BREAKING NEWS
Search

வில்லன் வேடத்தில் ரஜினி? ஒரு பொய், செய்தியானது!

வில்லன் வேடத்தில் ரஜினி? ஒரு பொய், செய்தியானது!

ந்திப் படம் ஒன்றில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் ரஜினி’ – நேற்று முழுக்க இணையதளங்களில் உலாவரும் இந்த செய்தி உண்மையா?

– இப்படி நிறைய பேர் கேட்டுவிட்டார்கள்.

நண்பர் நிகிலிடம் இதுபற்றிக் கேட்டோம்.

“இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. வெறும் கற்பனை, யூகம் மட்டுமே”, என்றார்.

யாஷ் சோப்ரா தயாரிக்கும் தூம் 3 பட வேலைகள் விரைவில் துவங்கவிருக்கின்றன. இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்குமாறு யாஷ் சோப்ரா ரஜினியிடம் கேட்டதாக சிலர் பேசியதை வைத்து ஆளாளுக்கு இஷ்டத்துக்கும் கற்பனையைத் தட்டிவிட்டிருக்கிறார்கள்.

யுடிவிகாரர்கள் ராமாயணம் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிப்பதாகவும் அதில் ராவணன் வேடத்தில் ரஜினி நடிப்பார் என்றும் முன்பு ஒரு வதந்தி கிளம்பியதே… அதற்கு நிகரானதுதான் இந்த வதந்தியும்.

ரஜினி எப்போதுமே தமிழ் சினிமாவுக்கும் தனது ரசிகர்களுக்கும் பெருமை தரும் படங்களையே தருபவர். அவரது படம் ஆரம்பிக்கிறது என்றால், அதற்கான அறிவிப்போ, தகவலோ வெளியாகும் ரேஞ்சே வேறு!

இதுபற்றி யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது, “நாங்கள் இப்படி ஒரு செய்தியை யாரிடமும் சொல்லவே இல்லை. ரஜினி இந்திய அளவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். இந்தியாவின் நம்பர் ஒன் நடிகர். இந்திய சினிமாவின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர். அவர் மீது நாங்கள் பெருமதிப்பு கொண்டவர்கள். அவரிடம் வில்லனாக நடிக்கும்படி நாங்கள் கேட்க முடியுமா? இது பொய்… வதந்தி” என்று தெரிவித்தனர்.




6 thoughts on “வில்லன் வேடத்தில் ரஜினி? ஒரு பொய், செய்தியானது!

  1. endhiraa

    பாலிவுட் எல்லாம் டப்பா…தலைவர் அங்கே போய் எதுக்கு நடிக்கணும் ??

  2. sankar

    தலைவா எவ்ளோ கஷ்பட்டு இருக்கிறாய் ..,எந்திரனுக்கு …,வாழ்த்துக்கள் தலைவா ..,

    @ வினோ

    இந்த தளத்தை தலைவர் படிக்கிறார் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான் …,அந்த ஒரே காரணத்துக்காக தான் தலைவரை தாக்கி பின்னூட்டம் இடும் சொறி நாய்களுக்கு பதில் சொல்லாம இருந்தேன் …,தலைவர் படிப்பது உண்மை என்றால் பதில் சொல்லுவதற்கு தயக்கமாக இருக்கும் …..,இனி அடிச்சி ஆட வேண்டியது தான்

  3. sankar

    @ வினோ ..,
    தலைவரை பாலிவுட் கூட எல்லாம் சேர்க்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ..,அவர் ஆசிய சூப்பர் ஸ்டார்

  4. Arun

    vino sir,
    thalaivar interview pathi, ivalavu adakkama avaar pesinathu pathiyum unga “en pakkangal” la sollanum.. yengalukaga plssss

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *