BREAKING NEWS
Search

இந்தியாவின் சாபக்கேடு.. நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு வருவதே இல்லை!

இந்தியாவின் சாபக்கேடு.. நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு வருவதே இல்லை!

download

மினி நாடாளுமன்றத் தேர்தல் என்று வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் நான்கு நேற்றே வெளியாகிவிட்டது.

இவற்றில் டெல்லி, மத்தியபிரதேஷ், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் கட்சி. குறிப்பாக டெல்லியில் படுமோசமாக தோற்று ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட தலைநகர் டெல்லியில் வெறும் எட்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. புதிதாக உதயமான அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள் கிடைத்துள்ளன. பாரதிய ஜனதா 32 இடங்களைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை (36) பலம் எந்தக் கட்சிக்கும் இல்லை.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்து தோல்வி இன்னும் மோசம். அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 21 தொகுதிகளைத்தான் வென்றுள்ளது. பாஜக 162 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது பாஜக. 165 இடங்களில் வென்றுள்ளது அக்கட்சி. இது முந்தைய தேர்தலில் பெற்றதை விட 22 இடங்கள் அதிகமாகும்.  காங்கிரஸ் முன்பை விட மோசமாகவே தோற்றுள்ளது. 58 தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

சத்தீஸ்கரில் மட்டும் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது காங்கிரசுக்கு. இங்கு முன்பை விட ஒரு தொகுதியை கூடுதலாகப் பெற்றுள்ளது அக்கட்சி. ஆனால் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லை. பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.

காங்கிரஸைப் பொருத்தவரை இது மிகப்பெரிய பின்னடைவு. மத்திய அரசின் தவறான முடிவுகள், மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் மாநில தேர்தல்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

டெல்லி தேர்தல் முடிவுகள் யாருக்கும் திருப்தியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. அங்கு யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள இந்தப் பெரிய வெற்றிக்கு, மக்களின் வெறுப்புற்ற மனநிலை மற்றும் அந்தக் கட்சியின் கார்ப்பொரேட் ஸ்டைல் பிரச்சார உத்திகளே முக்கிய காரணங்கள்.

இந்தக் கட்சியின் சாயம் சீக்கிரமே வெளுத்துவிடும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளதால், இந்த வெற்றி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.download (1)

புதிய திருடர்களிடம் தலைநகரத்தைத் தர முடிவெடுத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்..  ‘நன்கொடை’ என்ற பெயரில் கார்ப்பொரேட் ஸ்டைலில் இதுவரை நடந்த தில்லுமுல்லு, இனி அரசியல் கட்சியின் ஸ்டைலில் நடக்கப் போகிறது. அவ்வளவுதானே!

ஆனால் மீடியா சும்மா இருக்கப் போவதில்லை. இனி கேஜ்ரிவால் பலூனை இன்னும் பல மடங்கு ஊதத் தொடங்கும். நாடாளுமன்றத் தேர்தலில் அவரை பூதாகாரப்படுத்தாமல் இவர்கள் ஓயப்போவதில்லை.

அதன் முதல் படிதான் ராகுலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடி – கேஜ்ரிவால் என புதிய போட்டியை ஆரம்பித்து வைத்திருப்பது.

இந்தியாவின் சாபக்கேடு இதுதான்… நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு மட்டும் ஒருபோதும் வருவதில்லை!

-என்வழி செய்திகள்
20 thoughts on “இந்தியாவின் சாபக்கேடு.. நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு வருவதே இல்லை!

 1. kumaran

  வரும் தேர்தலில் நல்லாட்சி , மற்றும் நிலையான ஆட்சி நிச்சயமாக அமையாது .

 2. kumaran

  தமிழக மக்கள் வெட்டியாக vote waste பண்ண போவதும் நன்றாக தெரிகிறது .

 3. srikanth1974

  மிக அருமையான பதிவு பொருத்தமான தலைப்பு

 4. Krishna

  நல்லாட்சி கொடுத்தால் மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதையே மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் நிச்சயமாக காங்கிரசுக்கு ஆறுதல் இல்லை. நக்சல்களை ஒழிப்பதற்கு மத்திய அரசின் துணை இராணுவப்படையின் உதவியை கடந்த 8 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கும் ராமன் சிங்கிற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. அதன் விளைவாக காங்கிரஸ் மாநில தலைவர்கள் பலரை நக்சல்கள் படுகொலை செய்யும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. அதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் மீதான அனுதாப அலையின் காரணமாக பல தொகுதிகளை காங்கிரஸ் கை பற்றியது. ஆனால் ராமன் சிங்கின் சிறப்பான ஆட்சியால், அந்த தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வியை மற்ற தொகுதிகளில் ஏற்படுத்திய வெற்றி ஈடு கட்டியது. காங்கிரசின் முதல்வர் வேட்பாளரான அஜித் ஜோகி உலக விவரம் தெரியாத பழங்குடி மக்களிடையே பிரச்சாரம் செய்யும் போது கை சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் குத்தினால் ஷாக் அடித்து இறந்து விடுவீர்கள் என்றெல்லாம் கீழ்த்தர பிரச்சாரம் செய்யும் அளவுக்கு போய் விட்டார். இத்தனையையும் மீறி பாஜக ஒரே ஒரு தொகுதியை தான் இழந்தது. பாஜக போட்டி வேட்பாளர் சுயேச்சையாக ஒரு தொகுதியில் வெற்றிபெற்றார். அதையும் சேர்த்து பார்த்தால் பாஜக கடந்த தேர்தலில் வாங்கிய அதே 50 சீட்டுகளை வென்றுள்ளது. இன்று மத்திய அரசு மிக பெருமையாக பேசும் உணவு பாதுகாப்பு மசோதா சில ஆண்டுகளுக்கு முன்பே ராமன் சிங்கால் கொண்டுவரப்பட்டு இன்றளவும் வெற்றிகரமாக செயல்படுத்த படுகிறது.

  டெல்லியில் சில மாதங்கள் வரையிலும் கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கும் கேஜ்ரிவாலுக்கும் தான் போட்டி. பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் என்று தெரிவித்தன. ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது, மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ள ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததிலிருந்து நிலைமை தலைகீழாக மாறி, இன்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

  கட்டுரையாளர் சொல்வது போல் கேஜ்ரிவால் என்னும் பலூனை மீடியா ஊதி பெரிதாக்கிக்கொண்டிருக்கின்றன. இதே ஊடகங்கள் தான் ராகுல் என்னும் பலூனை சில வருடங்கள் முன்பு வரையிலும் ஊதிக்கொண்டிருந்தன. உபி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததிலிருந்து ராகுல் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேச ஆரம்பித்ததும் மக்கள் எழுந்து ஓட ஆரம்பித்ததிலிருந்து ராகுல் என்ற பலூனின் காற்று முழுமையாக இறங்கிவிட்டது. அதே போல் தான் கெஜ்ரிவாலுக்கும் ஏற்படும். நம் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் லோக்பால் ஒன்று தான் தீர்வு என்று மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் சாயம் கூடிய விரைவில் வெளுத்து விடும் என்பதில் ஐயமில்லை.

  காங்கிரசில் நல்ல தலைவர்களே இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்துகின்றன. அவர்கள் 9 ஆண்டுகளுக்கு மேல் மோசமாக ஆட்சி நடத்துவதால் நாட்டில் நல்ல தலைவர்களே இல்லை என்ற விரக்தி மக்களிடையே உருவாகி இருக்கிறது. ஆனால் நாட்டில் நல்ல தலைவர்கள் உள்ளார்கள் என்பதை பாஜக மாநில ஆட்சிகள் தொடர்ந்து பெற்று வரும் வெற்றிகள் உறுதிபடுத்துகின்றன (இதில் கர்நாடகத்தை சேர்க்க முடியாது, காங்கிரசின் வீரேந்திர பாட்டிலுக்கு பிறகு, காங்கிரசிலும் சரி, பாஜகவிலும் சரி, நல்ல தலைவர்களே இல்லை).

  பாஜகவின் வெற்றி பெற்ற முதல்வர் வேட்பாளர்கள் நல்லாட்சியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் நிச்சயமாக இருக்கிறது என்பதை மிக குறைந்த அளவு பதிவான NOTA வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

 5. mangustan

  அதன் முதல் படிதான் ராகுலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடி – கேஜ்ரிவால் என புதிய போட்டியை ஆரம்பித்து வைத்திருப்பது.

  இந்தியாவின் சாபக்கேடு இதுதான்… நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு மட்டும் ஒருபோதும் வருவதில்லை!

  so, ராகுல் ரொம்ப நல்லவன்னு solluringa!!!

 6. மிஸ்டர் பாவலன்

  //அதன் முதல் படிதான் ராகுலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடி – கேஜ்ரிவால் என புதிய போட்டியை ஆரம்பித்து வைத்திருப்பது.

  இந்தியாவின் சாபக்கேடு இதுதான்… நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு மட்டும் ஒருபோதும் வருவதில்லை!//

  கட்டுரை துவங்கையில் உள்ள புகைப்படம்.. முடிவாக உள்ள வரிகள்..

  ஏதோ ஒரு மத்திய கட்சிக்கு “என் வழி” மறைமுகமாக ஆதரவு தருவது போல தெரிகிறது!

  -== மிஸ்டர் பாவலன் ==

 7. மு.முத்துக்குமார்

  சங்கர்னா, தலைவர் இந்த முறையும் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பாரா?

 8. ananth

  ‘புதிய திருடர்களிடம் தலைநகரத்தைத் தர முடிவெடுத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.. ‘நன்கொடை’ என்ற பெயரில் கார்ப்பொரேட் ஸ்டைலில் இதுவரை நடந்த தில்லுமுல்லு, இனி அரசியல் கட்சியின் ஸ்டைலில் நடக்கப் போகிறது. அவ்வளவுதானே!’

  – இது அரசியல் பயம். கேஜ்ரிவால் இந்த காலத்து அரசியலுக்கு எதிராக போராடி வென்றுள்ளார் . நீங்கள் சொல்வதை பார்த்தல் இந்த பதிவை எழுதிய நீங்கள் புத்திசாலி, டெல்லி மக்கள் முட்டாள்கள் என்கிறீர்கள். முயற்சி செய்தால் மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும். சும்மா வீட்டில் உட்கார்ந்து மட்டமாக பேசினால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியாது. அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை காலம் சொல்லும். . Rome was not built in a single day. இது முதல் படியாக இருக்க கூடாதா? இப்போது தேவை நம்பிக்கையும் ஆதரவும்.

 9. Jey

  ஏன் அரவிந்த் கெஜ்ரிவால் நல்லவரில்லையா! அவர் நல்லவராக இல்லாமலா ஒரு முதலமைச்சரையே தோற்க்கடிக்க முடியும்? வாக்காளர்கள் அவ்வளவு ஏமாந்தவர்களா? ஏன் கெஜ்ரிவால் மீது இவ்வளவு கோபம்? அவரை பற்றி விரிவான ஒரு செய்தி போடலாமே

 10. குமரன்

  /// இந்தியாவின் சாபக்கேடு இதுதான்… நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு மட்டும் ஒருபோதும் வருவதில்லை! ///

  ஜவஹர்லால் நேரு ஆரம்பித்து இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்று ஒரே குடும்ப ஆட்சி நடப்பது ஜனநாயகமா முடியாட்சியா என்று வெளிநாட்டவர் கேட்கிறார்கள்.

  ஆங்காங்கே மாநிலம் தோறும், மாவட்டம் தோறும் சிற்றரரசர்களும், குறுநில மன்னர்களுமாக குடும்பம் குடும்பமாக ஆட்சி செய்கிறார்கள்.

  இதில் எப்படி நல்லவர்கள் உருவாவது?

  “சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை, மணிமேகலை” சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனாலும் பிரதமர் ஆக முடியவில்லை.

  வாஜ்பாய் நல்லவர்தான், ஆனால் அவர் ராகுல் காந்தி அளவுக்கு நல்லவராக இருக்க மாட்டார் போலும் !!!

 11. Deen_uk

  தலைவர் வெறியனின் மனக்குமுறல்…:
  ஒவ்வொரு ஆண்டும் தலைவர் பிறந்தநாள், நாளிதழ்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள்,மற்றும் அனைத்து மீடியாவும் ஒரு வாரமாக தூள் கிளப்பும்!
  ஒவ்வொரு ஆண்டும் தலைவரும் அமைதியாகவே இருப்பார்.,ஆனால் மீடியா அவரை பற்றி நிறைய நிகழ்ச்சிகள் நடத்தும்.ஆனால் இந்த ஆண்டு தலைவரும் வழக்கம் போல அமைதியாக இருக்கிறார்..மீடியா நியூஸ் ஒன்று கூட தலைவர் பற்றி இல்லை.வழக்கமான ஆரவாரம் இல்லை.தலைவர் படங்கள் தான் நடிப்பதில்லை.அட்லீஸ்ட் இந்த ஒரு வார டிவி மற்றும் மீடியா செய்திகள் பார்த்தாவது (தலைவர் புது பட ரேஞ்சுக்கு ) எங்களை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தோம்.இப்போது அதுவும் இல்லையா? தலைவரின் ஒரிஜினல் இல்லாத,கோச்சடையானையாவது பார்த்து மனதை தேற்றலாம் என்று பார்த்தால்,அந்த படத்தையே வெறுக்கும் அளவுக்கு இழுக்கிறார்கள்..உண்மையில் அந்த படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது.சரி தலைவர் படத்தில் தான் நடிக்கவில்லை.அறிவித்தபடி கோச்சடையான் ஆடியோவாவது அவரது பிறந்த நாளில் ரிலீஸ் பண்ணி,அந்த சந்தோசமாவது கொடுத்து இருக்கலாம்,அதுவும் இல்லை.எதுவுமே இல்லையா? தலைவர் ஏதாவது விழாக்களில் கலந்து கொண்டு ஏதாவது பேசினால் கூட பார்த்து சந்தோஷ பட்டுகொள்வோம்.ம்ஹூம்…என்ன சொல்றதுனே தெரியல.முடியல…என்னால முடியல…ரொம்ம்ம்ம்ம்ப மனசு கஷ்டமா இருக்கு..தலைவர் இடத்தில வேற யாரையும் வச்சு பாக்க முடியல.பேசாம சினிமா நா என்னனு தெரியாம இருந்து இருக்கணும்..இல்ல,வாழ்க்கையில் எந்த சினிமாவும் பார்த்து இருக்க கூடாது.அப்படியே பார்த்து இருந்தாலும்,தலைவரை பார்த்திருக்க கூடாது…அப்படி இருந்து இருந்தால்,இப்படி தலைவர் தலைவர் என ஏங்கி கொண்டு புலம்பி கொண்டு இருந்து இருக்க மாட்டேன்.தலைவரை அரசியலுக்கு வர சொல்லல.அதிகமா ஆசை படல.வருடத்துக்கு அல்லது 2 வருடத்துக்கு ஒரு லோ பட்ஜெட் படம் கொடுங்க போதும்..நீங்க வந்து நின்னாலே அது ஹை பட்ஜெட் ஆகிடும்.ஹை பட்ஜெட்,ஓவர் ரிஸ்க் சீன்லாம் எங்களுக்கு வேணாம்..குசேலன் லெவல் கூட ஓகே..தலைவர் புரிந்து கொள்வாரா?

 12. Hari

  இதே தளத்தில் அன்ன ஹசாரே ஆரம்பித்த போராட்டம் போதும் ,அவர்கள் corporate மோசடிகரர்கள் என்று கூறியபோது,இல்லை இது சாதாரண மக்களின் எழுச்சி என்று கூறினேன்.இப்போது சட்டமன்ற ஊருபினர் பதவியை பிடித்த போதும் அதையே கூறுவது வேடிக்கையாக உள்ளது.மேலும் மோடி அவர்களின் எழுச்சியை பலூன் என்று விமர்சித்த பொது நான் கூறியது இது மக்களின் எழுச்சி தான் என்று.இன்று இந்த பலூன் வதம் அர்விந்த் கேஜ்ரிவளிடம் சென்று உள்ளது.இதிலிருந்து தெரிவது இந்த விமர்சனகள் சரியானவை இல்லை.மேலும் நான் கேட்க விரும்புவது தமிழக சட்டமன்ற தேர்தலில் தி மு கவை ஆதரித்த பொது அவர்களின் குடும்பமான சன் டிவி செய்தவை corporate செயல்கள் இல்லையா.அணைத்து தொழில் முனைவோர்களையும் மிரட்டிநார்கலே அது corporate மோசடி இல்லையா??

 13. துரைசிங்கம்

  ஏலே , அந்த அறிவுகெட்ட கேசரிவாலு கம்பெனி கம்பெனியா ஏறி பணம் புடுங்கினது தெரியாதாலே. அதிகாரத்தையும் கொடுத்துட்டா எல்லாத்தையும் மொட்டை அடிச்சிடமாட்டானா அந்த முட்டாப்பய. டெல்லிக்காரனுக கூறுகெட்டு போய் அந்த கிருக்கனுக்கு ஒட்டுபோட்டுருக்கானுவ. காவிக்காரனுக்காவது முழுசா போட்டு ஒக்கார வச்சிருக்கலாம். முந்தானாளு தானே அசாரே தாத்தா கேசரிவாலு மேலே மூணு கோடி மோசடின்னு கம்ளைண்டு கொடுத்தாரு. மறந்து போச்சுங்களா. நீங்க எல்லாரும் கேசரிவாலுக்கு கூட்டுக்களவாணிப் பயலுகளா

 14. மிஸ்டர் பாவலன்

  //உண்மையில் அந்த படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது.// (Deen_UK)

  இதை நான் நம்பவில்லை. ‘கோச்சடையான்’ படம் பார்க்க கமல் ரசிகர்களான
  பாவலர்களே காத்திருக்கும் போது ரஜினி ரசிகர்கள் இவ்வளவு விரக்தியாக
  எழுதுவது சரியல்ல. படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருவதாக
  ஏதோ ஒரு இணைய தளத்தில் நான் படித்தேன். படம் நல்ல படி வந்திருக்கிறது
  என K.S. ரவிகுமார் சொல்வதை நீங்கள் நம்ப மறுத்தாலும், இவ்வாறு ரஜினி
  சொல்வதை மறுக்க முடியுமா? 2014-ல் கோடை விடுமுறையில் படையப்பா மாதிரி
  கோச்சடையான் பெரும் வெற்றி குவிப்பான். கவிஞர் சொல் பிழைத்ததில்லை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 15. குமரன்

  ///தமிழக சட்டமன்ற தேர்தலில் தி மு கவை ஆதரித்த பொது அவர்களின் குடும்பமான சன் டிவி செய்தவை corporate செயல்கள் இல்லையா.அணைத்து தொழில் முனைவோர்களையும் மிரட்டிநார்கலே அது corporate மோசடி இல்லையா??///

  சன் டி.வி கலாநிதி தயாநிதி செய்தவை Corporate என்ற சொல்லுக்கு வரமாட்டா, ஏனெனில் அவை அனைத்தும் ஒரே குடும்பத்தின் சொத்து !
  சும்மா ஒரு கணக்குக்குப் பொதுமக்களுக்கு பத்து சதவிகிதம் கொடுத்து விட்டு அதைக் கறுப்புப் பணத்தால் பினாமி பெயர்களுக்கு வாங்கி விட்டார்கள்!!

  தொழில் முனைவோரை மிரட்டியதாக எந்த corporate மீதும் புகார் இல்லை. சன் டி.வி மீது மட்டும்தான் உள்ளது. அவர்கள் 1990 களில் இருந்து கேபிள் டி.வி இல் செய்துவந்தது வருவது அப்பட்டமான ரவுடித் தனம். இதையே வேறு யாராவது செய்தால் குண்டர் சட்டம்தான் பாயும். ஆனால் கேடி பிரதர்ஸ் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்.

  325 தொலைபேசி இணைப்புகளுடன் ஒரு தொலைபேசி மாற்றகத்தையே நிலத்தடி கேபிள் போட்டு தனது வீட்டில் இணைப்பு கொடுத்து அதை அப்படியே தனது குடும்பத் தொழிலுக்கு உபயோகித்த ஒரு மத்திய அமைச்சர் இன்னமும் சுதந்திரமாக உலா வருகிறார், வாயெல்லாம் பல்லாக போஸ் கொடுக்கிறார், அவர் நிச்சயம் நல்லவர்தான்.

  ஒட்டு மொத்தமாகக் கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் நல்லவர்களே,

  தனது குடும்பம் மட்டுமே முதல்வர், பிரதமர், அமைச்சர், எம்.பி. ஆளும் கூட்டணி தலைவர் என்று ஆட்சி செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களே.

  சொக்கத் தங்கம், அன்னை, தியாகத் திருவிளக்கு, மணிமேகலை போல இன்னொரு நாட்டில் இனப்படுகொலையை நடத்துபவர்கள் எல்லாம் நிச்சயம் நல்லவரே.

  அவர்கள் தோற்கும் நிலை வந்தால் அதன்கமாகத்தான் இருக்கிறது, இந்த நாடு நல்லவர்கள் கைக்குப் போகவே போகாதா என்று. அப்படி நல்லவர்கள் யாரும் கிடைக்காவிட்டால், சொக்கத் தங்கம், அன்னை, தியாகத் திருவிளக்கு, மணிமேகலையின் சுத்தப் புதல்வன் ராகுல் காந்தி வந்தால் சரி. இல்லாவிட்டால், வருத்தம்தான்.

 16. Krishna

  @குமரன்: சில நாட்களுக்கு முன் “மணிமேகலை”யின் சொத்து விவரங்கள் Huffington Post என்ற ஊடகத்தில் வந்திருந்தது. அதில் அவர் எலிசபத் ராணியை விட பணக்காரர் என்றும் குறிப்பிடிருந்தார்கள். இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களில், அதே ஊடகம் “நாங்கள் கொடுத்த செய்தி தவறு – வாபஸ் வாங்குகிறோம்” என்று பல்டி அடித்தார்கள். இடைப்பட்ட இரண்டு நாட்களில் என்ன நடந்ததோ, யானறியேன் பராபரமே.

 17. Mani

  yaar pa nallavanga … naatin thalaimai aatchiya thooki rajinikanth kita koduthudulaama? athai thaane neenga ethir paarkireenga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *