BREAKING NEWS
Search

2 ஜி: மன்மோகன் சிங் மீது தவறில்லை… வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம் – ஜேபிசி

2 ஜி: மன்மோகன் சிங் மீது தவறில்லை… வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம் – ஜேபிசி

Manmohan-Singh_2g

டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள். ஆனால் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரூ 40080 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிவித்துள்ளது.

பிசி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாதான் பிரதமரை 2 ஜி விவகாரத்தில் தவறாக வழி நடத்தினார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

சிஏஜி அறிக்கை முட்டாள்தனமானது

அதே நேரம் ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்ற சிஏஜி அறிக்கையை முட்டாள்தனமான ஒன்று என வர்ணித்துள்ளது.

“2 ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டுக்கான கட்டணம் குறித்த சிஏஜியின் கணக்கீட்டில் மிகப் பெரிய குறை உள்ளது. கணிக்கத் தெரியாமல் தோராயமாக ஒரு தொகையைக் குறிப்பிட்டு வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,” என ஜேபிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு வகுக்கப்பட்ட வரைமுறைகள் கொண்ட பத்திரிகைக் குறிப்பில் ஒரு பத்தியை அழித்தவர் என்று ஆ ராசாவை இந்தக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம்

வாஜ்பாய் அரசில் தொலைத் தொடர்புத் துறைக்குப் பொறுப்பு வகித்த ஜக்மோகனின் ஆட்சேபணைகளையும் மீறி வருவாய் பகிர்வு முறைக்கு டெலிகாம் நிறுவனங்களை அனுமதித்தது ரூ 40080 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜேபிசி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் உண்டாகக் காரணமே முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைசத்சர் பிரமோத் மகாஜன்தான் என்கிறது ஜேபிசி.

மக்களுக்குக் கிடைத்த பலன்கள்தான் முக்கியம்

‘2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்பது மிகப் பெரிய அபத்தக் கணக்கு. தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் வருவாயை அதிகரிப்பதல்ல. அடித்தட்டு மக்கள் வரை கிடைத்த பலனைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும்’, என்றும் ஜேபிசி தெரிவித்துள்ளது.

ஜேபிசியின் இந்த புதிய அறிக்கை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் திங்கள் கிழமை சமர்ப்பிக்கப்படும். அப்போது திமுக மற்றும் பாஜகவினர் பெரும் எதிர்ப்பில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-என்வழி செய்திகள்




2 thoughts on “2 ஜி: மன்மோகன் சிங் மீது தவறில்லை… வாஜ்பாய் அரசால் ரூ 40080 கோடி நஷ்டம் – ஜேபிசி

  1. குமரன்

    இலங்கை விவகாரம் குறித்துக் கூட ஒரு பாராளுமன்றக் குழு அமைத்து, அங்கு நடந்த இனப்படுகொலைக்கு சோனியாவும் ராஜபக்சேயும், கருணா நிதியும் காரணம் அல்லவே அல்ல, பழ.நெடுமாறனும் வைகோவும்தான் காரணம் என்று தீர்ப்பு கொடுத்து விடலாம்!

    கூட்டுக் கொள்ளைக் காரர்கள் திமுகவும் காங்கிரசும் என்பதை அப்போதே கருணா நிதி போட்டு உடைத்து இருந்தால் இப்போது இதெல்லாம் நடக்குமா?

    சரித்திரத்தின் பக்கங்களைக் கருணா நிதி புரட்டிப் பார்த்தால் அவருக்கு ஒன்று புரியும்

    ஈழத்தில் புலிகள் கோலோச்சிய வரை சோனியா கருணாநிதியை மதித்தார். அங்கே புல்கள் அழிந்த பின்னால் சோனியாவுக்கு கருணா நிதி கிள்ளுக் கீரைதான்.

    தமிழர் என்பதற்கு தனிப்பட்ட பொருள் வைத்திருக்கும் கருணாநிதிக்கு இத்தாலிக் காரியின் சதிவலை புரிபடாததில் வியப்பில்லை.

  2. soban babu

    Bullshit and ridiculous report by JPC…
    JPC is jalra party for congress…that’s all I can say.
    Next time congress will be and shud routed by people
    Jai hind

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *