BREAKING NEWS
Search

6522 ஆசிரியர்கள் நியமனம்… தமிழக அரசு தரும் இன்னொரு மெகா வாய்ப்பு!

6522 ஆசிரியர்கள் நியமனம்… தமிழக அரசு தரும் இன்னொரு மெகா வாய்ப்பு!

tnemblemரும் 2009-10-ம் கல்வி ஆண்டில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 6,522 பட்டதாரி ஆசிரியர் பணி காலி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் விவரம் (துறைவாரியாக)

ஆங்கிலம் – 1,554

கணிதம் – 1,422

இயற்பியல் -883

வேதியியல் -882

வரலாறு -567

தாவரவியல் -378

விலங்கியல்-378

தமிழ் 332

புவியியல் 126

இதில் பள்ளி கல்வி பிரிவில் 1,603 பேரும், தொடக்கக் கல்விப் பிரிவில் 4,919 பேரும் தேர்வு செய்யப்படுவர்.

அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தமது வேலைவாய்ப்பு பதிவு விவரங்களை அந்தந்த மாவட்ட தேசிய தகவல் மைய இணையதளத்தில் 9.12.09 முதல் பார்வையிடலாம்.

விடுபாடுகள், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

விவரங்கள் சரியாக இருப்பின் மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை.

மேலும், இந்த சரிபார்க்கும் வாய்ப்பினை வருகிற டிசம்பர் 21-ந் தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு எவ்வித கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஆ.சு.ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது.

-என்வழி




One thought on “6522 ஆசிரியர்கள் நியமனம்… தமிழக அரசு தரும் இன்னொரு மெகா வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *