BREAKING NEWS
Search

வைகோ, பழ நெடுமாறன், சீமான், நல்லக்கண்ணு கைது!

வைகோ, பழ நெடுமாறன், சீமான், நல்லக்கண்ணு கைது!

செருப்பாலடித்து.. ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

சென்னை: ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, நல்லகண்ணு, இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.

இலங்கையில் தமிழர் இன அழிப்பை நடத்திய ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். சர்வதேச அரங்கில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர், இந்தியாவில் ராஜ மரியாதையுடன் 3 நாள் பயணம் மேற்கொண்டிருப்பதைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் இன்று போராட்டத்தில் குதித்தன.

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் போலீஸார் தடை விதித்திருந்தனர்.

இருப்பினும் தடையை மீறி பேரணியும், போராட்டமும் நடைபெறும் என வைகோ அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை பத்து மணியளவில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஆயிரக்ணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர். இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சே ஒழிக என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, மத்திய அரசையும் முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக தாக்கினார்.

மேலும் அவர், “ஈழத்தமிழர்கள் நாதியற்றவர்களா? நீங்கள் எது செய்தாலும் கேள்வி கேட்காமல் இருப்பதற்கு. உலகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு இருக்கிறார்கள்.

மாவீரன் பிரபாகரனை பெற்ற தாய் பார்வதி அம்மாள் இந்தியாவுக்கு வர அனுமதி தரவில்லை. ஆனால் ராஜபக்சேவுக்கு மட்டும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது கொடுமை. ஏன் இந்த இனதுரோகம்?’’ என்றார்.

பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

சீமான்…

சென்னை சாஸ்திரி பவன் முன்பு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவ்வியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது சிமான், “இந்தியா வரும் ராஜபக்சேவை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழின எதிரியை எப்படி இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம்? இத்தனை வருடங்களாக இந்த விழாவை இலங்கையில் நடத்தாத அந்நாட்டு அரசு. இப்போது மட்டும் ஏன் இந்த விழாவை நடத்துகிறது?

இந்த விழா மூலம் தமிழர்களை படுகொலை செய்த ரத்தக்கறையை கழுவப்பார்க்கிறார் ராஜபக்சே. அதனால்தான் இப்போது இந்த விழாவை நடத்துகிறார்.

அவரின் சூழ்ச்சியை புரிந்துகொள்ளாமல் போகக்கூடாது என்றுதான் நடிகர்களை எதிர்க்கிறோம்” என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது

இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சிவசேனா கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13 தொண்டர்களை போலீஸார் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.

திருப்பூரிலும் சிவசேனா கட்சியினர் ராஜபக்சே கொடும்பாவி எரித்துக் கைதாகினர்.

இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் 50 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் ராஜபக்சேவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

நாமக்கல்லில் போலீஸ் தடையைமீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் ரயில் மறியல்

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர். இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்துக் கைது செய்தனர்.

பல்வேறு கட்சிகள்சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால் துணைத் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. பல நூறு பேர் கைதானார்கள்.

43 தமிழ்ப் புலிகள் கைது

தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரிலும் ஆர்ப்பாட்டம்…

பெங்களூரில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன் கருப்புக் கொடியுடன் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.​ இதில் மனித நேய கூட்டமைப்பின் ​அமைப்பாளர் மா.ராவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் பெரியார் நகர் சர்க்கிளிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
6 thoughts on “வைகோ, பழ நெடுமாறன், சீமான், நல்லக்கண்ணு கைது!

 1. kiri

  6.5 கோடி மக்கள் இருக்கிற தமிழ் நாட்டுல, ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமா?

  குவாட்டர் + ப்ரியாமணியும் கொடுத்திருந்த வந்திருப்பாங்க இந்த தமிழ் நாடு தமிழன்..

 2. Manoharan

  எதிர்ப்புத் தீ அணையாமல் காத்திடும் வைகோ, நெடுமாறன்,சிமான்,மற்றும் அனைத்து தமிழ் சகோதரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .நிச்சயம் இலங்கை இன்னொரு போரை சந்திக்கும். அது தமிழ்நாட்டில் இருந்து வந்தால் ஆச்சரியப்படுவதர்க்கில்லை .

 3. Juu

  இந்திய அரசை பொறுத்தவரை,
  எரியாத தீயில் எண்ணெய்,இந்த ஆர்பாட்டங்கள்.
  அவரகளுக்கு தெரியாது!! தீப்பொறி வருகின்றது என்று..

 4. palPalani

  சரியாக சொன்னீர்கள் @Juu: தீப்பொறி வருகின்றது என்று…

 5. villallan malaysia

  ***** karunaanithi erukiravaraikum namakku avmanam erunthukondeairukkum…avan eppa *** appatahn entha tamizhan uruppuduvaan..

 6. Appavi

  போங்கபா காமடி கிமடி பண்ணாம போய் குழந்தை குட்டிகளை படிக்க வையுங்கபா ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *