BREAKING NEWS
Search

2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!

rajini-resul

ங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக ரஜினி தனக்கான டப்பிங் வேலையை நேற்று தொடங்கினார்.

ரூ 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.ஓ படத்தின் ஷூட்டிங் வேலைகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. பாடல் காட்சி, சில பேட்சிங் காட்சிகள்தான் இன்னும் படமாக வேண்டியுள்ளதாம்.

இதற்கிடையே, ரஜினி தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதைத் தொடங்கியுள்ளார்.

thalaivar-dubbing

முதல் நாளே 3 ரீல்களுக்கு டப்பிங் பேசிக் கொடுத்துவிட்டாராம். அந்த வேகத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார் படத்தின் ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், “தலைவர் ரஜினியின் கமிட்மென்ட், வேகத்துக்கு இணையில்லை. ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசிவிட்டார். அவரது வேலையின் வேகம் பார்த்து பிரமிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், “தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நான் செலவழித்த நேரத்தை நினைத்தால் உண்மையிலேயே நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். முழுக்க அன்பு நிறைந்த மனிதர். அவரது வாழ்க்கையில் எனக்கும் ஒரு இடம் தந்ததற்கு நன்றி!” என்று கூறியுள்ளார்.

-என்வழி




One thought on “2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *