BREAKING NEWS
Search

தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப்

தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப்

மும்பை: தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.

எனவே அவர் இலங்கையில் நடைபெறுகிற திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜுன் மாதம் 2-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை இந்திய சர்வதேச சினிமா விருது விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். விழா முன் ஏற்பாடுகளை பார்க்க அமிதாப்பச்சன் சமீபத்தில் இலங்கைக்கு சென்று இருந்தார்.

இதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் துன்பங்கள் அனுபவித்து வருவதால், அமிதாப்பச்சன் அங்கு சென்று விருது விழாவில் பங்கேற்கக் கூடாது என பரவலாக தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

சீமானின் நாம் தமிழர் போராட்டம்…

இந்த நிலையில் நாம் தமிழர் இயக்கத்தினர் மும்பை ஜூஹூவில் உள்ள அமிதாப்பச்சனின் பிரதிக்ஷா பங்களாவிலிருந்து ஜல்சா பங்களாவுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அமிதாப்பச்சனின் பங்களாவை அவர்கள் முற்றுகையிட்டு, அதே நேரம் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் பிரதிநிதிகள் அமிதாப்பச்சனைச் சந்தித்து, இலங்கையில் தமிழர்கள் இன்னல்கள் அனுபவித்து வருகிற நிலையில் அங்கு நடைபெறுகிற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து ஓராண்டு நிறைவடையும் இந்த தருணத்தில் தமிழர் மனம் புண்பட்டுக் கிடக்க, அதை கொண்டாடும் விதத்தில் ராஜபக்சே இந்த விழாவை நடத்தத் துடிப்பதாக எடுத்துக் கூறினர்.

அமிதாப் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் மீது தமிழர்கள் கொண்டுள்ள அன்பையும் எடுத்துக் கூறினர்.

கண்டிப்பாக இதுகுறித்து யோசிப்பதாக அவர்களிடம் அமிதாப் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அமிதாப்பச்சன் நேற்று தனது இணைய தளத்தில் எழுதி இருப்பதாவது:

எனது வீடுகளை தமிழர் குழுக்கள் முற்றுகையிட்டனர். இலங்கையில் நான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என வலியுறுத்தினர்.

நான் இந்த விழாவை நடத்துகிற விஸ்கிராப்ட் நிறுவனத்தினரை அழைத்திருக்கிறேன். இது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன்.

போராட்டம் நடத்திய தமிழர் பிரதிநிதிகளை விஸ்கிராப்ட் நிறுவனத்தினர் சந்தித்து பேசி உள்ளனர் என நம்புகிறேன். அவர்கள் அளித்த மனுவையும் பெற்றுள்ளனர். அத்துடன் தங்களது நிலைப்பாட்டையும் போராட்டக் குழுவினரிடம் அவர்கள் விளக்கி உள்ளனர். மேலும் இது தொடர்பாக உடனடியாக ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி, தீர்வு காண்பதாகக் கூறி இருக்கின்றனர்.

தமிழர்களது உணர்வுகள் கட்டாயம் மதிக்கப்படவேண்டும். எனவே நாங்கள் இது தொடர்பாக விவாதித்து புரிதலோடு, அமைதியான, இணக்கமான தீர்வு காண்போம், என்று கூறியுள்ளார் அமிதாப்.

பங்கேற்க மாட்டார்..

எல்லோருடைய உணர்வுகளும் மதிக்கப்படும் என்று அமிதாப்பச்சன் கூறி இருப்பது, இலங்கை திரைப்பட விருது விழாவில் தமிழர்களின் உணர்வை மதித்து அவர் கலந்துகொள்ள மாட்டார் என்பதையே சூசகமாக உணர்த்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரும் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

நடிகர் சங்கம் தந்தி

இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்கம் அமிதாப்புக்கு ஒரு தந்தி அனுப்பியுள்ளது. அதில், இலங்கையில் இந்திய திரைப்பட விழா நடத்தும் திட்டத்தை அமிதாப் கைவிட வேண்டும் என்றும், தமிழ் சமுதாயம் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் கலைஞரான அமிதாப், தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.




12 thoughts on “தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப்

  1. palPalani

    தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த BJGB அவர்களுக்கு மனமார்ந்த்த நன்றிகள்.

  2. Guevara

    சீமானின் முதல் போராட்டம் சக்சஸ். சீமான் இதனை ஆரம்பித்திருக்காவிட்டால் இந்நேரம் தமிழ் நடிகர்கள் சங்கமும் ஆழ்ந்த உறக்கத்திலிந்திருக்கும். மற்றய தமிழ் ஊடகங்கள் முகம்பாராமல் இருந்த இவ்விடயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்த என்வழிக்கும் எம்வினோவிற்கும் மனமார்ந்த நன்றிகள் !!

    வாழ்க நாம் தமிழர்

  3. Alaguraja

    I think Amitab after discussion with rajini – They took that deecision. It is the victory for rajini and great friend Amitab.

    Good Rajini Sir….Keep it up

  4. paranthaman

    தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சளைக்காமல் போராடும் நாம் தமிழர் இயக்கத்திற்கு நன்றி .- ஆம்பூர் பரந்தாமன் , எழில்

  5. Rick

    தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சளைக்காமல் போராடும் நாம் தமிழர் இயக்கத்திற்கு நன்றி .- ஆம்பூர் பரந்தாமன் , எழில்

  6. r.v.saravanan

    தமிழர்களது உணர்வுகள் கட்டாயம் மதிக்கப்படவேண்டும். எனவே நாங்கள் இது தொடர்பாக விவாதித்து புரிதலோடு, அமைதியான, இணக்கமான தீர்வு காண்போம், என்று கூறியுள்ளார் அமிதாப்.

    நன்றி அமிதாப்

  7. Joe

    தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த BJGB அவர்களுக்கு மனமார்ந்த்த நன்றிகள்.

  8. Jonathan

    தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த BJGB அவர்களுக்கு மனமார்ந்த்த நன்றிகள்.

  9. Eric

    I think Amitab after discussion with rajini – They took that deecision. It is the victory for rajini and great friend Amitab.

    Good Rajini Sir….Keep it up

  10. Simon

    தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சளைக்காமல் போராடும் நாம் தமிழர் இயக்கத்திற்கு நன்றி .- ஆம்பூர் பரந்தாமன் , எழில்

  11. Bill

    I think Amitab after discussion with rajini – They took that deecision. It is the victory for rajini and great friend Amitab.

    Good Rajini Sir….Keep it up

  12. Tony

    I think Amitab after discussion with rajini – They took that deecision. It is the victory for rajini and great friend Amitab.

    Good Rajini Sir….Keep it up

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *