BREAKING NEWS
Search

“அற்ப ஆயுளில் போய்விட்டார்களே!”- கருணாநிதியின் ‘கண்ணீர்’

நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது?”

முள்ளி வாய்க்கால் பெருந்துயரம் நிகழ்ந்து முடிந்த 150 நாட்களுக்குப் பிறகு கருணாநிதியின் பேனா முதல் முறையாக அனுதாப அறிக்கை எழுத Karuஆரம்பித்துள்ளது. அதனூடாகவே, ஈழ மக்களுக்காக தான் பட்ட இன்னல்கள், தலைமையேற்ற போராட்டங்கள், இழந்த பதவிகள் போன்ற பட்டியலையும் தந்துள்ளார் கருணாநிதி.  ஒரு முறை ஆட்சியையும்… இருமுறை எம்எல்ஏ பதவியையும் ஈழப் போராட்டத்துக்காக தூக்கி எறிந்திருக்கிறாராம் கருணாநிதி…

இந்த அறிக்கை சுனாமி எங்கே போய் நிற்குமோ தெரியாது… இப்போதைக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த அவரது முதல் அறிக்கையின் சில பகுதிகளைத் தருகிறோம். மற்றபடி நோ கமெண்ட்ஸ்!

கருணாநிதி அறிக்கையின் வழக்கமான, ‘உருக்கமான’ வரிகள்:

“…சகோதர யுத்தத்தின் காரணமாக நம்மை நாமே, கொன்று குவித்துக் கொண்டு, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால், நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், எத்தனை தமிழர்கள் உயிரிழக்க நேரிட்டது?

பலர் தங்கள் சொத்துக்களை இழந்து விட்டு, நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சை, பராரிகளாக செல்ல நேரிட்டது. அகதிகள் முகாம்களில் பலர் ஆண்டுக் கணக்கில் வாட நேர்ந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஏன் பிரபாகரன் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து, தமிழர்களின் உயர்வுக் காக பாடுபட வேண்டியவர்கள், தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டுவிட்டார்களே என்ற ஆதங்கமும், வேதனையும் ஏற்படுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றியும், இலங்கைப் பிரச்னை பற்றியும் 1989ம் ஆண்டு என்னை அழைத்து பேசிய ராஜிவ் காந்தி, “நீங்களும், முரசொலி மாறனும், வைகோவும் இலங்கை சென்று பிரபாகரனுடன் இந்த பிரச்னை குறித்து விரிவாக பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்கான நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். சந்திப்புக்கு தேவையான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன். இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்று உறுதியளித்தார்.

அந்த இளம்தலைவர், தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோக சம்பவம். அந்த சம்பவமும் இலங்கை விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.

இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட ரணில், “தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன்’ என்றார். ஆனால், அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர்.

ஏழு லட்சம் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ரணில் தோல்வியடைந்தார்.

‘தேர்தலில் தமிழர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்று அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை, தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்’ என, இது பற்றி ரணில் அண்மையில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் சார்பாக, அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது?”

அவ்ளோதான்!

-என்வழி
23 thoughts on ““அற்ப ஆயுளில் போய்விட்டார்களே!”- கருணாநிதியின் ‘கண்ணீர்’

 1. SenthilMohan K Appaji

  //* நான் மவுனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது. நம்முடைய மவுன வலிதான் யாருக்கு தெரியப்போகிறது?**/

  நம்முடைய என்று கூறி யாரை கூட்டு சேர்க்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை நம்முடைய என்று கூறி அதிகாரமில்லாத பொதுமக்களின் உண்மையான துயரத்தில் பங்குகொண்டு விட்டார் போலிருகிறது. அதைவிடுங்கள். நீங்கள் இனிமேல் எதனை எண்ணிப்பார்த்து என்ன பயன்? போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது எண்ணிப் பார்த்திருந்தால், அங்கே இருந்தவர்கள் (களுக்கு) இன்னும் கொஞ்சமாவது மிஞ்சியிருப்பார்களோ (க்குமோ ) இல்லையோ. உங்களுக்கு உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டமாவது மிஞ்சியிருக்கும்.

 2. fullmoon

  உஷாரய்யா உஷாரு,கிழட்டு நரி மீண்டும் ஆரம்பிச்சிட்டுதய்ய,தொல்ல தாங்கலப்பா,
  மவனே அடுத்த தேர்தலுக்கு ரொம்ப நாள் இல்லடியோவ்,
  தெரிஞ்சிதான் ஒப்பரிய ஆரம்பிச்சிட்டுதாகும்,
  பேரன் ஆரம்பிக்கும் விமான கம்பெனி வெளியில் தெரியாம இருக்க இப்படி ஒரு சூட்சுமமா!
  வேல வெட்டி இல்லன்னா எங்கயாவது சமத்துவ புறம் திறக்க போங்கப்பா,இல்லாட்டி மானாட மயிலாட பாருங்கப்போய். அதான் எ.டி.ஜி.பி.ராமானுஜத்த தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திடீங்கள்ள.அப்புறம் என்ன அழுக அறிக்கையெல்லாம் வேண்டிக்கிடக்கு,ஆடு நனையிதேன்னு ஓநாய் அழுத கதையெல்லாம் மறந்து போச்சாப்பு….. ஆகவேண்டிய வேலையப் பாருங்கப்போய்ய்ய்ய்ய்ய்…..
  அற்றது பற்றெனில்……………………………..

 3. ragavan

  முடிந்து போன ஒரு விடயத்தை பேசிக்கொண்டு தான் நல்லவன் போல எத்தினை நாளைக்கு தான் எப்படி இருப்பான் இவன். இப்பவாவது தமிழகளுக்கு எதாவது உருப்படியாக செய்வதை சொல்லமல் பிரபாகரன் பத்தி சொல்ல என்ன அருகதை இவனுக்கு. தலைவர் தவறு செய்தலும் நல்லது தான் செய்வர் இந்த *** பண்ணுறத விட

 4. naren

  பெருசு … நீ முதல்ல கிளம்புற வழிய பாரு… உன்னைய வச்சுக்கிட்டு உன் குடும்பம் மட்டுமில்ல … தமிழ்நாடே கஷ்டபடுது ….

 5. muththuvelan

  மொத்ததுல வெக்கம் மானம் இல்லாம அறிவு இல்லாம ஊற அடிச்சி ஓலைல போட்டு …. ஓட்ஸ் சாப்பிட்டு இருந்தால் , கழகத்தை காப்பாற்றி இருக்கலாம். அப்டிதானே ? தூ ….

 6. sakthivel

  கொத்துக்கொத்தாக தமிழர்களை இலங்கைக்கொடூரன் கொன்றழித்தபோது மௌனமாக அழுகாமல், வாய்விட்டு அழுதாதாரா இந்த கருனாநிதி? இல்லை முகாமுக்குள் மிருகங்களை விட கேவலமான நிலையில் நடத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்று தெரியாமல் நடைப்பினம் போல வாழ்ந்து செத்துக்கொண்டிருப்பதை பார்த்து சுவற்றில் முட்டி கொண்டு அழுதாரா?

 7. palPalani

  /*
  நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது?
  */
  தமிழர்கள் இறந்தது பாவமில்லை…
  கொலைகாரர்கள் கொன்றது குற்றமில்லை…
  இவர் அழுவது யாருக்கும் தெரியல என்பதுவே இவரோட ஆதங்கம்!

  பேச்சுவார்த்தையில் கொஞ்சம்கூட முன்னேற்றமில்லை என்றுதானே தேர்தல் புறக்கணிக்கப்பட்டது, இதை வசதியா மறைக்கிறார்!

  குறைந்த பட்சம் இன்னும் ராஜபக்சேவை கண்டிக்ககூட இல்லை.. வாய்க்கு வாய் பிரபாகரனை குற்றவாளி என்கிறார்!

  டே கடவுள்களே! உங்களுக்கு கொஞ்சம்கூட கருனையில்லையா!

 8. oscar

  அடுத்த வருஷம் உனக்கு தான் ஆஸ்கார் அவாட்.

 9. ராஜ்

  எப்போ பார்த்தாலும் அறிக்கைல எதற்கு எடுத்தாலும் சகோதரயுத்தம் , சகோதரயுத்தம் ..! கூடவே சேர்ந்து ஊர ஏமாத்த டுபாக்கூர் புள்ளிவிவரம். இந்த ஆளுக்கு இதை விட்டா குள்ளநரிதனம் தான் தெரியும். எப்போதும் பிரச்சனைகளை ஜவ்வு மாதிரி அதே கண்டிசன்ல இழுத்துகிட்டு போய் அவர் பேர் டேமேஜ் ஆகாம, ஒருவேளை பிரச்சனை எப்படி முடிஞ்சாலும் அறிக்கைன்ற பேருல அக்கபோரும், தானே கேள்விகேட்டு தானே பதில் சொல்லுற ஸ்டைலும் யாருக்கும் வராது.

 10. r.v.saravanan

  விடுதலைப்புலிகள் சார்பாக, அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது?”

  too late………

 11. Manoharan

  ///இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட ரணில், “தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன்’ என்றார். ஆனால், அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர்.
  ஏழு லட்சம் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ரணில் தோல்வியடைந்தார்.///

  பிரபாகரன் செய்த மாபெரும் அரசியல் தவறு இதுதான் என்றாலும், அதை அன்றைக்கே பிரபாகரனை தொடர்பு கொண்டு சுட்டிக்காட்டியிருக்கலாமே. இப்போது எதற்க்கு இந்த பிரயோஜனமில்லாத அறிக்கை ?

 12. yuvaraj

  நீயல்லாம் போன வருழமே போய் இருக்கணும் இன்னும் போவலியா?

 13. k.vicky

  அடக்கடவுளே!
  வார்த்தைகளாலும், எழுத்துக்களாலும் சொல்லமுடியாத,விவரிக்கமுடியாத அளவிற்கு இந்த கிலட்டுநரி மீது உலகத்தமிழருக்கு இருக்கும் கோபத்தை அடக்கிக்கொண்டு சொல்லுகிறோம்; எப்போதோ நடந்து முடிந்த தமிழனை காட்டிகொடுத்த வரலாற்றினை இப்போதும் நாம் படிக்கும்போது எமக்கு என்னென்னமோ தோன்றுகிறது. அப்படி எப்போதோ எத்தனையோ தலைமுறைக்கு அப்பால் நடந்ததையே படிக்கையில்/நினைக்கையில் அப்படி இருக்குதென்றால்; இப்போது அதுவும் எமது கண்கள் முன்னே துடிக்க துடிக்க எமது உறவுகள் கொலைசெய்யப்பட்டு சீரழிக்கப்பட்ட போது எத்தனை வலிகளை நாம் அனுபவித்தோம்.இதை சொல்லும்போதே இப்போதும் நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்படி நடக்கும்போது இந்த கிலட்டு………………. தனது கையில் அதை தடுக்கும் சக்தி இருந்தும் தடுக்காமல் தனது குடும்பத்திற்கு பதவிகேட்டு பேரம் பேசியதை நினைத்தால்……………!!!! இந்த உலகத்தில் தமிழனுக்கு முதல் எதிரி ராஜபக்ஸ குடும்பமே அல்லது இந்திய காங்கிரஸ்காரர்களோ இல்லை. இவனும் இவன் குடும்பமும்தான். தனது அதிகாரத்திற்காக எதனையும் செய்யும் இவனுக்கும் இவனது குடும்பத்திற்கும் நிச்சயம் ஒரு வழி பிறக்கும். அப்போதுதான் உலகத் தமிழன் எல்லாம் நவீன தீபாவளி கொண்டாடுவான். இப்ப மட்டும் என் கையில் இந்த கிலட்டு நரி கிடைக்கும் என்றால்……………….

 14. அ.அருள்

  மீண்டும் ஒரு ‘ஹரம்சிங்’ வராமலா போவான் இந்த கிலட்டு ……….க்கு?

 15. Mariappan

  கிழட்டு நரி ஊளையிடுது . எல்லோரும் கவனமா அவங்க வேலைய பaaருங்க.

 16. Mariappan

  ஏன்டா நமீதா டான்ஸ் ஆட வரலியா . உன் oopparikku வேற மேட்டர் கிடைக்கலியா?

 17. govindaraj

  நீங்கள் செல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். தமிழனை மீண்டும் எமததிங்க. உங்க வேலைய பாருங்க

 18. kp

  You can fool all the people some of the time, and some of the people all the time, but you cannot fool all the people all the time….. ஆபிரகாம் லிங்கன் அப்பவே எழுதி வெச்சிட்டாரு…..சத்தியமா “ஈழ தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை வாங்கி தந்த வள்ளலே” என்று போஸ்டர் அடிக்கும் சில உடன்(ஈன)பிறப்புக்களைத் தவிர மானமுள்ள தமிழர்கள் எவரும் இதை நம்ப போவதில்லை

 19. Guevara

  ஓஹோ !! மகிந்தவின் 64 வது பிறந்ததினம் இன்று (19.11.2009), அதற்கு ஓர் கேடு கெட்ட தமிழின துரோகியிடமிருந்து இப்பெடி ஒரு நல்வாழ்த்து !!!

 20. Saravanan

  முதலை கண்ணீர் என்றால் முதலை கடிக்க வரும்.

 21. raja

  பெருசு … நீ முதல்ல கிளம்புற வழிய பாரு… உன்னைய வச்சுக்கிட்டு உன் குடும்பம் மட்டுமில்ல … தமிழ்நாடே கஷ்டபடுது ….

 22. raja

  பெருசு … நீ முதல்ல கிளம்புற வழிய பாரு… உன்னைய வச்சுக்கிட்டு உன் குடும்பம் மட்டுமில்ல … தமிழ்நாடே கஷ்டபடுது ….இந்த கொசு தொல்லை தாங்கமுடியல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *