BREAKING NEWS
Search

1996-ல் உண்மையிலேயே ரஜினியால் முதல்வராகியிருக்க முடியுமா?

1996-ல்  ரஜினி முதல்வராக வந்திருக்க முடியுமா?

வினோஜி

தலைவர் பற்றி வெகு நாளாக எனக்குள் இருக்கும் சந்தேகம் இது. தாங்கள் இதைக் கேள்வி பதில் பகுதியில் பதிலளித்தாலும் சரி அல்ல வேறு பதிவில் தெரிவித்தாலும் சரி.

தலைவர் 1996 ஒரு அறிய வாய்ப்பு இழந்ததாக பலரும் சொல்கிறார்கள் நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்… உண்மையில் (கலைஞர், மூப்பனார் அவர்கள் இருக்கும் போது ) இது எப்படி சாத்தியம் … தனியாக போட்டியிடும் என்னமா ?

காமேஷ்,  rao@dafin.co.bw

rajni_meets_karunanidhi

ன்றி காமேஷ். நிறைய விஷயங்களைச் சொல்ல வைக்கும் உத்தி உங்களது இந்தக் கேள்வி! ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களை தனித்தனியாகவே கொடுத்திருக்கிறேன்…

1995-ம் ஆண்டு தினமணியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு தரப்பட்ட பீட் போயஸ் கார்டன்!

இதில் ரஜினி குறித்த செய்திகளுக்கு நான் பொறுப்பு. ஜெயலலிதா பற்றிய செய்திகளுக்கு என்னைவிட மூத்தவரான ஒரு நண்பர் பொறுப்பு என பிரித்துக் கொடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 2 முழு ஆண்டுகள் ரஜினி பீட் பார்த்ததால் அவரது அன்றாட நடவடிக்கைகள் கூட நமக்கு அத்துபடியாகிவிட்டது. நாம் அங்கே போகாவிட்டாலும் கூட வேண்டிய தகவல்களை மிகச் சரியாகச் சொல்லி விடுவார்கள் லதா மேடம் மற்றும் ரஜினியின் உதவியாளர்கள்.

அந்த தருணத்தில் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசக் காத்திருந்தவர்கள் பட்டியல் மிகப் பெரியது. தமிழகத்தின் தலையாய அரசியல் தலைவர் உள்பட பலரும் அவரை நேரில், அதுவும் அவர் வீட்டிலேயே சந்தித்துப் பேச தவம் கிடந்தார்கள் என்பது சற்றும் மிகையில்லாத கூற்றுதான்.
உண்மையில் தமிழ் மாநில கட்சி என்பது அமரர் மக்கள் தலைவர் மூப்பனாரின் யோசனையல்ல. காங்கிரஸிலிருந்து கடைசி வரை பிரியாமல் இருக்கவே அவர் விரும்பினார். ஆனால் அவருக்கே மரியாதை இல்லாத சூழல் காங்கிரஸில் உருவானபோது, ரஜினி தானாக முன்வந்து ஆதரவுக் கரம் கொடுத்தார் மூப்பனாருக்கு.

திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு துவங்குவதற்கு முன் மூப்பனாரின் விருப்பம், ரஜினியை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் ரஜினியோ, மூப்பனார் தலைமையில் ஆட்சி அமையட்டும், அதற்கு என் முழு ஆதரவு உண்டு என்ற முடிவிலிருந்தார். இதற்காகவே அன்றைய பிரதமர் நரசிம்மராவுடன் பல முறை பேசினார். ஒரு முறை நேரிலும் சந்தித்தார்.

அப்போது நரசிம்மராவ் நேரடியாகவே ரஜினியிடம் சொன்னது: “உங்கள் தலைமையில் காங்கிரஸ் தனித்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் நீங்களே முதல்வராக அமர வேண்டும்” என்பதே. விஷயம் கசிந்ததும் தமிழகப் பத்திரிகைகள் அதை பெரிய அளவில் செய்திகளாக்கின.

“காங்கிரஸ் சார்பில் ரஜினி முதல்வர்… இதற்கு மக்கள் ஆதரவு என்ன?”, என்று ஒரு சர்வே அப்போது மேற்கொள்ளப்பட்டது. இப்படி ஒரு சூழல் வந்தால் ‘ரஜினி கட்சி’க்கு 130 முதல் 145 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்தன.

ஆனால் ரஜினி இதை விரும்பவில்லை. வயது, அனுபவம், மூப்பனார் முதல்வர் என்ற தனது விருப்பம் நிறைவேறாத சூழல் உருவாகியிருப்பதைப் புரிந்து கொண்ட ரஜினி, ‘தனிவழி’ கண்ட மூப்பனாருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்.

தமாகவில் ரஜினியின் பங்கு என்ன என்பது பற்றி மூப்பனார் அவர்கள் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சத்யமூர்த்தி பவனில் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது (அதாவது கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில தினங்களுக்குள்):

கேள்வி: (கேட்டவர் பெயர் கல்யாணம், ‘தி இந்து ‘சீனியர் நிருபர்) ரஜினிக்கு தமாகாவில் என்ன பங்கு… அவரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பீர்களா?

பதில்: கட்சியே அவருடையதுதாங்க… அவர்தான் தலைவர்னு வெச்சிக்குங்க… நான் இந்தக் கட்சியில இருக்கேன், அவ்வளவுதான். நாளைக்கே ரஜினி சம்மதம் சொன்னா, நான் இதை அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டு அவர் பின்னால நிப்பேன்.

ரஜினி மீது மக்களுக்கு உள்ள நல்லெண்ணம், நல்லவர்களுக்கு மக்கள் ஆதரவு தருவாங்கன்ற நம்பிக்கை ஆகியவற்றை வைத்துதான் இந்தத் தேர்தலை சந்திக்கிறோம்.

ஆனால் இந்த வழியில் ஆட்சிப் பீடத்தை அடைவதை ரஜினி விருப்பமில்லை. அதைத்தான் அவர் 3.11.2008 ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பிலும் வெளிப்படுத்தினார். அன்று அவர் சொன்னதைப் போல, 1996-ல் முதல்வர் நாற்காலி அவருக்குக் காத்திருந்தது. அதிகாரம் எனும் கிரீடத்தை தங்கத் தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார்கள். போய் நாற்காலியில் அமர்ந்து கிரீடம் சூட்டிக் கொள்வதுதான் பாக்கி.

ஆனால் அவர் ஒரு சந்நியாசியைப் போல மறுத்துவிட்டு தன்வழியில் சென்றார்.  அதனால்தான் இன்றும் அரசியல் உலகம் அவரை ஒருவித அச்சத்துடனே பார்க்கிறது. அரசியலில் இறங்காமலேயே இன்றும் ஒரு அரசியல் சக்தியாய் திகழ்கிறார்.

அவர் வழக்கமாக சொல்லும், ‘எதையும் ஒத்தைக்கு ஒத்தை, ஸோலோவா நின்று ஜெயிச்சிக் காட்டணும்’ என்ற கொள்கையையே அரசியலிலும் கடைப்பிடிக்க நினைக்கிறார்.

…பிறகு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் போது எதற்காக தி மு க விற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்? அப்போது ஆ தி மு க விற்கு தான் அதிக வாய்ப்பு இருந்தது ?

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில், அரசுத் தரப்பில் ரஜினியிடம் அதிகாரப்பூர்வமாக சில தகவல்கள் தரப்பட்டன. இந்தத் தகவல்களைத்தான் அமரர் மூப்பனாரும் ரஜினிடம் அழுத்தமாகக் கூறினார். இவற்றின் அடிப்படையிலேயே ரஜினி சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தின் போது ரஜினி உள்நாட்டில் இல்லை. வெளிநாட்டுப் பயணத்திலிருந்தார். விஷயம் கேள்விப்பட்டு அவசர அவசரமாக சென்னை விமான நிலையம் வந்திறங்கியவரிடம் கருத்து கேட்கப்பட, அந்த நேரத்தில் அரசின் தகவல்களை நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. மேலும் அப்போது பதவியிலிருந்தது, அவரது ஆதரவைப் பெற்ற தமாகா – திமுக கூட்டணியே.

பிறகு காவிரி உண்ணா விரதப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு நதி நீர் பற்றி (தேசியமயமாக்கும் திட்டம்) எதுவும் சொல்லாமல், அந்தப் பணிக்கு தான் ஒரு கோடி தருவதாக அறிவிப்புடன் நிறுத்தி கொண்டது ஏன்?

rajini4

காவிரி பிரச்சினை உண்ணாவிரதமும், அதற்கு ரஜினி தருவதாகச் சொன்ன ரூ 1 கோடியும் பற்றி ரொம்பப் பேர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பல உண்மைகளை குறைந்தபட்சம் யோசிப்பதுகூட இல்லை.

காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்புக்கு சம்மானது. அதை கர்நாடகம் மதித்து நீரைத் திறந்து விட வேண்டும் என்பதுதான் ரஜினியின் நிலைப்பாடு. அதாவது நீதிமன்றம், அரசியல் சாசன அமைப்புக்கு சிறு பங்கமும் இல்லாத நிலையில் நாசூக்காக, ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கலாட்டாக்கள் இல்லாமல் பிரச்சினையை பேசி முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அவருடையது. காரணம், அவருடைய தனிப்பட்ட நலன் அல்ல… கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்தான்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்குதான் கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கப்பட வேண்டுமேயொழிய, ஒட்டு மொத்த கன்னட மக்களுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. ஆனால் இங்கே ரஜினியின் நிலைப்பாடு முற்றாக திரித்து வெளியிடப்பட்டது. ஆட்சியாளர்களே பாரதிராஜா போன்றவர்களைத் தூண்டிவிட்டு, ரஜினியைக் குறிவைத்து தாக்கிப் பேசியதெல்லாம் தெரிந்த கதை. அதனால்தான், உணர்வுப் பூர்வமாகவும் நியாயமாகவும் ரஜினி மேற்கொண்ட உண்ணாவிரதத்துக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்தது.

திரையுலகமும் அரசியல் உலகமும் திரண்டு அவர் பக்கம் நின்றது.

உண்ணாவிரத முடிவில் ரஜினி அறிவித்த ரூ.1 கோடி பற்றி நிறைய பேசுகிறார்கள். ஆனால் அந்தத் தொகையைத் தரக்கூடிய சூழலை ஆட்சியாளர்கள் இன்னமும் உருவாக்கவே இல்லையே. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கூட இதுவரை வெளியாகவில்லை. தேசிய நதி நீர் இணைப்புக்கு 2002-ல் போடப்பட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் கோடிகள். ஆனால் இன்று அது கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துவிட்டது.
எனவே அரசுத் தரப்பில் மவுனம் சாதிக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சினையை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்ல ஆட்சியாளர்கள் முன்வந்தால், நிச்சயம் ரஜினி ஆதரவளிப்பார். மிகப் பெரிய அளவில் அந்தத் திட்டத்துக்கு உதவ அவர் முன்வரக் கூடும். ஆனால் இதய சுத்தியோடு, எந்த அரசியல் உள்நோக்கமுமின்றி அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

அவர் தம் எண்ணத்தில் அரசியல் வழக்கை பற்றி எதாவது திட்டம் இருக்கிறதா… தாங்கள் அவருடன் உரையாடிய போது அதுபற்றி கோடிட்டு ஏதாவது சொன்னாரா..?

ரசியல் திட்டங்களைப் பொறுத்த வரை, அன்று முதல் இன்று வரை ஒரே நிலைப்பாட்டில் இருப்பவர் ரஜினி. யாருடைய தூண்டுதலின் பேரிலோ, அறிவுரையின்படியோ அவர் அரசியல் செய்பவரல்ல. தன் மனசாட்சிப் படி, முடிவெடுத்து செயல்படுபவர்.

ஒருமுறை ரஜினியின் அரசியல் பற்றி, அவரை கடுமையாக விமர்சித்து வந்த பாரதிராஜா இப்படிச் சொன்னார்:

‘நான் எவ்ளோ பேரைப் பார்த்திருக்கேன்யா. ஆனா.. ரஜினி சம்திங் டிபரன்ட். வேற யாராவது அவரோட இடத்திலிருந்திருந்தா, இன்னேரம் என்னவெல்லாமோ பண்ணியிருப்பாங்க. ஆனா, இந்த மனுசன் அசையமாட்டேங்குறாரேய்யா… எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், இவரோட இந்த உறுதிதான்’, என்றார். இதை நான் பொறுப்பாசிரியராக இருந்த பத்திரிகையிலும் எழுதி வெளியிட்டு அது ரஜினியிடமும் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு, மெல்லிய புன்னகையுடன் அமைதியாகிவிட்டார்.

அந்தப் புன்னகைக்குள் நிச்சயம் சுயநலமோ, சுய மோகமோ, கர்வமோ கொஞ்சமும் இல்லை. எல்லாவற்றையும் பரமனுக்கே அர்ப்பணிக்கும் வெள்ளை உள்ளம்தான் தெரிந்தது.

அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்!

-வினோ
38 thoughts on “1996-ல் உண்மையிலேயே ரஜினியால் முதல்வராகியிருக்க முடியுமா?

 1. r.v.saravanan

  அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்

  VERY GOOD AND TRUE WORDS VINO

  NICE ARTICLE

 2. r.v.saravanan

  அந்தப் புன்னகைக்குள் நிச்சயம் சுயநலமோ, சுய மோகமோ, கர்வமோ கொஞ்சமும் இல்லை. எல்லாவற்றையும் பரமனுக்கே அர்ப்பணிக்கும் வெள்ளை உள்ளம்தான் தெரிந்தது.

  ANDHA வெள்ளை உள்ளம்தான் KODIKANAKANA NAM IDAYANGALIL SIMASANAMITU

  AMARNTHULLAR

 3. பாசகி

  வினோ-ஜி அருமையான கட்டுரை. உண்மையை இதைவிட யாரும் ஆணித்தரமான ஆதாரங்களோட எழுதமுடியாது. இனிமே யாராச்சும் தலைவரை தாறுமாரா விமர்சனம் பண்ணுனா, அவங்கிட்ட வாதம் பண்ணிட்டிருக்கறதைவிட இந்த கட்டுரைக்கு சுட்டி கொடுத்துடுவோம். நன்றிகள் பல….

 4. EE RAA

  ஆழமான அலசல்… நினைவுகள் பின்னோக்கி நீந்திசென்றன…

  (அது சரி, நீங்களும் நம்மகிட்ட வரேன்னு சொல்லிட்டு ஏன் வரவில்லை…?)

  ஈ ரா

 5. santhosh

  vinoji

  it is an Astounding piece of writing about thalaivar. i have no words to pay tribute to you. keep the good work continued.

  the Excellent saying is ” எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், இவரோட இந்த உறுதிதான்”

 6. prashanthan

  பூவ்வ்வ்வ்வ்வ் …. தமிழ்நாடு இன்னும் நாசமா போயிருக்கும் …
  ஹா…. ஹா ….

 7. bahrainbaba

  What an outstanding article.. ennai porutha mattill.. unmai adhigamaai irukkum varigal nenjin aalam varai selgiradhu.. adhil indha oru sila varigalum

  ” அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்”

  Moochadaikkudhu boss…

  Rajini the Great

 8. T.JAWAHAR

  வினோ-ஜி அருமையான கட்டுரை. உண்மையை இதைவிட யாரும் ஆணித்தரமான ஆதாரங்களோட எழுதமுடியாது. இனிமே யாராச்சும் தலைவரை தாறுமாரா விமர்சனம் பண்ணுனா, அவங்கிட்ட வாதம் பண்ணிட்டிருக்கறதைவிட இந்த கட்டுரைக்கு சுட்டி கொடுத்துடுவோம். நன்றிகள் பல….

 9. Srinivas

  // பூவ்வ்வ்வ்வ்வ் …. தமிழ்நாடு இன்னும் நாசமா போயிருக்கும் …
  ஹா…. ஹா ….//

  Unnaya Maadhiri Aaalellaam irundha Tamil Naatta aaandavane (Thalaivar )aandaalaum thirutha mudiyaadhu da..

 10. சூர்யா

  வினோஜி, தங்கள் பதிலின் முதல் மூன்று,நான்கு பத்திகள் இங்கு வழக்கமாக வந்து விமர்சனம் செய்யும் சில மனநோயாளிகளின் வாயை அடைக்கும் என்று நம்புகிறேன். அசத்தலான செய்திக்கட்டுரை. கோடி நன்றிகள்.

 11. ஜக்குபாய்

  2004 பாராளுமன்ற தேர்தலுக்கு முதல் நாள், ஜக்குபாய் விளம்பரம் என் வந்தது?

 12. விமர்சனம்

  ஒரு MLA ஆயிருந்தா அது பெரிய விஷயம்! சும்மா ஜோக் அடிக்காதீங்க, அதுவும் இவ்வளவு பெருசா!

 13. arul

  really superb article vino sir.
  //அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்!//
  arumaiyana varigal.

 14. Manoharan

  As Soundarya said Rajini will be a Role Model to the world if he comes in to Politics.

 15. Kamesh

  விநோஜி,

  நன்றி. தெளிவான பதில் இதனால் பலரது சந்தேகங்கள் தீர்ந்திருக்கும்

  இனி யாராவது தலைவரின் அரசியல் பற்றி வாயை திறக்கட்டும்…

  காமேஷ்

 16. அட ராமா

  Mr. prashanthan & Mr. Vimarsanam :

  உங்களுக்கு எல்லாம் நல்லவங்க ஆட்சி செய்தலே புடிக்காத?
  அட ராமா

 17. Kesava

  superstar is purify person…tamilnadu politics is garbage dirty… therefore he didn’t like fall this bin? is in it??

 18. vasi.rajni

  nandri vinoji arumai arumai .niccayam orunal talaivar atchi peedatil sendu amarvar .

  tangaludaya alasal super

  mikka nandri

  rajini will rule tamil nadu

 19. harisivaji

  இன்னும் எவளோ சொன்னாலும் மனதில் ஒத்துக்கிடாலும்
  வெளியே பீலா உட்டுகிட்டு கூட்டம் அளயதான் செய்யும்
  அவங்களுக்கெல்லாம் இத படித்தாலும் இது மாத்ரி ஆயிரம் பதிவுகள் வந்தாலும் எந்த மாற்றமும் வர போறதிலே எப்டியோ போங்கடா !!!

  என்னை பொறுத்தவரை ரஜினி மக்கள் இயக்கம் மாத்ரி எதாவது செய்தால் போதும் அரசியல் வராமல் கூட போகட்டும் ரஜினியை எதிர்பார்த்து என்னை போல் கோடி கணக்கான ரசிகர்கள் நம்பிக்கை யோடு காத்து இருகிறார்கள்
  அரசியல் வராமலே அரசியல் பண்ற ஒரே தலைவன் நம்ம ரஜினி மட்டும் தான் …..
  கிருஷ்ணன்கிரி செய்திகள் என் நம்பிக்கைக்கு வழுகொடுகிறது
  இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதிவை வெளியிட காரணமா இருந்த காமேஷ் அவருக்கு என் நன்றிகள்
  Also to Vino for your deepest analysing

  Let see

  ஹரி.சிவாஜி

 20. prashan

  உங்க தலைவர் அரசியலுக்கு வரனும் வந்து என்னத கிளிக்க போறாரு எண்டு நாங்களூம் பார்க்கதனே போறம்,

 21. Kannaiyaa

  //அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்…//

  Appidiyae Thalaivara madhiriyae nachunnu solliteenga Vino.

  “Aei ellarum kettukunga….kettukunga….kettukunga… Thalivar…. Arasiyalukku……varuvaaru….aanaa varamattaaru”

  Ini Evanum Vaaya thorakapadadhu…

 22. kik

  Jaalra ….. Y you people always saying some one thalaiv a. Pallakai thukathey pallakil nee eaaru …? Very Bad people .just try to have some basic sense…
  Waste fellow indians ?

 23. pisasu

  Ada loosungala,
  ennamo nattila ellam roma nalla irukkirappula, ivar arasilyukku vanthu thaan kettupogannumikramathiri pesureengale.
  Prasan unakku thaan intha herovaiyum pudikkale, intha fansyum puddikale ille. Apparam yenda screenla namiyar-thiituramathriri inge sound kudukirra. Avar ennththa killikurathu, nee ippidi ootai vaya ellarttaiyum kamichcha yaravthu un vayai thaaan kilipaanga.Rajini fans vida unnai mathiri arai loosunga thaanda avara unnippa note pandraanga. Athunaalaye Rajini romba yosanai pannuraar. Athu sari, Rajiniya ethuthuthu kosam podarathukku nee enna sombuva, sothairaja, illa enna vaitherichal unaakku maapu?????

 24. prashan

  hey Venkat … u have any benefit from your super star or other stars ????
  *** bugger ……

 25. harisivaji

  Benefit means what u r expecting from him money you peoples may expect something from someone thenonly u will praise orr so and soo…
  in that way we dont need any thing from him indirectly he did many thing in many lives
  We peoples have benefited many ways
  personaly he inspired me his hardwork is example
  today iam living a satisfied life peace full life after my father mother some credits will go to rajini only he may not know about me but
  Many ways he motivated me thro his activity outside the filmdom his simplicity the whole world knows it.
  Expcept you blind peoples what we can do with you

 26. siv

  He might be won during 1996. But he never have any qualities for such a high post. It required lot of management skills which Super star doesn’t have but Vijayakanth having.
  Just simplicity & star value will not help him. His poor public management skills was proved in “Baba-Ramados” issue. He was a big looser on that time.
  Rajini – A star in cinima only

 27. Venkat

  Prasan unakku thaan intha herovaiyum pudikkale, intha fansyum puddikale ille. Apparam yenda screenla namiyar-thiituramathriri inge sound kudukirra. Avar ennththa killikurathu, nee ippidi ootai vaya ellarttaiyum kamichcha yaravthu un vayai thaaan kilipaanga.Rajini fans vida unnai mathiri arai loosunga thaanda avara unnippa note pandraanga. Athunaalaye Rajini romba yosanai pannuraar. Athu sari, Rajiniya ethuthuthu kosam podarathukku nee enna sombuva, sothairaja, illa enna vaitherichal unaakku Gappu?

 28. E Ramdhass

  அருமை உண்மை தமாக வில் நான் கலை இலக்கிய பிரிவில் இருந்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *