BREAKING NEWS
Search

விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும்! – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம்

விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும்! – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம்

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாதிட்டார்.

புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து இருப்பதையும், அதை உறுதிபடுத்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டதை அங்கீகரிப்பது குறித்தும் முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

இதில், வைகோ நேரில் ஆஜராகி புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.

ஆனால், அவர் தன் தரப்பு வாதங்களை எடுத்துக் கூற மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தான் கருத்துக் கூற முடியும் என்றும், மற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

பின்னர், இந்த வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதுகுறித்து வைகோ கூறுகையில், “புலிகள் அமைப்பை தடை செய்துவிட்டதாக இந்தியா கூறுகிறது. அப்படியெனில் அந்த அமைப்பினர் யார் வந்து இங்கே வாதிட முடியும்? இன்னொன்று இலங்கையில் புலிகள் அமைப்பு இல்லை, முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்று அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அப்படியெனில் அந்த இயக்கத்தின் மீது தடையை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியா தொடர்ந்து செய்து வரும் தவறுகளில் ஒன்று புலிகள் மீதான தடை நீட்டிப்பு” என்றார்.

வெள்ளிக்கிழமை நடக்கும் விசாரணையில் கலந்து கொண்டு தனது வாதங்களை வைக்கப் போவதாகவும் வைகோ கூறினார்.




5 thoughts on “விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும்! – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம்

  1. P.G.R

    இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை விடுதலை புலிகள் மீதான தடை விலக்கிக்கொள்ள படாது… மற்றபடி இதுபோன்ற விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பே…..

  2. பாலா

    விடா முயற்சியுடன் செயல்படும் வைகோவிற்கு எனது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *