BREAKING NEWS
Search

ஷங்கர் தயாரிக்கும் ஈரம்… ஆடியோ வெளியிடும் ரஜினி!

ஷங்கர் தயாரிக்கும் ஈரம்… ஆடியோ வெளியிடும் ரஜினி!

யக்குநர் ஷங்கர் தயாரிக்க, அறிவழகன் இயக்கத்தில் ஈரம் எனும் திரைப்படம் உருவாகிறது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

eram-back-copy

ஷங்கர் இயக்கும் / தயாரிக்கும் பெரும்பாலான படங்களில் ரஜினி கட்டாயம் இருப்பார். முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி, காதலன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அவர் தயாரித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி… இப்படி பல படங்களின் பூஜை, ஆடியோ வெளியீடு அல்லது வெற்றி விழா முதலானவற்றில் ரஜினிதான் சிறப்பு விருந்தினர்.

அதற்கு என்ன காரணம் என்பதை ஒருவிழாவில் ஷங்கர் இப்படிச் சொன்னார்:

“என்னுடைய எல்லா படங்களின் பூஜை, ஆடியோ வெளியீடு அல்லது வெற்றி விழா நிகழ்ச்சிகளில் ரஜினி சார் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. அவர் என் அழைப்பை தட்டாமல் வந்துவிடுவார்.

அவருக்கு இருக்கும் எத்தனையோ வேலைகளுக்கிடையே எனக்காக அவர் தனி கவனம் எடுத்து வருகிறார். நாம் அவரை அதிகமாக தொந்தரவு செய்கிறோமோ என்று கூட சமயத்தில் நினைத்துக் கொள்வேன்.

ஆனால் என் வீ்ட்டில் என் மூத்த சகோததரைப் போலவே அவரை நான் மதிக்கிறேன்… வீட்டில் விசேஷம் நடக்கும்போது, நமது சகோதரர் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் போன்றதுதான் இது.

என்னுடைய இந்த உணர்வை அவரிடம் நான் இதர்கு முன் சொன்னதில்லை”, என்றார்.

இப்போது மீண்டும் ஷங்கர் ‘வீட்டு விசேஷம்’…

ஒரு தயாரிப்பாளராக அவர் தனது நான்காவது படத்தை வெளியிடுகிறார். படத்தின் பெயர் ஈரம். இயக்கம் அறிவழகன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஆடியோ வெளியீடு நடக்கிறது.

சத்யம் திரையரங்கில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கும் இந்த விழாவின் தலைமை விருந்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

முதல் ஆடியோ சிடி மற்றும் கேசட்டை ரஜினி வெளியிடுகிறார். இயக்குநர் எம் சசிகுமார் பெற்றுக் கொள்கிறார். தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன், கலைப்புலி சேகரன், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

-வினோ




3 thoughts on “ஷங்கர் தயாரிக்கும் ஈரம்… ஆடியோ வெளியிடும் ரஜினி!

  1. Suresh கிருஷ்ணா

    வினோ சார்…

    கிட்டத்தட்ட எல்லா இணையதளங்களுமே உங்களது இந்த செய்தியை அட்சரம் பிசகாமல் எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.

    இந்தியாகிளிட்ஸ், சிபி, பிஹைண்ட்வுட்ஸ்… இன்னும் இப்படி நிறைய சொல்லலாம்.

    ஹாட்ஸ் ஆப்…

    -Suresh கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *