BREAKING NEWS
Search

அஜீத் பேச்சு.. முதல்வரைப் பாராட்டும் பகுதி மட்டும் இடம்பெறுகிறது!

அஜீத் பேச்சு.. முதல்வரைப் பாராட்டும் பகுதி மட்டும் இடம்பெறுகிறது!

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேச்சு மட்டும் கட் செய்யப்பட்டு கலைஞர் டிவியில் க்ளிப்பிங்ஸ் காட்டப்பட்டு வந்ததல்லவா…

அஜீத் முதல்வரைச் சந்தித்து ‘ஆசி’ பெற்று வந்த பிறகு நிலைமையில் சற்றே மாறுதல் தெரிகிறது.

முன்பு விளம்பர கிளிப்பிங்ஸில் கூட அஜீத் படத்தைக் காட்டாத கலைஞர் டிவி, இப்போது அவர் பேசுவது போன்ற காட்சியைக் காட்டுகிறது.

முதல்வர் நல்லவர், வல்லவர், கருணையுள்ளம் கொண்டவர் என்றெல்லாம் தனது பேச்சின் ஆரம்பத்தில் ஒரு பேப்பரைப் பார்த்துப் படிப்பார் அஜீத். அநேகமாக அந்தப் பகுதிமட்டும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. அதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டுவது போல நிகழ்ச்சியை எடிட் செய்துள்ளார்களாம் கலைஞர் டிவியின் சூப்பர் எடிட்டர்கள்!

200 புதுமுகங்களுடன் சேரனின் ‘அடுத்த தலைமுறை’!

தோல்விகள் பலமாகத் தாக்கும்… ஆனால் கலை மீதான வெறி, அந்த தோல்வியை புரட்டிப் போட்டுவிட படைப்பாளியைத் தூண்டும்.

கலையுலக கண்டனக் கூட்டத்தில் கேவலமாகப் பேசியது, சமீபத்திய திருட்டு விசிடி கண்டனக் கூட்டத்தில் அரிவாள் எடுத்து வெட்டச் சொன்னது உள்ளிட்ட இன்னும்எத்தனையோ சர்ச்சைகள், அர்த்தமற்ற சீற்றங்கள் போன்றவற்றில் சிக்கி ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டாலும், ஒரு படைப்பாளியாக சேரன் மீது இன்னும் கொஞ்ச நஞ்ச மரியாதை இருக்கவே செய்கிறது, ஒரு சாராரிடம்.

மாயக்கண்ணாடி, பொக்கிஷத்தில், தோல்விப் பள்ளத்தாக்கில் விழுந்தவர் மீண்டும் வெற்றியின் சிகரம் தொடும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சேரன், அடுத்து தனது இயக்கத்தில் ஒரு படத்தை உருவாக்குகிறார்.

இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. மாறாக 20 புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். இதற்காக மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்களை நேர்முகத் தேரேவு நடத்தி தேர்வு செய்து அவர்களுக்கு ஒத்திகை மூலம் பயிற்சியும் தந்து படத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம்.

இதற்கு முந்தைய படமான பொக்கிஷத்துக்கு சேரன் ரூ 8 கோடி செலவழிக்கச் செய்தார் அதன் தயாரிப்பாளரை. இதனால் ஏற்பட்ட நஷ்டம் தாங்காமல் தயாரிப்பாளர் இதேஷ் ஜபக் தற்கொலை வரை போனது நினைவிருக்கலாம்.

அந்த முன்னெச்சரிக்கை உணர்வோ என்னமோ… இந்தப் புதிய படத்துக்கு ரூ 4 கோடி இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம் இப்போதைய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திடம.

இதேஷ் ஜபக்குக்கு நேர்ந்த கதி கல்பாத்தி அகோரத்துக்கு நேராமலிருந்தால் சரி!
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *