BREAKING NEWS
Search

மெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238

மெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238

mecca-3

மெக்கா: சவுதி அரேபியா நாட்டின் புனிதத் தலமான மெக்காவில் உள்ள புகழ்பெற்ற  மசூதி மீது கிரேன் விழுந்ததில் 107 பேர் பலியானார்கள். 238 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். சம்பவ இடத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். விபத்து காரணம் குறித்து இன்னும் தகவல் ஏதும் வெளியாகவில்லை. கிரேன் எப்படி விழுந்தது என்பது பற்றி உடனடி தகவல் ஏதும் இல்லை.

Mecca-5

பலியானவர்களில் 9 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த இடம், இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் புனிச மசூதி அமைந்துள்ள பகுதியாகும். ஹஸ் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு 1.47 மில்லியன் சதுர அடியாக இந்த வழிபாட்டு இடத்தை விஸ்தரிக்க 2011-ல் முடிவு செய்யப்பட்டது. அந்த வேலைதான் இப்போதும் நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 21 முதல் 26 வரை பல மில்லியன் மக்கள் மெக்காவுக்கு வந்து தொழுவது வழக்கம். அந்த நாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

mecca-2

ஹஜ் பயண நேரத்தில் மெக்காவில் விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2006-ம் ஆண்டு இதே மெக்காவில் நடந்த விபத்தில் 346 பேர் பலியானார்கள். அதற்கு முன் குண்டுவெடிப்பு, தீ விபத்து, நெரிசல், ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவும் மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.

தொடர்புக்கு: இந்தியாவில் இருப்பவர்கள் 00966125458000 /  00966125456000 என்ற எண்ணைகளையும், சவுதி அரேபியாவில் இருப்பவர்கள் 8002477786 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.
-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *