BREAKING NEWS
Search

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே! – நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே! – நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆக்லாந்து: இறைமை உள்ள ஒரு இனத்துக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே என நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1992-ல் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படை இடைமறித்து சென்னை நோக்கி செலுத்தி வந்தது. இதில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு இருந்தார். சென்னைக்கு அருகில் இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதும் கப்பல், அதிலிருந்த ஆயுதங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் தலைவர்களை சிறைப்படுத்த இந்திய கப்பல் படையினர் முயன்றபோது, கப்பலை வெடி வைத்துத் தகர்த்தனர் புலிகள். இதில் கிட்டு உள்ளிட்டோர் இறந்தனர். மூவர் மட்டும் கடலில் குதித்துத் தப்பினர். அவர்களை இந்தியா கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2001-ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றனர். 2002-ல் அகதி உரிமை கோரி அங்கு விண்ணப்பித்தனர்.

ஆனால் இதனை நிராகரித்த நியூஸிலாந்து அவர்களில் இருவரை நாடு கடத்தியது. மூன்றாமவர் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நியூஸிலாந்து நீதிமன்றம் மேற்கண்ட முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அதை ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்தது நியூஸிலாந்து அரசு.

இதனை விசாரித்த நீதிபதி, இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தள்ளிவிட்டார்.

குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்களைத்தானே அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது? இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சோராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பு

மேலும் தமது தீர்ப்பில், “இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர். புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது” என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆஸ்திரேலியா பட்டியலிட்டபோது, நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியது.

அப்போது நியூசிலாந்து தமிழர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இன்று புலிகளுக்கு தடை விதிக்காத முக்கிய நாடுகளுள் நியூஸிலாந்தும் ஒன்று.

உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. அவ்வளவு ஏன், தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது. இந்தத் தடையை இனியும் நீடிக்கலாமா வேண்டாமா என்ற பொது கருத்துக் கணிப்பில் பங்கேற்று புலிகளுக்காக வாதாடக்கூட ஆளில்லாத நிலைதான் இந்தியாவில் உள்ளது.

தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்க தமிழ் அமைப்புகள் முயற்சிகள் மேற்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தவறானது என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே உரைத்திருக்கிறது நியூஸிலாந்து உச்ச நீதிமன்றம். எனவே இதை மேற்கோள் காட்டி, புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து இந்தியாவிலும் வாதாட முடியும்.

இன்னொன்று, புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை மூழ்கடித்தது, அரசியல் குற்றமோ, பொது நலனுக்கு எதிரான குற்றமோ அல்ல என தெள்ளத் தெளிவாக நியூஸிலாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் வல்வெட்டித் துறைக்கு கொண்டு சென்ற கப்பலை இடைமறித்தது இந்திய கப்பல் படைதான். தங்களுக்குச் சொந்தமான பொருளை புலிகள் மூழ்கடித்ததில் என்ன குற்றம் காண முடியும்? அந்த ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அவர்கள் தாக்க முயலவில்லையே என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

நியூசிலாந்தில் உள்ள ஒரு வேற்றின நீதிபதிக்கு புரிந்துள்ள விஷயம் தமிழ் தலைவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்பதை நினைத்து ஆச்சர்யப்படுவதா, வேதனைப்படுவதா!




16 thoughts on “விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே! – நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  1. P.G.R

    உலகத்தலைவர்கள் அனைவர்களுக்கும் தமிழர்களை பற்றியும் அவர்களுடைய வரலாறு பற்றியும் நன்றாக தெரியும்… விடுதலைபுலிகள் விடுதலை போராட்ட வீரர்கள் என்பதும் எல்லாருக்கும் தெரியும்… ஆனாலும் அவர்களால் இந்தியாவை எதிர்த்து ஏதும் செய்யமுடியாது என்பதே எதார்த்தமான உண்மை… இந்தியா தமிழீழத்தை ஆதரித்தால் மட்டுமே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஆதரிப்பார்கள் …. இதை புரிந்து அதற்கேற்றார் போல இலங்கை பிரச்சணைக்கு ஒற்றுமையாக குரல் குடுக்க முடியாத அரசியல் கட்சிகளை நாம் தமிழகத்தில் கொண்டிருப்பது நம்முடைய துரதிர்ஷ்டம்…

  2. குமரன்

    இந்தச் செய்தி மிகவும் பயனுள்ளது. ஐ.நா. முன் உள்ள மனித உரிமை மீறல், இனப்படுகொலை வழக்குகளுக்கு மிகவும் பயன்படும். நெடுங்காலத்துக்குப் பிறகு வந்த நல்ல செய்தி இது.
    வெளியிட்டமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  3. RAMAN

    உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. அவ்வளவு ஏன், தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது. இந்தத் தடையை இனியும் நீடிக்கலாமா வேண்டாமா என்ற பொது கருத்துக் கணிப்பில் பங்கேற்று புலிகளுக்காக வாதாடக்கூட ஆளில்லாத நிலைதான் இந்தியாவில் உள்ளது.

  4. Boobalan

    இந்தியாவுல எவன்யா தலைவன் இருக்கான், “இந்தியாவுல இருக்க தலைவர்களுக்கு புரியல”-னு சொல்லி இருக்கீரு! தமிழ்நாட்ல கட்சி நடதுறவன்லாம், இதையும் காவிரி பிரச்னையையும் தேர்தலுக்கான ஒரு காயாகவே நகர்த்தி பலனை அனுபவிசிக்கிட்டு இருக்கானுங்க!!

    போராட்டம் நடதுடான்னா, பீச் ஓரமா போயிட்டு, AC போட்டுக்கிட்டு குடும்ப சகிதமா எதோ பிக்னிக் வந்தா மாதிரி கொஞ்ச நேரம் இருந்துட்டு “இலங்கைல அமைதி திரும்பிடுசி, நான் போராட்டத்த நிருதிடுறேன்னு” சொல்லிட்டு ஜூஸ் குடிச்சிட்டு வந்துடுவான். அப்போதானே, ரம்பா வந்தா குஷ்பூ வந்தான்னு ஆசிர்வாதம் கொடுத்து அனுப்பலாம்!!

    இவன்லாம் தமிழின தலைவன்னு எத்தனை நாளைக்கு சுத்திகிட்டு இருக்கானோ, அது வரை, தமிழனும் உருப்பட மாட்டான், தமிழ்நாடும் உருப்படாது, தமிழீழ மக்களுக்கும் ஒரு விடிவு பிறக்காது!!

  5. sathish

    தம்பி பூபாலன் என் இந்த கோபம் பொறுமை கடைபிடிங்கள் இவர்கள் திருந்த மாட்டார்கள் .

  6. sathish

    அம குஷ்பு ரம்பா என் இல்லுகிரிர்கள் பெண் பாவம் பொல்லாதது
    ஓகே .எனக்கு மெயில் பண்ணுங்க

  7. Thambi thiagarajah

    தமிழனாக பிறக்க நல்ல தவம் செய்திடவேண்டும். ஈழத்தமிழன் பிரபாகரன் தமிழர்களின் தலைவன் என்பது உலகறிந்த உண்மையும் நிஜமும் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. தமிழர்களில் ஒற்றுமை கிடையாது என்ற வார்த்தைகளை சொல்வதிலிருந்து விடுபடுங்கள். ஒற்றுமையை வழர்க்கக்குடிய வார்த்தைகளை பேசுங்கள். வெற்றி தானாக வரும். இன்று நியூ சிலாந்து உச்ச நீதி மன்றம் சொல்வது போல ஒவ்வொரு நாடுகளும் ஒற்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக்கொன்று நாளை தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கும். இலங்கை சிங்கள அரசாங்கம் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு செய்யும் ஒவ்வொரு காடைத்தனத்தையும் நீங்கள் வாழும்
    நாடுகளில் வசிக்கும் மற்றைய மக்களுக்கு விரிவாக எடுத்து சொல்லுங்கள். இவை முக்கியம் வாய்ந்ததும் எமது கடமையுமாகும். நாளை பிறக்க இருக்கும் எமது தமிழ் ஈழத்திற்கு நாம் அயராது உழைப்பது எமது மிக முக்கிய கடமையாகும். ‘நம்புங்கள், தமிழ் ஈழம் நாளை பிறக்கும்… நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!’ ” தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம் “

  8. ss

    இந்த செய்தியை பாருங்கள்..

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75426

    இலங்கை விவசாயிகளிடம் நேர்முக உரையாடலுக்கு முயற்சி செய்து, உண்மை நிலவரம் கண்டறியலாமே ?

  9. AAthirai

    There is only one tamil leader of world tamilans is Prabakaran. He accepted M.G.R. was his leader. Today in tamilnadu the leader who is only family leader.

  10. illamaran

    தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது. இந்தத் தடையை இனியும் நீடிக்கலாமா வேண்டாமா என்ற பொது கருத்துக் கணிப்பில் (held in New Delhi) பங்கேற்று புலிகளுக்காக வாதாடக்கூட ஆளில்லாத நிலைதான் இந்தியாவில் உள்ளது. Let Tamil Eelam supporters(Leaders & workers) participate in the enquiry that is going to be held on 21st of this month in New Delhi/Chennai regarding ban on Ltte in India

  11. ss

    வெள் டன் தம்பி திகரஜாஹ்….. உங்கள் முயற்ச்சிக்கி நாங்களும் ஆதரவளிக்கிறோம்

  12. shafiq

    நியாயம் எங்கிருந்தாலும் வெல்லும் மற்ற நாடுகளில் இந்தியாவில் கேள்விக்குறியே? அதுவும் தற்போதே நிகழ்வுகள் அதை உறுதிபடுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *