜினி, அஜீத், விஜய் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. இவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து போவதோடு சரி. அதனால் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியா, நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படுகிறதா என்று பார்ப்பதோடு சரி.

நடிகைகள் அனைவருக்குமே கணிசமாக பணம் தந்தாக வேண்டும். முன்னணி கவர்ச்சி நடிகைக்கு ரூ 7 லட்சம் வரை தரவேண்டும், ஒரு நிகழ்ச்சிக்கு வர. சும்மா தலைகாட்டிவிட்டுப் போக வேண்டும் என்றால்கூட லட்சத்தில்தான் சம்பளம் (சில நடிகைகளின் சம்பள விவரம் தெரியும் என்றாலும், அவற்றை வெளியிடுவது நேர்மையல்ல. காரணம் என்னை நம்பி அந்த விவரங்களைச் சொல்கிறார்கள்…)

ஆனால் முதல்வரைப் பாராட்டுகிற விழாவாக இருந்தால் அதில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் செய்யும் கலைஞர்களுக்கு நயா பைசா கிடையாது. நல்ல விருந்தோம்பல் கூட இல்லையாம். இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு கட்டாயம் அனைத்துக் கலைஞர்கள் வந்தாக வேண்டும் என்று கூறுவதோடு நில்லாமல், மேலிடத்தில் இருப்பவர்களை வைத்து பிரஷர் கொடுப்பதும் நடக்கிறது. முதல்வர் அலுவலக அதிகாரிகளையும் கூட இதில் பயன்படுத்துகிறார்கள் (இது முதல்வருக்கு தெரிந்தே நடக்கிறதா என்று நமக்குத் தெரியாது!).

‘முதல்வரின் செயலாளர்கிட்டேயிருந்து பெரிய பிரஷர்ப்பா… நீ மட்டும் வரலேன்னா அப்புறம் விளைவுகளுக்கு நாங்க பொறுப்பேத்துக்க முடியாது’ என தயாரிப்பாளர்கள் சங்க, நடிகர்கள் சங்க, பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தரப்பிலிருந்து ஒவ்வொரு நிகழ்வுக்குமே சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நிகழ்ச்சி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே பிரஸ் மீட் வைப்பது, தங்களுக்கு வேண்டப்பட்ட நிருபரை விட்டு ரஜினி, கமலெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வருவாங்களா என்று கேட்க வைப்பது. உடனே சில சொத்தை ஆசாமிகள், ‘அவர்கள் வரலேன்னா அவ்வளவுதான்’ என்று வாய்சவடால் அடிப்பது… அந்த பப்ளிசிட்டியில் குளிர்காய்ந்து நினைப்பதைச் சாதிப்பது என்ற மலிவான டெக்னிக்கைத்தான் இன்றுவரை பயன்படுத்தி வருகிறார்கள், இந்த பஞ்சாயத்துப் பார்ட்டிகள்.

இதிலெல்லாம் முதல்வருக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்வி எழலாம். உண்மையில், நிகழ்ச்சி நிரல் தயாராவதே அவர் முன்னிலையில்தான என்கிறார்கள் முதல்வரின் ‘உள்வட்டத்தில்’ இருப்போர். இன்னார் இங்கே அமரவேண்டும், இந்த வரிசைப்படி பேச வேண்டும் என்ற ‘புரோட்டாக்கால்’ எல்லாம் அவரது அறிவுக்கெட்டியே நடக்கிறது.

குறிப்பாக நடிகைகள் விஷயத்தில் விழாக் குழுவினர் செய்யும் கெடுபிடிகள் கொஞ்சமல்ல. ஆடுவதே ஓசி டான்ஸ். இதில் இப்படி வறுத்தெடுத்தால் எப்படி என்ற சலிப்பு இல்லாமல் முதல்வருக்கு நடக்கும் விழாக்களுக்கு வரும் நடிகைகள் அநேகமாக யாரும் இல்லை என்பதே உண்மை.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர்கள் லட்சங்களில் கொட்டித் தருகிறார்கள். டிவியில் ஒளிபரப்ப கணிசமாக பணம் தருகிறார்கள். ஆனால் அப்படி திரட்டப்பட்டும் பெரும் பணம் என்ன ஆகிறது என்ற குமுறல் அனைவர் மனதிலுமே உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், திரையுலக அமைப்பினர் இதற்கான விளக்கத்தையோ, வரவு செலவு கணக்கையோ ஒரு போதும் காட்டுவதில்லை.

‘நம்ம வேலை நடிப்பது. நாம செய்யறதும் ஒரு வேலைதான். விருப்பம், நேரம் இருந்தா வர்றேன். இல்லன்னா வற்புறுத்தாதீங்க’ என்பதுதான் அஜீத் வழக்கமாக சொல்லும் பதில்.

ஆனால் முதல்வருக்காக நடக்கும் விழாக்களில் அந்த வார்த்தைகளை அமுக்கிவிடுகின்றன, விழாக் குழுவினரின் பயமுறுத்தல்கள். அதன் விளைவுதான் நேற்றைய விழாவில் அஜீத் குமுறியது.

கிட்டத்தட்ட இதே மனநிலையில் இருப்பவர்தான் ரஜினி. அவரை வற்புறுத்திக் கூப்பிட்டால் வர விருப்பப்பட மாட்டார். அவருக்கே வரத் தோன்றினால் வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்து உடனிருப்பவர்களையெல்லாம் சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.

காரணம் யாரிடமிருந்தும் அவர் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை… தனக்கு தோன்றும் நேரத்தில் விருப்பப்பட்ட விதத்தில் மக்களுக்கு நன்மைகளைச் செய்வது அவர் பாணி. முன்பே சொன்னது போல ஒரு நிகழ்ச்சியின் நோக்கம், அதை நடத்துபவர்களின் நேர்மை இரண்டையும்தான் அவர் முக்கியமாகப் பார்ப்பார். எனவே அஜீத் தன் மனதில் பட்டதை துணிச்சலாக வெளிப்படுத்தியதற்கு எழுந்து நின்று கைதட்டி அவர் பாராட்டியதில் ஆச்சர்யமில்லை!

எவனுக்கும் பயப்பட மாட்டேன்… ஏன்?

முன்பு நடிகர் சங்கத்தின் நாடக விழாவில் ரஜினி நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றார்கள். அவர் பார்க்கலாம் என்றார். ஆனால் நடிக்கவில்லை. ஆனால் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு வந்து முழுக்க முழுக்க சக நடிகர்களோடு இருந்து சிறப்பித்துக் கொடுத்தார்.

அங்கும் அவர் ஒரு விஷயம் சொன்னார்: ‘ஸீ.. நிகழ்ச்சி நடத்தி வருமானம் பார்க்கறது உங்க விருப்பம். அதில் கலந்துகிட்டுத்தான் ஆகணும்னு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தானா விருப்பப்பட்டு செய்யறது அது!’ என்றார். ரஜினியின் அந்த மனநிலையையே இந்த மேடையில் பிரதிபலித்திருக்கிறார் அஜீத்.

ரஜினி இந்த நிகழ்ச்சியில் கொதித்ததற்கு முக்கிய காரணம், அரசு ஒதுக்கிய நிலத்தை பங்குபோடுவதில், ஒதுக்குவதில் திரையுலக அமைப்புகளின் நிர்வாகிகள் காட்டிவரும் சுய நலம் மற்றும் இப்போதே அதற்கு சிபாரிசு பிடிப்பதில் மும்முரம் காட்டும் சில பெரிய நடிகர்கள்தான்.

இந்த நிலம் ஒதுக்குவது குடும்பத்துக்கு ஒன்று என்ற அளவில் இல்லாமல், ஃபெப்ஸி மற்றும் திரையுலக சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்குமே என்ற நிலை உள்ளது.

இன்றைக்கு பெரும்பாலான திரைக் கலைஞர்களின் குடும்பங்கள் முழுக்க முழுக்க திரைத் தொழிலில்தான் ஈடுபட்டுள்ளன. வாரிசுகள் அனைவருமே அதே துறையில்தான் உள்ளனர். குடும்பத்தின் தலைவன் நடிகர், அவரது வாரிசுகள் அனைவரும் நடிகர் அல்லது தொழில் நுட்பக் கலைஞர்கள் என்ற நிலைதான் உள்ளது. இவர்கள் அனைவருமே இப்போது வீடு பெறுவதில் மும்முரம் காட்டுகிறார்கள். ஒரு குடும்பத்துக்கு குறைந்தது நான்கைந்து வீடுகள் என்ற நிலை.

உதாரணத்துக்கு விஜயகுமார் குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்… அவர்கள் வீட்டுக்கே 10 வீடுகள் தரவேண்டி வரும். இவர்கள் யாரும் ஏழைகள் அல்ல.. ஒரு நாளைக்கு 300 ரூபாய் பெறும் துணை நடிகர்களும் அல்ல.

சிவகுமார் வீட்டுக்கு 4 வீடுகள் தரவேண்டி வரும். இவர்கள் யாரும் அடிமட்டக் கலைஞர்கள் அல்ல. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர் விஜய் என இந்தப்பட்டியல் பெரியது. இவர்கள் அனைவருமே நன்கு வசதி படைத்தவர்கள்தான். இவர்களுக்கு எதற்கு பையனூரில் வீடு? அப்படியே வேண்டுமென்றாலும் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாமே… இவர்களைப் போன்ற வசதிபடைத்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், ஓசியில் கிடைக்கிறதே என்பதற்காக இந்த வீடுகளுக்காக கை நீட்டிவிடக் கூடாது என்பதே ரஜினியின் அந்த ஆவேசப் பேச்சுக்குக் காரணம். தனக்கு வேண்டப்பட்ட சக கலைஞர்களே கூட இந்த வேலையில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் ரஜினி, ‘யார் மனதையும் புண்படுத்த இப்படிச் சொல்லவில்லை’ என்று முன்கூட்டியே சொல்லிவிட்டார்.

இந்த வீடுகள் மற்றும் வசதிகள், திரையுலகில் பல ஆண்டுகளாகக் கஷ்ட ஜீவனத்தில் தவிக்கும் துணை நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், லைட் மேன்கள் போன்ற அடித்தட்டு வர்க்கத்தினருக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே ரஜினியின் இந்தப் பேச்சின் அடிநாதம். இதற்காக இந்தக் கலைஞர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

ஏன் இந்த நிலை வருகிறது… திரும்ப திரும்ப திரைக் கலைஞர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைப்பது, அதற்கு அவர் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வைப்பதால்தானே… இது மக்களுக்கும் கடும் எரிச்சலை மூட்டுகிறது. இது புரிந்ததால்தான், ‘எதுக்கெடுத்தாலும் முதல்வரைப் போய் தொந்தரவு செய்யாமல், முடிந்தவரை நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளலாம்’ என்றார் ரஜினி நாசூக்காய்.

ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாகத் திருந்திவிடும் திரையுலகம் என்றும் சொல்வதற்கில்லை!

-வினோ

என்வழி

நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவம்
நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவ தொகுப்பு

பள்ளி நாட்களில்… ஏன் கல்லூரிக்குச் செல்லத் துவங்கியபோதும் கூட, ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் சேர்ந்து விட வேண்டும் என்பது என் தீராத ஆசையாக இருந்தது. காரணம் அப்போதெல்லாம், இசை கேட்க ஒரே வழி வானொலிதான். இசை என்றால்.. திரையிசை.. அதிலும் இளையராஜா – எம்எஸ்வி பாடல்கள்.

வானொலியை விட்டால் கல்யாணங்கள், திருவிழாக்களில் ரிக்கார்டு போடுவார்களே அதை சாப்பாடு தூக்கமின்றி கேட்டுக் கொண்டே இருப்பேன். அதிகபட்சம் இரண்டு நாள்தான் இந்த ரிக்கார்டு போடுவார்கள்… அப்புறம் புதிய பாடல்கள் கேட்க முடியாதே.. அதனால் உண்மையிலேயே சாப்பாட்டை மறந்து பாட்டுப் பித்துப் பிடித்துப் போய் திருவிழாக்களில்  அலைந்திருக்கிறோம். அட, பாட்டு கேட்பதற்காகவே ஒரு சவுண்ட் சர்வீஸில் வேலைக்குக் கூட சேர்ந்து கொஞ்சநாள் இருந்திருக்கிறேன்!

வானொலியில் ஞாயிற்றுக்கிழமையானால் நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி போடுவார்கள். அதில் விரும்பிக் கேட்டவர்களின் பெயர்களைப் படித்துவிட்டு, அந்தப் பாடலை ஒளிபரப்புவார்கள் பாருங்கள்… அந்த வேலையில் சேர மனதில் ஒரு வெறியே இருந்தது!

ஆனால் டிடி மெட்ரோ என்ற சேனல் வந்தபிறகு, அதிலும் காம்பியரிங் என்ற பெயரில் கண்டபடி பேச ஆரம்பித்த பிறகு அந்த ஆசை போயே போச். பாட்டு கேட்கவும் நிறைய சாதனங்கள் மலிந்துவிட்டன.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. நண்பர் சரவணன் சில பாடல்களைக் குறிப்பிட்டு, அவற்றைத் தொகுத்து பதிவாக வெளியிட விரும்பினார். அவர் விரும்பிய பாடல்களை யு ட்யூபில் தேடி இந்தப் பதிவைத் தயார் செய்தபோது உண்மையிலேயே, அந்த பழைய நாட்களின் ‘வெளியில்’ கொஞ்சநேரம்  மனம் அலைந்துவிட்டுத் திரும்பியது…!

அதிலும் அவர் குறிப்பிட்டிருந்த பாடல்கள்… மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்ட ராஜாவின் தேவ கானங்கள்… அவற்றை தொகுப்பதே தனி இன்பம்தான்.

இனி சரவணன் தன் ரசனையைப் பகிர்ந்து கொள்கிறார்…

-வினோ

இசை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

அப்படி என் மனம் லயித்த திரைப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், ‘நினைவுகளை மீட்டும் இசை’ மூலம்…

ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..

என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.

இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/8rMhF74QPv8&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/8rMhF74QPv8&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு:  இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். இந்தப் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).

பாடலை எழுதியவர்: வைரமுத்து

மெல்லப் பேசுங்கள் (1983) என்று ஒரு படம். இயக்குனர்கள்: பாரதி வாசு (சந்தானபாரதி – P.வாசு )

நாயகன்: வசந்த் (பின்னர் டிவி சீரியல்களில் பிரபலமாகி, சமீபத்தில் இறந்துவிட்டார்) நாயகி: பானுப்ரியா (அறிமுகம்)

இந்த படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற பாடல் சுகமானது.

இந்த பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும், மாணிக்கவாசகரின் சிவபெருமான திருப்பள்ளியெழுச்சி வரிகளும் ஒலிக்கும்.. நமக்கோ உடல் சிலிர்க்கும்!

‘கூவின பூங்குயில், கூவின கோழி…

குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..

யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’

உமா ரமணன் குரலில் இந்த வரிகள் அப்படியே ராஜாவின் இசையில் சங்கமிக்கும் அற்புதத்தை அவரைத் தவிர யாரும் நிகழ்த்த முடியாது.(பாடியது தீபன் சக்ரவர்த்தி- உமா ரமணன்) அதைத் தொடர்ந்து ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்று பல்லவி வரும்.

அடடா.. அது ஒரு சுகமான அனுபவம். அந்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் சிக்காதது. கேட்கும் யாரையும் தொற்றிக் கொள்ளும்.. பாடலுக்கு சொந்தக்காரர்: எம்ஜி வல்லபன்

கேட்காதவர்கள் கேட்டுப் பெறுங்கள் இந்த உற்சாகத்தை!

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/iCdkj4jlygA&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/iCdkj4jlygA&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

படம்: இங்கேயும் ஒரு கங்கை (1984)

தயாரிப்பு: கலைமணி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: முரளி ,சந்திரசேகர்

நாயகி:  தாரா (நாயகன் கமல் தங்கை )

இசை:  இசை அரசர் இளையராஜா

அப்போதெல்லாம் மாசத்துக்கு ஒரு மணிவண்ணன் படம் வரும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இந்த படத்தில் நான்கு பாடல்கள்… இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு நன்கு அறிமுகம்.

1. தெக்குத் தெரு மச்சானே… (மிக இனிய டூயட்)

2. சோலை புஷ்பங்களே…

இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர்கள்: கங்கை அமரன், P.சுசீலா

‘சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்…’ பாடல் கேட்கும் போதே ஒரு மெல்லிய சோகம் மனதை நிழலாய் ஆக்கிரமிக்கும் உணர்வு. பாடல் முடிந்த பின்னும் இனம்புரியாத பாரம் மனதில்… வைரமுத்துவின் வரிகள் இவை.

இந்த படத்தின் பாடல்கள் ஊமை வெயில் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து இசை தட்டுக்களாக வெளிவந்து அந்த காலகட்டத்தில் செம ஹிட்டானவை.  ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.

அதற்குபின் மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் அந்தப் பாடல்களை இளையராஜா பயன்படுத்தியதாகப் படித்திருக்கிறேன் (அன்றைய நாட்களில் ராஜா பயங்கர பிஸி. ஒரு வருடத்துக்கு 50 படங்களுக்கு இசையமைத்த நேரம். அதனால் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்டுகள்!)

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/oGDwG51_2uw&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/oGDwG51_2uw&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

எண்பதுகளின் ஆரம்ப வருடங்கள் அவை… ‘இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராவின் இசை மழையில்’ என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு ராஜாதான் இசை. பாடல்களில் இசையை அமுதமாய் பொழிந்திருப்பார் இசைஞானி. படமெங்கும் அந்த அமுதமழை தொடரும்…

அப்படி ஒரு படம்தான் இளமைக் காலங்கள்.

இந்தப் படத்தில்   ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் பாடல் நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் அற்புதமான பாடல்.

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.

ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/f6S0e3spswQ&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/f6S0e3spswQ&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..

என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையொலியை அந்த இடத்தில் தந்திருப்பார் ராஜா. இனி இப்படியொரு பாட்டை யாராவது தர முடியுமா என்றுகூட தெரியவில்லை.

படம்: இளமை காலங்கள் (1984)

தயாரிப்பு: கோவைத்தம்பி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்:  மோகன், நாயகி:  சசிகலா

பாடல்: வைரமுத்து

இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

பாட வந்ததோர் கானம்..

ஈரமான ரோசாவே…

ராகவனே ரமணா ரகுநாதா…

படிப்புலே ஹீரோ …

இந்தப் பதிவின் கடைசி பாடல்…

இளையராஜாவை மட்டுமே நம்பி ஸ்ரீதர் எடுத்த தென்றலே என்னைத் தொடு படத்தில் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம்.

அதிலும் தென்றல் வந்து என்னை தொடும்… பாடல் இனிமையின் சிகரம்.

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="425" height="344" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/R8q9EsVrQDA&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/R8q9EsVrQDA&hl=en_US&fs=1&color1=0x234900&color2=0x4e9e00" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ராஜாவின் இசை தென்றலாய் வருட ஆரம்பிக்கும்… தொடர்ந்து ஜேசுதாஸ் – ஜானகி குரல்கள் நம்மை இன்னோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது… என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வார்களே… அந்த இனிமையை இந்தப் பாடலில் அனுபவிக்கலாம்.

வாலி எழுதிய வசீகர பாடல் இது!

இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட பிறகு மனதுக்குள் ஒரு நிறைவு வரும் பாருங்கள்.. அது எத்தனை கோடிகள் செலவழித்தாலும் கிடைக்காதது… நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றிகள். வேறென்ன சொல்ல முடியும்!

-ஆர் வி சரவணன்

மகிந்தவுக்கு உலக சமாதானத்துக்கான டாக்டர் பட்டமாம்!
மகிந்தவுக்கு உலக சமாதானத்துக்கான டாக்டர் பட்டமாம்!

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக் கழகம்.

இந்தப் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்தன. இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு 100 நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மாலையில் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சேவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதை முகம்கொள்ளாத சிரிப்புடன் பெற்றுக் கொண்டார் ராஜபக்சே.

உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பெற்ற வெற்றிக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டதாக காரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் போடுவது எப்படி…? எடிட்டர்களுக்கு ஒரு ஐடியா!!
செய்திகள் போடுவது எப்படி…? எடிட்டர்களுக்கு ஒரு ஐடியா!!

-தினமணி

‘இழிவுபடுத்தியவனுக்கு மன்னிப்பு.. எதிர்த்துப் போராடியவனுக்கு சிறையா?’ – சீமான்
ஜெயராமுக்கு மன்னிப்பு.. எங்களுக்கு சிறையா? – சீமான் கொதிப்பு

சென்னை: வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார் ஜெயராம். அவருக்கு மன்னிப்பு, அதை எதிர்த்துப் போராடிய எங்களுக்கு சிறையா? என்று ஆவேசமாக கேட்டுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

சீமான் மீது இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வன்முறையைத் தூண்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கை:

மலையாள நடிகர் ஜெயராம் வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார். இது ஒட்டு மொத்த தமிழினத்தையும் இழிவு படுத்தும் செயலாகும்.

இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வெற்றியுடன் வெளி வருவார்கள்.

இந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக தமிழக அரசு  இன்று என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது என்னை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும்.

இந்த விஷயத்தில் வன்முறையைத் தூண்டியது நானா? மலையாள நடிகர் ஜெயராமா? என்பது உலகிற்குத் தெரியும்.

உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தில் மிகவும் இழிவாக ஒரு கருத்தைச் சொல்லி விட்டு அதன் பின்பு உலகம்

முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடனும் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடனும் நடிகர் ஜெயராம் மன்னிப்புக் கோரி உள்ளார்.

உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கா விட்டால் இந்நேரம் அவர் கருத்து வரலாற்றில் அப்படியே பதிவாகியிருக்கும். தமிழர்களைப் பற்றிய கருத்து வரலாற்றில் கேட்பாரற்று போயிருக்கும். நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டமே அவர் மன்னிப்பு கேட்டதற்கு காரணம். அவரது பேச்சே அவருக்கு எதிரான இப்படிப்பட்ட செயல்பாட்டிற்குக் காரணம்.

ஆகவே வன்முறையை தூண்டியது நானல்ல. ஜெயராம் தான். வன்முறையை நான் எப்போதுமே விரும்பியது இல்லை. அவர் மீது தான் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும். அவரது காலம் கடந்த மன்னிப்பு பிரச்சினைக்குத் தீர்வாகாது. அவருக்கு மன்னிப்பும் நாம் இயக்கத்தவர் மீது சிறை என்பதும் மோசடியான ஒன்று.

மன்னிப்பு தான் பிரச்சினைக்குத் தீர்வென்றால் கொடும் குற்றம் இழைக்கும் ஏனைய குற்றவாளிகள் விஷயத்திலும் தமிழக அரசு இதனைப்பரீசிலிக்குமா? மற்றபடி என்மீது போடப்பட்ட வழக்கு கண்டு நான் பயப்படவில்லை.

இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ளது. அதனைக் கண்டு அச்சப்பட மாட்டேன். எதிர்த்து வழக்காடி வெளி வருவேன்” என்று கூறியுள்ளார் சீமான்.

இதுகுறித்து சீமானிடம் இன்று பேசினோம்.

அவர் கூறுகையில், “நான் வன்முறையைத் தூண்டவில்லை. இயக்கத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றத்தில் பேசிக் கொள்ளலாம். நான் இங்கே ஒரு விஷயத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

திமுக உள்ளிட்ட தமிழகத்து அரசியல் கட்சிகளின் தோழர்கள் வன்முறையில் ஈடுபடும்போது, அவர்கள் செய்த செயலுக்காக அந்தந்த கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா… இதைக் கவனிக்க வேண்டும். என்னை ஒடுக்குவதுதான் இவர்கள் நோக்கம்.

அதற்காக நான் வன்முறைக்கு வக்காலத்து வாங்கவில்லை. அது தவறான வழிமுறை என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் ஜெயராம் வீடு தாக்குதலுக்குள்ளானதன் காரணம், வன்முறையை விட மகா மோசமான அவரது பேச்சு. அதைக் கண்டிக்க வக்கில்லை… அப்படியெனில் எவன் வேண்டுமானாலும் தமிழ் பெண்களைப் பற்றி, நம் அம்மா, அக்கா, தங்கைகளைப் பற்றி என்னவேண்டுமானும் சொல்லட்டும்.. நமக்கென்ன, சினிமாதானே என்று சிரித்துக் கொண்டே போகலாமா?

வழக்கு வரட்டும்… இந்த சீமான் சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டான். எங்கள் இயக்கத்தை வன்முறை இயக்கம் போல சித்தரிக்க நடத்தும் சூழ்ச்சியின் இன்னொரு கட்டம். இதையும் வெற்றிகொள்வேன்…” என்றார் உணர்ச்சிகரமாக.

வழக்கு வாபஸ்…

இதற்கிடையே ஜெயராம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுவிட்டதாக மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அறிவித்துள்ளன.

சீமான் மீது வழக்கு கூடாது!- வைகோ

சீமான் மீதான வழக்கு தவறானது… அதனை உடனே வாபஸ் பெற வேண்டும் தமிழக அரசு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“சினிமா நடிகர் ஜெயராம் ஒரு பேட்டியில், தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் கூறியது கண்டனத்துக்கு உரியதாகும். அதிலும், வீட்டு வேலை பார்க்கும் தமிழ் பெண்களை ஏளனம் செய்து அவமதிக்கும் விதத்தில் வார்த்தைகளைக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இருப்பினும், தன் தவறை உணர்ந்து பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் பிரச்சினையை இத்துடன் விட்டு விடலாம்.

நடிகர் ஜெயராம் கூறிய வார்த்தைகளால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளாமல், கைதானவர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். சீமான் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அரசியல் நுழைந்தால், சினிமா ஆமை புகுந்த வீடாகிவிடும்..!- கருணாநிதி
‘கலைஞர் நகரம் என்கிறார்களா இல்லை கலைஞரே ‘நகரும்’ என்கிறார்களா!’ – கருணாநிதியின் ‘உள்குத்து’

தமிழ் சினிமா எனும் குடும்பத்துக்குள் மிகப் பெரிய கருத்துவேறுபாடு தோன்றிவிட்டதைப் போல தெரிகிறது. சினிமாவில் அரசியலைப் புகுத்த வேண்டாம், என முதல்வர் கருணாநிதி கவலையுடன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. அமிதாப் தலைமை தாங்க, ரஜினி, கமல் போன்ற முதல்நிலை நடிகர்கள் முன்னிலையில் இந்த விழா நடந்தது.

விழாவில் அஜீத் பேசிய சர்ச்சைக்குரிய ஆனால் துணிச்சலான பேச்சுக்குப் பிறகு, அவருக்கு பதிலளிக்கும் வகையிலேயே அனைவரது பேச்சும் அமைந்துவிட்டன. இதைக் கவனித்த கருணாநிதி, தனது பேச்சில் இதனைக் குறிப்பிட்டார்.

முதல்வர் கருணாநிதியின் பேச்சு:

இந்த இனிய விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து – வாழ்த்தியும் – சில நல்ல அறிவுரைகளை வாழ்த்தியவர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எடுத்துக் கூறியுள்ள இந்தியாவினுடைய தலைசிறந்த கலைஞர் அமிதாபச்சனுக்கு நான் முதற்கண் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அமிதாபச்சன் அவர்களுக்கு, அவருடைய பெற்றோர் முதலில் வைத்த பெயர் ‘இன்குலாப்’ என்பதுதான். இன்குலாப் என்றால் புரட்சி – ஜிந்தாபாத் என்று பல புரட்சிகரமான முழக்கங்களை ஒலிக்கக் கேட்டிருக்கிறோம் அல்லவா – அந்த ஜிந்தாபாத் என்ற வாழ்த்துக்குரியவராக முதலில் நம்முடைய அமிதாப் அவர்கள் இளமைப் பருவத்திலே விளங்கினார்கள்.

அதற்குப் பிறகு இங்கே நம்முடைய சூப்பர் ஸ்டார், ரஜினி காந்த் அவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல், பல்வேறு துன்ப துயரங்களுக்கெல்லாம் ஆட்பட்டு, அவைகளையெல்லாம் தனி ஒருவராக நின்று சமாளித்து தன்னை நோக்கி வீசிய எதிர்ப்புப் புயலைக் கடந்து இன்றையதினம் நம்மிடையே மகிழ்ச்சிகரமாக வீற்றிருப்பது மாத்திரமல்ல, நமக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்திருப்பது நாம் பெற்ற பெரும் வாய்ப்பாகும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அமிதாப் அவர்களுக்கும் நினைவிருக்குமென்று கருதுகிறேன். சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு – அவர் ஒரு முறை மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் – எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இல்லாவிட்டாலுங்கூட – அவர் என்னை நேரடியாகப் பார்த்ததில்லை, அவர் என்னை பார்த்ததில்லை என்ற நிலை இருந்தாலுங்கூட – இந்தியத் திருநாட்டிலே திரையுலகத்திற்கு ஒரு இழப்பு ஏற்பட்டு விடுமோ என மிகவும் வருந்தி, அவருக்கு நான் ஒரு நீண்ட தந்தி அனுப்பினேன். ‘நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும்’ என்று.

அவருக்கு வந்த ஆயிரக்கணக்கான தந்திகளில், இதை அவர் தேடிப் பார்க்க முடியாது – ஆனால் கலை உணர்வு அவருக்கு உள்ள தேசப் பற்று – அவர் நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்று, அவர் ஆற்றிய கடமைகள் – அவர் அளித்த கருத்துகள் – இவைகளின்பால் எனக்குள்ள பற்று, பாசம், மதிப்பு, மரியாதை என்றைக்குமே குறைந்ததில்லை.

அதனால் தான் நன்றி தெரிவிக்கின்ற இந்த விழாவில் – இந்த விழாவை ஏற்பாடு செய்த நண்பர்கள், திரையுலகத்தினர், குறிப்பாக இயக்குநர் ராமநாராயணன், குகநாதன் போன்றவர்கள் தெரிவித்த நன்றிகளுக்கெல்லாம் சிகரமாக அமிதாப் பச்சன் அவர்களை இங்கே அழைத்து வந்து, அவர் மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பது தான் – இங்கே அவர்கள் எனக்கு அளித்த பொற்கலசம், தங்க பூமி உருண்டை போன்ற பரிசுகளை யெல்லாம் விட உயர்ந்த பரிசாக நான் கருதுகிறேன்.

நான் நகராக இருப்பதா… நகர்வதா?

அமிதாப் அவர்களுடைய வருகை, பலருக்கு பல ஐயப்பாடுகளை யெல்லாம் உருவாக்கியிருக்கலாம். கருணாநிதிக்கு விழாவா? அதிலே அமிதாப் கலந்து கொள்கிறாரா? இது சிலருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கலாம் – சிலருக்கு ‘மருட்சி’யைத் தந்திருக்கலாம். மகிழ்ச்சிக்கும், மருட்சிக்கும் அதிக வேறுபாடு. எனவே நான் அது பற்றி விளக்க விரும்பவில்லை. நம்முடைய அமிதாப் அவர்கள் இங்கே உரையாற்றிய போது – தமிழ்நாட்டுத் திரைப்பட உலகம் எவ்வளவு கடமை உணர்ச்சியோடும், கட்டுப்பாட்டுத் தன்மையோடும் விளங்குகிறது என்பதைப் பாராட்டினார்கள்.

அந்தப் பாராட்டு நிலைக்க வேண்டும் – நீடிக்க வேண்டும் – தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்பதை மனதிலே வைத்துத் தான் – சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களும் – தம்பி சரத் குமார் அவர்களும் – கலைஞானி கமலஹாசன் அவர்களும் இங்கே அந்தக் கருத்தை வழி மொழிந்து பேசியிருக்கிறார்கள்.

என்னைப் புகழ்ந்த போது எனக்களித்த அழைப்பிதழிலும் சரி – அழைப்பிதழைக் கொண்டு வந்து கொடுத்த நண்பர்களும் சரி – நீங்கள் வழங்கிய அந்த இடத்திற்கு ‘கலைஞர் நகர்’ என்று பெயரிடப் போகிறோம் என்று சொன்னார்கள். கலைஞர் நகர் என்றும் பேரிடுகிறார்கள் – கலைஞரே, நகரும் என்றும் எனக்கு ஆணையிடுகிறார்கள் நான் நகர்வதா அல்லது நகராக இருப்பதா என்பது தமிழ்நாட்டு மக்களுடைய தீர்ப்பிலே இருக்கிறது.

ரூ.1800 கோடியில் வீடுகள்!

ஏறத்தாழ 90 ஏக்கரா நிலத்தை திரைப்படத் தொழிலாளர்கள், கலைஞர்கள், துணை நடிகர்கள், இயக்குநர்கள் – இவர்கள் எல்லாம் குடியிருப்பதற்கு – வீடு கட்டிக் கொள்வதற்கு வழங்க வேண்டுமென்ற வேண்டுகோள் உடனடியாக ஏற்கப்பட்டது. இதே மேடையிலே தான் இரண்டொரு மாதங்களுக்கு முன்பு அந்த உறுதியை நான் அளித்தேன்.

இப்போது அங்கே வீடுகள் கட்டப்படவிருக்கின்றன. அதற்கான அடித் தளம், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கின்றது. அது மாத்திரமல்ல, சென்னையைச் சுற்றியுள்ள, செங்கற்பட்டு மாவட்டத்தைச் சுற்றியுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த வசதியை செய்து கொடுத்தால் போதுமா? போதாது என்று நான் கருதிய காரணத்தால் தான் அண்மையிலே கவர்னர் உரையில், இந்த அரசாங்கத்தின் சார்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம்.

விரைவில் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், கிராமத்திலும், நகரத்திலும் குடிசைகளே இல்லாத நிலையை இந்த அரசு உருவாக்கப் போகிறது என்று அறிவித்திருக்கிறோம். மார்ச் 3-ந்தேதி, அதற்கான கால்கோள் விழா திருச்சி நகரத்திலே நடைபெறவிருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு 1800 கோடி ரூபாய்ச் செலவில், அரசாங்கத்தின் சார்பில் வீடுகள் கட்டி – ஏறத்தாழ 21 லட்சம் குடிசைகளை – நல்ல கட்டுமானத்தோடு கூடிய கல் வீடுகளாக கட்டித் தருகின்ற அரும்பணியை இந்த அரசு செய்யவிருக்கிறது. அதற்கு முன்னோடியாகவும், தூண்டுதலாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

அரசியலைப் புகுத்தவேண்டாம்!

90 ஏக்கரா நிலத்திற்கு இவ்வளவு பெரிய ஏற்பாடு – இவ்வளவு பெரிய நன்றியறிவிப்பு கூட்டம் – வடக்கேயிருந்து நமது அமிதாப் பச்சன் அவர்கள் வருகை தந்து வாழ்த்துகிறார்கள் என்றால், கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு 1800 கோடி ரூபாய்ச் செலவில் 6 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 21 லட்சம் வீடுகளைக் கட்ட – நாம் திட்டமிட்டிருக்கிறோமே, அதற்கு நன்றியறிவிப்பு நடத்த தமிழகத்திலே எங்கேயாவது இடம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தேன்.

அந்த இடம் மைதானமாக இல்லை, கடற்கரையாக இல்லை, நிலமாக இல்லை, அந்த இடம் உங்களுடைய இதயமாக இருக்குமென்ற நம்பிக்கையோடு – ஏழைகளின் இதயமாக அந்த இடம் இருக்குமென்ற அந்த நம்பிக்கையோடு தான் இந்த அரசு அந்தப் பணியிலே ஈடுபட்டிருக்கின்றது.

கலையுலகம் ஒரே குடும்பம்!

இங்கே எனக்கொன்று புரியவில்லை. இங்கே தம்பி சரத்குமாரும், தம்பி ராதாரவியும், குகநாதனும் பேசும்போது ஏதோ திரைப்படத் தொழிலாளர்களுக்கிடையே மன வருத்தங்கள், ஒற்றுமையின்மை இருப்பதாகவும் அதைப் போக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்கள். நாமெல்லாம் இங்கே ஒன்று சேர்ந்திருப்பது – அரசியல் ரீதியாக அல்ல.

நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்வது – கலைக் குடும்பம் என்ற அந்த வார்த்தையின் அடிப்படையிலே தான் இங்கே ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதிலே அரசியலை நுழைக்க நான் விரும்பவில்லை. அரசியல் தானாக நுழைந்தால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அரசியலை நுழைத்து இதை யாரும் கெடுத்து விடாதீர்கள். அரசியலை நுழைத்து மேலும் நன்மைகளைச் செய்ய வேண்டுமேயல்லாமல், அரசியல் நுழைந்தால், ஆமை புகுந்த வீடாக இந்தத் திரைப்படத் துறை அமைந்து விடக் கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறையாக இருக்கிறேன்.

ஆகவே அரசியலை நுழைக்க வேண்டாம். கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தர வேண்டாம். யாரையும் வலியுறுத்தி – வருகிறாயா, இல்லையா என்று கேட்கவும் வேண்டாம். வந்தவர்களை வாழ்த்துவோம் – அவர்களை வாழ்த்தச் சொல்லிக் கேட்போம். இதைத் தான் நான் மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ஏழையை சிரிக்க வைக்கும் முயற்சி!

இந்த அரசு தொழிலாளர்களுடைய அரசு. இந்த அரசின் அடிப்படையே – அடித்தளத்து மக்கள் – ஏழையெளிய மக்கள் – வியர்வை சொட்டச் சொட்ட வேலை செய்து வாழ்கின்ற மக்கள் – அந்த மக்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று அறிஞர் அண்ணா சொன்னதை நாம் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் ஏழையைச் சிரிக்க வைக்கின்ற முயற்சியிலே ஈடு பட்டிருக்கிறோம். அந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற கலைஞர்கள் – தலைவர்கள் – அரசுகள் – அனைத்துக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக நாம் எடுக்கின்ற இந்தக் காரியங்களுக்கு – இந்தச் செயல்களுக்கு – நாம் கட்டிக் காக்கின்ற ஒற்றுமை தான் வலிவானது. அந்த ஒற்றுமையை மீண்டும் மீண்டும் நீங்கள் கட்டிக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நீங்கள் தந்த சிறப்பான வரவேற்புக்கும் – நீங்கள் தந்த பரிசுகளுக்கும் – நீங்கள் அளித்த வாழ்த்துகளுக்கும் – என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தனியாக நான் யாரையும் குறிப்பிட்டு இங்கே பேச முடியாது. காரணம் எல்லோரும் ஒரே உருவமாக நாம் இருக்கும்போது – எல்லோரும் நம்முடைய உறவிலே கலந்தவர்களாக இருக்கும்போது – நான் யாரையும் தனித்தனியாகப் பிரித்து அவர்களுக்கு நன்றி சொல்ல வில்லை என்று கவலைப்பட வேண்டாம். நான் நன்றி என்று சொல்வதே திரையுலகத்திலே உள்ள என் உடன்பிறப்புகள் அனைவருக்கும் தான் நன்றி என்று சொல்கிறேன் என்று கூறி – உடன்பிறப்புகள் வாழ்க, வெல்க என்று கூறி விடைபெறுகிறேன்…” என்றார்.

நான் எவனுக்கும் பயப்படமாட்டேன்… மனதில் பட்டதைப் பேசுவேன்! – ரஜினி
நான் எவனுக்கும் பயப்படமாட்டேன்… மனதில் பட்டதைப் பேசுவேன்! – ரஜினி

நான் மனதில் பட்டதைப் பேசுவேன்… எப்போதும் எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. விழாக்களுக்கு வரும்படி தங்களை மிரட்டுவதாக நடிகர் அஜீத் பேசிய பிறகு ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள் ரஜினி பேச அழைக்கப்பட்டார்.

விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதாவது:

“இது, ஒரு மகத்தான விழா. சாதாரண விழா அல்ல. இதில் கலந்துகொண்டதற்கு வாய்ப்பளித்ததற்காக, நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த நன்றியை எப்படி சொல்வது என்று தெரியவில்ல. மூன்று மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் நடைபெற்ற விழாவில், சினிமா தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவதாக கலைஞர் அறிவித்தார்.

அறிவித்ததோடு நிற்காமல், நிலத்தை அனுமதிப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். பெப்சி தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் அவர் வீட்டு மனை அளித்து இருக்கிறார். இந்த நிலத்தில் எவ்வளவு சீக்கிரம் வீடுகளை கட்ட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வீடு கட்டி, அதை நான் பார்க்கணும் என்று கலைஞர் சொன்னார். அதற்கு எப்படி நன்றி சொல்வது? வாழ்நாளில் அவரை மறக்கக்கூடாது.

இந்த நிலத்தில் கட்டப்படும் வீடுகள், கஷ்டப்படுகிற தொழிலாளர்களுக்கு போய்ச்சேர்ந்தால்தான் அவர் சந்தோஷப்படுவார். வசதியாக இருப்பவர்கள், கை நீட்டக்கூடாது.

உண்மையை பேசுவதில், சத்தியம் பேசுவதில், யாருக்கும் எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன். மனதில் பட்டதைத்தான் பேசுவேன். உண்மையை பேசும்போது, சிலர் மனம் புண்பட்டு இருந்தால், என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இல்லாதவர்களுக்கு கிடைத்தால்தான் கலைஞர் சந்தோஷப்படுவார்.

கஷ்டப்படாம எதுக்காவது ஆசைப்பட்டா…

மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.

ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார்.

ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.. என்று. அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார்.

இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, கலைஞர் கொடுக்கிற வீட்டை ஏமாத்தி வாங்கினா. உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது.

எப்படி எவ்வளவு காலம் அரசியலில் இருக்கிறீர்கள்?

அரசியல்ல இருக்கிறவங்களுக்கு இரும்பு மனுசும், வைர நெஞ்சும் கொண்டவங்களாதான் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் பராசத்தி படத்தை திரையில போட்டதும், இந்த காட்சியை ஒரே டேக்கில நடித்து முடிச்சுட்டாருனு சொல்லி தேம்பி அழுதிங்களே. இவ்வளவு மென்மையான மனசு கொண்ட நீங்க எப்படி இந்த அரசியல்ல இத்தனை நாளா இருக்கீங்க?

அமிதாப்பச்சன் சின்ன வயசுல ஜெயித்தது பெரிய விஷயமல்ல. அவரது 60வது வயதில் பெரிய கஷ்டம் வந்தது. வீட்டையே அடமானம் வைத்துவிட்டார். படமும் எதுவும் கிடைக்கல. அவ்வளவு கஷ்டப்பட்ட நேரத்திலும் யாருக்கிட்டேயும் உதவிக்காக நின்னதுல்ல. ஆனால் தனி மனிதனா நின்னு ஜெயிச்சு அந்த வீட்டை மீட்டதும் இல்லாம. அதே ஏரியாவுல்ல இன்னும் 2 வீடு வாங்கியிருக்காரு. அதுதான் அமிதாப் பச்சன்…” என்றார்.