BREAKING NEWS
Search

3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!

3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!

டெல்லி: தொலைத் தொடர்புத் துறையில் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு இல்லாத வசதிகளோ, நவீன எந்திரங்களோ கிடையாது. bsnlஆனால் இன்னும் கூட தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் பின் தங்கி, மிக மோசமான மொபைல் சேவை, வாடிக்கையாளர் சேவைக்கு விருது வாங்கும் நிலையில்தான் இந்த மாபெரும் நிறுவனம் இயங்கி வருகிறது.

காரணம் லஞ்சம், சோம்பேறித்தனம், தனியார் துறையினர் நன்றாக சம்பாதித்துக் கொழுக்கட்டும் என்ற தாராள மனப்பான்மை!

3ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான செல்போன் வசதியை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மிக மோசமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்களே இந்த நிறுவனத்துக்கு உள்ளதும், அடுத்து வரும் செப்டம்பருக்குள் தனது 3 ஜி சேவைக்கு 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனமே அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3 ஜி எனப்படும் நவீன மொபைல் சேவைக்குள் நுழைந்துள்ளது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல். கடந்த பிப்ரவரியிலேயே இந்த சேவை துவங்கப்பட்டது. 70 நகரங்களில் இந்த சேவை அளிக்கப்பட்டாலும், இதுவரை 9 ஆயிரம் சந்தாதாரர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் (அந்த லட்சணத்தில் இருக்கிறது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மற்றும் விளம்பரம்!)

இதுவே தனியார் துறையாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பாதியை ஏலத்தில் விட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு நவீன வசதி இருக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொள்கிறது பிஎஸ்என்எல்!

இப்போது இந்த 3 ஜி வசதியை 1000 நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போகிறதாம் பிஎஸ்என்எல். இந்த ஆயிரம் நகரங்களுக்கும் சேர்த்து 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டும் அடுத்த 3 மாதங்களுக்குள் சேர்க்கப் போகிறார்களாம் (இலக்கைக் கூட உயர்ந்த அளவு நிர்ணயிக்கிறார்களா பாருங்கள்!).

ஏதோ ஒரு பிஎஸ்என்எல் அலுவலக படம்...

ஏதோ ஒரு பிஎஸ்என்எல் அலுவலக படம்...

“அதாவது இவர்களின் டார்கெட் சராசரியாக ஒரு நகரத்துக்கு 100 வாடிக்கையாளர்கள். அவ்வளவுதான். மற்ற வாடிக்கையாளர்களை பகிரங்கமாக தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்”, என்கிறார் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒரு ‘நல்லவர்’.

3ஜி சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மொபைலில் பெற முடியும். குறிப்பாக, வீடியோ சாட்டிங், கேம்ஸ், அதிவேக இன்டர்நெட் வசதி, தொலைக்காட்சி பார்க்கும் வசதி… இப்படி எல்லாமே உண்டு. இதை முறைப்படி விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தால், இந்தியாவில் பல கோடி சந்தாரர்கள் பிஎஸ்என்எல்லைத் தேடி வருவார்கள்.

ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர்களோ, விவரம் கேட்டு வருபவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக விவரக் குறிப்புகளைக் கூட சொல்ல ஆளில்லை, வாடிக்கையாளர் பிரிவுகளில்.

பெரும்பாலும் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மிக மிக சோம்பேறிகளாகக் காணப்படுகின்றனர். அல்லது வாடிக்கையாளர் கேட்கிற விவரத்தைச் சொல்லத் தெரியாத அளவுக்கு தண்டமாக அமர்ந்திருக்கிறார்கள். அதிகபட்சம் ‘நோட்டு’ எண்ணி கல்லாவில் போடுவது, வருபவர்களிடம் அச்சடித்த குறிப்புகளைக் கொடுத்து அனுப்புவதுதான் இவர்களுக்குத் தெரிந்த வேலைகள்.

சதா சர்வகாலமும் இந்த அலுவலகங்களில் கைமுறுக்கு விற்பவர்களும், இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்பவர்களும் ஏதோ மாமியார் வீட்டுக்கு வந்து போவது போல சகஜமாக நடமாடிக் கொண்டிருப்பதை இப்போது போனாலும் பார்க்கலாம் (உ.ம்., மடிப்பாக்கம்,  தாம்பரம், பூந்தமல்லி, க்ரீம்ஸ் ரோடு…)

முதல் தலைமுறைக்கும் முந்தைய தலைமுறை மனப்பான்மையில்தான்  இந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் செயல்படுகிறார்கள்.

அதை நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் 70 நகரங்களில் கடந்த 4 மாதங்களில் வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை இவ்வளவு பகிரங்கமாக கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சொல்கிறார், பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்!

பொருளாதார மந்தத்தில், இருந்த வேலையைத் தொலைத்து விட்டு, அல்லது சம்பளமில்லாமல் வேலை பார்த்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான படித்த தொழிலாளர்கள் ஒருபக்கம்… ஆரம்ப சம்பளமே ரூ.40 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு, ஒன்றுமே தெரியாத தண்டங்களாய், ஏஸி ரூமில் வெட்டியாய் பொழுதைக் கழித்து, ஒரு மாபெரும் நிறுவனத்தை உருப்படாமல் செய்துகொண்டிருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாதிரி சிலர் இன்னொரு பக்கம்…

டாடாக்களும் அம்பானிகளும்தான் இந்தத் துறையில் பலன் பெற வேண்டும் என பிஎஸ்என்எல் / அரசு நினைத்தால் அதை பகிரங்கமாக அறிவித்துத் தொலைக்க  வேண்டியதுதானே… ஏன் இவ்வளவு பம்மாத்து… இந்த தண்டச் சம்பளமாவது மிச்சமாகுமல்லவா!

-விதுரன்




5 thoughts on “3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!

  1. ramalingam

    டெலிபோனால் தலையில் அடித்துக் கொள்ளும் போட்டோ நன்றாக இருந்தது. தயாநிதி மாறன் இருந்தபோதுகூட தொலைத் தொடர்பு சுறுசுறுப்பாக இருந்தது. அரசு கேபிளின் நிலைதான் இதற்கும். ஏதோ பெயருக்கு அறிவித்து விட்டார்கள்.

  2. Manithan

    somberigal annaivariyum adidhu thratha vendum. Performance basela velai koduka vendum appothan govt sector nalla nilaiku varum…ithu bsnla mattum nadakula ella govt sector layum intha nilaithan….Govt have to appoint young guys….they have to relieve all keladu kattaikal….

  3. sekarst

    enga areavula bradband connectiona monthly 10days cut akidum (Thiruvarur Dt) karanam keeta theriyalnu mattum than patil varum

  4. BhavaniShankar

    சென்ற வாரம் நடந்த BSNL JTO தேர்வின் கால்யிடங்கள் 4000. எழுதியவர்கள் 22 லட்சம். எந்த தனியார் நிறுவனத்தை விடவும் அரசு ஊழியர்கள் திறமையானவர்களே. தலைமை சரி கிடையாது. தனியார் மயம் ஆக்கப்பட்டாலே இந்திய முன்னேறும். தனியா மயம் கூட தேவை இல்லை. நமக்கு தேவை இருக்கும் திறமைகளை வழி நடத்த நல்ல தலைமை ஒன்றே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *