உழவர் திருநாள் – முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
Sunday, January 15, 2012 at 6:46 am | 152 views
உழவர் திருநாள் – முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து:
உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
புதுப்பானையில் அரிசியிட்டு “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்பி இறைவனை வணங்கி அனைவரும் ஒன்றுபட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ளம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை. அச்சமின்மை, மனத்தூய்மை, உண்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புது பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும்.
எல்லா வளமும், நலமும்
பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப்பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வ பண்புள்ளவர்கள் ஆவார்கள். இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட பல்வேறு நலத்திட்டங்கள் எனது தலைமையிலான தமிழக அரசால் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று, சீரோடும், சிறப்போடும் வாழ இறைவனை வேண்டி என்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
-என்வழி செய்திகள்





அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




நாசரின் பொங்கல் ஆதங்கத்தை நீங்களும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM&feature=player_embedded