BREAKING NEWS
Search

30 நதிகளை இணைப்பது சாத்தியமே: ஆய்வறிக்கை தாக்கல்

நதி நீர் இணைப்பு: முதல் கட்ட ஆய்வறிக்கையை சமர்பித்தது நதிநீர் மேம்பாட்டு அமைப்பு!

டெல்லி: இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையக்கூடிய நதிநீர் இணைப்பு பற்றிய பூர்வாங்க வேலையின் முதல் படிக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு.

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நதி நீர் இணைப்பு குறித்த ஒரு ஆரம்பகட்ட ஆய்வறிக்கையை தயார் செய்து அளித்துள்ளது தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு.

இந்தியாவில் 30 முக்கிய நதிகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக இந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த பாஜக ஆட்சியின்போது நதிகள் இணைப்பு தொடர்பான ஆய்வுகள் தொடங்கின. சென்னையில் காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்ணாவிரதமிருந்தார். அப்போது நதி நீர் இணைப்புதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கு பெரிய தீர்வு என வலியுறுத்தியவர், அந்த முக்கியத்துவத்தை நச்சென்று புரிய வைக்கும் விதத்தில், நதிநீர் இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முதல் ஆளாக தானே ரூ.1 கோடி நிதி தருவேன் என்றும், மேலும் அதற்கான பல முயற்சிகளின் பங்கேற்க முன்வருவதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து நதி நீர் இணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதற்கு பல ஆண்டுகள் முன்பே நதி நீர் இணைப்பு குறித்து மத்தியில் அமைந்த பல்வேறு அரசுகள் பேசி வந்தாலும், இந்த சந்திப்புக்குப் பிறகு, நதி நீர் இணைப்பு குறித்த பேச்சுகள் தீவிரமடைந்தன.

இதற்காக தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு (National Water Development Agency-NWDA) உருவாக்கப்பட்டு நாட்டின் நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உத்தரவிடப்பட்டது. இதற்கென அப்போது ரூ.5 லட்சம் கோடிகள் செலவாகும் என மத்திய அரசு மதிப்பிட்டது.  இதுகுறித்த முறையான அறிவிப்பினையும் வாஜ்பாய் அரசு வெளியிட்டது.

river-link-map

ஆனால் உடனடியாக இந்த பூர்வாங்க ஆய்வு முடிந்தபாடில்லை.

இந்த ஆய்வை முடிக்க தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு 7 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. அதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் 30 முக்கிய நதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பது இதன் ஆய்வில் தெரியவந்துள்ளது நீர் மேம்பாட்டு அமைப்பு.

இந்த ஆய்வறிக்கையின்படி, இமயமலையை சேர்ந்த 14 ஆறுகளையும், தென்னிந்தியாவில் உள்ள 16 ஆறுகளையும் இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேன்-பேட்வா நதிகளை இணைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.Cauvery

இமயமலையை சேர்ந்த 14 நதிகளில் கோசி-மெச்சி, கோசி-காக்ரா, காக்ரா-யமுனா, கங்கை-கண்டாக், யமுனா-சாரதா, யமுனா-ராஜதான், மானஸ்-சந்தோஸ்-தீஸ்தா-கங்கா ஆகியவை முக்கியமானவை.

காவிரியும் வைகையும்

அதுபோல தென்னிந்தியாவை பொறுத்தவரை மகாநதி-கோதாவரி நதிகளும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைக்க முடியும் என்றும் அதில் கோதாவரி-கிருஷ்ணா ஆகிய இரண்டு ஆறுகளும் மூன்று இடங்களில் இணைக்கப்படலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ சைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியை இணைக்கலாம். சோமசீலம் மற்றும் கிராண்டு அனிகட் ஆகிய இடங்களில் பெண்ணாறு, காவிரி ஆறு ஆகியவற்றை இணைக்கலாம்.

கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்கலாம்.

பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆகியவையும் இணைப்புக்கு சாத்தியமான ஆறுகளே என இந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 thoughts on “30 நதிகளை இணைப்பது சாத்தியமே: ஆய்வறிக்கை தாக்கல்

 1. Malar

  தலைவர் நம்பும் அருமையான திட்டம் இது… ஊழலின்றி இத்திட்டம் நிறைவேறினால் வளமான இந்தியா, தமிழகம் உருவாக வாய்ப்பிருக்கிறது.

 2. வில்லு விஜய்

  அப்ப வேலையே ஆரம்பிங்கப்பா! நிறையபேரு செளவு செஞ்சது இன்னும் கலெக்சன் ஆகல! அப்பறம் அடுத்த எலேக்சன்னுக்கு நம்ம 500 ரூபா தமிழனனுக்கு 1000 ரூபா குடுக்கணும்!

 3. Selvaraj

  ஊழல் நடந்தாலும் கூட, திட்டம் நிறைவேறினால் நம் நாட்டிற்கு நன்மையே!!

  உங்களின் கவனத்திற்கு,
  நான் எப்போது உங்கள் வலைத்தளத்திற்கு வந்தாலும், கீழ்க்காணும் இச்செய்தி என்னை எச்சரிக்கிறது. அதனாலேயே நான் உங்கள் வலைத்தளத்திற்கு வருவதற்கு விரும்புவதில்லை. தயவு செய்து என்ன என்று பாருங்கள். பிறருக்கும் கூட இப்படி இருக்கலாம். இதனாலேயே நல்ல பதிவுகள் எல்லாராலும் படிக்கப்படாமலேயே போய்விடலாம்.

  McAfee SiteAdvisor
  NavigationContentSidebarFooterNavigation
  Utility Navigation
  SupportAbout McAfeeContact usUnited Kingdom – English

  EnglishUnited States – English HomeWeb SecurityHow It WorksDownloadResourcesWebmastersenvazhi.com
  envazhi.com

  When we tested this site we found links to axill.in, which we found breaches browser security on our test PC.

  Are you the owner of this site? Leave a comment
  _____________
  நன்றி…
  தளம் முழுவதையும் சோதித்துப் பார்த்துவிட்டோம். அனைத்து browserகளிலும் சரியாக இருப்பதாகவே தெரிகிறது. வேறு நண்பர்கள் யாருக்கும் இதே போன்ற புகார் இருந்தால் தெரிவிக்கவும்… சரி செய்துவிடலாம்.

 4. Baskaran

  Hi Vino,
  This is Baskaran Vino. sorry 4 my english .I am regular reader of this blog.For me also Mcafee antivirus shows at red colour. I think problem is not in the server.Because 10 days before McAfee antivirus shown redcolour in the World most popular Torrent site “MININOVA.ORG”. Lot of the users continuesly sended comment and email to McAfee site after that Mcafee changed to green colour. It is a Business technique.MaCafee is like “Namma uroo water pocketla irukkla ISI an tha mathiri” Don’t worry cool.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *