BREAKING NEWS
Search

லிங்கா முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

லிங்கா முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

lingaa-cont

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

லிங்கா படம் தலைவர் ரஜனியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

தமிழகம் தவிர பிற பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் தமிழகத்தில் நேற்று மாலைதான் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு தொடங்கப்பட்டது (அபிராமி போன்ற அரங்குகளில் டிக்கெட் விற்பனை திங்களன்றே தொடங்கிவிட்டது). ரசிகர்கள் பெரும் வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கினர்.

ஆனால் ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் டிக்கெட் விற்றதால் அரை மணி நேரத்துக்குள் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு உள்ள காட்சிகளுக்குத்தான் இப்போது டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

படம் வெளியாகும் வெள்ளியன்று அதிகாலை 1 மணி, 4.30 மணி, 8 மணி, 11.30 மணி, 2.30 மணி, 6.30 மணி மற்றும் இரவு 10 மணி என மொத்தம் ஏழு காட்சிகளை பல அரங்குகள் நடத்துகின்றன.

மாயாஜாலில் உள்ள 16 திரைகளிலும் பத்து நிமிட இடைவெளியில் ஒரு காட்சி என 100 காட்சிகளுக்கும் அதிகமாக லிங்கா திரையிடப்படுகிறது. மாயாஜால், தேவி போன்ற மால்களில் இன்றுதான் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது என்பதால், முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த அரங்குகளுக்காக காத்திருக்கின்றனர்.

-என்வழி




8 thoughts on “லிங்கா முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

  1. M.MARIAPPAN

    வெல்டன் தலைவா , லிங்காவின் சாதனைகள் தொடரட்டும்

  2. Nakeeeran

    Vino, நான் தலைவர் படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன் … அபுதாபி 11-12-14 – மாலை 9 முதல் நாள் முதல் காட்சி…… என்னுடைய சந்தோசத்திற்கு இப்போ எல்லையே இல்லை ….. கடந்த ஒரு வாரமாக என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியாமல் இருந்தது இப்போ ஓகே ஆனாலும் படம் பார்க்கும் வரை என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த mudiyaathu…. துபாயில் இருக்கும் என்னை போன்றோருக்கு நாளை தான் Diwali, பொங்கல், எல்லா விழாவும்…..

  3. மிஸ்டர் பாவலன்

    ரஜினி படம் ரிலீஸ் ஆனால் நான் குறைந்தது ஒரு மாதம் கழித்து
    தான் தியேட்டரில் பார்க்கிறேன். படம் டைட்டில் போடுவதில் தொடங்கி
    முடியும் வரை ஒரே சத்தம், அமளி, கைதட்டல் என disturbance ஆக
    இருப்பதால் ஒரு மாத காலம் அவகாசம் தேவைப் படுகிறது. கமல் ஹாசனின்
    மன்மதன் அம்பு படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திலேயே தியேட்டரில் பார்த்தேன். தியேட்டர் காலியாகவும், அமைதியாகவும் இருந்ததால் எந்த
    disturbance இல்லாமல் கமல் படம் பார்க்க முடிந்தது.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  4. குமரன்

    மிஸ்டர் பாவலன் அவர்களே!

    ///மன்மதன் அம்பு படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திலேயே தியேட்டரில் பார்த்தேன். தியேட்டர் காலியாகவும், அமைதியாகவும் இருந்ததால் எந்த
    disturbance இல்லாமல் கமல் படம் பார்க்க முடிந்தது.///

    வஞ்சப் புகழ்ச்சி அருமை!!
    விழுந்து விழுந்து சிரித்தேன் !!!

  5. குமரன்

    மன்மதன் அம்பு கலைச்செல்வி திரிஷா நடித்தது என்பது மிஸ்டர் பாவலன் மறந்திருக்க மாட்டார் !!

  6. gandhidurai

    வினோ
    நானும் டிக்கெட் வாங்கியாச்சு. குவைத் ல 4 தியேட்டர் ல போட்டுருக்காங்க . ஆனா முதல் ஷோ 9.30 கு தான்.பார்த்துட்டு சொல்ரேன் .

  7. மிஸ்டர் பாவலன்

    ///மன்மதன் அம்பு கலைச்செல்வி திரிஷா நடித்தது என்பது மிஸ்டர் பாவலன் மறந்திருக்க மாட்டார் !!//// (குமரன்)

    ஸ்டில்ஸ் பார்த்து விட்டு தரிஷாவிற்காக தான் அந்த படம் பார்த்தேன்
    என்பதை நண்பர் குமரன் அறிந்திருக்க மாட்டார் !

    -== மிஸ்டர் பாவலன் ==-

  8. ram

    These people do not have the courage
    to face our thalaivar.They wanted to try and divert BIG attention he will get tomrw
    and so clearly planned / preponed the electricity hike to make public talk abt it…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *