BREAKING NEWS
Search

25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி- குடியரசுத் தலைவர் கவுரவம்

25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி- இன்று குடியரசுத் தலைவர் கவுரவம்!

 Rajini-to-meet-media-fans

டெல்லி: என்டிடிவி நடத்திய கிரேட்டஸ்ட் இந்தியர்கள் 25 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடமும், சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளன. சாதனையாளர்கள் அனைவரையும் இன்று மாலை நேரில் கவுரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

என்டிடிவி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை சில மாதங்களாக அந்நிறுவனம் நடத்தியது.

இதில் இந்தியாவின் அனைத்துத் துறையைச் சேர்ந்த பிரரபலங்கள், சாதனையாளர்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர். அதாவது இப்போது வாழும் சாதனையாளர்கள்தான் இந்தப் பட்டியலில் இடம்பெற்றனர்.

பொதுமக்கள் இணையதளம் மூலம் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்

இதில் சூப்பர் ஸ்டார் 6.43 விகித வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆரம்பத்திலிருந்தே ரஜினிதான் இந்த கணிப்பில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Untitled

 

சச்சின் டெண்டுல்கர்

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவரும் ரஜினி அளவுக்கு வாக்குகள் பெற்றிருந்தாலும், நடுவர்களின் வாக்கு மற்றும் கருத்துக் கணிப்பின் விதிமுறைகள் படி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

ஏஆர் ரஹ்மான்

மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை தந்த ஏஆர் ரஹ்மான்.

ரத்தன் டாடா

தொழிலதிபரும், டாடா குழும முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

ஷாரூக்கான்

பாலிவுட்டின் கிங் என புகழப்படும் ஷாரூக்கானுக்கு இந்த பட்டியலில் 5வது இடம் கிடைத்துள்ளது.

கபில்தேவ்

25 பேருக்கான பட்டியலில் அமிதாப் பச்சனுக்கு 9வது இடமும், கிரிக்கெட் சாதனையாளர் கபில் தேவுக்கு 15வது இடமும் கிடைத்துள்ளன.

1465134_10201243792598127_828396424_n

இன்று விருது

இந்த போட்டியில் முதல் 25 சாதனையாளர்களை நேரில் அழைத்து கவுரவிக்கிறது என்டிடிவி. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சாதனையாளர்களை கவுரவித்தார்.

ரஜினி பங்கேற்பு

இந்த விழாவில், பட்டியலில் முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் பங்கேற்று, குடியரசுத் தலைவரிடம் விருதினைப் பெற்றார். விருதினை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்சார். விழாவுக்கு லதா ரஜினியும் சென்றிருந்தார்.

1488993_630530573677190_627055064_n

என் மாநிலம் தமிழகத்துக்கு நன்றி

ஏஆர் ரஹ்மான் தனக்கான விருதினைப் பெற்றுக் கொண்டு பேசும்போது, இந்த வாய்ப்பைத் தந்த என் மாநிலமான தமிழ்நாட்டுக்கு நன்றி என்றார் பெருமையுடன்.

ஆன்லைனில் முதல் இருபத்தி ஐந்து இடங்களில் பிரபலங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், விருது கொடுத்து கவுரவிக்கும்போது இந்த வரிசைக்கிரமம் பின்பற்றப்படவில்லை. இருபத்தி ஐந்து சாதனையாளர்களையும் கலவையாக அழைத்தது நெருடலை ஏற்படுத்தியது.

-என்வழி

 




11 thoughts on “25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி- குடியரசுத் தலைவர் கவுரவம்

  1. srikanth1974

    25 இந்தியர்களில் முதல் இடத்தைப் பிடித்த
    எங்கள் தங்க முதல்வருக்கு வாழ்த்துக்கள் .

  2. kumaran

    36 ஆண்டுகள் அவர் செய்த சேவைக்காக தான் இந்த கெளரவம் , தமிழகத்துக்கு இன்னும் என்ன செய்யவேண்டும் , செய்தவைக்கு நாம் நன்றிகடன் பட்டுள்ளோம் (36 ஆண்டுகள் கோடிகணக்கான மக்களை மகிழ்வித்திருக்கிறார்)

  3. Deen_uk

    ////@Elango says:
    December 14, 2013 at 6:07 pm
    இந்த பெருமைகளை அள்ளி… அள்ளி … தந்து கொண்டிருக்கும் .. தமிழீனதிற்கு உங்கள் சேவை ?????????///
    எதையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழ்வது நன்று.
    சேவை செய்வதும் உதவி செய்வதும் அவரவர் விருப்பம்.
    யாரையும் கட்டாயபடுத்தகூடாது .நாமே யாருக்கும் உதவி செய்தாலும் கூட எதையும் எதிர்பார்க்காமல் செய்வதே சிறந்தது.
    இவர் மட்டும் தமிழ் நாட்டில் நடிகர் இல்லை.இவர் மட்டும் சம்பாதிக்கவில்லை. அது ஏன் மற்றவர்களை யாரும் எதுவும் கேட்பதில்லை?அவரா உங்களை கட்டாய படுத்தி அவர் படங்களை பார்க்க வைத்தார்?பிடித்ததால் பார்த்தீர்கள்.கொடுத்த காசுக்கு அவர் உங்களை சந்தோஷ படுத்திவிட்டார்..அவ்வளவு தான் deal over ..அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்.அவரே விரும்பினாலும் என்னை போன்றவர்களுக்கு அவர் அரசியல் வருவதில் விருப்பம் இல்லை..அவர் பெயர் கெட விரும்பவில்லை.வாழும் வரை இதே புகழோடு இருக்கட்டுமே.

  4. Rajadurai

    Indians call him the ‘God’ of cricket but Sachin Tendulkar is clearly in awe of superstar Rajinikanth. The 40-year-old retired cricketing legend saluted the film star by saying he was ‘floored by Rajini sir’s humility’

    சச்சின் சொன்னது…..
    இருவரும் முதல் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் யங்கர்ஸ் மற்றும் ரிடைர்மென்ட் காரணமாக சச்சின் தலைவருடன் பகிர்ந்து உள்ளதாக சொன்னது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

    http://www.ndtv.com/video/player/news/floored-by-rajinikanth-s-humilty-says-sachin-tendulkar/301425

  5. s.sudha

    ரொம்ப சந்தோஷப்படுகிறோம் தலைவா. ndtvkku நன்றி.

  6. Baskaran

    //Elango says:
    //December 14, 2013 at 6:07 pm

    //இந்த பெருமைகளை அள்ளி… அள்ளி … தந்து கொண்டிருக்கும் .. தமிழீனதிற்கு உங்கள் சேவை ?????????

    ஹலோ இளங்கோ ,

    இந்த கேள்விய நீங்க ஏன் அம்பானி இல்ல டாட்டா விடம் இல்ல தயாநிதி மாறனிடோமோ கேக்க வேண்டிடதுதனே . இவங்கல்லாம் எத்தனயோ கோடிகளை (100 களில் ) தமிழக மக்களிடம் சம்பதிக்கிறங்க . உங்கள கேட்க முடியாது , என்ன அடுத்த நாலு உங்க வீட்டுக்கு ஆட்டோ வோ இல்ல டாட்டா சுமோ வோ வந்து நிக்கும் . ஒருத்தரு அமைதியாக அவரு வேலைய பாக்க விட மாட்டிர்கள் . இல்ல இதனை வருஷம் நீ வேல செஞ்சி எத்தன பேருக்கு உதவி பண்ணிருப்பே , முதல்ல உன் முதுக நீ பாரு , அப்புறம் அடுத்தவர் முதுக சொறியலாம் , என்ன புரியுதா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *