ஜெ செய்தி: நக்கீரன் கோபால் வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைப்பு
Thursday, January 19, 2012 at 2:39 pm | 489 views
ஜெ செய்தி: நக்கீரன் கோபால் வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது.
இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நக்கீரன் இதழில் கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிடப்பட்டது. இதில் ஜெயலலிதா பற்றி மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கூறியதாக ஒரு கருத்தை நக்கீரன் பிரசுரித்திருந்தது. இதனால் பெரும் பிரச்சனை எழுந்தது. நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
இந் நிலையில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமாராஜ் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நக்கீரன் கோபால் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுரை வெளியிட்டதற்காக கடந்த இதழின் முதல் பக்கத்தில் வருத்தம் கோரி செய்தி வெளியிடப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.





அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்



