BREAKING NEWS
Search

வீட்டுக்கடன் ஊழல்… சென்ட்ரல் வங்கி, பிஎன்பி, எல்ஐசி அதிகாரிகள் கைது!

வீட்டுக்கடன் ஊழல்… 8 அரசு வங்கிகள், எல்ஐசி அதிகாரிகள் கைது!

மும்பை: வீட்டுக் கடன் வழங்குவதில் மெகா ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் சேர்ந்து தேசிய வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவன அதிகாரிகள் பல நூறு கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட 5 நகரங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.

இதில் சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர், இயக்குநர், பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) துணைப் பொது மேலாளர், பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர், எல்ஐசியின் வீட்டுக் கடன் பிரிவு செயலாளர் ஆகியோர் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

மணி மேட்டர்ஸ் நிறுவன தலைவரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து போலிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, இல்லாத வாடிக்கையாளர்கள் மற்றும் பொய்யான நிலங்களின் பேரில் பல கோடி ரூபாயை கடனாகப் பெற்று ஏமாற்றியுள்ளனர் இந்த அதிகாரிகள்.

இந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழலின் அளவு மிக அதிகம் என்றும், இதனால் நியாயமாக கடனுக்கு விண்ணப்பிக்கும் பல நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் ஊழலில் கொள்ளை போயிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தன. முழுமையான விவரங்கள் நிச்சயம் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




2 thoughts on “வீட்டுக்கடன் ஊழல்… சென்ட்ரல் வங்கி, பிஎன்பி, எல்ஐசி அதிகாரிகள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *