BREAKING NEWS
Search

தமிழகத்தில் 700 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் லிங்கா ரிலீஸ்

தமிழகத்தில் 700 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் லிங்கா ரிலீஸ்

rajinikanth-new-look_141604944500
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் லிங்கா திரைப்படம் 700 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 950 அரங்குகள்தான் உள்ளன. இவற்றில் 700 அரங்குகள் புதிய படங்களைத் திரையிடுபவை. மீதியுள்ளவை ஷிப்டிங் முறையில் படங்களைத் திரையிடுபவை அல்லது எப்போதாவது புதுப்படங்களைத் திரையிடுபவை.

ரஜினி படங்கள் வெளியாகும்போது, தமிழகத்தின் 90 சதவீத அரங்குகளில் அந்தப் படம் மட்டுமே வெளியாகும் என்ற நிலை பாபா சமயத்திலிருந்து உருவாகியுள்ளது.

எந்திரன் படம் வெளியானபோது, தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகள் அந்தப் படத்துக்கே தரப்பட்டன.

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் ரஜினியின் லைவ் ஆக்ஷன் படம் வெளியாகிறது என்பதால், தமிழகத்தின் அனைத்து அரங்குகளும் அந்தப் படத்தை வாங்கி திரையிட ஆர்வம் காட்டியுள்ளன. இரண்டு அல்லது மூன்று அரங்குகள் மட்டுமே கொண்ட சிறு நகரங்களில், அனைத்து அரங்குகளிலும் லிங்காவை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் அதிகபட்சமாக 65 அரங்குகளில் லிங்கா திரையிடப்பட உள்ளது. பிவிஆர், ஐநாக்ஸ், மாயாஜால் போன்ற அரங்குகளில் அனைத்து திரைகளும் இந்தப் படத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 650 அரங்குகளில் லிங்கா வெளியாகும் என்று இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங்க மேலும் 50 அரங்குகள் வரை அதிகரிக்கும் நிலை உள்ளது.

என்வழி




6 thoughts on “தமிழகத்தில் 700 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் லிங்கா ரிலீஸ்

  1. venkatesh

    that is the mass of thalivar. Some stupid magazines will come and cover in January that I and Unnai arithnthal collected more revenue than lIng

    REGARDS

    VENKAT

  2. kumaran

    நாள் நெருங்க நெருங்க டென்ஷன் அதிகமாவுது

  3. Rajesh

    Thanks for the update. All the very best to Thalaivar. I am sure that Lingaa is going to break all Thalaivar films earlier record in and abroad.

  4. yaseenjahafar

    ரஜினி பற்றி சத்தியராஜ் பேசியதை இங்கா பதிவு செய்ய வீரும்புகீரன்

    சத்யராஜ் பெருசா பேசுகிறார் ரஜினிகாந்தை பத்தீ ஏன் MGR பற்றி பேசா வில்லை ஜெயலிதவை பற்றி பேசா வில்லை இவர்கள் எள்ளுரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள இல்லை அதை பற்றீ யாரும் ஒரு வார்த்தை
    பேசவது கூட கிடையாது ஏன் என்றல் பயம் சத்யராஜ் , வன்னியர் ராமதாஸ்
    சீமான் , பாரதி ராஜா போன்றவர்கள் இது மதி ரி செய்திகளை பேசி கொண்டு
    இருக்கிறார்கள் பஸ் கன்ராக்டர் இருந்தவர் உழைப்பால் உயர்வது தப்பா
    போரமியில் பேசுகின்ற பேச்சு மதரீ பேசுகிறார்கள் நீ வேண்டும் என்றல் உனது பெயரை கூடத்தில் சொல்லி பாரு கை தட்டல் கெடைக்குமா எஆன்று
    பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *