BREAKING NEWS
Search

தலைமுறைகளைக் கடந்து நெகிழ வைத்த ரஜினி படம்!

ஸ்டைல் மட்டுமல்ல… நடிப்பும் கூடப் பிறந்ததுதான்!

கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தலைவரின் ஆறிலிருந்து 60 வரை படம் பார்த்தேன், இன்று (நவம்பர் 23, திங்கள்). எத்தனையாவது முறை? தெரியவில்லை… அவருடைய படங்களைப் பார்க்க மட்டும்தான் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும். எத்தனை முறை என்பதை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.

ss

ஸ்டைல் இல்லை, நிமிடத்துக்கொரு முறை முடிகோதும் அந்த மேனரிஸம் இல்லை, காற்றில் பறந்து பந்தாடும் சண்டைகள் இல்லை, அறிமுகப் பாடலோ, பஞ்ச் வசனமோ இல்லை… ஆனால் ‘தலைவர்’ வருகிற ஒவ்வொரு காட்சியிலும் மனசு அதிர்ந்து அழுதது.

வாழ்க்கை இத்தனை வலி மிகுந்ததா..! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் தெரியாத ஒரு உலகத்துக்குப் போய்வந்த உணர்வு.

தன் சொந்த தம்பியிடம் பணம் கேட்கக் கூச்சப்பட்டு ரஜினி தயங்கி நிற்கும் ஒரு காட்சியில் அவரது தன்மானத்துக்கும் வறுமைக்கும் நடக்கிற போராட்டம்…

“அண்ணா… ஒரு 5000 ரூபா பணத்துக்காக உன் வாழ்க்கையை அடகு வச்சிக்கிறது சரிதான்னு எனக்குப் படல…” என்று தம்பி பேசும்போது, தலைவர் ஒரு ஞானி மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்வார்..

“கண்ணா.. மாடு மனை மண்ணு பொன்னு இதெல்லாம் அதுவா அமையறதுப்பா… அதைத் தீர்மானிக்கிறது நாம இல்லை”

தோல்வி மேல் தோல்வி, அடி மேல் அடி விழும்போது, அப்படியே இறுகி இறுகி தன்னையே மறுவார்ப்பு செய்து கொள்ளும் காட்சிகளில்…

“தான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க என்னைச் சுத்தி இருக்காங்க… நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க வெளியே இருக்காங்க” என உறவுகளுக்கான அர்த்தம் சொல்லும்போதும்…

-நண்பர்களே, இந்தப் படம் வெளியான வருடம் 1979!

ரஜினி அந்தக் காட்சிகளிலெல்லாம் நடித்த மாதிரியே தெரியவில்லை.

Slide1 copy

பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்ட ஆத்திரம் மேலிட முதலிரவில் கோபித்துக் கொண்டுபோய், சில நிமிடங்களில் மனச் சமாதானமடைந்து திரும்பி வந்து மனைவியுடன் அவர் இயல்பாகப் பேசும் காட்சி, ஏனோ மனதில் ஆணியறைந்தது மாதிரி பதிந்துவிட்டது.

படத்தில் ஒரே கமர்ஷியல் விஷயம் கண்மணியே பாட்டு. பெரிய டெக்னிக்கல் உத்தி எதுவும் இல்லாத சாதாரண காட்சியமைப்புதான்.

ஆனால் கேட்கும்போதெல்லாம் நினைவுகளை ஈரப்படுத்தி கண்களைக் கசிய வைக்கிற ஒரு பாடலாகத் தந்துவிட்டார் இசைஞானி. அதுவும் பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கிற அந்த இசை (அது ஒரு அற்புதமான பாஷை மாதிரியே படும் எப்போது கேட்டாலும்!), ‘எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா… பல்சுவையும் சொல்லுதம்மா…’ என்ற வரிகளுக்கு தலைவர் நடித்திருக்கும் அழகு, அந்த இணையில்லாத, முகம் கொள்ளாத மந்தகாச சிரிப்பு… இணையில்லாத பாடல் அது!

Presentation4 copy

தலைவரின் இந்த 60வது பிறந்த நாளுக்கு இந்தப் பாடலையே அவருக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாடலுக்கு ஏதாவது ஸ்டில் அனுப்பணும் என்று நினைத்த போது, அந்தப் பாடலையே ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டால் என்னவென்று தோன்றியது. அதையும் பயன்படுத்துங்கள்.

இறுதியாய் ஒரு வார்த்தை… திரைத்துறை தாண்டி பொதுவாழ்க்கையில் ரஜினி உறுதியாக ஒரு முடிவை எடுக்கவில்லை என்பது போல சிலர் விமர்சனங்கள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி தீர்க்கமான மனிதர். தன் கருத்தில் எப்போதும் மாறாத உறுதியுடன் இருக்கும் அசாதாராண நபர். தேடி வந்த முதல்வர் பதவியை வேண்டாம் என்று சொல்ல எத்தனை தன்னம்பிக்கையும், மன உறுதியும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற விவாதமே இனி வேண்டாம். அவர் விருப்பம் அது. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, ஒரு குருவாக இருக்க அவரைத் தவிர சிறந்த ஒருவர் தமிழகத்தில் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஒரு ரஜினி ரசிகனாக சில நேரங்களில் சிலரது ஏளனத்துக்கு ஆளாகிருக்கிறேன். ஆனால் வருத்தப்பட்டதில்லை. ‘போகட்டும் கண்ணனுக்கே’ என சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன்.

அன்று சொன்னதுதான் இன்றும்… ரஜினி ரசிகன் என்பதில் பெருமையாக இருக்கிறது!

-வாசன்

‘கண்மணியே..’

குறிப்பு: தனது அனுபவத்தையே ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்தாக வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கும் பெங்களூர் ரசிகர் இவர்!
15 thoughts on “தலைமுறைகளைக் கடந்து நெகிழ வைத்த ரஜினி படம்!

 1. ரஞ்சன்

  வாவ் வாவ் வாவ்… அட்டகசமன் ச்டில்ல்ஸ், அருமையான அனுபவம்

 2. sam

  இந்த படம் வந்தபோது நான் பிறந்து கூட இருக்கமாட்டேன்…………
  இதில் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்……அது ரஜினியின் அப்பா இறந்த பிறகு அதே வேலைக்கு ரஜினி வருவார் அப்பொழுது அந்த முதலாளி சொல்லுவார் கடவுள் நல்லவர்களை சோதிகிறார்… ஏன்னா அவகளை எதாவது ஒரு நல்ல விசியத்துக்கு தயார் படுத்துரார்னு அர்த்தம்னு சொல்லுவர்………..ஏனோ இந்த படம் பாக்கும் போது இந்த வசனதைமட்டும் தவறாமல் பார்பேன் ………

 3. bahrainbaba

  “”” ஒரு ரஜினி ரசிகனாக சில நேரங்களில் சிலரது ஏளனத்துக்கு ஆளாகிருக்கிறேன். ஆனால் வருத்தப்பட்டதில்லை “”

  நாம எல்லோருமே இந்த சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.. ஆனால் ரஜினி ரசிகன் நான் இல்லை என்று என்னை நான் மாற்றிக்கொள்ள நான் ஒரு போதும் முற்பட்டதில்லை.. காரணம் அவர்கள் மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை..

 4. Prasanna

  அதே காலகட்டத்தில் வந்த ஜானி படத்தில் வரும் ஒரு காதல் காட்சி இன்றளவும் எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று..
  ரஜினியிடம் ஸ்ரீதேவி தனது காதலை வெளிப்படுத்தும் காட்சி.. ஸ்ரீதேவி தயங்கி தயங்கி தன காதலை சொல்ல, ரஜினி அதை நாகரீகமாக மறுக்க, அதற்கு ஸ்ரீதேவி “நான் மேடையில் பல பேர் முன்னிலையில் பாடுபவள் என்பதால் தானே நீங்கள் மறுக்கின்றீர்கள்” என்று கண்ணீர் சிந்த, பதிலுக்கு ரஜினி அவரை மென்மையாக சமாதானப் படுதியவாறே காதலுக்கு தலையசைக்க என்று அந்த காட்சியே ஒரு கவிதையாக படம்பிடிக்கப்பட்டிருக்கும்..
  அந்த அளவிற்கு, காதல் காட்சியை மிக கண்ணியமாக ரசிப்புதன்மையுடன்
  ரஜினியை வைத்து இன்று வரை மகேந்திரனைத் தவிர யாருமே இயக்கியதில்லை..
  ___________

  எதார்த்தம், கவிதை, அழகு, நேர்த்தி, கண்ணியம்… இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட அனைத்து அம்சங்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்த அற்புதமான காட்சி அது… நன்றி.

 5. கிரி

  ரொம்ப அருமையான படம்..எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. நான் கஷ்டப்பட்ட வந்ததாலோ என்னவோ இந்த படம் பார்க்கும் போது பல நினைவுகள் வந்து செல்லும்..

  நான் இந்த படத்தை பற்றி தலைவர் பிறந்த நாள் அன்று கூறலாம் என்று இருந்தேன்! ..ம்ம்ம்
  ______________
  அதனாலென்ன… இன்னொருமுறை ‘கூறுங்க’ உங்க பாணில. அவருடைய பல படங்கள் திருக்குறள் மாதிரி. பல பேர் உரை எழுதலாம்!

 6. r.v.saravanan

  எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா… பல்சுவையும் சொல்லுதம்மா… கண்மணியே பாட்டு

  naan migavum virumbum padal

 7. r.v.saravanan

  வாழ்க்கை இத்தனை வலி மிகுந்ததா

  enbathai indha padam bol en valkaiyilum nan anubavithirukiren

  thanks vasan

 8. kannaiah

  இப்பவும் ரஜினி இந்த மாதிரி படங்கள்ல நடிக்கணும் என்பது என் விருப்பம். அமிதாப்பை பாருங்க, “Black, Paa” அப்படீன்னு வித்தியாசமா கலக்கறாரு. ரஜினியும், இன்னமும் சின்ன பசங்களோட போட்டி போடறதை விட்டுட்டு அமிதாப் மாதிரி தனக்கான ஒரு ரூட் பிடிக்கலாம். (இது கமலுக்கும் பொருந்தும்).

  ஆனால் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது வணிகம் சார்ந்த ஒரு பெரிய கேள்விக்குறி. ரஜினி ரசிகர்கள் தான் மாற்றத்தை வரவேற்க தயாராய் இருக்கணும். ரஜினியும் வணிகத்தையும், தன்னுடைய image ஐயும், கொஞ்சம் compromise செய்து ஒரு பரீட்சார்த்தமான சிறந்த படம் ஒன்னு கொடுக்கணும். அதுக்காக குசேலன் மாதிரி எதுவும் பண்ணிடக்கூடாது. அது வாசுவோட – ஆத்துலேயும் இல்லாம, சேத்துலேயும் இல்லாம என்பது போல – ஒரு மிகப் பெரிய சொதப்பல்.

 9. Ram

  I Personally like this kinda movies from rajini sir, IMO SP Muthuraman sir at early stages and Mahendran Sir had done wonders with Rajini Sir.Even Mahendran sir had said that its good for cinema if rajini changes , i expect rajini to go on for realistic movies again and join hands with his friend Kamal Haasan in taking cinema to next step , rather than doing all masala entertainers, I’m not against them but it would be nice if he does one realistic movie for 4 entertainers. Even Rajini sir himself told once i would rather like to do realistic films than entertainers. So i want him to do his heart’s desire so that fans like me who except the good old rajini too are stisfied

 10. kalaiyarasan

  அருமையான படம் ஆறில் இருந்து அறுபது வரை ரஜினி படத்திலேயே மனச ரொம்ப கஷ்டப்பட வச்சது இந்த படம்தான் இன்றும் தொலைக்காட்சியில் இந்த படம் போட்ட எங்க வீட்டில் எல்லோரும் ரசிச்சி பார்க்கிற படம் இது.

 11. Tamil Selvan

  //அவருடைய பல படங்கள் திருக்குறள் மாதிரி. பல பேர் உரை எழுதலாம்!

  நச்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *