BREAKING NEWS
Search

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு!!

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு!!

டெல்லி: விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்றினால், அது போன்ற பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும். விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் வலுப்பெறவும் காரணமாகிவிடும். எனவே இந்த அமைப்புக்கான தடையை விலக்கவே கூடாது, என்று தமிழக அரசு வற்புறுத்தியுள்ளது.

சட்ட விரோதநடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் புலிகள் மீதான தடை மே 14 ஆம் தேதி மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்தத் தடைக்கு பொதுமக்களின் மத்தியில் ஆட்சேபணை உள்ளதா என்பதை ஆராய்வதற்காக தனி நீதிபதியைக் கொண்ட ட்ரிபியூனல் ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. நீதிபதி விக்ரம்ஜித் சென் இந்த நீதிமன்றத்தின் தலைவராக உள்ளார்.

புலிகள் அமைப்பு என்ற ஒன்றே இல்லையென்று மத்திய அரசும், இலங்கை அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. அப்படியிருக்கையில் அந்த அமைப்புக்கு தடை விதிப்பது அர்த்தமற்றது என்றும், விடுதலைப் புலிகள் மீதான தடை, தமிழ் ஈழ மக்களின் சுதந்திரபோராட்ட உணர்வை பின்னடைய வைக்கிறது என்றும் கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மனுச் செய்திருந்தார்.

இதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எனவே வைகோவின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. புலிகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியொருவர் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வைகோ, “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளில் ம.தி.மு.க.வும் ஒன்று. எல்டிடிஇ அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் தமிழர்களின் சார்பாக அந்த அமைப்புக்கு பிரதிநிதியாக நான் வாதிட வந்துள்ளேன்.

இந்தத் தடையை அமுல்படுத்துவதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாத நிலையில் தடை விதிப்பது எதற்காக?

மத்திய அரசின் இந்தத் தடை காரணமாக இலங்கையிலிருந்து வருகை தரும் அப்பாவி தமிழர்கள் அனைவருமே புலிகளின் ஆதரவாளர்களென வகைப்படுத்தப்பட்டு விடும் அபாயம் உள்ளது. அரசு அச்சப்படும் அளவுக்கு புலிகளாலோ அவர்களது ஆதரவாளர்களாலோ எந்த தீவிரவாதச்செயலும் இடம்பெறவில்லை. மேலும் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் பிரதிநிதி எப்படி இந்த விசாரணைக்கு வரமுடியும்?” என்று வைகோ வாதாடினார்.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் எஸ் தனஞ்செயன் இந்த விசாரணையில் ஆஜராகி வாதாடினார்.

அவர் தனது வாதத்தில், “விடுதலைப் புலிகள் அமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கும் தலைவர்களுக்கும் எதிரானது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலாளர் ஆகியோருக்கு எதிரானது.

தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் இப்போதும் தொடர்கின்றன. அவர்களது அனுதாபிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இப்போதும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். ஐந்தாவது ஈழப் போருக்கு அவர் தலைமை தாங்குவார் என அவர்கள் நம்புகின்றனர். தனித் தமிழீழத்தை வென்றெடுக்க ஐந்தாவது ஈழப்போர் இடம்பெறுமென அவர்கள் நம்புகின்றனர். இது நாட்டின் ஐக்கியத்தையும் இறைமையையும் பாதிக்கும்.

தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் புலிகளுக்குச் சார்பாக பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்துவதன் மூலம் அவர்களது நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் செயல்கள் தொடர்கின்றன.

இது இறைமையான்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானவையாகும். அத்துடன், இந்திய மக்களின் பல்வேறு தரப்பினர் மத்தியில் அமைதியின்மைக்கு இது காரணமாகிவிடும்.

இப்போது தடை விலக்கப்பட்டால், எந்த நோக்கத்துக்காக 1992 இலிருந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் தடை நீடிக்கப்பட்டதோ அது அர்த்தமற்றதாகிவிடும்”, என்று தமிழக அரசு கூறியுள்ளது.
10 thoughts on “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு!!

 1. samuvelu

  திருமா: இது கலைங்கருக்கு தெரியாமல் நடந்தது..

  கலைஞர்: ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றிய சட்டத்தால் தான், இப்படி வக்கீல் வாதாடினார்.. எனக்கு ஒன்னும் தெரியாது.. நான் தான் தமிழ் ஈன தலைவன்.. சாரி தமிழ் இன தலைவன்..

 2. Muthu

  திமுக அரசு வழக்கறிஞரின் வாதத்தை வைத்து பார்க்கும் பொழுது இலங்கை போரில் தமிழ் இன அழிப்பிற்கு கருணாநிதி எவ்வளவு முக்கிய காரணமாக இருந்தார் என்பது தமிழ் இன மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பது இந்த கருணாக்களுக்கு தெரியாது போலும்…..

 3. karthik

  // தடையை நீக்கினால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் வலுப்பெறவும் காரணமாகிவிடும். எனவே இந்த அமைப்புக்கான தடையை விலக்கவே கூடாது//

  நீங்கள் தடையயை நீக்கியவிடிலும் விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் வலு பெரும்..

 4. கடலூர் எழில்

  ” முர்ப்பகல் செய்யின் பிர்ப்பகல் விளையும்” அது போல கருணாநிதி எந்த குடும்பத்துக்காக தமிழனை கொன்று குவித்ததை தடுக்காமல் விட்டாயோ ! உன் கண் மூடும் முன் உன் குடும்பம்சிதருவது உறுதி. எதற்கு தடை விடுதலை புலிகளுக்கு ! தமிழர்கள் ஒவ்வொருவர் மனத்திலும் நீங்கா இடம் பிடித்த எங்கள் வீர மறவர்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும்.
  தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டியவை ????????
  சன் பிக்சர்ஸ்(கலாநிதிமாறன்),ரெட்ஜெயண்ட்(உதயநிதி ஸ்டாலின்),க்ளவுடுநயன்(தயாநிதி அழகிரி),வரப்போகும் கனிமொழி பிக்சர்ஸ்!குஸ்பு பிக்சர்ஸ்(கற்புக்கரசி),சன்டீவி குழுமம் ,கலைஞர்டீவி குழுமம்,அனைத்து ஊழல் துறைகள்,ச்பெக்ட்ரும் கொள்ளையடித்த ராசாவும் கனிமொழியும்.
  இன்னும் பட்டியல் நீளும் தமிழர்களே !
  இதற்கே தலையெல்லாம் சுத்துகிறது !
  தமிழ்நாட்டின்(தி.மு.க) சட்டமன்ற உறுப்பினர்கள் பாதி அழகிரி கட்டுப்பாட்டில்
  மீதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில், மாற்றுக்கட்சியினர் குஸ்பு கட்டுப்பாட்டில்.
  தமிழ்நாட்டின்(தி.மு.க) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழிக் கட்டுப்பாட்டில்.
  தமிழ்நாட்டின் மாவட்டந்தோறும் கலைஞர் பேரன்கள் கட்டுப்பாட்டில்.
  “அப்பா தமிழ்நாட்டு மக்கள் இலவசத்தின் கட்டுப்பாட்டில்”

 5. கடலூர் எழில்

  திருமா தேறுமா !
  விடுதலைப் புலிகள் தடைக்கு ஒரு அடையாள கண்டனம் கூட கானம்.
  உமாசங்கர் பிரச்னையில் ஏன் ஊமை ஆனீர்கள் (அவரும் ஒரு தலித் தானே ) அது சரி யாருக்காக கட்சி தொடங்குநீன்களோ !
  இன்னும் எத்தனைக் காலம் தான் இந்த தலித்துகள ஏமாத்தப் போறீங்களோ !
  பாவம் தலித்துகள் ! நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி சுகமாக இருக்கிறீர்கள் ! “ஜெயலலிதாவால் தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது என்று அறிக்கை விரைவில் வரும் என்று எதிர்ப் பார்க்கிறோம்” திருமா அவர்களே !

 6. sakthivel

  ஊழல் பெருச்சாளிகளும் சிங்கள ஓநாய்களும் சேர்ந்து ஈழத்தை அழித்துவிட்டதாக கனவு காண்கிறார்கள்…

  “உண்மை” ஒருநாள் வெளிவரும்… ஓநாய்கள் ஓடி ஒளியும் காலம் வரும்.

 7. Eezhathu Raja

  நியூயார்க்:””போரின் போது பின்பற்றவேண்டிய சர்வதேச விதிகளை, பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையின் போது பின்பற்றவேண்டியது இல்லை. இது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்,” என இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ஐ.நா., சபை கூட்டத்தில் தெரிவித்தார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என, சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டின.

  இதையடுத்து, மனித உரிமை மீறல் நடந்துள்ளதா என்பது பற்றி கண்டறிய ஐ.நா., சபை ஒரு குழு ஒன்றை அமைத்தது. இதற்கு, இலங்கை தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த குழு உண்மை கண்டறிவதற்காகவோ, விசாரணை நடத்தும் குழுவோ அல்ல. விசாரணைக்கு தேவையான அடிப்படை ஆதாரம் இருக்கிறதா என்பதை கண்டறியும் என, ஐ.நா., விளக்கம் அளித்தது

  .இந்நிலையில், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியதாவது:போரின் போது பின்பற்றவேண்டிய சர்வதேச மனிதாபிமான அடிப்படையிலான சட்டம், தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரின் போது பின்பற்ற வேண்டிய சர்வதேச விதிகளை, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடக்கும் சண்டையின் போதும் பொருத்தி பார்க்கக் கூடாது. எனவே, இந்த சர்வதேச சட்ட விதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=92147

 8. Mayilraj

  கலைஞர் :(தேர்தல் சமயத்தில்)விடுதலை புலிகள் மீதான தடைக்கு ஜெயலலலித்தான் கரணம் என்பார். அதன் பிறகு ஆட்சியை பிடித்தபிறகு மகனுக்காகவும் பேரனுககவும் ஆட்சியில் பங்கு கேட்பார்.நதிநீர் பிரட்சனை,ஈழ பிரட்சனை என்றால் மத்திய அரசுக்கு லட்டர் எழுதுவார்.இதுதான் இவரது முக்கிய பணி.இவரது பழைய வாழ்கையில் இவருக்கும் சொந்தங்களுக்கும் உள்ள சொத்தின் மதிப்பும் தற்போதைய சொத்தின் மதிப்பும் இவர் வெளியிட வேண்டும் அவற்றின் மதிப்பை அரசுஅதிகாரிகள் சோதனை இட வேண்டும்
  ஜெயலலலிததா:தேர்தல் சமயத்தில் ஈழத்தில் விடுதலை வாங்கி தருவேன் என்பார்.பிறகு அதை பற்றி அடுத்த தேர்தல் வரும் வரைபேச மாட்டார்.M.G .ராமச்சந்திரன் எதற்காக ஈழதமிழர்களுக்காக உதவினார் என்பது கூட இவர்களுக்கு தெரியாது.திராவிட அணியில் ஆரியர் ஒருவர் எவ்வாறு இருக்க முடியும் என்பது கூட மனமுள்ள மறத்தமிழனுக்கு தெரியாது.M.G .ராமச்சந்திரன் பெயரை சொலும் இவருக்கு என்ன உரிமை உள்ளது அவரது மனவியா அல்லது கட்சியை உருவாக்குவதற்கு பல போராட்டங்களில் கலந்து கொண்டவராஅல்லது திராவிடர
  காங்கிரஸ்:இவர்கள் ராஜீவ் காந்தியை கொண்டு தேர்தல் பிரசாரம் செய்பவர்கள்.முதலில் இவர்களுக்குள் உள்ள பிரத்ச்சனையை தீர்க்க ஐக்கியநாடுகள் சபை வேண்டும் இவர்கள் எவ்வாறு மக்கள் பிரட்சனை தீர்க்க போகிறார்கள்.காமராஜர் ஆட்சியை விரும்பும் இவர்கள் உண்மையில் அந்த காமராஜர் இப்போது இருந்திர்ந்தல் ஈழதமிழர்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் நிட்சயம் உதவி புரிந்திருப்பார்

 9. sade

  “தனித் தமிழீழத்தை வென்றெடுக்க ஐந்தாவது ஈழப்போர் இடம்பெறுமென அவர்கள் நம்புகின்றனர். இது நாட்டின் ஐக்கியத்தையும் இறைமையையும் பாதிக்கும்.”

  என்னடா பன்னாட பய அரசாங்க வக்கிலு ” எங்கே உனது நாட்டில் ஐக்கியமும் இறையாண்மையும் உண்டு என்றால் காவிரியில் மற்றும் பாலாறு , முல்லை பெரியாறு நீர் வரவேண்டுமே ஏன் வரவில்லை ” உன்னை போல் அர குறை சட்டம் தெரிந்தவன் (?) நாட்டில் உள்ளத்தால்தான் தமிழன் இன்னும் அடி வாங்குறான் .

  “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு!!”
  எவனுகிட்டடா கேட்டீங்க தடை செய்ய போறோம்னு பிக்காளி பயலுகளா , தமிழகத்தில் அரசு என்று ஒன்று உள்ளதா!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *