BREAKING NEWS
Search

‘ஸ்ஸ் அப்பா… ஒருவழியா சேதாரமில்லாம சிலோனுக்கு வந்துட்டேன்!’

‘சிக்கியிருந்தா சிதைச்சி அனுப்பியிருப்பாய்ங்க போல!’

பிரிட்டனில் பல்லாயிரம் தமிழரால் சுற்றி வளைக்கப்பட்டு, கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்ட நிலைமையிலிருந்த ‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சே ஒரு வழியாக தனது நாட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை திரும்பினார்.

அவரது போர்க்குற்றங்கள் முற்று முழுதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் முன் குற்றவாளியாகக் காட்சி தரும் ராஜபக்சேவை, பாதுகாத்து அனுப்பி வைத்துள்ளது பிரிட்டன், ‘மீண்டும் இந்தப் பக்கம் வரக்கூடாது’ என்ற எச்சரிக்கையுடன்.

பிரிட்டனில் தான் அசிங்கப்பட்டதை சிரிப்பால் மறைத்தபடி, கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்திலிருந்து வெளியேறும் ராஜபக்சே மற்றும் அவரை வரவேற்க வந்திருந்த (வேற வழி) அரசியல் பிரமுகர்கள்… படங்கள்… கொழும்பில் கால் வைத்தபோது அநேகமாக ராஜபக்சே இந்த மனநிலையில்தான் இருந்திருப்பார்!

ஸ்ஸ் அப்பா... ஒருவழியா சொந்த ஊருக்கு வந்தாச்சு... சிக்கியிருந்தா சிதைச்சில்ல அனுப்பியிருப்பாங்க... என்னா கூட்டம்!

சேதாரமில்லாம வந்ததே பெரிய விஷயம்யா... அப்படியே சிரிச்சமேனிக்கு என்னை கூட்டிட்டுப் போயிடுங்க... ரொம்ப கேக்காதீங்க... அளுதிருவேன்!

சேதாரமில்லாம வந்து சேர்ந்ததே பெரிய விஷயம் மாப்ளே... அப்படியே சிரிச்சமேனிக்கு என்னை கூட்டிட்டுப் போயிடுங்க... ரெம்ப நோண்டாதீங்க... அளுதிருவேன்!

சிரிக்கிறனா... மேலுக்குதான்யா அப்படி இருக்கேன். உங்காளுங்க லண்டன்ல வச்ச ஆப்பை எடுக்க முடியுமான்னே தெரியல... இனி எந்த நாட்டுக்குப் போனாலும் பாதுகாப்பில்ல.. இந்தியாதான் பெஸ்ட். என்னோட பாதுகாப்பு விஷயத்துல சோனியாவையும் சிங்கையும் கருணாநிதியையும் அடிச்சிக்க ஆளில்லை!

சிவப்பா இருக்குற எல்லாம் புலிக்கொடியாவே தெரியுதுய்யா... இந்த மூணு நாள்ல இப்பதான் மாலைன்னு ஒண்ணை பாக்குறேன்!

வந்துட்டேன் வந்துட்டேன்... இனி இந்த ஊரைத் தாண்டுவனா நானு.. ம்ஹூம். கொஞ்ச நாளைக்கு 'மப்பும் மாந்தாரமுமா' இருந்தா இந்த சம்பவத்தை மறந்துடலாம்னு நெனக்கிறேன்!

வில்லனுக்காக காத்திருக்கும் காமெடி பீஸ்கள்!

வில்லனுக்காகக் காத்திருந்த காமெடி பீஸ்கள்!

-சாம் பிரபா

படங்கள்: தமிழ்வின்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *