BREAKING NEWS
Search

5 விமான நிலையங்களை ரூ. 63 கோடிக்கை தாரைவார்த்த மகாராஷ்ட்ரா!

5 விமான நிலையங்களை அனில் அம்பானிக்கு வெறும் 63 கோடி ரூபாய்க்கு தாரை வார்த்த கேவலம்!

மும்பை: தனியார் மயமாக்கல் மற்றும் அரசு சொத்துக்களை லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு பெரும் பணக்காரர்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது போன்றவற்றால்  உலகமே இன்று பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளது.

99650786gfcmub_fs

பாராமதி

இன்று கிட்டத்தட்ட அனைத்து முதலாளித்துவ நாடுகளுமே, தங்கள் நாட்டு தொழில்துறை மற்றும் பொருளாதார அணுகுமுறைகளில் அரசின் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் நோக்கில் செயல்படுகின்றன.

உலக முதலாளித்துவத்தின் தாயகமாகப் போற்றப்பட்ட அமெரிக்காவில் இன்று பெரும் தொழில்கள் அனைத்திலும் அரசின் பங்கு கணிசமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நலிந்த நிறுவனங்களை தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு, அவை மீண்டும் எழுச்சி பெற நிதியுதவி செய்கிறது.

ஆனால் இங்கோ.. நிலைமை தலைகீழ். இன்றைய வீழ்ச்சியிலிருந்து இந்தியா ஓரளவு தப்பித்ததற்குக் காரணமே, இங்கு அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருப்பதுதான் என்று ரிசர்வ் வங்கி கவர்னரே ஒப்புக் கொள்கிறார்.

ஆனால் ஆட்சியாளர்களோ, கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம் பொதுச் சொத்துக்களை தனிப் பெரும் தொழிலதிபர்களுக்கு, அதுவும் அடிமாட்டு விலைக்கு எழுதி வைப்பதிலேயே குறியாக உள்ளனர்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இதோ…

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு.

nanded-airport-apron-view

நான்டெட்

95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC).

நிச்சயம் இது குறைவான தொகைதான். ஆனால் அரசு எடுத்த முடிவு இது. வேறு நிறுவனங்களுக்கு என்றால் இதைவிட 5 மடங்கு அதிக தொகை கிடைத்திருக்கும், என்று மகாராஷ்ட்ர தொழில் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாவர்மால், நான்டெட், லாத்தூர், உஸ்மானாபாத் மற்றும் பாராமதி விமான நிலையங்களைத்தான் இப்படி தூக்கிக் கொடுத்துள்ளனர்.

இப்போது பொருளாதார நிலைமை சரியில்லாததால், இந்தத் தொகையோ போதும் என்று அரசு முடிவு செய்துவிட்டதாக மகாராஷ்ட்ர தொழில்துறை செயலாளர் ஏஎம் கான் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமானங்களை, ஏதோ பாம்பே அல்வா மாதிரி 95 வருடத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்கள்.

விஷயம் வெளியில் கசியத் துவங்கிய பிறகு, மிகப் பெரிய போராட்டங்களை நடத்த பொது நல அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.




2 thoughts on “5 விமான நிலையங்களை ரூ. 63 கோடிக்கை தாரைவார்த்த மகாராஷ்ட்ரா!

  1. அட ராமா!

    //**வேறு நிறுவனங்களுக்கு என்றால் இதைவிட 5 மடங்கு அதிக தொகை கிடைத்திருக்கும், என்று மகாராஷ்ட்ர தொழில் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.**//

    ஏழை மக்களுக்கு சலுகை தர மாட்டாங்களாம், கேட்டா பொருளாதார நெருக்கடி.
    அனில் அம்பானிக்கு சலுகை. கேட்டா, அப்பவும் பொருளாதார நெருக்கடி,

    அட ராமா!

    என்ன கொடுமை இது!

  2. RSYF

    தங்களின் கட்டுரையின் தகவலை நாங்கள் எங்கள் தளத்தில் பயன்படுத்தி உள்ளோம்.
    http://rsyf.wordpress.com/

    நன்றியுடன்,
    RSYF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *