BREAKING NEWS
Search

162 தமிழர்கள் கொலை: உணவின்றி தவிட்டை உண்ணும் அவலம்!

வன்னியில் 162 தமிழர்கள் கொலை: உணவின்றி தவிட்டை உண்ணும் அவலம்

வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை பறித்து, இனவழிப்பைத் தொடர்ந்து வருகிறது இலங்கை ராணுவம்.

mullivaikkal7509_15வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலால் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் கடுமையான அவலத்திற்குள் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்றும், நேற்று முன்தினமும் இலங்கை படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல், பல்குழல் எறிகணை, வெள்ளைப் பாஸ்பரஸ் இரசாயனக் கணை, நச்சுவாயுத் தாக்குதல், துப்பாக்கிச்சூடு என்பவற்றில் அப்பாவிப் பொதுமக்கள் 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை காலை 11:25 முதல் நண்பகல் 12:15 வரையான குறுகிய நேர இடைவெளியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 6 தடவைகளுக்கு மேல் சிறிலங்கா படையினர் குண்டுகளை மழையெனப் பொழிந்து வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.mullivaikkal7509_6இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 84 பேர் உடல் சிதறியும், உடல் கருகியும் அகோரமாகக் கொல்லப்பட்டதுடன், மேலும் 37 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதி மீது இலங்கை படையினரால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனக் கணைகளும், பீரங்கிக் கணைகளும், கொத்துக் குண்டுகளும் மழையெனப் பொழியப்பட்டதில் 78 தமிழ் உறவுகள் பலியானதுடன், 214 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

ஊர்தி ஒன்றின் மீது இரசாயனக் கணைகள் வீழ்ந்து வெடித்ததில் அதன் கீழ் அடைக்கலம் புகுந்திருந்த 14 உறவுகள் அந்த இடத்திலேயே உடல் கருகிப் பலியாகியிருந்தனர்.mullivaikkal7509_5

வன்னியில் தற்பொழுது மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், கடற்கரை மணலில் பதுங்கு குழிகளில் தஞ்சம் கோர முடியாத நிலை அந்த மக்களுக்கு ஏற்பட்டிருப்பதுடன், அவ்வாறு தண்ணீருக்குள் தஞ்சம் கோருபவர்களும் மருந்துகள் அற்ற நிலையில் தொற்றுநோய் அபாயங்களை எதிர்நோக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அதே வேளை, இதுவரை நாட்களும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்து தம் உயிர் வாழ்வை காப்பாற்றி வந்த மக்கள் தற்பொழுது அதுகூட இல்லாது தவிட்டில் தண்ணீரை ஊற்றிக் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆலைகளில் உள்ள உமியை எடுத்து, அதில் உள்ள குறுணி அரிசியையும், தவிட்டையும் பிரித்து எடுத்து அதனை உணவாகவும், தென்னை, பனை குருத்துக்களை எடுத்து அதனை உணவாகவும் உட்கொள்ளும் நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இந்த உணவுகூட இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

mullivaikkal7509_9




3 thoughts on “162 தமிழர்கள் கொலை: உணவின்றி தவிட்டை உண்ணும் அவலம்!

  1. Ramanan

    This is the worst human genocide of the 21st century and Indian establishment is aiding in the destruction of the Thamizh makkal. All the curses from the dead, injured and living will be turned against India. I am ashamed to say I am an Indian.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *