விபத்தில் ரசிகர் மரணம்: ரஜினி அனுதாபம்.. குடும்பத்தினரை நேரில் சந்திக்கிறார்!

விபத்தில் ரசிகர் மரணம்: ரஜினி அனுதாபம்.. குடும்பத்தினரை நேரில் சந்திக்கிறார்!

சென்னை: மதுரையில் ரசிகர் கார்த்திக் விபத்தில் மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் வெளியிட்டுள்ளார் ரஜினி. விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் திருமணத்துக்காக மதுரை சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்போது அவரது காரைப் பின் தொடர்ந்து ரசிகர்கள் வந்த டாடா சுமோ வாகனம், டிரைவரின் அலட்சியத்தால் விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திக் என்ற ரசிகர் மரணம் அடைந்தார்.

இந்தச் செய்தி அறிந்து அனுதாபம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார் தலைவர் ரஜினி. அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மதுரை தெற்குவாசல் 45-வது வார்டு ரஜினி மன்ற துணைத்தலைவர் ஆர்.எம்.கார்த்திக்கின் அகால மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.

-என்வழி




9 thoughts on “விபத்தில் ரசிகர் மரணம்: ரஜினி அனுதாபம்.. குடும்பத்தினரை நேரில் சந்திக்கிறார்!

  1. santhosh

    இதனால் தான் தலைவர் ரசிகர்களை தன் இல்ல திருமணத்திற்கோ அல்லது தன் பிறந்தனளுக்கோ அழைப்பதெஇல்லை……

    தலைவரின் மனசு நல்ல மனசு புரிந்து கொள்ள வேண்டும்……….

  2. r.v.saravanan

    கார்த்திக்கிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  3. shriram

    ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். திரு சந்தோஷ் கூறிய கருத்தை ஆமோதிக்கிறேன். ரஜினி அவர்களின் maturity level இங்கு பல நபர்களுக்கு இல்லாத காரணத்தால் தான், அவர் நல்ல விஷயங்களை சொன்னாலும், விமர்சனம் செய்யவேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக அவரின் நோக்கங்களுக்கு பழுது காண்கிறார்கள். ஆர்பாட்டம், ஆடம்பரம் இல்லாத மனிதர் ரஜினி என்பதை புரிந்து கொள்ள இந்த துயர சம்பவம் தேவைபடுவது தான், ஒரு பெரிய வேதனை.

  4. karthik

    ஆழ்ந்த வருத்தங்கள்.
    ரசிகர் கூட்டத்தை ஒழுகுங்கு படுத்த, பயிற்சி பெற்ற சிறப்பு படை இருந்தால் இது போன்ற விபத்துகளை தடுக்க முடியும்.

  5. Anand

    கார்த்திக்கின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம்.
    சந்தோஷ் சார் சொன்னது மிக மிக சரி.
    தனக்கு தானே கட்டவுட் வைத்துக்கொள்ளும் இந்தகாலத்தில், பாபா படத்தின்போதே கட்டவுட் வைகவேண்டம் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார். (ரசிகர்கள் பாலவிஷேகம் செய்யும்போது விபரீதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்) ஆனாலும் ரசிகர்கள் கேட்கவில்லை.
    அவரோட நல்ல மனச புரிஞ்சிக்காம வீண் விமர்சனம் செய்றவங்க செஞ்சிக்கிட்டுதான் இருப்பாங்க.
    நமக்குத்தெரியும் நம்ப தலைவரப்பத்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *