BREAKING NEWS
Search

49 ஓ… கவுண்டரின் மறுவரவு!

49 ஓ… கவுண்டரின் மறுவரவு!

49-O-movie-details

கொஞ்சம் லேட்தான் என்றாலும் ரொம்பவே லேட்டஸ்டாக வந்திருக்கிறார் கவுண்டமணி, 49ஓ மூலம்.

படத்தின் கதை.. காதல், அடிதடி குத்துவெட்டு, விரச நகைச்சுவை போன்ற எதுவுமில்லாத ஒன்று. பல கிராமத்து விவசாயிகளின் இன்றைய யதார்த்தம். அட, படத்தில் ஹீரோயின், வெட்டி டூயட் என எதுவுமே இல்லீங்க.

ஒவ்வொரு வசனமும் நெத்தியடி. அந்த வசனங்களில் உள்ள உண்மை புரிந்ததால்தானோ என்னமோ, மவுனமாக அவற்றை அனுமதித்திருக்கிறது சென்சார் சென்சார்.

‘அரை டஜன் படம் நடிச்சவன் எல்லாம் சிஎம்-மாகி நாட்டை ஆளணும்னு நினைக்கிறான்…’

’49 ஓ -க்கு எதுக்கு நான் ஓட்டுப் போடணும்… அதுக்கு ஓட்டுப் போட்டா என்ன பலன்?’

‘கையிலிருக்கிற மண்ணுதான்யா ஒவ்வொரு விவசாயிக்கும் மானம்.. அதையும் வித்து திண்ணுபுட்டா வாழ்றதுல அர்த்தம் என்னய்யா…’

இப்படி நச் வசனங்கள் படம் முழுக்க…

காமெடி என எந்தக் காட்சியையும் திணிக்காமல், கவுண்டரை அவர் இயல்புக்கேற்ப ‘ஆட’ விட்டிருக்கிறார்கள். கலக்கிவிட்டார் மனிதர். என்னவொரு எள்ளல், எகத்தாளம். சவுண்டு!

goundamani-still-from-film

குறிப்பாக 49-ஓவுக்கு அவர் தரும் விளக்கம், இனி யாராவது ‘என் ஓட்டு 49-ஓவுக்கு’ என்று சொல்வார்களா என்பது சந்தேகம்தான்!

பெரிய பெரிய ஹீரோக்கள் செய்திருந்தால் கூட எடுபடாமல் போயிருக்கக் கூடிய கதை இது. கவுண்டரின் இமேஜால் கவனிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

ஒளிப்பதிவு மிக இயல்பாக உள்ளது. எந்த மிகைப்படுத்தலும் இல்லாத எளிமையான கிராமத்து வாழ்க்கையை, விவசாயத்தைப் படம்பிடித்திருக்கிறார் ஆதி கருப்பையா.

கே இசையில் அம்மா போல அள்ளித் தரும் மழைதான்… பாடல் பிரமாதம். தேனிசை செல்லப்பா குரலில் இன்னும் எத்தனை காலம்… நன்றாக உள்ளது. ஆனால் ஒலித் தரத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பின்னணி இசை காதுகளைப் பதம் பார்க்கிறது.

முதல் படத்திலேயே நாட்டின் ஜீவாதாரமான விவசாயப் பிரச்சினையை கையிலெடுத்த, அதை யார் சொன்னால் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரும் என்று கணித்ததற்காக இயக்குநர் ஆரோக்கியதாசுக்கு ஒரு சபாஷ். ஆனால் கிடைத்த பெரும் வாய்ப்பை அவர் இன்னும் நன்றாகப் பயபடுத்தியிருக்க வேண்டும்.

-ஷங்கர்




2 thoughts on “49 ஓ… கவுண்டரின் மறுவரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *