Breaking News

10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்! – உச்சநீதிமன்றம் உத்தரவு

Tuesday, August 9, 2011 at 10:37 am | 718 views

10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்! – உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்விக்கு எதிராக ஜெயலலிதா அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இன்னும் 10 நாட்களுக்குள் தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தியாக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பை 25 காரணங்களை ஆராய்ந்த பிறகே கொடுத்திருப்பதாகவும், மாணவர் – பெற்றோர் கோரிக்கையை ஏற்று, உடனே தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதியானது என்றும், அதில் தலையிட முடியாது என்றும், நீதிபதிகள்  பன்சால், விஎஸ் சௌஹான், தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒருமித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு காரணமாக நடப்பாண்டிலேயே 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் நிலவி வந்த பெரும் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு வரும் முன்பே மெட்ரிகுலேஷன் பாடப் புத்தகங்களை மாணவர் தலையில் கட்டிய தனியார் பள்ளி கல்வி வியாபாரிகளுக்கு சம்மட்டி அடி கிடைத்துள்ளது!

தீர்ப்பு முழு  விவரம் விரைவில்…

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

19 Responses to “10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்! – உச்சநீதிமன்றம் உத்தரவு”
 1. palPalani says:

  அம்மா, இந்த கரை நல்லது!

 2. மிஸ்டர் பாவலன் says:

  தீர்ப்பு இப்படி தான் வரும் என்பது பலரும் எதிர்பாத்தது தான்.
  இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

  எனது தனியான கருத்துக்கள்.

  1 ) கைவசம் உள்ள பாடப் புத்தகங்கள் தரம் குறைந்தவை என்றாலும்
  ஆயுசுக்கும் இதே புத்தகம் தானா, இல்லை, வரும் ஆண்டுகளில் இதை
  சரி செய்யலாமா என்பது தெரியல. இந்த ஹை-கோர்ட் ஜட்ஜ் தி.மு.க.
  கட்சி உறுப்பினர் மாதிரி அவர்கள் பேச்சும், செய்கையும் இருக்கு.
  “பெற்றோர்-ஆசிரியர்’ வக்கீல்கள் என தி.மு.க. வக்கீல்களை அனுமதித்தது
  அம்மாவின் தப்பு. என் போன்ற நடுநிலையாளர்களை பெற்றோர் சார்பான
  வக்கீல்களாக உள்ளே இறக்கி விட்டுருந்தால் கலைஞர், கவிதாயினி
  கவிதைகளை விமர்சித்து இதை தூக்க வேண்டும் என வாதிட்டிருப்போம்.
  இப்போ புலம்பி நோ யூஸ்.

  2 ) இந்த தீர்ப்பை தி.மு.க. காரன் தலைக்கு மேலே தூக்கி வச்சு ஆடப் போறான்
  என்பது வயத்தெரிச்சலாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் எப்படியாவது
  பாடுபட்டு – ரிவிசன் – என்ற பெயரில் கலைஞர், கவிதாயினி கவிதைகளை
  கிழித்து எறிந்துவிட்டு திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன்,
  பாரதியார் பாடல்கள், பாவேந்தர் பாடல்கள் சேர்க்கணும்.

  3 ) அம்மா ஆரம்பத்திலேயே – revision – பண்றேன்னு சொல்லீட்டு இந்த DMK பிரச்சார மேட்டரை தூக்கி இருக்கலாம். இனிமே பண்றதுக்கு இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இடம் கொடுக்குமா தெரியல. தலைக்கு மேலே நாமலே மண்ணை போட்டுக்கிட்ட மாதிரி அமைஞ்சு போச்சு.

  4 ) வில்லன் பார்ட்டி போலீஸ் வேஷத்தில போன மாதிரி தி.மு.க. வக்கீல் பெற்றோர் வக்கீலா போனது ஒண்ணுன்னா ‘சிரிப்பு போலீஸ்’ வடிவேலு மாதிரி அரசு-தரப்பு வக்கீல் ராவ் ‘மனச்சாட்சி படி’ அது, இதுன்னு same side goal போட்டுட்டாரு. அவர் பிள்ளைகளுக்கு ஸ்டாலின் ஸ்கூல்-ல கொஞ்சம் பீஸ் குறைச்சு போட்டு தரலாம். பாவம் – தி.மு.க.காரங்களுக்கு பெரிய உதவி பண்ணி கொடுத்துருக்கார்.

  5 ) புலம்பி ஒன்னும் ஆகப் போறது இல்லை. எத்தனையோ சவால்களை சந்திச்சு இருக்காங்க அம்மா. இந்த சவாலையும் சந்திச்சு அடுத்த வருஷம் உரிய நடவடிக்கையை – revision – செய்வார்கள் என நம்புகிறேன்.

  நன்றி, வணக்கம்.

  -==மிஸ்டர் பாவலன் ==-

 3. குமரன் says:

  ///உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.///

  நமக்கெல்லாம் நல்லா நினைவிருக்கும் .
  ஜெயாவுக்குதான் மறந்து விடும்.

 4. Anand says:

  // கைவசம் உள்ள பாடப் புத்தகங்கள் தரம் குறைந்தவை என்றாலும்

  இவை metriculation பள்ளி ஆசிரியர்களால் உருவாக்க பட்டது என்பதை நினைவில் கொள்க.

 5. rajkumar says:

  Pavalan nenga ADMK Somba?

 6. Elango says:

  சமசீர் கல்வி பற்றி இன்னும் பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை!
  விஜயகாந்த் சொன்னது போல், பொது பாட திட்டத்தை சமசீர் கல்வி என்கிறார்கள்!

  உண்மையான சமசீர் கல்விக்கு:
  1 சிறந்த உலக தரம் உள்ள பாடநூல் தேவை
  2 அதற்கான கட்டுமானம் மற்றும் வசதிகள், குறிப்பாக கிராம பகுதிகளில் தேவை
  3 அதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த பயிற்சியும் தேவை

  இவை எல்லாம் இன்னும் சரி வர இல்லாமல் எப்படி இதை சமசீர் கல்வியாக ஏற்றுக்கொண்டு அமல் படுத்த முடியும்?பெற்றோர்களும் மாணவர்களும் இதை புரிந்து கொள்ளவேண்டும்! கிராமத்து பிள்ளைகளை மனதில் கொள்ள வேண்டும்! பாவம் அவர்கள்!! இதனால் பெரிதும் பாதிக்கபடுவார்கள்!!
  ஆலமரத்தடியில் எந்த சமசிர்கல்வியயை புரிந்து படிப்பார்கள்?

  கடவுள் தான் அவர்களை கபற்றவேண்டும்!
  சுப்ரீம் கோர்ட் இதை யோசிக்காதது துரதிஷ்டவசமானது !

  வேடிக்கை என்னவென்றால் கிராமத்து மக்களும் இதை யோசிக்காமல் சந்தோஷபடுவர்கள்!!
  இன்னம்பூர் எழுதரிநாதர், ஹயக்ரீவர், சரஸ்வதி இவர்களை காப்பாற்றட்டும்!!

 7. மிஸ்டர் பாவலன் says:

  @ராஜ்குமார் – என் வழியில் இருக்கும் நடுநிலையான
  கட்டுரையாளர்களில் ஆயிரத்தில் ஒருவன் நான்.
  இதில் இருந்து என் கொள்கையை புரிஞ்சுக்கணும் :-)

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 8. Anand says:

  // @ இளங்கோ. உண்மையான சமசீர் கல்விக்கு:
  1 சிறந்த உலக தரம் உள்ள பாடநூல் தேவை
  2 அதற்கான கட்டுமானம் மற்றும் வசதிகள், குறிப்பாக கிராம பகுதிகளில் தேவை
  3 அதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த பயிற்சியும் தேவை

  இவையெல்லாம் சரிதான். ஆனால் ஒரே நாளில் செய்ய முடியாது. சமசீர் கல்வி என்பது முதல் படி. அல்லது என்றுமே நடக்காது.

 9. r.v.saravanan says:

  உச்சநீதிமன்ற உத்தரவு வரும் முன்பே மெட்ரிகுலேஷன் பாடப் புத்தகங்களை மாணவர் தலையில் கட்டிய தனியார் பள்ளி கல்வி வியாபாரிகளுக்கு சம்மட்டி அடி கிடைத்துள்ளது!

  பாடப் புத்தகங்களை மாணவர் தலையில் கட்டிய தனியார் பள்ளிகளை
  பெற்றோர்கள் விட கூடாது

 10. rajkumar says:

  @ராஜ்குமார் – என் வழியில் இருக்கும் நடுநிலையான
  கட்டுரையாளர்களில் ஆயிரத்தில் ஒருவன் நான்.
  இதில் இருந்து என் கொள்கையை புரிஞ்சுக்கணும்

  -=== மிஸ்டர் பாவலன் ==-

  kela irukara nadunilaiyalarkala nenga airathil oruvan nu ipa than enaku theriuthu

  Ipa jaya ena senjalum makaluku nalathuthan nadakum nu nambitu oru group suthuthu.
  Avanuga elam nadunilaiyalar nu solitu sutharanga.
  Samacheer kalvi visayathula kuda ivanuga elam ena solarngana (konjam wait panunga amma nala education tharuvanga nu solaranuga)
  Admk minister mela land case kudutha athuku evidence ilaingaranga.
  MLA mela kudutha Evidence ilaigaranga.
  DMK karan mela kudutha udane ula thuki podaranga.intha Nadunilaiyalrakl elam Amma voda sirapana mudivunu solitu irukanga.
  Eanda Puthusa katuna thalamai seyalagatha use panalainu keta athula curruption panitanga nu solaranga.

  Sari Eanda Bus ticket rate elam kami yagalainu keta. Karunanidi kadan vangi vachutu poitaru nanga kata vendamanu kekaranga

  Sari eanda 4000 cores Vari ethitanganu keta. Karunanidi kadan vangi vachutu poitaru nanga kata vendamanu kekaranga

  Sari eanda vantha 3 monthla 17 thousand cores kadan add panitiganu keta. Karunanidi 1 lakh cores vangunarala nu solaranga. Ada last time ADMK period mudiyarapave 50 tousand cores kadan irunthuchupanu sona athuku naduniyalarkal apa karunanidi 50000cores vangunaralanu solaranga
  Dai athu 5 years lada nu sona ivanuga Konjam wait panunga amma nala panuvanganu solaranga

  Eanda power cut 15 days la sari aidum nu jaya sonagalenu keta

  unga achila oru thitamum podala athan ipavum power cut nu solarnaaga

  sari ok unga Jaya 2012 la power cut irukathunu solarangale new projects complete aganumna 3 to 4 years agumda ithlem Dmk periodla panuna projects athan jaya 2012 la no power cutnu solarangana athuku ivanuga othukama

  AMMa na sumava athan one yearla project mudichu current kudukaranga nu solaranga

  Mr.Pavalan
  Airaythil oruvannnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn?

 11. தினகர் says:

  //இந்த தீர்ப்பை தி.மு.க. காரன் தலைக்கு மேலே தூக்கி வச்சு ஆடப் போறான்
  என்பது வயத்தெரிச்சலாக இருக்கிறது.//

  திமுக காரன் ஆடுறானோ இல்லையோ, மிஸ்டர் பாவலனுக்கு தீர்ப்பை பார்த்து மாபெறும் வயித்தெரிச்சல் என்று பட்டவர்த்தமாக தெரிகிறது :)

 12. தினகர் says:

  //என் வழியில் இருக்கும் நடுநிலையான
  கட்டுரையாளர்களில் ஆயிரத்தில் ஒருவன் நான்.
  இதில் இருந்து என் கொள்கையை புரிஞ்சுக்கணும்//

  ’நடுநிலையாளர் = ரபி பெர்னார்ட் அடியொற்றிய நடுநிலையாளார் ‘ என்று ஒரு அடிக்குறிப்பும் கொடுத்திருக்கலாம் மிஸ்டர் பாவலன் :)

 13. மிஸ்டர் பாவலன் says:

  தமிழ் ஆர்வலர்கள், நகைச்சுவை நாடிகள்,
  பொதுவாக அ.தி.மு.க. ஆதரவாளர்கள்,
  தி.மு.க.வால் பாதிக்கப்பட்டவர்கள், ரஜினி
  ரசிகர்கள் இவர்கள் என் கருத்தை ஏற்கிறார்களோ
  இல்லையோ, ஒரு தடவை, படித்து விடுவார்கள்.
  அதற்கு மேல் நான் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.
  கலைஞர் அறிக்கை விடுவது போல் என் கருத்தை
  பதிவு செய்கிறேன், அவ்வளவு தான் !

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 14. மிஸ்டர் பாவலன் says:

  ///திமுக காரன் ஆடுறானோ இல்லையோ,
  மிஸ்டர் பாவலனுக்கு தீர்ப்பை பார்த்து
  மாபெறும் வயித்தெரிச்சல் என்று பட்டவர்த்தமாக தெரிகிறது :) ///

  தீர்ப்பு இப்படி தான் வரும் என்பது எப்போது தெரிந்து
  விட்டதால் என்னை அப்போதே இதற்காக தயார் செய்து
  கொண்டு விட்டேன். தி.நகர் ‘மிளகாய் பவனில்’ (மீனாட்சி பவன்)
  சாப்பிட்டால் தான் வயித்தெரிச்சல் உண்டு.

  வினோவின் அறிவிப்பை கண்டதும் உடனே நான் டைப் செய்த
  வைர வரிகள் இதோ:

  “கண்ணியமான முறையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்று நடைமுறை
  படுத்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழக மக்களின்
  ஒருமித்த பாராட்டு பெறுகிறார். ”

  இதில் “கண்ணியமான முறையில்” என்ற சொற்களை அதற்கான
  தொனியில் மேடையில் பேசி இருந்தால் அதற்கான கைதட்டலே
  தனி! வலையில் அவ்வளவு எடுபடவில்லை. குமரன் போன்றவர்கள்
  தான் என் கருத்தின் பின்னால் இருக்கும் எள்ளலை சரிவர புரிந்து
  கொள்கிறார்கள். மற்றவர்கள் கண்ணுக்கு நான் ரவி-பெர்னார்டு-wannabe
  ஆக தெரியலாம். ‘லாம்’ கூட இல்லை. தெரிகிறேன். தெரிவேன். அது
  தெரிந்தும் இதே வழி தான் நான் செல்வேன். ஏன் எனில் இது என வழி.
  (அப்படி இப்படின்னு ரூட் போய் வினோவையும் link பண்ணீட்டேன்.)

  சிலம்பொலி செல்லப்பன் இருக்கும் மேடையிலும் ஒரு தடவை பேசி
  இருக்கிறேன். சிலப்பதிகாரம் பற்றிய பேச்சு அது. சில கருத்து வேறுபாடுகள்
  இருந்தாலும் பேச்சின் சாராம்சத்தை அவர் பாராட்டினார். அவர் ‘தி.மு.க.’
  சார்ந்தவர். அதனால் கட்சி வேறுபாடுகள் பொது வாழ்வில் என்னை
  பாதித்ததில்லை. In public places, I don’t discuss politics. I have no time for it.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 15. குமரன் says:

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  ///சிலம்பொலி செல்லப்பன் இருக்கும் மேடையிலும் ஒரு தடவை பேசி
  இருக்கிறேன். சிலப்பதிகாரம் பற்றிய பேச்சு அது. ///

  நீங்கள் சங்கத் தமிழ் முதல் திரை இசைத் தமிழ் வரை அலசும் விதத்தைப் பார்த்தபோதே நினைத்தேன், இவரிடம் இருக்கும் தமிழ் ஆர்வமும், அறிவும் ஆழ்ந்தது என்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறன். அதனை அவரவர் பலப்படுத்தி உபயோகித்தால் அவரும் சமுதாயமும் பலன் பெறும். உங்களால் சமுதாயம் பலனடையும் படிக்கு மேலும் செயலாற்ற எனது வாழ்த்துக்கள்.

  ‘எள்ளல்’ என்கின்ற நல்ல தமிழ்ச்சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறீர்கள், நான் ‘நையாண்டி’ என்கின்ற சாமானியர் வழக்கில் உள்ள சொல்லைப் பயன்படுத்திவருகிறேன். ‘எள்ளல்’ என்ற அருந்தமிழ்ச் சொல்லை முன்னர் ஒருமுறை வினோ அவர்களும் கையாண்டார். ஒருவரிடமிருந்து ஒருவர் சிறிது சிறிதாக நாமும் கற்கிறோம்.

 16. குமரன் says:

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  ///In public places, I don’t discuss politics. I have no time for it.///

  இல்லையா பின்னே ……

  நமது கருத்துக்களை சொல்லும் இடத்தில் மாற்றுக் கருத்துடையோர் அதிலும் அழகிரி போன்ற “தனிமனித வீரம் மிக்கோர்” இருந்துவிட்டால், நமக்கு உதை அல்லவோ விழும்! அங்கே “நையாண்டி” என்று கண்டார்களா, “எள்ளல்” என்று கண்டார்களா, எல்லாவற்றுக்கும் சகட்டு மேனிக்குக் கையாளும் காலாலும் கத்தியாளும்தானே பதிலளிப்பார்கள் !!!

  வலைப்பக்கங்கள் மிக வசதி.
  மாற்றுக் கருத்துடையோர் மத்தியிலும் …
  புகுந்து விளையாடலாம்.
  சொற் சிலம்பு ஆடலாம். ஆனாலும் நம் …
  உடம்பு பாதுகாப்பாக இருக்கும்.

  எப்பூடி அவர்களின் தளத்தில் “விஷவு இயக்கம்” என்nற ஒரு கட்டுரை படித்தேன். நமக்கே நமக்காகவே எழுதியிருக்கிறார். மிகவும் ரசித்தேன். நீங்களும் படித்து மகிழுங்கள், ரசியுங்கள். நான் அடிக்கடி படித்து என்னை நானே சுய பரிசோதனை செயது கொள்கிறேன்.

  http://eppoodi.blogspot.com/2011/06/blog-post_15.html

 17. மிஸ்டர் பாவலன் says:

  குமரன் அவர்களே:

  எப்பூடியின் பதிவு படித்தேன். அதில் அடிப்படைத் தகுதி ஒன்றாக
  “அதிபுத்திசாலிகளாக இருக்க வேண்டும்” என்று போட்டிருக்கிறது.
  ஆரம்பத்திலேயே அடிபட்டு போய் விடுகிறது.

  சிலம்பொலி செல்லப்பன் நல்ல மனிதர். எளிமையானவர். அவர்
  பேச்சு நல்ல தமிழில் இருக்கும். ஆனால் – பாவலன் – என யாரையும்
  அவருக்கு தெரியாது :-) எங்கு அந்த நிகழ்ச்சி நடந்தது எனவும் நான்
  காரணமாகவே குறிப்பிடவில்லை.

  நண்பர்களே – நான் தமிழ் அறிஞர் கிடையாது. வலையில் பார்த்து
  படித்தவை தான் நான் எழுதும் தமிழ் மேற்கோள்கள், அவற்றின்
  பொருள் விளக்கங்கள். யார் வேண்டுமானாலும் இது போல் எழுதலாம்.
  இதில் அரிதாக எதுவும் திறமை வேண்டியதில்லை.

  ஒரு flashback – நான் இந்த வலையில் முதலில் -டாக்டர் சுப்பாண்டி
  என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். (சென்னை வீரன் எல்லாம்
  தேர்தல் சமயத்தில் பயன்படுத்திய பெயர்கள். வீரன் prediction correct
  ஆக அமைந்தது சென்னை வீரனுக்கு பெயர் வாங்கி தந்தது). அப்போது
  “மன்மதன் அம்பு” என்ற படம் வெளிவந்தது. அதில் உலகநாயகன்
  மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் ஒரு பாடல் எழுதி இருந்தார்.
  அதை கடுமையாக விமர்சித்து “பாவலன் அம்பு” என பெயரை மாற்றி
  விமர்சித்தேன். படம் வெளிவந்ததும் இது failure தான் எனவும் confirm
  பண்ணி கொண்டு அதில் பெருமிதமும் கொண்டேன். இந்த சமயத்தில்
  டாக்டர் சுப்பாண்டி ஓவராக கமலை விமர்சனம் செய்ய அதை balance
  செய்வதற்காக நானே உருவாக்கிய பாத்திரம் – மிஸ்டர் பாவலன்.
  பாவலன் இதுவரை சூப்பர் ஸ்டாரை விமர்சனம் செய்ததில்லை, ஆனால்
  கமலை defend செய்து வருகிறார். இப்போது இந்த பாவலன் பாத்திரம்
  டாக்டரை overtake செய்து விட்டது. “வண்டி ஒடறவரைக்கும் ஓடட்டும்”
  என நானும் விட்டு விட்டேன். அவ்வளவு தான்.

  சரி – இந்த பிக்சரில் – “கலை செல்வி” எப்படி வந்தார் என்றால் அதுவும்
  “மன்மதன் அம்பு” related தான் :-)

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 18. குமரன் says:

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  எனக்கு ஒரு குணம் உண்டு. இங்குள்ள நமது நண்பர்களும் நீங்களும் கவனித்திருக்கலாம். என்னைப் பார்த்து ‘நீ சொல்வதில் கவனம் தேவை பிழை உள்ளது’ என்று யார் கூறினாலும், உடனே சுய பரிசோதனை செய்து தவறிருந்தால் திருத்திக் கொள்வேன். இந்த விஷவு இயக்கம் குறித்த கட்டுரையைப் படித்து, (முதல் தகுதி இல்லாவிட்டாலும் கூட) மற்றவற்றை குறித்து அலசிப் பார்த்தேன். அதனால்தான் கருணாவைப் பற்றியும், ஜெயாவைப் பற்றியுமான எனது கடுநிலையைக் குறைத்துக் கொண்டேன். ehti

 19. குமரன் says:

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  எனக்கு ஒரு குணம் உண்டு. இங்குள்ள நமது நண்பர்களும் நீங்களும் கவனித்திருக்கலாம். என்னைப் பார்த்து ‘நீ சொல்வதில் கவனம் தேவை பிழை உள்ளது’ என்று யார் கூறினாலும், உடனே சுய பரிசோதனை செய்து தவறிருந்தால் திருத்திக் கொள்வேன். இந்த விஷவு இயக்கம் குறித்த கட்டுரையைப் படித்து, (முதல் தகுதி இல்லாவிட்டாலும் கூட) மற்றவற்றை குறித்து அலசிப் பார்த்தேன். அதனால்தான் கருணாவைப் பற்றியும், ஜெயாவைப் பற்றியுமான எனது கடுநிலையைக் குறைத்துக் கொண்டேன். எதிலும் உள்ள நல்லதை எடுத்துக் கொள்ள முயல்கிறேன்.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)