BREAKING NEWS
Search

வேட்டைக்காரன் – விமர்சனம்!!

வேட்டைக்காரன் – விமர்சனம்!!

வேட்டைக்காரன்… எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பெயரில்,  தற்கால எம்.ஜி.ஆர், ‘அடுத்த தளபதி’ விஜய் ‘நடிப்பில்’ வெளிவர இருக்கும் அதிரடி திரைப்படம்.

0077

‘படம்தான் இன்னும் வெளி வரவில்லையே, அதற்குள் எப்படி விமர்சனம் வந்துள்ளது’ என குழம்ப வேண்டாம். படத்தின் இயக்குனர் என் நண்பனின் நண்பர். அதனால் அவரிடம் மட்டும் இந்தப் படத்தை நேற்று திரையிட்டுக் காட்டியுள்ளார் இயக்குனர்.

நானும் அப்படியே ஆர்வமிகுதியில் ஒட்டிக்கொண்டு படத்தைப் பார்த்துவிட்டேன். என்னுடன் அப்படியே ஒரு இருநூறு பேர் பார்த்தனர். அவர்களுடன் ஒரு இரண்டாயிரம் பேர் பார்த்தனர். இது மக்களுக்கு படத்தின் மீதுள்ள ஆர்வத்தையே காட்டியது.

வழக்கமாய் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்டப் போட்டு மேக்கப்பிலும், நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் விஜய் இந்தப்படத்தில் தனது இயல்பான முகத்தில் நான்கு நாள் மீசை தாடியுடன் நடித்துள்ளார். ‘மதுர’ திரைப்படத்தில் கர்சீப்பை காலிலும், ‘போக்கிரி’யில் கையிலும் கட்டி கெட்டப் மாற்றி நடித்திருந்த விஜய் இந்தப் படத்தில் கர்சீப்பை தலையில் கட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்!

கதை என்னவென்றால், விஜய் உழைத்துதான் ‘உணவு’ உண்ண வேண்டும் என்ற கொள்கை கொண்ட இளைஞர். ஆனால் தற்சமயம் வேலையில்லாமல் இருக்கும் காரணத்தால் ஓசியில் ‘டீ’ மட்டுமே குடித்து வாழ்கிறார்.

இதுவரையில் விஜய் படங்களில் நாம் பார்த்திராத (கேட்டிராத) அறிமுகப் பாடல் இப்படத்தில் உண்டு. ‘டண்டனக்கு டண்டணக்கு’ என்பதற்கு பதிலாக ‘டண்டானக்கு டண்டாணக்கு’ என மிகவும் புதிதாக இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

“நீ அடிச்சா தான் மாஸ்.. நான் கடிச்சாலே மாஸ்” போன்ற பஞ்ச் டயலாக்குகளுடன் தொடங்கிய படம், காமடியன் சத்யனுடன் சில நகைச்சுவைகள், பின் உள்ளூர் தாதாவின் கடையடைப்பை எதிர்த்து அவர்களை துவம்சம் பண்ணுதல், பின் ஊர்காரர்கள் இவருக்கு ஆரத்தி எடுத்தல் என்பது போன்ற படு வித்தியாசமான காட்சிகளுடன் கதை விர்ர்ர்ர்ர்ரென நகர்கிறது.vkn-03

இந்நிலையில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பஸ் ஸ்டாப்பில் அனுஷ்காவை சந்திக்கிறார் விஜய்.

அனுஷ்காவின் பாவாடை ஓரமாக கிழிந்துள்ளதைக் கண்டு அனுஷ்காவை தெருவில் வைத்தே திட்டி தீர்க்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் இதனால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது பற்றியும், ஓபாமாவின் வீட்டு நாய்க்கு இதனால் எப்படி வயித்துப்போக்கு ஏற்பட்டது எனவும், மிகவும் காட்டமாகவும், தீவிரமாகவும் விளக்குகிறார்.

தனது வலது கையை மார்பு வரையில் மல்லாக்க உயர்த்தி, “கிழிஞ்சாதான் பாவாட.. கிழியலேனா மானாட மயிலாட” என்று ‘அர்த்தத்துடன்’ பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

அனுஷ்காவை கிழிந்த பாவாடையை தைக்கும் படி திட்டிவிட்டு, பின் தன் வீட்டில் தனது கிழிந்த ட்ரவுசரைப் பார்த்து அழுகும் காட்சியில் விஜய் பின்னியிருக்கிறார். அழுது கொண்டே ஸ்விட்சர்லாந்தில் ஒரு குத்துப் பாட்டு பாடுகிறார். இதற்கு நடுவில் அனுஷ்கா பாவாடையை மாற்றியவுடன் ஒரு குத்துப் பாடல் வருகிறது. (இந்தப் பாடலில் அனுஷ்காவின் உடைக்கு முதலில் போட்டிருந்த கிழிந்த பாவாடையே பரவாயில்லையென ரசிகர்கள் முணுமுணுத்தது கேட்டது!).vkn-04

இந்தக் கட்டத்தில் தான் கதையில் யாருமே எதிர்பாராத திருப்பம் வருகிறது, அதாவது அனுஷ்காவுக்கு விஜய் மேல் காதல் பிறக்கிறது. ஆனால் விதியோ சதி செய்கிறது!! “யாருமே பார்க்காத அந்த பாவாடை கிழிசலை நீ எப்படி பார்த்த? நீ பார்த்துதொலைச்சது மட்டுமல்லாமல் ஊரையெல்லாம் கூட்டி என் தங்கச்சியோட மானத்தை வாங்கிவிட்டியேடா!!” என கத்திக்கொண்டே அனுஷ்காவின் அண்ணன் திரையில் நுழையும் சமயம் இடைவேளை வந்து விடுகிறது.

ஓரமாய் பாவாடை கிழிந்ததற்காக ஆத்திரத்தில் கத்திய விஜய், குத்துப் பாடல்களில் பாவாடையே போடாமல் ஆடும் அனுஷ்காவை ஒன்றுமே சொல்லாதது பெண் ரசிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குத்துப் பாட்டு முடிந்தவுடன் விஜயின் முதுகில் கத்தியால் ஒரு குத்து விழுகிறது. திரும்பிப் பார்த்தால் தன்னுடன் ஒரு காலத்தில் கபடி விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டனும், அனுஷ்காவின் அண்ணனும் நிற்கிறார்கள்.

தாங்கள் குத்தவில்லையென்றும், இயக்குனர்தான் விஜய் செய்யும் அலும்பு தாங்காமல் குத்தச் சொன்னார் எனவும் அவர்கள் எவ்வளோ முறை கெஞ்சியும் விஜய் அவர்களை மன்னிக்காமல் ஊரே அதிரும்படி கர்ஜிக்கிறார். பின் குத்துப்பட்ட காயம் ஆறுவதற்குள் அனுஷ்காவை திருமணம் செய்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார் விஜய்.

பின்பாதி படத்தில் முதுகில் ரத்தம் சொட்டியபடியே மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். விஜய்யின் வேதனையை பொறுக்க முடியாத நண்பர் சத்யன், விஜய்யின் ரத்த காயத்தில் ‘M-Seal’ பூசி அடைக்க வரும் சமயத்தில், விஜய் அவரை தடுத்து, உழைப்பின் உன்னதத்தை பற்றி, நமீதாவுடன் ஒரு ரீமிக்ஸ் பாடல் பாடுகிறார்.

“ஏன்டா இவன் சம்பந்தமில்லாம பாடுறான்?” என்ற குழப்பத்தில் அழுதுகொண்டே சத்யன் வெளியேரும் போது நம் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. வில்லனின் சதியால்(??!!!) நண்பனை இழந்த ஆத்திரத்தில், தான் செய்த சபதம் கடைசி சீனில் நினைவுக்கு வர, வெறிகொண்ட வேங்கையென எதிரிகளை ‘வேட்டையாடப்’ புறப்படுகிறார் வேட்டைக்காரன் விஜய்.

வில்லனை வீழ்த்தினாரா?
பஞ்சாப் கேப்டன் அனுஷ்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு தலை காதல் என்ன ஆனது?
சபதத்தில் விஜய் ஜெயித்தாரா?
முதுகில் ரத்தம் நின்றதா?
சத்யன் என்ன ஆனார்?
ஆடியோ கேசட்டில் இருக்கும் இன்னும் ஒரு குத்துபாடல் எப்போது வரும்?
போன்ற பல விஷயங்களுக்கு அழகாக விடை சொல்கிறது இந்த வேட்டைக்காரன்.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய விஜயின் வித்தியாசமான படங்களின் வரிசையில், மற்றுமொரு வைரம்தான், இந்த வேட்டைக்காரன். வேட்டைக்காரன் வெல்வான்.

ஆர் இளவரசன்

http://ilavarasanr.blogspot.com/2009/07/blog-post.html

குறிப்பு 1: இந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்த அல்ல… உங்கள் விருப்பு வெறுப்புக்களை மறந்து சிரிக்கவே.

அடுத்து, இன்னும் வெளிவராத இந்தப் படம் குறித்து எப்படி எழுதலாம் என யாரும் கேட்டுவிடாதீர்கள். படத்தின் பெரும்பகுதி இணையங்களில் வெளிவர ஆரம்பித்துவிட்டது. இரண்டு முழுப் பாடல்களும் வெளி வந்துவிட்டன என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஆனால் இந்த விமர்சனத்துக்கும், வெளிவந்துள்ள வேட்டைக்காரன் சமாச்சாரங்களுக்கும் தொடர்பில்லைங்ணா!
55 thoughts on “வேட்டைக்காரன் – விமர்சனம்!!

 1. mayu

  definately vettaikaran will be a block buster like villu,kuruvi,atm,aathi,sachin and utahaya.so dont tease our thalapathi.varunm kala america janathipathi vaazhka vaazhka.SAC avrkal vaazhka vaazhka.sanjay vaazhka.vettaikaran mmm mmm mmm.

 2. shenthan

  இன்னொரு நடிகரின் படத்தை இவ்வாறு கிண்டல் பண்ணி எழுதியிருப்பதை நம்ம தளத்தில போடுறது சரியில்ல வினோ. நம்ம தலைவர் படத்தை இவ்வாறு எழுதியிருந்தா நமக்கு எப்படி இருக்கும். ப்ளீஸ் வேண்டாம் இவ்வாறன பதிவு.

 3. இளவரசன்

  நம்ம தலைவர் படத்தை இவ்வாறு எழுதியிருந்தா நமக்கு எப்படி இருக்கும். ப்ளீஸ் வேண்டாம் இவ்வாறன பதிவு.//

  நண்பா. விஜய்யை நான் கிண்டலடிக்க, விஜய் ரசிகர்களே ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஆயிரம் காரணங்கள் சொல்வேன். ஆனால் யாரவது ஒருத்தனை ரஜினியை கிண்டலடிப்பதற்கு சரியான ஒரு காரணம் சொல்லச் சொல்லுங்கள். நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன். விஜய் பற்றிய எனது கட்டுரையை நீங்கள் தான் கிண்டல் என நினைக்கிறீர்கள். விஜய்யோ என் கதையையே படமாக்கலாமா என ஆலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன!!! ஹி ஹி ஹி!! கருத்துக்கு நன்றி.

 4. FUTURE DIRECTOR

  உங்களுக்கு உள்ள தில் லே தனி ஆசிரியரயே மனதார பாராட்டுறேன் பெரும்பாலும் என் மனதின் பிரதிபலிப்பாக உன் இணையத்தளத்தில் உள்ள அத்தனை பதிப்புகளும் அமைகின்றன,இன்னும் என்னை போன்று பல்லாயிரம் கோடி ரசிகர்கள் உங்களை நேசிப்பார்கள்.

  சொல்வதை துணிந்து சொல் ,நேர்பட பேசு, நிமிர்த்து நில்,இது தமிள்ளனின் இயற்கை குணம்.
  நன்றி நன்றி நன்றி உங்க பேனாவுக்கு சாரி உங்கள் கணினி பலகைக்கு

 5. Kannaiah

  //ஆனால் யாரவது ஒருத்தனை ரஜினியை கிண்டலடிப்பதற்கு சரியான ஒரு காரணம் சொல்லச் சொல்லுங்கள். நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.//

  Mr.Ilavarasan

  I posted two questions on a big logic slip in the Movie Shivaji. Nobody can deny it’s foolishness and absurdity once they realise that. Since you are so brilliant to rip apart the absurdness in a Vijay movie, I asked for your comment on Shivaji too. But Envazhi conveniently ignored my posting fearing the image of Rajini in bad light. I doubt whether this will also be posted. If this post is approved and you are ready to comment on that, I’ll post it again. Then we will decide whether you can continue to write or not.

  Similarly the movie Baasha too has a similar absurdity, which most of the people never noticed or could have kept silent even after noticing it. Rajini fans must have definitely noticed it, since they must have seen his Movies more number of times.

 6. Chandramohan

  Mr.ரஜினி அவர்கள் மட்டும் சொல்லிகொல்லும்படியாக இன்றுவரை என்ன படத்தில் நடித்துள்ளார்,ரஜினியின் அனைத்து படங்களும் masala,illogical films(ஆரம்ப காலகட்டத்து படங்கள்,ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகள்,+2,3films தவிர).. அன்று ரஜினி பண்ணியதை இன்று அனைத்து சுள்ளான் hero-க்களும் பண்ணுகிறார்கள்(including Dr.Vijay). ரஜினி செய்வது,செய்தது சரி என்றால் இன்று அனைத்து hero-க்களும் செய்வது சரியே.ரஜினி அவருடைய ரசிகர்களை காட்டியே safe zone- ஐ விட்டு வழியே வருவதில்லை.(he is not taking risk at all,we can not say that VALLI,BABA were risky films)…அதற்க்காக நாம் Dr.விஜய் உடன் ரஜினி-ஐ compare பண்ணுவதும் தவறாகவே முடியும்..

 7. Nallavanuku nallavan

  Hello Mr.Chandramohan,

  Ungalai pondravargalukagave namadhu nanbar, nethi adiyaga oru katturayai ingu padhivu seidhullar. Adhan thalaipu ரஜினி… ரஜினி மட்டுமே!

  Avatril sila varigal……

  //ரஜினியை ஒரு கோமாளி என்றும், “பல நடிகர்கள் மிகவும் உழைத்து சம்பாரிக்கும் காசை, ஒன்றுமே செய்யாமல், உடல் அசையாமல் சம்பாரித்துவிட்டுப் போகிறார் ரஜினி”, போன்ற வசனங்களைச் சொல்லித் திரியும் ரஜினி வெறுப்பாளர்களுக்கும், சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கும்தான். மிகவும் முக்கியமாக, ரஜினியின் அரசியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை, போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதைப் படியுங்கள்.

  ஆசியாவில், அகில உலக நட்சத்திரம் ‘ஜாக்கி சானு’க்கு (Jackie Chan) அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குகிறார் ரஜினி, தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் சூப்பர் ஸ்டார். ஃபிரஞ்சு மொழிப் படத்தில் ஒரு காட்சியில் பின்ணணியில் ரஜினி படம் தொலைக்காட்சியில் ஓடுகிறது. ஜப்பானில் ரஜினிக்காக உயிரையும் கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளது.

  டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ அவரை சர்வதேச சூப்பர் ஸ்டார் என்கிறது.

  குறிப்பிட்ட ஒரு மாநில மொழியில் மட்டுமே நடிக்கும் ரஜினி எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? தமிழ்நாட்டின் சொத்தான ரஜினி மேல் பிரஞ்சுக்காரனுக்கும், ஜப்பான்காரனுக்கும் என்ன இவ்வளவு பாசம்?

  ரஜினி ஆதரவாளர்கள் வழக்கமாக சொல்லும், “அவரு ரொம்ப சிம்பிள்…. தொழிலை தெய்வமாக மதிப்பவர்…” போன்றவை அல்ல, இதற்குக் காரணங்கள்.

  அவரை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் அவருக்கு இயற்கையிலேயே, பிறப்பிலேயே அமைந்துவிட்ட தனித்தன்மையும், ஆங்கிலத்தில் Charm, Charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வசீகரமும் தான்.

  என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராது… ஏனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. சிலபேருக்குதான் இது உண்டு. என்னதான் சில பூனைகள் வரிவரியாய் சூடு போட்டுக் கொண்டாலும், அவை புலி ஆகா!//

  Nandri……

 8. mahesh

  padam varatum papom yar jaikira yar thokkuranu…………..?
  Always VIJAY is king.
  next super star VIJAy dhan.
  Idha andha ANDAVANEA nenachalum matha mudiyadhu.

 9. yokesh

  vijay is the next super star!

  !he is a super dancer.
  !so maximum of people vijays fan.

  innaiku avalavu thann?????

 10. குமரன்

  அதெல்லாம் சரி, “உங்கள் சன் டி.வி” காதலுக்கு மரியாதை முதல் வில்லு வரை தந்துவந்த வழக்கம் போல “டாப் டென்” வரிசையில் இந்தப் படத்துக்கு முதல் இடத்தை, இந்தப் படம் திரையரங்குகளை விட்டுப் போகும் வரையில் தந்ததைப் பற்றி ஏன் எழுதவில்லை?

  என்னவோ விஜய்க்கு இளைஞ‌ர்கள், சிறுவர்கள் “craze” இருப்பது போல எல்லாப் பத்திரிகைகளும் எழுதுகின்றன. வில்லு படப் பிடிப்பு முடிந்து மதுரை, சென்னை விமானத்தில் விஜயும், பிரபுதேவாவும் வந்தார்கள். (நானும் அதே விமானத்தில் வந்தேன்) அதே விமானத்தில் வந்த ஒரு சிறுவன் ஒடி வந்து பிரபுதேவாவிடம் “ஆட்டோகிராஃப்” வாங்கினான். பக்கத்திலிருந்த விஜயைக் கண்டுகொள்ளவே இல்லை. விஜய் முகத்தை பார்த்தேன். அவரும் நான் பார்த்ததைப் பார்த்தார். அவர் முகத்தில் ஈயாடவில்லை. சரி அந்தப் பையனிடம், தம்பி, இவர்தான் “இளைய தளபதி விஜய்” என்று அறிமுகம் செய்யலாமா என்று யோசித்தேன். அப்புறம்தான், அந்தச் சிறுவன் அதற்கு பதிலாக, “தெரியும், அதலானென்ன?” என்று சொல்லிவிட்டால் அது பெருத்த அவமானமாகிவிடுமே! “பாவம், பிழைத்துப் போகட்டும்” என்று விட்டுவிட்டேன். அதை புரிந்து கொண்ட விஜய்யும், அந்தச் சிறுவன் அகன்றதும் பெருமூச்சு விட்டு, என்னை நன்றியுடன் பார்த்தார்.

  இத் எப்படி இருக்கு?

 11. vettaikaran

  Unavu Udai Uraividam song lyrics (vettaikaran Songs) for the banner this time.

  Unavu udai uraividam uzhavanukku
  kidaikkanum avan anupavicha micham meedhi
  aandavanukku padaikkanum

 12. balu

  muthalla oru tamilana eruka parunga….
  rajani oru tamilana…..tamilanukku enna seithar….

  padayappa padathila pampu pothukula kaiya viduvaaram,…kadikathamm.
  apa parungalen…athuvum nalla joke than…

  dance endu solli kaiya maddum adduvaram…athu dancesam….
  athu sema camedy….

 13. ANANTHU

  THALABATHI IS ONLY SUPER STAR………….SAMISHA YOU CARRECT. I AGGRY WITH YOU.PAYTHIYE KAREN PATHTHU SOLWAN POGATTUM WITTU WIDE.VETTAIKARAN IS BOX OFFICE HIT WAIT AND WATCH?

 14. SAMISHA

  kool:நீ ROMBE NALLAWEN.VIJEY ANNA IS ONLY SUPER STAR……………………………………..

 15. selvaa

  அட அட …! நீங்க சொன்னது போல இந்த கதையே படமாக எடுத்தால் பின்னும் போல இருக்கே . இளவரசன், விஜயின் அடுத்த கால்ஷீட் உங்களுக்குதேன் …..!

 16. Kannaiah

  /ஆனால் யாரவது ஒருத்தனை ரஜினியை கிண்டலடிப்பதற்கு சரியான ஒரு காரணம் சொல்லச் சொல்லுங்கள். நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.//

  Mr.Ilavarasan
  இளவரசன் அவர்களே, இதை பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். ‘சிவாஜி’ படத்துலே, அமெரிக்காவுக்கு வேலைக்கு போகும் கதாநாயகன் (ஒரு 20 வயதில் போவதாகவே வைத்துக்கொள்வோம்) 20 வருடங்கள் கழித்து, இந்தியாவுக்கு வரும்போது 200 கோடி பணத்துடன் வருகிறார். என்னுடைய கேள்விகள் 2.

  1. என்னதான் அமெரிக்காவில் வேலை செய்து சம்பளம் வாங்கினாலும் 20 வருடங்களில் 200 கோடி சம்பாதிக்கிறார் என்றால், வருடத்திற்கு 10 கோடியாவது சம்பாதித்து இருக்க வேண்டும். அதாவது மாதம் சுமார் 80 லட்சம். (கடைசி மாத சம்பள அடிப்படையிலேயே வைத்துக் கொண்டாலும்). இது சாத்தியமா? (அது சுஜாதா, ஷங்கர் கம்பெனியாகவே இருந்தாலும்).

  2. 20 வயதில் அமெரிக்கா போனவர் 20 வருடம் கழித்து திரும்பி வரும் போது 40 வயது ஆகியிருக்கும். 40 வயது அரை முதியவர், 200 கோடி project ஐ தலை மீது வைத்துக் கொண்டு (ஆயிரத்து எட்டு பிரச்சினைகளுடன்) 20 வயது பெண்ணை சுற்றி சுற்றி வந்து ‘வாங்க பழகலாம்’ என்று ஜொள்ளு விடுவது நன்றாகவா இருக்கிறது?

  இதை நீங்கள் justify செய்து விட்டு பின் மற்ற நடிகர்களின் படங்களை பற்றி பேசுங்கள். குறிப்பாக ஒன்று. நீங்கள் விஜய் பற்றி எழுதுவது, அவர் வளர்ச்சியை பார்த்து நீங்கள் பயப்படுவது போல் இருக்கிறது. பயம் இல்லை என்றால் நமக்கு மற்றவர் பற்றிய விமர்சனம் எதற்கு.

  வினோ, இந்த பதிவை போடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டால் நீங்களும் உண்மையை எதிர்கொள்ள தைரியம் அற்றவர் தான் என்று நிரூபணம் ஆகிவிடும். நீங்கள் தைரியத்திற்கு உதாரண புருஷனான ரஜினியின் ரசிகர் அல்லவா?

  கண்ணையா.

 17. Ravi

  அண்ணன் கண்ணையா அவர்களுக்கு…

  1. சம்பளக் காரனாக ஏன் நீங்கள் சிவாஜியை கருத வேண்டும்? அவர் ஏதேனும் கண்டு பிடித்திருக்கலாம் – Windows 95 மூலம் கிடைத்ததே பில் கேட்ஸ் சொத்து. அது போல ஒரு புதிய மென்பொருள் கட்டுமானம் செய்திருக்கலாம்?

  2. படிக்க அமெரிக்க சென்று இருந்தால் அவருக்கு வயது 37. கல்லூரி மாணவியாக படத்தில் வரவில்லையே ஷ்ரேயா? அது போல திருமணம் ஆகாத 35+ ஆண்களுக்கு ஷ்ரேயா மாதிரி பெண் கிடைத்தால் என்ன செய்வார்களோ அதை தான் அவரும் செய்கிறார்…

 18. Ravi

  Babu and the rest of Rajini bashers – *******************************************
  Poor guy – 99% of Tamil Nadu does not know how much good he does for Tamil people…. He believes in left hand should not know what right hand gives

  MGR was born in Sri Lanka and raised in Kerala – His father’s name is Gopala Menon – He was one of the best chief ministers TN remembers now and he supported Eelam Tamil cause. What is the TN born CM doing now?

 19. kannaiah

  தம்பி ரவி அவர்களுக்கு

  1. லாஜிக் இடிக்கிறது என்றால் அவரவர் இஷ்டத்திற்கு சில உப கற்பனை கதைகளை சேர்த்துக்கொள்ளலாம், அப்படிதானே? இவ்வளவு பெரிய ‘கதை’ சொன்னவர்கள், ஒரே ஒரு வரி உங்கள் கற்பனை போல் எதையாவது சொல்லி இருக்கலாமே? லாஜிக் ல் கோட்டை விட்டு விட்டார்கள் என்பது தான் உண்மை. இந்த லாஜிக் ஓட்டை அடைப்பு, இளவரசன் நக்கலடித்த விஜய் படத்திற்கு பொருந்தாதா?

  2. மறுபடியும் 37 வயது என்று ஒரு ஓட்டை அடைப்பு லாஜிக். (40 க்கும் 37 க்கும் பெரிய வித்தியாசம் தான்). சபாஷ். 200 கோடி project ஐ தலையில் வைத்துக்கொண்டு (நீங்கள் சொன்னது போல Bill Gates போன்ற ஒரு Business Intellectual), ஆயிரம் அரசு அதிகாரிகளின் இடைஞ்சல்களை சமாளிக்க நேரம் இருக்குமா அல்லது கூட ஒரு மாமா பயலையும் வைத்துக்கொண்டு, அவர் வயதில் பாதி உள்ள ஒரு பெண்ணின் பின்னால் ஜொள்ளு விட்டுக்கொண்டு சுற்றுவார? (இதில் மங்களா, பங்களா என்று டயலாக் வேறு. கண்றாவி) 200 கோடி project ஐ முதலீடு செய்யும் ஒரு 25 வயது இளைஞர் கூட இப்படி செய்ய மாட்டார்.

  தாயாரால் இட்லி விற்று படிக்க வைக்கப்பட்டு, IIMA ல் தேர்ச்சி பெற்று தற்போது ஒரு பெரிய நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் சென்னையை சேர்ந்த இளைஞர் சரத் பாபு, TVS வேணு ஸ்ரீநிவாசன், குமாரமங்கலம் பிர்லா, பில் கேட்ஸ், முகேஷ் அம்பானி போன்றவர்களை அப்படி கற்பனை செய்து பாருங்கள், அந்த அபத்தத்தை உணர்வீர்கள்.

  ரஜினி ரசிகராகவோ, கமல் ரசிகராகவோ அல்லது வேறு யாருடைய ரசிகராகவோ இருப்பதாலேயே அவர்களுடைய படத்தின் அபத்தங்களை கேள்வி கேட்கக் கூடாது என்பது நம் தரத்தை நாமே குறைத்துக் கொள்வதாகிவிடும்.

  புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்…

 20. chinthanai venthan N

  இந்த படம் சத்தியமா வோடது உதிக்கும். விஜய் ஓவர் சீஇன் போடுறன் .
  ஓவர் சீஇன் உடம்புகு அகத்து . வெத்து பந்தா வேளைக்கு அக்கத்து .

 21. Tamil MA

  ” இந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்த அல்ல… உங்கள் விருப்பு வெறுப்புக்களை மறந்து சிரிக்கவே.”

  இப்படியெல்லாம் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த பன்னியோட படத்துக்கும் ரஜினியோட ஒரு வித்தியாசமும் கிடையாது.
  வெட்டுங்க எவனா இருந்தாலும் வெட்டுங்க. தப்பே இல்ல.

  இங்க இருக்கிற ரசனை கேட்ட ஜென்மங்களா பத்தில்லாம் கவலை பட வேண்டாம்.

  அடுத்தது இன்னொரு *** அசல் என்ற படத்துடன் வருகிறது. உங்களுடைய முன்னோட்டத்தை எதிர்பார்கிறேன்.

 22. Sharon

  ஜட்டி கலர் கூட மாத்தாம, தெலுங்கு படத்த காபி அடிக்கிற விஜய் பத்தி என்ன பேச்சு… பலான படத்துல நடிச்சவனல்லாம் இனிக்கி டாக்டர் ஆயிடங்கப்பா..
  என்ன கொடும சரவணன்…?

 23. Tamil Dossan

  Ovvoru kalaiganukkulaiyum oru thirama irukku.
  Vijay maari Rajini dance aada mudiyuma or Rajini maari vijay style panna than mudiyuma ?
  Antha thiramaya mathikka kathukkanum. Atha vittutu ippadi aalaalukku maari maari vasai padina athu nagarigam illa.
  Namallam intha maari, maari maari Vijay, Rajini nu ippadai katha vida than layakku. Aana avanga 2 perum oru padathukke kodi kodiya sambathikranga!
  Paravallanga nammalukku avanga 2 perum evlo thevala.
  Yenna Avanga pera solliyavathu innaikku ethaniyo per sapudarnga .. Etho oru vagaiyila mathavangalukku uthavuranga..
  Namalum antha alavukku illainalaum nammala mudinjatha illathavangalukku pannuvom.
  Velga tamil.
  Jai hind.

 24. Srinivas

  யாருப்பா அது கன்னையா!!!!
  //Similarly the movie Baasha too has a similar absurdity, which most of the people never noticed or could have kept silent even after noticing it. Rajini fans must have definitely noticed it, since they must have seen his Movies more number of times.//

  நான் வருகிறேன்…அதற்க்கு முன் தாங்கள் ஒரு பொது சனமா ..அல்லது ரஜினி எதிர்ப்பாளரா ..அல்லது வேறு ஏதாவது ஒரு நடிகரின் ரசிகரா என்பதை கூறும் படி கேட்டு கொள்கிறேன்……மேலும் சிவாஜி யை பற்றிய உங்களது கருத்துக்கள்.. செம காமெடி …

 25. Srinivas

  //Chandramohan says:
  July 20, 2009 at 1:29 am
  Mr.ரஜினி அவர்கள் மட்டும் சொல்லிகொல்லும்படியாக இன்றுவரை என்ன படத்தில் நடித்துள்ளார்,ரஜினியின் அனைத்து படங்களும் masala,illogical films(ஆரம்ப காலகட்டத்து படங்கள்,ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகள்,+2,3films தவிர).//

  சும்மா மசாலா மசாலா என்று சொல்கிறீர்களே… மசாலா படத்திற்கும், ரஜினி படத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது…அண்ணாமலை – உங்கள் பார்வையில் மசாலா படமா?? படையப்பா?? பாஷா?? தளபதி?? முத்து??
  என்னை பொறுத்த வரையில் ரஜினி கடந்த இருபது வருடத்தில் நடித்த மசாலா படம் குசேலன் என்று தான் நினைக்கிறேன்..அதுவும் ரஜினி வராத காட்சிகள் தான் மசாலா காட்சிகள்…

 26. eelam tamil

  Great to see how people active in this posting and that is key success for sun and karunanithi family to rule tamil nadu for many decades… Great guys… better start think abt next films and discuss. God only can save tamils…

 27. கண்ணையா

  திரு ஸ்ரீநிவாஸ்

  //வேறு ஏதாவது ஒரு நடிகரின் ரசிகரா என்பதை கூறும் படி கேட்டு கொள்கிறேன்…//

  ஒரு படத்தையோ, படைப்பையோ அல்லது கலைஞர்களையோ விமர்சிப்பதற்கு, ஆதரவாளராகவோ அல்லது எதிர்பாளராகவோ தான் இருக்க வேண்டுமா? தனி மனித தாக்குதல்களை தவிர்த்து செய்யப்படும் எந்த ஒரு விமர்சனத்தையும் நாம் எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அது தான் மேலை நாடுகளில் காணப்படும் சிறந்த கலாச்சாரம். நாம் அவர்களுக்கு குறைந்தவர்கள் இல்லையே.

  நான் மொழிகளின் எல்லைகள் கடந்த திரை படங்களின் ரசிகன். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தை பற்றியும் எனக்கு எதிர் மறை கருத்துக்கள் நிறையவே உள்ளது. நான் ரசித்த ரஜினியின் சிறந்த படங்கள் பலப் பல. அவருடைய ஆளுமை தனித் தன்மை வாய்ந்தது. விஜய் படங்கள் பலவும் குப்பை என்றும் எனக்கு கருத்து உண்டு.

  முள்ளும் மலரும், ஜானி, அவள் அப்படிதான், போன்ற யதார்த்தமான படங்களை, சிறந்த நடிகரான ரஜினி மீண்டும் நடிக்க முனையவில்லையே என்ற ஆதங்கம் தான் சிவாஜி படத்தின் மீதான என் கருத்துக்கள்.

  //மேலும் சிவாஜி யை பற்றிய உங்களது கருத்துக்கள்.. செம காமெடி …//

  என்னப்பா காமெடி? கொஞ்சம் விவரமா தான் சொல்றது. நீங்களா எதையாவது சால்ஜாப்பு சொல்லப் போய் அது இன்னும் பெரிய காமெடி ஆயிடப் போவுது.

 28. Srinivas

  //ஒரு படத்தையோ, படைப்பையோ அல்லது கலைஞர்களையோ விமர்சிப்பதற்கு, ஆதரவாளராகவோ அல்லது எதிர்பாளராகவோ தான் இருக்க வேண்டுமா?//

  நான் அப்படி கேட்டகவே இல்லையே…ஒரு வரியில் இருந்து ஏன் பாதியை படித்து விட்டு இப்படி கேட்கிறீர்கள்…
  இந்த நாட்டில் யாரும் யாரை பற்றி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்…
  எல்லோர் மனதும் ஒன்றாக இருக்காது…அப்படி இருந்தநன்றாகவும் இருக்காது…நண்பர் eelam tamil says: கூறியது போல இந்த பழைய பதிவிற்கு இப்படி இன்னும் ஆரோக்கியமாக கமெண்ட் பண்ணிக்கொண்டும் இருக்க போவதில்லை .

  //நான் மொழிகளின் எல்லைகள் கடந்த திரை படங்களின் ரசிகன். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தை பற்றியும் எனக்கு எதிர் மறை கருத்துக்கள் நிறையவே உள்ளது. //

  இப்போது ஏன் உன்னை போல் ஒருவனை இங்கு இழுக்கிறீர்கள் . நான் ரஜினி ரசிகன்…அதனால் கமல் படத்தினையும் தாங்கள் விமர்சனம் செய்வீர்கள் என்பதை தெரிவிப்பதர்க்காகவா?? எனக்கு ரஜினிக்கு பிறகு பிடித்த நடிகர் கமல் தான்..உன்னை போல் ஒருவனில் எனக்கு பிடிக்காத ஒரே விஷயம்…ஹிந்தியை அப்படியே எடுத்ததுதான்…இவ்வளவு வலுவான கதை கையில் கிடைத்திருக்கும் போது கமல் போன்ற அனுபவ சாலிகள் சுவாரசியத்தை கூடியிருக்க வேண்டாமா???

  //முள்ளும் மலரும், ஜானி, அவள் அப்படிதான், போன்ற யதார்த்தமான படங்களை, சிறந்த நடிகரான ரஜினி மீண்டும் நடிக்க முனையவில்லையே என்ற ஆதங்கம் தான் சிவாஜி படத்தின் மீதான என் கருத்துக்கள். //

  மகேந்திரனிடமும் , சங்கரிடமும் மற்றும் பிற இயக்குனர்களிடமும் நாம் எப்படி ஒரே மாதிரியான கதையை எதிர்பார்க்க முடியும்???
  ஷங்கர் முள்ளும் மலரும் போல் ஒரு கதையை எடுக்க தயாராக இருப்பாரா??? மணிரத்னம் படையப்பா போன்ற ஒரு படம் எடுப்பாரா???
  மகேந்திரன் சிவாஜி போல் படம் எடுப்பாரா?? ஒரு படத்தில் நடிப்பது தான் நடிகனும் கடமை….ரஜினியின் நடிப்பு சிவாஜியில் சரியில்லையா ?? அப்படி உங்களுக்கு தோன்றினால் அது நியாயம்..ஆனால் வெறும் யதார்த்தமான கதையில் நடிப்பது மற்றும் அழுவது மட்டுமே நடிப்பாகி விடாது,,,
  என்னை பொறுத்த வரையில் ரஜினியின் நடிப்பை நூறு சதவிகிதம் ஷங்கர் சிவாஜியில் பயன்படுத்தியிருக்கிறார்..
  எல்லாரும் கேட்கிறார்கள் அந்த நாட்களில் ரஜினி செய்ததை தான் இப்போது விஜய் போன்ற நடிகர்கள் செய்கிறார்கள் என்று..ஏன் அவங்கள விமர்சிக்கரீங்கன்னு .ரஜினி சந்திக்காத விமர்சனமா??? இந்த பதிவுல கூடதான் ..சும்மா வரலைங்க சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ..
  சின்ன குழந்தை லேந்து , பெரியவங்க வரைக்கும் பிடிக்கற மாதிரி நடிக்கறது அவ்ளோ ஈசி இல்லீங்க..

  //நீங்களா எதையாவது சால்ஜாப்பு சொல்லப் போய் அது இன்னும் பெரிய காமெடி ஆயிடப் போவுது.
  //
  நாங்க எதுக்குங்க சால்ஜாப்பு சொல்லணும் ??? சிவாஜி , பழைய ரஜினி படம் போல இருக்கும்னு எதிரபார்த்து போவது உங்கள் தவறு …
  பாட்சாவில் வேறு குறை உள்ளதாக கூறியுள்ளீர்கள்..சரி நாங்கள் கூறுவது அப்படி பெரிய காமெடி ஏதாவது ஆச்சுன்னா , ஆதித்யா இல்ல சிரிபொலி ல போட்டுடலாம்…கவலை படாதீங்க…

 29. Srinivas

  திரு கண்ணையா அவர்களே..

  //ஒரு படத்தையோ, படைப்பையோ அல்லது கலைஞர்களையோ விமர்சிப்பதற்கு, ஆதரவாளராகவோ அல்லது எதிர்பாளராகவோ தான் இருக்க வேண்டுமா?//

  நான் அப்படி கேட்டகவே இல்லையே…ஒரு வரியில் இருந்து ஏன் பாதியை படித்து விட்டு இப்படி கேட்கிறீர்கள்…
  இந்த நாட்டில் யாரும் யாரை பற்றி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்…
  எல்லோர் மனதும் ஒன்றாக இருக்காது…அப்படி இருந்தநன்றாகவும் இருக்காது…நண்பர் eelam tamil says: கூறியது போல இந்த பழைய பதிவிற்கு இப்படி இன்னும் ஆரோக்கியமாக கமெண்ட் பண்ணிக்கொண்டும் இருக்க போவதில்லை .

  //நான் மொழிகளின் எல்லைகள் கடந்த திரை படங்களின் ரசிகன். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தை பற்றியும் எனக்கு எதிர் மறை கருத்துக்கள் நிறையவே உள்ளது. //

  இப்போது ஏன் உன்னை போல் ஒருவனை இங்கு இழுக்கிறீர்கள் . நான் ரஜினி ரசிகன்…அதனால் கமல் படத்தினையும் தாங்கள் விமர்சனம் செய்வீர்கள் என்பதை தெரிவிப்பதர்க்காகவா?? எனக்கு ரஜினிக்கு பிறகு பிடித்த நடிகர் கமல் தான்..உன்னை போல் ஒருவனில் எனக்கு பிடிக்காத ஒரே விஷயம்…ஹிந்தியை அப்படியே எடுத்ததுதான்…இவ்வளவு வலுவான கதை கையில் கிடைத்திருக்கும் போது கமல் போன்ற அனுபவ சாலிகள் சுவாரசியத்தை கூடியிருக்க வேண்டாமா???

  //முள்ளும் மலரும், ஜானி, அவள் அப்படிதான், போன்ற யதார்த்தமான படங்களை, சிறந்த நடிகரான ரஜினி மீண்டும் நடிக்க முனையவில்லையே என்ற ஆதங்கம் தான் சிவாஜி படத்தின் மீதான என் கருத்துக்கள். //

  மகேந்திரனிடமும் , சங்கரிடமும் மற்றும் பிற இயக்குனர்களிடமும் நாம் எப்படி ஒரே மாதிரியான கதையை எதிர்பார்க்க முடியும்???
  ஷங்கர் முள்ளும் மலரும் போல் ஒரு கதையை எடுக்க தயாராக இருப்பாரா??? மணிரத்னம் படையப்பா போன்ற ஒரு படம் எடுப்பாரா???
  மகேந்திரன் சிவாஜி போல் படம் எடுப்பாரா?? ஒரு படத்தில் நடிப்பது தான் நடிகனும் கடமை….ரஜினியின் நடிப்பு சிவாஜியில் சரியில்லையா ?? அப்படி உங்களுக்கு தோன்றினால் அது நியாயம்..ஆனால் வெறும் யதார்த்தமான கதையில் நடிப்பது மற்றும் அழுவது மட்டுமே நடிப்பாகி விடாது,,,
  என்னை பொறுத்த வரையில் ரஜினியின் நடிப்பை நூறு சதவிகிதம் ஷங்கர் சிவாஜியில் பயன்படுத்தியிருக்கிறார்..
  எல்லாரும் கேட்கிறார்கள் அந்த நாட்களில் ரஜினி செய்ததை தான் இப்போது விஜய் போன்ற நடிகர்கள் செய்கிறார்கள் என்று..ஏன் அவங்கள விமர்சிக்கரீங்கன்னு .ரஜினி சந்திக்காத விமர்சனமா??? இந்த பதிவுல கூடதான் ..சும்மா வரலைங்க சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ..
  சின்ன குழந்தை லேந்து , பெரியவங்க வரைக்கும் பிடிக்கற மாதிரி நடிக்கறது அவ்ளோ ஈசி இல்லீங்க..

  //நீங்களா எதையாவது சால்ஜாப்பு சொல்லப் போய் அது இன்னும் பெரிய காமெடி ஆயிடப் போவுது.
  //
  நாங்க எதுக்குங்க சால்ஜாப்பு சொல்லணும் ??? சிவாஜி , பழைய ரஜினி படம் போல இருக்கும்னு எதிரபார்த்து போவது உங்கள் தவறு …
  பாட்சாவில் வேறு குறை உள்ளதாக கூறியுள்ளீர்கள்..சரி நாங்கள் கூறுவது அப்படி பெரிய காமெடி ஏதாவது ஆச்சுன்னா , ஆதித்யா இல்ல சிரிபொலி ல போட்டுடலாம்…கவலை படாதீங்க…

 30. sen

  ஜட்டி கலர் கூட மாத்தாம, தெலுங்கு படத்த காபி அடிக்கிற விஜய் பத்தி என்ன பேச்சு… பலான படத்துல நடிச்சவனல்லாம் இனிக்கி டாக்டர் ஆயிடங்கப்பா..
  என்ன கொடும சரவணன்…?

 31. sen

  விஜய் மாதிரியான ஒரு *** நடிக்கும் படத்தை பார்க்க வேண்டிய சாபம் தமிழனுக்கு

 32. sen

  விமர்சனம் தூள்… இந்தபயபுள்ள விஜய் அடங்கமாட்டுறானே… ஹேட்ரிக் தோல்வி கொடுத்த மருத்துவர் விஜய் வாழ்க…. சிவசம்போ…

 33. sen

  இந்த படம் ஓடும். வசூலை அள்ளும். சுயூர் சூப்பர் ஹிட் ஆனால் படம் மரணமொக்கை.

 34. babu

  விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட….
  ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!”.

  ரொம்ப சூப்பர். இவன் ஒரு தூங்கு மூஞ்சி, இவனெல்லாம் தமிழ் நாடு ஸ்டாராக்கும், கிழிஞ்சது

 35. babu

  ஹாட்ரிக் தோல்வியையே மூன்று முறை அடித்து ஹாட்ர்க் செய்தவர் யாரென்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

 36. Manoharan

  ஏன் என்வழியில் வேட்டைக்காரன் விமர்சனத்தை காணோம்..? படம் சரியான டப்பா என்பதாலா ? எங்கள் ஊரில் இப்பவே காத்து வாங்குது. படம் பொங்கலை தாண்டாது.

 37. vasanthansamaran

  என்ன கொடும சார் இது. வேட்டைக்காரன் பட ***** இது. படம் நடிக்குறேன்னு சாவடிக்குறான்.சாப்புட்டு தூங்க வேண்டியது தானே. ************ மவன் கண்ண்டிப்பா சொல்றேன் வேட்டைக்காரன் உதிக்கிச்சு .

 38. vimal

  மகர் கேவலமான சன்ன்டைக்க் கட்சிகளுக்கு கனல் கண்ணன் இயக்குனர் எவ்வளவுனலைக்கு கதா நாயகன் சிறு கிரேல் இல்லாமல் சண்ணடை போடுவார்

 39. vijay

  சூப்பர் ஹிட்

  அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்

  சூப்பர் ஹிட்வேட்டைக்காரன்

  வாழ்த்துக்கள்
  அருண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *