BREAKING NEWS
Search

முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்!


சென்னை: உலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் என்ற பெருமையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 பெறுகிறது. இந்தப் படம் வரும் மே மாதத்தில் சீனாவில் 56000 அரங்குகளில் வெளியாகிறது. சீனாவில் மட்டுமே ரூ 500 கோடிக்கு மேல் வசூலாகும் வாய்ப்பு உள்ளதால் ரூ 1000 கோடிக்கு மேல் குவித்த முதல் ரஜினிகாந்த் படம் என்ற பெருமை 2.0வுக்கு கிடைக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான 2.0 கடந்த வியாழன் (நவ.29) உலகெங்கும் 68 நாடுகளில் 15000 அரங்குகளில் வெளியானது. இந்தியப் படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியான முதல் படம் 2.0 தான்.

இந்தப் படம் இதுவரை ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. முதல் 8 நாட்களில் தமிழில் மட்டும் ரூ 135 கோடியும், இந்தியில் ரூ 132 கோடியும், தெலுங்கில் 100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகத்தில் இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூலைக் குவித்துள்ளது.

வெளிநாடுகளில் இதுவரை எந்த இந்தியப் படமும் செய்யாத வசூல் சாதனைகளை 2.0 நிகழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் வசூலில் முதல் 5 இடங்களிலும் சூப்பர் ஸ்டாரின் படங்களே உள்ளன.

இந்த நிலையில் படத்தை சீனாவில் வரும் மே மாதம் வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள 56000 அரங்குகளில் 2.0 வெளியாக உள்ளது. இவற்றில் 47000 திரைகள் 3டி வசதி கொண்டவை. சீனாவில் உள்ள எச்ஒய் மீடியா நிறுவனத்துடன் இணைந்து 2.0வை லைகா வெளியிடுகிறது.

சர்வதேச அளவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் ரஜினியின் 2.0தான். இதன் மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் குவித்து டங்கல், பாகுபலி 2 சாதனைகளை 2.0 முறியடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

– என்வழி




One thought on “முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *